பாண்டியர் ஆட்சி.கி.பி.1250-1325
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. இதுவே இவர்களைப் பற்றிய வரலாறு புராணங்களாகவும், இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், இதிகாசங்களாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் வளர வழிவகுத்து இவர்கள் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் இல்லாமல் செய்கின்றன.
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், செழியன் என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர்குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலைஅணிந்தவர்கள் எனவும் மீன் கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள்மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
பாண்டியரின் குடும்பவியல்
அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும். இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. உதாரணமாக வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றி வேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான். ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில்72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில் திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு. திருப்பாண்டி கொடு முடிதான் விராடநாடு. பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். மேலும் அருச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
புராணங்களில் பல இந்து மத புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புர கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவ்ர்கள் வரிசையாக பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார். மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழி முறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர். சிங்காதனங்களுக்கு மழவராயன், காலிங்கராயன், முனையதரையன், தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர். அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம், ஓலைமூலம் மக்களுக்கு அனுப்பப்படும். அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது. உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்து வந்தது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன. நீதி தவறாது செங்கோல்முறை கோடாது வழங்கப்பட்டன. நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள். நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான். பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான். தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன.
காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர். அறம் ஈகையாக, நீதியாகக் காக்கப்பட்டது."மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது. இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு! முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன.
பாண்டிய நாட்டில் தொழில்கள்
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.
“"நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்"”
(சிலப்பதிகாரம் -205,207)
முத்து, பவளம், மிளகு,பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேனாடுகளிருந்து குதிரைகளும், மது வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின. சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்), சோனகரும் (அரேபியர்கள்), பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது. வணிகத்திலும், கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு. பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும், வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
ஆவணக்களரி.
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது. ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது. இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை, பரப்பு, நான்கெல்லை குறிக்கப்படும். விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும், ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு. ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன. மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
நால்வகைப் படை
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர். கொற்கை, தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான், மார்க்கோபோலோ"குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார். வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்" எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்"
சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக்காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரவை
பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது. ஊராட்சியினை இது செயல்பட வைத்தது. குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர். நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடியும். ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன. அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது. நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன. வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை பின்வருமாறு
நாணயங்கள், முத்திரை காசுகள்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யபட்டகாசுகள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் முத்திரை காசுகள், கி.மு.3-2ஆம் நூற்றாண்டென மதிக்கப் பெறும் பெருவழுதி நாணயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.
காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.
அளவை இயல்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர், சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம், பலம் என்பவற்றால் நிறுத்தனர். சேர்,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, , நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு
ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
எடுத்தல் அளவை
இறையிலி (கொடை)
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.
சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்றது.
திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்குதிருவிடையாட்டம் என்று பெயர்.
சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் எனவும்,
அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்; பட்டவிருத்தி எனவும்,
மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும்,
புலவர்களுக்கு முற்றூட்டும் எனவும்,
சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
அரசின் வரி
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், காசு, பொன் வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.
இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும். நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப் பெற்றது. ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது. பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர். பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான். வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர். கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும். உல்குவின் பொருள் இதுவேயாகும்.
நில அளவியல்
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல். குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி, மா, வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு எல்லைக் கல்நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது. நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம், தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
அரசியல் ஆட்சி இயல்
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சுற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு.
அரையன்.
பேரரையன்.
விசையரையன்.
தென்னவன்.
பிரமராயன்தென்வன்.
தமிழவேள்.
காவிரி.
ஏனாதி.
பஞ்சவன்.
மாராயன்.
பாண்டிய மூவேந்தவேளான்.
செழிய தரையன்.
பாண்டிப் பல்லவதரையன்.
தொண்டைமான்.
பாண்டிய கொங்கராயன்.
மாதவராயன்.
வத்தவராயன்.
குருகுலராயன்.
காலிங்கராயன்.
காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.

- சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
- ஏரிசவாரியம் - நீர் நிலை,பாசனம் கண்காணிப்பது.
- தோட்ட வாரியம் - நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
- பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
- பஞ்சவாரியம் - குடிமக்களிடம் வரிபெற்று அரசுக்கு அளிக்கப்படுவது.
நாணயங்கள், முத்திரை காசுகள்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யபட்டகாசுகள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் முத்திரை காசுகள், கி.மு.3-2ஆம் நூற்றாண்டென மதிக்கப் பெறும் பெருவழுதி நாணயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.
காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.
அளவை இயல்
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர், சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம், பலம் என்பவற்றால் நிறுத்தனர். சேர்,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, , நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு
ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
எடுத்தல் அளவை
- 10 கர்ணம் - 1 கழஞ்சு
- 100 பலம் - 1 துலாம்
- 5 செவிடு - ஒரு ஆழாக்கு
- 2 ஆழாக்கு - ஒரு உழக்கு
- 2 உழக்கு - ஒரு உரி
- 2 உரி - ஒரு நாழி
- 6 நாழி - ஒரு குறுணி
- 16 குறுணி - ஒரு கலம்
இறையிலி (கொடை)
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.
சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்றது.
திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்குதிருவிடையாட்டம் என்று பெயர்.
சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் எனவும்,
அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம்; பட்டவிருத்தி எனவும்,
மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும்,
புலவர்களுக்கு முற்றூட்டும் எனவும்,
சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
அரசின் வரி
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், காசு, பொன் வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.
இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும். நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப் பெற்றது. ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது. பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர். பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான். வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர். கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும். உல்குவின் பொருள் இதுவேயாகும்.
நில அளவியல்
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல். குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி, மா, வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு எல்லைக் கல்நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது. நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம், தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
அரசியல் ஆட்சி இயல்
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சுற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர். அவை வருமாறு.
அரையன்.
பேரரையன்.
விசையரையன்.
தென்னவன்.
பிரமராயன்தென்வன்.
தமிழவேள்.
காவிரி.
ஏனாதி.
பஞ்சவன்.
மாராயன்.
பாண்டிய மூவேந்தவேளான்.
செழிய தரையன்.
பாண்டிப் பல்லவதரையன்.
தொண்டைமான்.
பாண்டிய கொங்கராயன்.
மாதவராயன்.
வத்தவராயன்.
குருகுலராயன்.
காலிங்கராயன்.
காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
பாண்டியர் கால வரிசைப் பட்டியல்
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி
பசும்பூண் பாண்டியன்
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன்
மதிவாணன்
பெரும்பெயர் வழுதி
பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
வெற்றிவேற் செழியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி
மாறன் வழுதி
நல்வழுதி
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன்கி.பி. 575-600
அவனி சூளாமணிகி.பி. 600-625
செழியன் சேந்தன்கி.பி. 625-640
அரிகேசரிகி.பி. 640-670
ரணதீரன்கி.பி. 670-710
பராங்குசன்கி.பி. 710-765
பராந்தகன்கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன்கி.பி. 790-792
வரகுணன்கி.பி. 792-835
சீவல்லபன்கி.பி. 835-862
வரகுண வர்மன்கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன்கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன்கி.பி. 900-945
வீரபாண்டியன்கி.பி. 946-966
அமர புயங்கன்கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன்கி.பி. 945-955
வீரகேசரிகி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன்கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன்கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன்கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன்கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன்கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன்கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன்கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன்கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன்கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன்கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்கி.பி. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்கி.பி. 1473-1506
குலசேகர தேவன்கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன்கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன்கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன்கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன்கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன்கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான்(தகவல் இல்லை).
நற்குடி வேளாளர் வரலாறு.
1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர். பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கணக்கில் குறிக்கப்பட்டுள்ளது.
கோசாம்பியை தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199 - இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிநது பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நற்குடி வேளாளர் வரலாறு ஆசிரியர் ஆறுமுக நயினார்
பிள்ளை பின்வரும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார். (ந.வே.வ.414)
பாண்டியர் கால வரிசைப் பட்டியல்
கி.மு. 2283 கூன் பாண்டியன் - 1ஆவது பாண்டியன்
வழுதி.
வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும் போற்றப்படுகின்றனர்.
கூடல், மருங்கை, கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.
வழுதி பல கோட்டைகளை வென்றவன். வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர். தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன். புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான்.
வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன், வாணன், என்னும் வள்ளல்கள் வாழ்ந்து வந்தனர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்.
1. அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி. நற்றிணை 150.
2. பசும் பூண் வழுதி. நற்றிணை 358. மருங்கூர் அரசன்.
3. அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி. அகநானூறு 9. 3. கூடல் அரசன்.
4. நல் தேர் வழுதி. அகநானூறு 130, 204, கொற்கை அரசன்.
5. ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி. அகநானூறு 312. வேல் வீசி வென்றவன்.
6. பெரும் பெயர் வழுதி. அகநானூறு 315. கூடல் அரசன்.
7. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. புறநானூறு 3. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
8. சினப்போர் வழுதி. புறநானூறு 51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
9. இயல்தேர் வழுதி. புறநானூறு 52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
10. தகைமாண் வழுதி. புறநானூறு 59. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். 11. அண்ணல் யானை வழுதி. புறநானூறு 388. தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன்.
தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம் என்று தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூலில் பாண்டியர்களின் பட்டியல் பின் வருமாறு கொடுக்கப்படுள்ளது.
கி.பி. 1052 - 1063. சீவல்லப பாண்டியன்
கி.பி. 1063 - 1065. பாண்டிய வீரகேசரி
கி.பி. 1101 - 1124. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1104 - 1131. சுந்தரபாண்டியன்
கி.பி. 1131 - 1143. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1143 - 1166. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1145 - 1162. மாறவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1162 - 1177. சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1170 - 1195. சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1158 - 1185. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1186 - 1190. மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1190 - 1218. முதலாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1216 - 1244. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1237 - 1266. இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1238 - 1258. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1241 - 1254. முதலாம் சடையவர்மன் விக்ரமன்
கி.பி. 1250 - 1276. இரண்டாம் மாறவர்மன் விக்ரமன்
கி.பி. 1250 - 1284. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1253 - 1283. முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1254 - 1265. இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1268 - 1318. முதலாம் மாறவர்மன் குலசேகரன்
கி.பி. 1277 - 1294. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1278 - 1301 மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1281 - 1289. மூன்றாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1297 - 1342. மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1303 - 1325. நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1303 - 1322. மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1304 - 1319. ஐந்தாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1308 - 1344. முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1308 - 1341. முதலாம் சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1310 - 1332. சடையவர்மன் இராசராசன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1314 - 1362. இரண்டாம் மாறவர்மன் குலசேகரன்
கி.பி. 1315 - 1334. முதலாம் சடையவர்மன் பராக்கிரமன்
கி.பி. 1318 - 1336. ஆறாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1323 - 1330. ஐந்தாம் மாறவர்மன் விக்ரமன்
கி.பி. 1329 - 1347. ஏழாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1330 - 1347. எட்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1337 - 1343. ஆறாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1335 - 1362. முதலாம் மாறவர்மன் பராக்கிரமன்
கி.பி. 1340 - 1364. ஒன்பதாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1344 - 1352. இரண்டாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியன்

- கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
- கி.மு. 1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
- கி.மு. 1002 - 960 - திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
- கி.மு. 910 - 854 - வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
- கி.மு. 884 -832 - பாண்டீசன் (நிலந் தருதிருவின்பாண்டியன்) - 50 ஆவது பாண்டியன்
- கி.மு. 500 - 450 - பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன்
- கி.மு. 450 - 400 - கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி - 67 ஆவது பாண்டியன்
- கி.மு. 400 - 380 - போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன்
- கி.மு. 380 - 340 - கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன்
- கி.மு. 340 - 302 - தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன்
- கி.மு. 302 - 270 - செய புஞ்சன் - 71 ஆவது பாண்டியன்
- கி.மு. 270 - 245 - பசும் பூண் பாண்டியன் - 72 ஆவது பாண்டியன்
- கி.மு. 245 - 220 - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன்
- கி.மு. 220 - 200 - பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன்
- கி.மு. 200 - 180 - கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன்
- கி.மு. 180 - 160 - மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன்
- கி.மு. 160 - 150 - பாண்டியன் இத்தமன் புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன்
- கி.மு. 150 - 140 - பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன்
- கி.மு. 120 - 100 - பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன்
- கி.மு. 100 - 87 - கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன்
- கி.மு. 87 - 62 - தேவபூடணன்(இலவந்திகைதூஞ்சியநன்மாறன் - 82ஆவது பாண்டியன்
- கி.மு. 62 - 42 - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன்
- கி.மு. 42 - 1 - கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன்
- கி.மு. 1 - 30 - பாண்டியன் அறிவுடைநம்பி - 85ஆவது பாண்டியன்
- கி.பி. 30 - 60 - வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது
- கி.பி. 50 - 60 -முடத்திருமாறன்
- கி.பி. 60 - 85 -மதிவாணன்
- கி.பி. 90 - 120 -பெரும்பெயர் வழுதி
- கி.பி. 100 - 120 -பொற்கைப் பாண்டியன்
- கி.பி. 120 - 130 -இளம் பெருவழுதி
- கி.பி. 130 145 -அறிவுடை நம்பி
- கி.பி. 142 - ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன்
- கி.பி. 150 - வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன்
- கி.பி. 172 - நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன்
- கி.பி. 198 - உக்கிர மாறன் - 90 ஆவது பாண்டியன்
- கி.பி. 200 - 205 -வெற்றிவேற் செழியன்
- கி.பி. 205 - 2015 -தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
- கி.பி. 216 - 230 -உக்கிரப் பெருவழுதி
- கி.பி. 220 - 250 - பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன்
- கி.பி.250 - 270 -கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன்
- கி.பி. 270 - 297 -தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன்
- கி.பி. 298 - 310 -பராக்கிரம பாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன்
- கி.பி.நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
- கி.பி.கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
- கி.பி.- பொற்கைப் பாண்டியன் - 97 ஆவது பாண்டியன்
- கி.பி.- பாண்டியன் மதிவாணன் - 98 ஆவது பாண்டியன்
- கி.பி. 475 -490 கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்
- கி.பி. 498 - உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்
- கி.பி. 498 - 540 - சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்
- கி.பி.- 575 - 600 -கடுங்கோன்
- கி.பி. 600 - 620 -அவனி சூளாமணி
- கி.பி. 620 - 642 -செழியன் சேந்தன்
- கி.பி. 642 - 690 -அரிகேசரி
- கி.பி. 700 - 730 -ரணதீரன்
- கி.பி. 730 - 769 -பராங்குசன்
- கி.பி. 768 - 790 -பராந்தகன்
- கி.பி. 790 - 792 -இரண்டாம் இராசசிம்மன்
- கி.பி. 792 - 835 -வரகுணன்
- கி.பி. 815 - 862 -சீவல்லபன்
- கி.பி. 862 - 885 -வரகுண வர்மன்
- கி.பி. 880 - 905 -பராந்தகப் பாண்டியன்
- கி.பி. 900 - 920 -மூன்றாம் இராசசிம்மன்
- கி.பி. 930 - 945 -அமர புயங்கன்
- கி.பி. 945 - 955 -சீவல்லப பாண்டியன்
- கி.பி. 946 - 966 -வீரபாண்டியன்
- கி.பி. 1065 - 1070 -வீரகேசரி
- கி.பி. 1145 - 1150 -சடையவர்மன் சீவல்லபன்
- கி.பி. 1150 - 1160 -பராக்கிரம பாண்டியன்
- கி.பி. 1162 - 1175 -சடையவர்மன் குலசேகர பாண்டியன்
- கி.பி. 1175 - 1180 -சடையவர்மன் வீரபாண்டியன்
- கி.பி. 1180 -1190 -விக்கிரம பாண்டியன்
- கி.பி. 1190 - 1218 -முதலாம் சடையவர்மன் குலசேகரன்
- கி.பி. 1216 - 1238 -முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
- கி.பி. 1238 - 1250 -இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
- கி.பி. 1239 - 1251 -இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
- கி.பி. 1251 - 1271 -முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- கி.பி. 1251 - 1281 -இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
- கி.பி. 1268 - 1281 -மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
- கி.பி. 1276 - 1293 -சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- கி.பி. 1422 - 1463 -சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
- கி.பி. 1429 -1473 -இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
- கி.பி. 1473 -1506 -அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
- கி.பி. 1479 -1499 -குலசேகர தேவன்
- கி.பி. 1534 -1543 -சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
- கி.பி. 1543 -1552 -பராக்கிரம குலசேகரன்
- கி.பி. 1552 -1564 -நெல்வேலி மாறன்
- கி.பி. 1564 -1604 -சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
- கி.பி. 1588 -1612 -வரதுங்கப் பாண்டியன்
- கி.பி. 1613 -1618 -வரகுணராம பாண்டியன்
- கி.பி. (தகவல் இல்லை) கொல்லங்கொண்டான்
வழுதி.
வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும் போற்றப்படுகின்றனர்.
கூடல், மருங்கை, கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.
வழுதி பல கோட்டைகளை வென்றவன். வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர். தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன். புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான்.
வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன், வாணன், என்னும் வள்ளல்கள் வாழ்ந்து வந்தனர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்.
- காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
- பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
- மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
- பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
- கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
- கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
- பெருவழுதி
- குறுவழுதி
- நல்வழுதி
- அண்டர்மகன் குறுவழுதியார்
1. அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி. நற்றிணை 150.
2. பசும் பூண் வழுதி. நற்றிணை 358. மருங்கூர் அரசன்.
3. அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி. அகநானூறு 9. 3. கூடல் அரசன்.
4. நல் தேர் வழுதி. அகநானூறு 130, 204, கொற்கை அரசன்.
5. ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி. அகநானூறு 312. வேல் வீசி வென்றவன்.
6. பெரும் பெயர் வழுதி. அகநானூறு 315. கூடல் அரசன்.
7. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. புறநானூறு 3. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
8. சினப்போர் வழுதி. புறநானூறு 51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
9. இயல்தேர் வழுதி. புறநானூறு 52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
10. தகைமாண் வழுதி. புறநானூறு 59. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். 11. அண்ணல் யானை வழுதி. புறநானூறு 388. தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன்.
தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம் என்று தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூலில் பாண்டியர்களின் பட்டியல் பின் வருமாறு கொடுக்கப்படுள்ளது.
கி.பி. 1052 - 1063. சீவல்லப பாண்டியன்
கி.பி. 1063 - 1065. பாண்டிய வீரகேசரி
கி.பி. 1101 - 1124. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1104 - 1131. சுந்தரபாண்டியன்
கி.பி. 1131 - 1143. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1143 - 1166. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1145 - 1162. மாறவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1162 - 1177. சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1170 - 1195. சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1158 - 1185. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1186 - 1190. மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1190 - 1218. முதலாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1216 - 1244. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1237 - 1266. இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1238 - 1258. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1241 - 1254. முதலாம் சடையவர்மன் விக்ரமன்
கி.பி. 1250 - 1276. இரண்டாம் மாறவர்மன் விக்ரமன்
கி.பி. 1250 - 1284. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1253 - 1283. முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1254 - 1265. இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1268 - 1318. முதலாம் மாறவர்மன் குலசேகரன்
கி.பி. 1277 - 1294. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1278 - 1301 மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1281 - 1289. மூன்றாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1297 - 1342. மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1303 - 1325. நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1303 - 1322. மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1304 - 1319. ஐந்தாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1308 - 1344. முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1308 - 1341. முதலாம் சடையவர்மன் ஸ்ரீவல்லபன்
கி.பி. 1310 - 1332. சடையவர்மன் இராசராசன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1314 - 1362. இரண்டாம் மாறவர்மன் குலசேகரன்
கி.பி. 1315 - 1334. முதலாம் சடையவர்மன் பராக்கிரமன்
கி.பி. 1318 - 1336. ஆறாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1323 - 1330. ஐந்தாம் மாறவர்மன் விக்ரமன்
கி.பி. 1329 - 1347. ஏழாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1330 - 1347. எட்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1337 - 1343. ஆறாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன்
கி.பி. 1335 - 1362. முதலாம் மாறவர்மன் பராக்கிரமன்
கி.பி. 1340 - 1364. ஒன்பதாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1344 - 1352. இரண்டாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியன்
பாண்டிய மன்னர்கள்
பெருவழுதி நாணயம்
குடுமி.
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிவம் பல நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேள்விக்குடிச் செப்பேட்டில்.
“"கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
“"பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்"
(759,61,62)
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
“"தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!"”
(புறம்-6)
நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்
“"எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்!"”
(புறம்-9)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது. காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
வடிம்பு, சொல்விளக்கம்
வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர். நெடுந்தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி மணல் கமழ் மனைதொறும் பொய்தல் அயர மதுரைரைக்காஞ்சி 588 கால் வடிம்பால் (விளிம்பால்) குதிரைகளைத் தட்டி ஓட்டிச் சவாரி செய்தனர். மா உடற்றிய வடிம்பு பதிற்றுப்பத்து 70, கடுமா கடைஇய விடுபரி வடிம்பு புறம் 378 எருமைக் கடாவைக் காளி கால் வடிம்பால் மிதித்தாள். ஏற்றருமை நெஞ்சம் வடிம்பின் இடந்தாள் கலித்தொகை 103-44 என வரும் சொல்லாட்சிகளால் வடிம்பு என்னும் சொல்லின் பொருளை உணரலாம்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்“
"முன்னீர் விழவின் நெடியோன்"
"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"”
—(புறம்-9)
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.“
"நிலந்தந்த பேருதவிப்"
"பொலந்தார் மார்பின்"
"நெடியோன் உம்பல்"”
—(60-61)
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
நிலந்தரு திருவிற் பாண்டியன்
‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து’ தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ‘நிலம் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்’ எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த நெடியோன் இரு பெரு வேந்தரும், வேளிரும் சாயும்படி போரிட்டு நிலம் தந்தவன்
‘மண் பல தந்த திரு வீழ் பசும்பூண் பாண்டியன்’ என்பவனின் படைத்தலைவனாக விளங்கியவன் நாலை கிழவன் நாகன்
இவற்றைக் காலக் கண்ணில் நோக்கும்போது தெளிவு ஒன்று பிறக்கும்.
"பொலந்தார் மார்பின்"
"நெடியோன் உம்பல்"
(60-61)

முடத்திருமாறன் கி.பி. 50-60.
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதி கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
மதிவாணன் கி.பி. 60-85.
மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
பெரும்பெயர் வழுதி கி.பி. 90-120.
பெரும்பெயர் வழுதி கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
பொற்கைப் பாண்டியன் கி.பி 100-120.
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு
மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஜயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாறன் வழுதி கி.பி. 120-125
மாறன் வழுதி கி.பி. 120 முதல் 125 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்த பெருமையினை உடையவனும் ஆவான்.குறுந்தொகையில் உள்ள 270 ஆம் பாடலினைப் பாடிய பெருமையினையும் உடையவனாவான்.
இளம் பெருவழுதி கி.பி. 120-130.
இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிபிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடைய்வனாக இருந்தான் எனவும் தெரிகின்றது.
நல்வழுதி கி.பி. 125-130.
நல்வழுதி கி.பி. 125 முதல் 130 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். 12 ஆம் பரிபாடலினைப் பாடிய பெருமையினை உடைய இம்மன்னர் அவர் பாடலில்
"தொடித்தோள் செறிப்ப,
தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள,
முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும்,
மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!"
என மதுரையில் உள்ள வையை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்ச்சிகளினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130-140.
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130 முதல் 140 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். குறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
"சினப்போர் வழுதியே! 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.
"வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!"
என மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.
அறிவுடை நம்பி கி.பி. 130-145.
அறிவுடை நம்பி கி.பி. 130 முதல் 145 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு மிக்கவனாகவும் கேள்விச் செல்வம், பொருட்செல்வம் உடையவனாகவும், கொடை வள்ளலாகவும், செந்தமிழ்ப் புலமைமிக்கவனாகவும், அறிஞர் பலர் போற்றுதற்கேற்ற புகழ் மிக்கவனாகவும் திகழ்ந்திருந்தான். இவன் காலத்தில் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேறு, இம்மை, மறுமை இன்பம் நல்கும் என்பவன் அறிவுடை நம்பி.இம்மன்னனைப் பற்றி புறம்-188,அகம்-28,குறுந்தொகை-230, நற்றிணை-15 போன்ற பாடல்களில் பாடப்பட்டுள்ள குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புடையன.“
"படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே ! "”
(புறம்-188)
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.“
"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! "”
(புறம்-184)
இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் "அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு செய்து இட்டால் பலநாட்கு உணவாகும். யானையை நெல்வயலில் விட்டால் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார்.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140-150.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140 முதல் 150 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.
நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து
"நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் தந்த தண்கமல்தேறல் நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்பர்.ஒங்குவாள் மாறனே! வெங்கதிர்ச் செல்வன் போலவும், தண்கதிர் மதியம் போலவும் நின்று நிலைப்பாய் உலகமோடு!"
எனப் புறம்-56 இல் பாடியுள்ளார் நக்கீரர்.
மதுரை மருதன் இளநாகனார் இம்மன்னனைப் புகழ்ந்து
"நெடுந்தகை! நீ நீடுவாழிய! ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்லையும்,திங்கள் அன்ன தண் பெருஞ்சாயலும்,வானத்தன்ன வண்மையும் உடையவனாக உள்ளாய்! கறை மிடற்று அண்ணல் பிறைநுதல் பெருமான் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! கொல்களிறும்,கவிமாவும்,கொடித்தேரும்,புகல் மறவரும் என நான்குடன் மாண்ட சிறப்புடையோய்! அறநெறிமுதற்றே அரசின் கொற்றம்"
என புறம்-55 இல் பாடியுள்ளார் மருதன் இளநாகனார்.
பூதப் பாண்டியன் கி.பி. 145-160.
பூதப்பாண்டியன் என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது. இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழி கொண்டவன். இவனுடைய மனைவி கோப்பெருங்கோப்பெண்டு என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர்
குறுவழுதி கி.பி.150-160.
குறுவழுதி கி.பி. 150 முதல் 160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். பெரும் பெயர் வழுதியின் இளவலான இம்மன்னனை அகநானூற்றுப் பாடலான (அகம்-150) போற்றுவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160-170.
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160 முதல் 170 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சோழ மன்னன் திருமாவளவனின் நண்பனாகவிருந்தவன். காரிக்கண்ணனார் என்ற புலவரால் இம்மன்னன்“
"தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே!
இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்!
இன்றே போல் நும்புணர்ச்சி"”
(புறம் - 58)
பாடப்பட்டுள்ளான்.
நெடுஞ்செழியன் கி.பி. 160-200.
நெடுஞ்செழியன் கி.பி 160 முதல் 200 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னனாவான். வட நாட்டு ஆரிய மன்னர்களைப் போரில் வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான் இப்பாண்டிய மன்னன். பெரும்படை மிக்கவனாகத் திகழ்ந்த இவன் தென்னாட்டு அரசர்கள் பலரை அடக்கி சேர,சோழர்கள் பலரையும் வென்றவனும் ஆவான். சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் அம்மன்னனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவனுமாவான். கொங்கு குறுநில மன்னர்கள் பலரை வென்ற பெருமையினையும் உடையவனாவான். அறம் (நீதி) தவறியதால் தன்னுயிரை மாய்த்த இம்மன்னன் கல்விச்சிறப்பினை முதன் முதலில் உலகினுள் உணர்த்திய மன்னன் என்ற பெருமையினைக் கொண்டவன். இவனது புறப்பாடலில் இவன் கல்வியின் சிறப்புகளைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில்“
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"”
(புறம்-183)
"ஆசானுக்கு உதவி செய்யவேண்டும்; மிக்க பொருளைத் தரவேண்டும். பணிவோடு கற்பது நல்லது! ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் அகவையால் (வயதால்) மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, இளையவனே ஆகிலும் முந்துரிமை தந்து போற்றுவாள் அறிவுடையோன் வழியில்தான் ஆட்சி செல்லும்! கீழ் இனத்தவன் கற்றால் மேலினத் தவனைவிட மேலாக மதிப்பர்!" என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திக் கூறியுள்ளான் இப்பாண்டிய மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது ஆற்றலை வியந்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்“
"வடவாரிய படை கடந்து
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்"”
என இப்பாண்டிய மன்னனைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்.
அறம் (நீதியைக்) காக்க உயிர் நீத்த வரலாறு
கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட (உத்தரவிட்ட) நெடுஞ்செழியன், கண்ணகி சொல்லக் கேட்டு தான் அறம் வழுவியதை (நீதி தவறியதை) உணர்ந்து மனம் நொந்து "யானோ அரசன்! யானே கள்வன்! தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது" எனத் தனதுயிரை விட்டான். வளைந்த செங்கோலை தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பாண்டிய மன்னன் செயலை நினைத்து வியந்த சேரன் செங்குட்டுவன் "பாண்டியன் செங்கோல் திறங்காக்க உயிர்விட்டானே! அரசர்களுக்கு, மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழை இயிர் எய்தில் பெரும் பேரச்சம். கொடுங்கோலுக்கு அஞ்சி வாழ்தல் துன்பம். துன்பம் அல்லது தொழுதகவு இல்லை!" என மனம் வருந்தினான் செங்குட்டுவன் என்பது வரலாறு.
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170-180.
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170 முதல் 180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பேரெயின் முறுவலார் இம்மன்னனைப் பற்றி“
"தொடிஉடைய தோள் மணந்தனன்
கடி காலில் பூச் சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தடித்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்
வலியர் என வழி மொழிபவன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரைத் தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ
படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!”
(புறம் - 239)
கூறுகின்றார் அதில் "செய்தக்க எல்லாம் செய்தவன். இறந்துவிட்டான்! புகழ் கொண்டான். இவனை இடுகாட்டில் புதைத்தால் என்ன? சுட்டால் என்ன?' என இப்புலவர் வருந்திக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிவேற் செழியன் கி.பி.200-205.
வெற்றிவேற் செழியன் கி.பி.200 முதல் 205 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்துவந்த பாண்டிய மன்னனாவான். இவன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆளும் உரிமையினைப் பெற்றான். சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இருந்த வேளை வெற்றிவேற் செழியன் மதுரையில் முடிசூடிக் கொண்டான் என்பதனை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) போன்றன கூறுவது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு.
இவன் காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாமல் இருந்தது. குடிமக்கள் ஆடு,மாடுகளினை வளர்க்க முடியாமல் துன்புற்றனர். வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. இதனைப் பார்த்த நன்மாறனும் கண்ணகியின் சாபமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என உணர்ந்து கண்ணகிக்கு விழா எடுத்தான். அவ்விழாவிற்குப் பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. வற்கடம் நீங்கியது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர். பாண்டியன் சித்திர மாடத்து உயிர் துறந்தான். சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று புகழப்பட்டான்.
நன்மாறனின் சிறப்பைப் பற்றி மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவ்வாறு பாடுகின்றார்.
“"ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கை தகை மாண்வழுதி
வல்லைமன்ற! நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும! பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு
திங்கள் அனையை எம்மனோர்க்கே!”
(புறம்-59)
பாடாண் திணைப் பாட்டாக விளங்கும் இப்பாடலில் "அழகான கண்டோர் மயங்கும் மார்பை உடையவன். வெற்றி மாலை அணிந்தவன். நீண்ட கைகளை உடையவன். கை நீண்டிருப்பது ஆண்மைக்கிருய அங்க இலக்கணம்! தகுதியான நல்ல குணங்களை எல்லாம் பெற்றவன். வலிமையானவன். விரும்பி பிறர்க்களிப்பான். பொய் உரையாதவன். பகைவரிடம் கோபம் உடையவன். பகைவர்களுக்கு சூரியன் போன்றவன். எங்களுக்குத் திங்கள் போன்றவன்" எனப் புகழ்ந்து பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார்.
நெடுஞ்செழியன் கி.பி. 205-215.
நெடுஞ்செழியன் கி.பி. 205 முதல் 215 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டியன் நன்மாறனின் மகனான இவன் தன் பாட்டனான நெடுஞ்செழியனின் பெயரைக் கொண்டிருந்தான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான்.
நெடுஞ்செழியன் ஆற்றிய போர்கள்
நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேர விரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையினை முற்றுகையிட்டனர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.“
"அன்னையின் அணைப்பிலே இருந்தவன்.ஜம்படைத்
தாலியும் கழட்டவில்லை!காலில் கிண்கிணி அணிந்துள்ளான்
பாலறாவாயினன்"”
(புறம்-77)
விளக்கம்:
தன்னை இளையவன் என்று இகழ்ந்து போருக்கு வந்த ஏழு அரசர்களையும் வெற்றி கொள்ள படை திரட்டினான். படை முன் நடக்க தேர் ஏறி வந்தான். ஏழு படைகளையும் தலையலங்கானம் என்ற இடத்தில் எதிர்த்தான். பகைவர் படைகளை முன்னிலைப்படுத்தினான். ஏழு அரசர்களையும் நோக்கி வீர சபதம் செய்தான்!.“
"நடுதக்கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்' என உளையக் கூறி
படுமணி இரட்டும் பாஅடிப்பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும்,மாவும்
படைசுமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத்தாக்கி முரமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின்-பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன் எம் இறை' எனக்கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ்சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே"”
(புறம்-72)
விளக்கம்:
"என் நாட்டை விரும்பி வந்த பகைவர்கள் எள்ளி நகையாடத்தக்கவர்கள். 'இளையவன் இவன்' என வந்தனர். யானையும், தேரும், குதிரைப் படையும் உடையவன் நான் என்பதை உணராது வந்தனர். என் வலிமை அறியாதவர்கள். என் கோபத்தை மூட்டினர். போரில் அனைவரையும் சிதைந்து ஓடுமாறு செய்வேன். முடியையும், முரசத்தையும் கைப்பற்றுவேன். இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடியவன் என்று பழி தூற்றட்டும். மாங்குடி மருதன் முதலான புலவர்கள் என்னைப் பாடாது நீங்கட்டும். என்னிடம் யாசிப்போர்க்கு ஈய முடியாத வறுமை உடையவன் ஆவேன்" என்று வஞ்சினம் கூறினான்.
இடைக்குன்றூர் கிழாரும் இவனது வெற்றியைப்பற்றி (புறம்-76) இல் பாடுகின்றார்.“
"நெடுங்கொடி உழிஞைப் பலரொடும் மிடைந்து
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப்பொருது களத்து அடலே"”
(புறம்-76)
சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் பாண்டியனிடம் தோற்றவர்கள். தோற்று ஓடினார்கள். தொடர்ந்து சென்று உறையூரையும், வஞ்சியையும் வென்றான். அவ்வரசர்களின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர் துறக்குமாறு செய்தான். இவ்வாறு (புறம்-78) கூறுகின்றது.
இருங்கோவேளின் மிழலைக் கூற்றத்தையும், வேளிரது முத்தூர்க்கூற்றத்தையும் வென்றான் என(புறம்-24) கூறுவது படி தமிழகம் முழுவதினையும் வென்று ஆண்டான் என்பதனை அறிய முடியும்.
பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன்
பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும்,மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.“
"தென்னவன் பெயரில் துன்னருந்துப்புன்
தொன்முது கடவுள் பின்னர்மேய
வரைத்தாழ் அருவிப்பொருப்பிற் பொருந"”
என மதுரை சோமசுந்தரப் பெருமான் வழியில் தோன்றியவன் இவன் என மருதனார் கூறுகின்றார். இந்நூல் 782 அடிகளுடையதாகும். நெடுஞ்செழியன் போர் விரும்பும் இயல்பினன் என்பதனை“
"ஒளிறிலைய வெஃகேந்தி
அரசுபட அமர் உழக்கி
அடுகளம் வேட்டு"”
என்ற அடிகளினால் குறிப்பிடுகின்றார்.
நெடுநல்வாடையில் இவனது படைக்களம் விரும்பும் செய்தியினை நக்கீரர் "நள் என்ற யாமம்! பள்ளி கொள்ளாத நெடுஞ்செழியன் பாசறையில் திரிகின்றான். போரில் புண்பட்ட வீரர்கள் பாசறையில் படுத்துள்ளனர். அவர்களை நேரில் கண்டு ஆறுதல் கூற நலம் கேட்கச் செல்கின்றான். வேப்பம் பூ மாலை அணிந்த வேலுடன் வீரர் பின் தொடரச் செல்கிறான். குதிரைகள் கரிய சேற்றை பனித்துளியால் உதறும். பனிக்காற்று வீசும். தோளின்று நழுவிய வெற்றி வாளினை வலக்கையில் ஏந்தியவனாய், முத்துமாலை தொங்கும் (வெண்கெற்றக்) குடை அசைய சென்றான். புண்பட்ட வீரர்களின் முகம் மலர நலம் விசாரிக்கின்றான். புண் வலி நீங்கி புன்முறுவல் பூத்த வீரர்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். 'வேம்புதலையாத்த நோன்கால் எஃகமொடு' திரிகின்றான் பாசறையில்! பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியன் வருகைக்குக் காத்துக் கிடக்கின்றாள் மெல்லிய படுக்கையில். "பனிக்காற்று வீசுகிறது! அரசியின் காதல் உள்ளம் வெப்பம் அடைகிறது! சாளரங்களில் முத்து மாலைகளும், திரைச் சீலையும் மெல்ல அசைகின்றன! தூக்கம் வராத ஏக்கத்துடன் அரசி படுத்திருக்கின்றாள். இவளது ஏக்கத்தைப் போக்க அரசன் பாசறை நீங்கி வரவேண்டும். அரசனும் அரசியும் மகிழ்ந்திரவு நேரத்தைக் கழிக்க வேண்டும்" என்று நக்கீரர் நெடுநல்வாடையில் பாடுகின்றார்
உக்கிரப் பெருவழுதி கி.பி. 216-230.
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கை மார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:
“வாழச்செய்த நல்வினை அல்லது
ஆழுங்காலை புணை பிறிதில்லை”
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
“நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்,
வாழச்செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்;
யான்அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே”
இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575-600.
முற்காலப் பாண்டியரில் முதன்மையானவன் பாண்டியன் கடுங்கோன் ஆவான்.
இப்பாண்டியன் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்து களப்பிரருடன் போர் செய்தான். போரில் வெற்றி பெற்றுப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். மாவீரனான கடுங்கோன் அருகிலுள்ள சிற்றரசர்களை போரில் வென்று ஒரு பேரரசனாக விளங்கினான். இவனை வேள்விக்குடிச் செப்பேடுகள், பல்யாகச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழிவந்தவன் எனக் கூறுகின்றன. இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது.
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. 300-700 இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:“
களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம்போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்”
இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
அவனி சூளாமணி கி.பி. 600-620.
அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 620 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.பாண்டிய மன்னர்கள் சடையவர்மன்,மாறவர்மன் என்ற பெயர்களை தம் பெயர்களிற்கு முன்னர் சூட்டுக் கொள்வது வழக்கம் அஃது போலவே அவனி சூளாமணியும் தன் பெயரை மாறவர்மன் அவனி சூளாமணி என அமைத்துக் கொண்டான்.பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. "குறுநில மன்னர்களை அடக்கியவன்,குறும்புகளை அழித்தவன்.செங்கோல் ஓச்சியவன்.உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன்.மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன்.ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன்.வீரமும்,ஈரமும் புகழும் உடையவன்" .இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
செழியன் சேந்தன் கி.பி. 620-642.
செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான். அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான்.சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான். இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது.இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும்.
இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரும், பல்லவரும் தங்களது ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்துவதற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டிருந்தனர். செழியன் சேந்தனின் பல சிறப்புப் பெயர்களை வேள்விக்குடிச் செப்பேடுகள்குறிப்பிடுகின்றன. இப்பாண்டிய மன்னன் சாளுக்கியருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டான். இதனால் பல்லவரின் பகைமை தற்காலிகமாகக் குறைந்தது என்பர். செழியன் சேந்தன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சீனப் பயணியான யுவான் சுவாங் பல்லவரின் தலைநகரான காஞ்சிக்கு வந்திருந்தார். அவர் பாண்டிய நாட்டிற்குப் புறப்படும் சமயத்தில் அந்நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது என்றும், அதனால் செழியன் சேந்தன் இறந்தான் என்றும் காஞ்சி மக்கள் தம்மிடம் கூறியதாகத் தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 642-700.
செழியன் சேந்தன் இறந்த பின்னர் அவனது மகன் மாறவர்மன் அரிகேசரி என்பவன் அரியணை ஏறினான். மாறவர்மன் அரிகேசரி ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். இம்மன்னன் பல போர்கள் செய்து பல வெற்றிகளை அடைந்தான். என்பதனை வேள்விக்குடிச் செப்பேடுகள் மூலம் அறியலாம். இம்மன்னன் சேர, சோழ, பல்லவ மன்னர்களைப் போரிலே வென்றான்.
அரிகேசரி சோழருடன் போர் புரிந்து ஒரே நாளில் அவர்களை வென்று அவர்களுடைய உறையூரைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போரின் இறுதியில் பாண்டியருக்கும் சோழருக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி அரிகேசரி சோழ வேந்தனின் மகளான மங்கையர்க்கரசியாரை மணந்து கொண்டான். இதனால் பாண்டிய, சோழ நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டது.
மாறவர்மன் அரிகேசரி கொடும்பாளூரை ஆண்ட களப்பிரர்களையும், பாண்டிய நாட்டின் தென் பகுதியில் ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னரான பரவர் என்பாரையும் வென்று அடக்கினான். மேலும் சேரர்களையும் அவர்களுக்குத் துணை நின்ற குறுநில மன்னர்களையும் அடக்கினான். இதனால் இம்மாறவர்மன் அரிகேசரிக்குச் சேரர்களும் குறுநில மன்னர்களும் திறை செலுத்தினர்.
அரிகேசரி முதலில் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். அவனது மனைவி மங்கையர்க்கரசியார் ஒரு சிவபக்தர். அவர் தம் கணவனைத் திருஞான சம்பந்தர் துணையுடன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்.
பாண்டியன் அரிகேசரி காலத்தில் வாணிபம் வளம் பெற்று விளங்கியது. பாண்டிய நாட்டில் உப்பும், முத்தும் மிகுதியாகக் கிடைத்தன. மேலும் அருகில் உள்ள தீவுகளிலிருந்து எல்லாம் முத்துக்கள் சேகரித்துக் கொண்டு வரப்பட்டன. முத்துக்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பாண்டிய நாட்டினர் பெருஞ்செல்வம் ஈட்டினர்.
இம்மன்னனுக்குக் கூன் பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் வேறுபெயர்களும் இருந்தன.
சான்று :
மின்னார் மௌலிச் சத்துரு சா
தன பாண்டியன் ஆம் விறல்வேந்தன்
இன்னான் மகன் கூன் பாண்டியன் ஆம்
இவன் தோள் வலியால் இசைமிக்கான்
(திருவிளையாடல் புராணம்,3108:3-4)
(மௌலி-மணிமுடி; சத்துரு சாதன பாண்டியன்-கூன் பாண்டியனின் தந்தை.)
அன்னது ஒரு காரணத்தால் சௌந்தரிய பாண்டியன் என்றாகி
(திருவிளையாடல் புராணம், 3173:1)
அரிகேசரி ஆற்றிய போர்கள்
அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும்.சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான் அரிகேசரி.மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள். தனைத்தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கூறுவது குறிப்பிடத்தக்கது.
அரிகேசரியின் சமயப் பணிகள்
அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி பின் சைவ சமயத்தின் வழியில் நடந்தவனாவான்.இவன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் இவனது அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புற்றிருந்தனர்.இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர்,அரிகேசரியும் சிவனின்றி கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும்,புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி,மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில்“
"நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!"”
என்ற பாடல் வரியின் மூலம் நெல்வேலிப் போரில் இம்மன்னன் வென்றவனெனவும், சேரனும்,பிற குறு நில மன்னர்களும் இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார்.அரிகேசரி துலாபாரமும், இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பயணியான 'யுவான்சுவாங்' அரிகேசரியின் தந்தை காலத்தில் வரமுடியாமல் இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் மேலும் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது: "பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.இங்கு வேறு விளை பொருள் இல்லை! வெப்பம் மிக்க நாடு இது.இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது.செல்வத்தால் சிறந்துள்ளது" எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இவன் சமண சமயத்தைத் தழுவியிருந்தபோது, கூன் விழுந்த முதுகினை உடைய காரணத்தால் கூன் பாண்டியன் என்று பெயர் பெற்றிருந்தான் என்பதையும், திருஞான சம்பந்தர் துணையால் சைவ சமயத்திற்கு மாறியதும், சிவபெருமான் திருவருளால் கூனல் நீங்கி நிமிர்ந்து, சுந்தர (அழகிய) வடிவத்தைப் பெற்றதால் சுந்தர பாண்டியன் என்று பெயர் பெற்றான் என்பதையும் மேலே காட்டிய திருவிளையாடல் புராணப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
இம்மன்னன் அரிகேசரியைப் பெரிய சின்னமனூர்ப் பட்டயங்கள் அரிகேசரி பராங்குசன் எனக் குறிப்பிடுகின்றன.
கோச்சடையன் ரணதீரன் கி.பி. 700-730.
மாறவர்மன் அரிகேசரிக்குப் பின்னர் பட்டம் எய்தினான். இவனும் தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 670-710) பல போர்களைச் செய்து வெற்றி கண்டான். இவன் தென்னகத்தில் இறைமையைப் பெறுவதற்குப் பல மன்னர்களுடன் போரிட வேண்டியிருந்தது. இவனது வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். சேரரை வென்றதால் வானவன்என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் மேலும் பெருகியது. ரணதீரன் சாளுக்கியரை முறியடித்ததாகவும் தெரிகிறது.
கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.
அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான். இவனது ஆட்சியில் பாண்டிய நாடு உயர்வடைந்தது எனலாம்.
இம்மன்னனுக்கு முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான். வேதங்ளைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களுக்கு மிகவும் உதவினான். கர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து உயர்வடைந்தான். ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் ஆற்றிய போர்களும் பெற்ற பட்டங்களும்
ரணதீரன் கோச்சடையன் என அழைக்கப்பட்டான். செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது. படையெடுத்துச் சென்ற இவன் முதலில் சேர நாட்டை வென்றான். பின்னர் சோழ நாடு, கொங்கு நாடு, கருநாடகம் அனைத்தினையும் வென்று அனைவரையும் கப்பம் கட்டுமாறு ஆணையிட்ட இவன் மருதூரில் நடைபெற்ற போரில் பொதிய மலைத் தலைவன் ஆய்வேளையும் மங்கலபுரத்தில் மாரதரையும் வெற்றி கொண்டவனாவான். சாளுக்கிய மன்னனான விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றுப் பட்டம் பெற்றான் ரணதீரன். இவ்வாறு வேள்விக்குடிச் செப்பேடும் கேந்தூர்க் கல்வெட்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
ரணதீரன் ஆட்சியில் சேரமான் பெருமாள் நாயனார்
ரணதீரன் ஆட்சிக் காலத்தில் சேரமான் பெருமாள் நாயனார் மதுரைக்கு வந்து அங்கு பாண்டியன் மகளை மணந்து, சோழ மன்னன் ஒருவனையும் சந்தித்தார். திருஆலவாய் இறைவனையும், திருப்பரங்குன்ற பெருமானையும் பின் வணங்கினார் எனப் பெரிய புராணம், சுந்தரர் தேவாரமும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. (பெரிய-கழறி-91-2) (சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றப் பதிகம்-பாட்டு-11).
ரணதீரன் கி.பி. 710 ஆம் ஆண்டில் மரணமடைந்தான்.
அரிகேசரி பராங்குச மாறவர்மன் கி.பி. 730-769
கோச்சடையன் ரணதீரனின் புதல்வன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆவான். தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு முன்பே பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் கொங்கு நாட்டு உரிமை பற்றிப் பகைமை ஏற்பட்டிருந்தது. இக்காரணங்களால் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சியின்போது பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் பாண்டியன் வெற்றியடைந்தான்.
பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.
பராங்குசன் ஆற்றிய போர்கள்
நந்திவர்மனுடனான போர்
கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர்,நெடுவயல்,பூவலூர்,கொடும்பாளுர்,பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன்.பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய நந்திவர்மனும் படையுடன் வந்தான் இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டுப் போர்
கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன் கங்க அரசனை வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான்.கொங்கு வேந்தர்கள் பராங்குசனிற்குக் கப்பம் கட்டினார்கள் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
சைவ சமயப் பணிகள்
கொங்கு நாட்டிற்குப் படையெடுத்து போரில் வென்ற பராங்குசன் காவிரி ஆற்றில் அமைந்திருந்த கொடுமுடிக்கு வருகை புரிந்தான்.சிவபெருமானை வணங்கி பொன்னும,பொருளும் காணிக்கையாக அளித்தான்.இக்குறிப்பானது வேள்விக்குடிச் செப்பேட்டில் கொடுமுடி மகுடி ஈசனை வணங்கினான்.சைவ சமயத்தைப் போற்றியவன் கோயில் பணிகள் செய்தான்.கொடுமுடி ஈசனுக்குப் பொன்னும்,பொருளும் ஈந்தான்.மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான்.கொடுமுடியும் இவனது ஆட்சியில் இருந்தது அதனால்தான் இத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி எனப்பெயர் பெற்றது என பராங்குசனின் சிவபக்தியினைப் பற்றி வேள்விக்குடி செப்பேட்டிலும்,கொடுமுடிக் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பராங்குசன் தன பாட்டனைப்போலவே இரணியகர்ப்பததானங்களும்,துலாபாரதாங்களும் செய்தான்.இறையனார் களவியல் மேற்கோள் பாடல்கள் இவனைப் புகழ்ந்து பாடின! வீரமும்,பெருமையும்,புகழும் உடையவனாகத் திகழ்ந்தான் பராங்குச பாண்டியன்.
நெடுஞ்சடையன் பராந்தகனும் அவனது மகனும் (கி.பி. 768-815)
நெடுஞ்சடையன் பராந்தகன்,
பராங்குச மாறவர்மனுக்கும், பூசுந்தரிக்கும் மகனாகப் பிறந்தவன் ஆவான். இன்றைய தஞ்சை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய பரந்துபட்ட பாண்டியப் பேரரசினை அவன் தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டான். இவன் கி.பி 765 முதல் 790 வரை அரசாண்டான்.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்காகப் பெரும்படையுடன் வந்தான். காவிரியின் தென் கரையிலுள்ள பெண்ணாகடம் (இவ்வூர் தஞ்சைக்கு அருகில் உள்ளது) என்னும் ஊரில் கடும்போர் நடைபெற்றது. இறுதியில் பாண்டிய மன்னனே வெற்றி வாகை சூடினான். இதனால் கோபம் கொண்ட இரண்டாம் நந்திவர்மன் சேர மன்னன், கொங்கு நாட்டு அரசன் ஆகியோருடனும், ஆய்வேள் என்ற பொதிகைமலைத் தலைவனுடனும், தகடூர் அதிகமானுடனும் கூட்டினை ஏற்படுத்திக் கொண்டு போர் தொடுக்கலானான். இதிலும் பாண்டியரே வெற்றி கண்டனர். இப்போரில் கொங்குநாட்டு அரசன் கைதியாகப் பிடிபட்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகன் பாண்டிய நாட்டின் தென்பால் அமைந்துள்ள வேணாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த யானைகளையும், குதிரைகளையும், பெருஞ்செல்வத்தினையும் கைப்பற்றினான். இவற்றுடன் வேணாட்டையும் கைப்பற்றினான். ஆய் நாட்டு அரசன், வேணாட்டு மன்னனுடன் உறவுவைத்து இருந்ததால் அம்மன்னனையும் நெடுஞ்சடையன் பராந்தகன் வெற்றி கண்டான். மேலும் முத்தரையர்களையும் வென்றான். இவ்வாறு ஒருவர்பின் ஒருவராக வென்று பல்லவர் கூட்டினை உடைத்தான். இதன் மூலம் இம்மன்னன் மிக வலிமையுள்ளவன் எனத் தெரிய வருகிறது. இவனது காலத்தில் பாண்டியரின் ஆட்சி திருச்சி, தஞ்சை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இம்மன்னன் மற்றப் பாண்டிய மன்னர்களைப் போல் அல்லாது வைணவ நெறியைக் கடைப்பிடித்தான். திருமாலுக்கு என்று காஞ்சிவாய்ப் பேரூரில் கோயில் ஒன்றைக் கட்டினான். வைணவக் கோயில்களுக்கு நன்கொடைகள் அளித்தான். மதுரைக்குக் கிழக்கே ஆனைமலையில் விஷ்ணுவுக்குக் கோயில் அமைத்தான். கோயிலைச் சுற்றி அக்கிரஹாரங்களைக் கட்டி வேதியருக்கு இலவசமாக அளித்தான். வேற்று நாட்டிலிருந்து கிடைத்த செல்வங்களை எல்லாம் அறப்பணிக்கெனச் செலவிட்டான். கொடைகள் பல வழங்கிப் புகழ் பெற்றான். இவன் வைணவ நெறியைக் கடைப்பிடித்தாலும் சைவ சமயத்தாரைத் துன்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சடையன் பராந்தகன் சாசனங்களையும், கல்வெட்டுகளையும் வெளியிட்டு உயர்வடைந்தான். இவன் தனது ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேள்விக்குடிச் செப்பேட்டினை வெளியிட்டான். இவன் ஜதிலா பராந்தகன், வரகுண மகாராஜா, மாறன் சடையன், நெடுஞ்சடையன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகனை அடுத்து, அவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் ஆட்சிக்கு வந்தான். இவன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (கி.பி. 790-792) ஆட்சி புரிந்தான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை
பராந்தகன் ஆற்றிய போர்கள்
கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ அரசன் ஒருவனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் செய்து வெற்றி பெற்றுப் பின் ஆய்வேளையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம்,செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும்,காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி,பயிரூர்,புகழியூர் போன்ற இடங்களில் அதியமான் மரபினன் அதியமானைப் போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும்,அதியமானுக்கு உதவியாக சேர மன்னன் ஒருவனும்,பல்லவ மன்னன் ஒருவன் வந்ததாகவும் இவர்களைத் துரத்திய பராந்தகன் கொங்கர் கோமானை வென்று புலவரைச் சிறையில் அடைத்து கொங்கு நாட்டு ஆட்சியைப் பெற்று விழிஞத்தை அழித்து வேணாட்டு அரசனைச் சிறைபிடித்து அவன் நாட்டிலிருந்து யானைகள்,குதிரைகள்,மற்றும் செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து வந்து வெள்ளூரில் பகைவரை அடக்கி தென்னாடு முழுவதனையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தான் எனவும் அச்செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் ஆற்றிய பாதுகாப்புகள்
வெற்றி பெற்ற நாடுகளையெல்லாம் பாதுகாத்தும்,குறுநில மன்னர்களைக் கண்காணித்தும் வந்திருந்தான் பராந்தகன்.கரவபுரம் என்ற நகரில் அகழியும்,மதிலும்,கோட்டையும் அமைத்து அப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப்படையை வைத்தான் பராந்தகன் மேலும் அப்பகுதி திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை என அழைக்கப்பெற்றது என களக்குடி நாட்டுக் கவந்தபுரம் என்ற கல்வெட்டுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பராந்தகன் ஆற்றிய சமயப் பணிகள்
பாண்டிய மன்னர் பெரும்பாலானோரும் சைவர்களாக இருந்தாலும் பராந்தகன் திருமாலை வணங்கியவனாவான்."பரம வைஷ்ணவன்தானாகி நின்றியங்கு மணிநீள் முடிநில மன்னவன்" என பராந்தகன் வைணவ சமயத்தில் வைத்திருந்த பற்றினைப் பற்றி சீவரமங்கலச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டி நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார்.பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த பராந்தகன் அவரிடம் அடியவராகவிருந்தான்.கொங்கு நாட்டு ஆட்சியில் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோயில் எடுத்தவன் பராந்தகனே.மேலும் இவனைப் பற்றிய செப்பேடுகள் பலவும் வைணவத் தர்ம சுலோகங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் பெற்ற பட்டங்களும் பெயர்களும்
தென்னவானவன்,சீவரன்,சீபினோகரன்,சினச்சோழன்,புனப்பூழியன்,வீதகன்மசன், விநயவிச்ருதன் ,விக்கிரம பாரகன், வீரபுரோகன், மருத்பலன், மானியசாசனன்,மநூபன், மார்த்திதவீரன், கிரிஸ்தரன்,கீதகின்னான், கிருபாலயன் ,கிருதாபதானன், கலிப்பகை, கண்டகநிசுடூரன், கார்யதட்ணன், கார்முகப்பார்த்தன், பண்டிதவச்சலன், பரிபூர்ணன் ,பாபபீரு, குணக்ராகியன் , கூடநிர்ணயன்
போன்ற சிறப்புப் பெயர்களையும் பட்டங்களினையும் பெற்றிருந்த பராந்தகனே அதிக சிறப்புப் பெயர்களைப் பெற்ற அரசன் என வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றான்.இவன் காலத்தில் வடமொழி ஆளுமையில் இருந்தது இதனாலேயே இவனது பெயர்கள்பல வடமொழிப் பெயர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பராந்தகன் காலத்து அரசியல் தலைவர்கள்
பராந்தகன் ஆட்சிக் காலத்தில் காரி ,எயினன் ,சாத்தன், கணபதி ,ஏனாதி, சாத்தன் ,தீரகரன், மூர்த்தி, எயினன், சங்கரன், சீதரன் போன்ற அரசியல் தலைவர்கள் பலர் இருந்தனர் என கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகள் பலவற்றுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டாம் இராசசிம்மன் கி.பி 790-792.
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தவன் இம்மன்னன். இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை
அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன்.கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள் கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை, திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலாம் வரகுண பாண்டியன் ( கி.பி. 792-815).
பாண்டிய நாட்டின் அடுத்த மன்னனாக முதலாம் வரகுண பாண்டியன் ஆனான். இவன் இரண்டாம் இராசசிம்மனின் மகன் ஆவான்; நெடுஞ்சடையன் பராந்தகனின் பேரன் ஆவான். இவன் பல்லவ மன்னனான தந்திவர்மனைப் போரில் வென்றான். இதன் மூலம் தொண்டை நாட்டில் தென்பெண்ணை ஆறு வரையுள்ள பகுதிகளில் பாண்டியரின் ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தஞ்சைப் பகுதியில் ஆட்சி செய்த முத்தரையரையும் வென்று அடக்கினான்.
இவன் சைவ நெறியைக் கடைப்பிடித்தான். இவனது தொண்டினைப் பற்றிப் பட்டினத்து அடிகளும், நம்பியாண்டார் நம்பியும் புகழ்ந்து பாடியுள்ளனர். அதோடு இல்லாமல் மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்து பாடும் பெருமையினையும் இவன் பெற்றுள்ளான்.
இவன் அறப்பணியிலும் சிறந்து விளங்கினான். சிராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்தமாக 125 கழஞ்சு பொன் அளித்தான். அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு 240 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கினான். இவனுக்குச் சடையவர்மன், மாறன் சடையன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் காலத்துக் கல்வெட்டுகள் சோழ நாடு முழுவதும் கிடைத்துள்ளன. இதை நோக்கும்போது இவனது ஆதிக்கம் சோழநாட்டிலும் பரவியிருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர்.
இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் போர் செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.
சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் ஆட்சி
பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு திருவியலூர்,திருநெய்த்தானம் ஆகிய ஊர்களிலும்.இவனின் ஆறாம்,மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் ஆடுதுறை,கும்பகோணம்,செந்தலை ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் திருச்சிராப்பள்ளி,திருக்கோடிகா ஆகிய ஊர்களிலும் மேலும் திருச்சோற்றுத்துறையில் சில கல்வெட்டுக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் சோழ நாடு முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது.மேலும் நந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை மண்டலத்தினையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது வரலாறு.
வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள்
நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் வைத்து,125 கழஞ்சு பொன் கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும்,நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.திருநெல்வேலி அம்பாசமுத்திரக் கோயிலுக்கு 290 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள்
மணிவாசகர்
திருவாதவூரடிகளாகிய மணிவாசகர் வரகுண பாண்டியனோடு இருந்த சமயம் இவனைப் பற்றித் திருச்சிற்றம்பலக் கோவையில் இரு பாடல்களைப் பாடினார்.அவையாவன:“
"மன்னவன் தெம்முனை மேற்செல்லமாயினும்
மால்அரியேறு
அன்னவன் தேர்புறத்தல்கல் செல்லாது
வரகுணனாந்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத்
தேவர்க்கெலாம்
முன்னவன் மூவலன் ஆளும்மற்றோர்
தெய்வம் முன்னவளே"”
(306)
“"புயலோங்குஅலர்சடை ஏற்றவன் சிற்றம்பலம்
புகழும்
மயலோங்கிருங்களியானை வரகுணன் வெற்பில்
வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்கோபமும்
காட்டிவரும்
செயலோங்குஎயில் எரிசெய்தபின் இன்றோர்
திருமுகமே"”
(307)
இப்பாடல் மூலம் "பாண்டியன் வரகுணன் போர் மேற்சென்றால் பகைவர் தேர்கள் புறம் செல்ல இயலாது!இவன் சிற்றம்பலத்து இறைவனை அன்றி பிற தெய்வம் வணங்காதவன்.அதனால் இவனே மற்றொரு தெய்வம் ஆவான்.புயலன்ன சடை உடையவன் சிற்றம்பலத்து இறைவன்.அவனை வணங்கும் வரகுணன் யானைப்படை கொண்டு பகைவர் மதிலை எரித்தான்"என மணிவாசகர் புகழ்கின்றார்.
பட்டினத்தடிகள்
பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் வரகுணன் ஆற்றிய தொண்டுகள் அனைத்தினையும் பாடலாகக் கூறியுள்ளார் அப்பாடலில்-
“"வெள்ளைநீறு மெய்யிற்கண்டு
கள்ளன் கையில் கட்டவிழ்ப்பித்தும்
பாடினவென்று படாம்பல் அளித்தும்
ஈசந்தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னுங்கலந்து தூவியும்
வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றி
வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுணதேவரும்"”
வரகுணன் வெந்நீறு பூசியிருப்பான்.ஈசனையே ஏத்தி இருப்பான்.ஈசனைப் பாடியவர்களுக்கு காசும்,பொன்னும் கொடுத்தான்.வேம்பு பழத்தை சிவலிங்கம் என்று விதானம் அமைத்தான்.மனைவியைக் கோயில் பணி செய்ய வைத்தான்.பார்க்கும் இடமெல்லாம் ஈசனையே கண்டு வணங்கினான்" எனப் பாடியுள்ளார் பட்டினத்தடிகள்.
நம்பியாண்டார் நம்பி
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள் கோயில் திருப்பண்ணியர் என்ற விருத்தம் பாடினார்.அதில் அவர் வரகுணனைப் பற்றிப் பாடுகையில்
“"பொடியேர் தருமேனியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயில்
கருவியில்லார்
அடியே படவமையுங்கணை என்றவரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத்தாடி தன்மெய்
கழலே!"”
என வரகுணன் சிவன் மீது கொண்டிருந்த அன்பினைப் பாடியுள்ளார்.
வரகுணனின் இறுதிக் காலம்
வரகுணனின் ஆட்சி பற்றி திருநெல்வேலி,அம்பாசமுத்திரம்,தளபதி சமுத்திரம்,கழுகுமலை,ஏர்வாடி ஆகிய ஊர்களில் 39.41,42,43 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன.43 ஆண்டுகள் ஆட்சி புரிந்த வரகுணன் கி.பி.835 ஆம் ஆண்டு இறந்தான்.
சீமாறன் சீவல்லபன் கி.பி. 815-862.
முதலாம் வரகுண பாண்டியனுக்குப் பின்னர் அவனது புதல்வனாகியசீமாறன் சீவல்லபன் ஆட்சிக்கு வந்தான். சீமாறன் சீவல்லபன் விழிஞம் என்றும் ஊரில் சேர நாட்டு மன்னனை வெற்றி கொண்டான். விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்.
முதலாம் சேனன் என்னும் மன்னன் ஈழத்தை ஆண்டு வந்தான். அப்போது சீமாறன் சீவல்லபன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கே உள்ள புத்த விகாரங்களிலிருந்த பொன்னால் ஆகிய படிமங்களையும் பிறபொருள்களையும் சூறையாடினான். அச்செல்வங்களைப் பாண்டிய நாட்டிற்கு எடுத்து வந்தான். தோல்வியடைந்த முதலாம் சேனன் பாண்டிய மன்னனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் விளைவாகச் சேனனுக்கே பாண்டிய மன்னன் அவனது ஈழ நாட்டை வழங்கினான்.
சீமாறன் சீவல்லபன் ஆண்ட காலத்திலேதான் பல்லவ நாட்டைமூன்றாம் நந்திவர்மன் ஆண்டு வந்தான். அவன் ஒரு சிறந்த வீரனாக இருந்தான். தனது மூதாதையர்கள் பாண்டிய மன்னர்களிடம் தோல்வியுற்றதை மனதில் கொண்டு பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி கொண்டான். இதன் விளைவாகப் பாண்டியரது நாடு தனது வடக்குப் பகுதியை இழந்து விட்டது. இப்போர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்றது.
தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. குடமூக்கு என்பது இந்நாளில் உள்ள கும்பகோணத்தைக் குறிக்கும். இப்போரில் மூன்றாம் நந்திவர்மனையும் அவனுக்கு உதவியாக இருந்த கூட்டு அரசர்களையும் சீமாறன் சீவல்லபன் புறமுகுது காட்டி ஓடுமாறு செய்து வெற்றி பெற்றான். இவ்வெற்றியின் மூலம் பாண்டியனது பெயர் சற்று மேலோங்கியது.
சீமாறன் சிறிது காலம் கழித்துப் பல்லவ மன்னனானநிருபதுங்கவர்மனுடன் போர் புரிந்தான். இதில் நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்தான். இதன் மூலம் பாண்டியன் சோழ நாட்டின் வட பகுதியை இழந்தான். இப்போர் அரிசிற்கரை என்னுமிடத்தில் நடந்தது.
சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது.
சீமாறன் சீவல்லபனுக்குச் சடையன் மாறன் என்ற பெயரும் உண்டு. இவனது வரலாற்றைச் சின்னமனூர்ச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் மேலும் சில கல்வெட்டுகளும் கூறுகின்றன.
சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். வரகுண வர்மன், பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர்.இவனது சிறப்புப்பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீவல்லபன் ஆற்றிய போர்கள்
புதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப் பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதுபடி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான் மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை குண்ணூர்,சிங்களம்,விழிஞம்,ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குடமூக்கில் கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாசுதர் ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்
ஈழ நாட்டில் முதல் சேனை அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களினைக் கொள்ளையிட்டான். புத்த விஹாரங்களில் இருந்த பொற் படிமங்களையும்,பொருள்களையும் கைப்பற்றி வந்தான் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன் மலேயாவுக்குப் போனான்.இளவரசன் மகிந்தன் இறந்தான்.காசபன் ஓடிவிட்டான்.பணிந்து உடன் படிக்கை செய்து கொண்ட முதல் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாம் சேனன் மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.சீவல்லபன் இருவரையும் வென்று நாட்டை விட்டுத் துரத்தினான் என மகாவம்சம் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்
சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும் அவற்றுள் தெள்ளாற்றுப் போர்,குடமூக்குப் போர்,அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும்.கி.பி.836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான். மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல் குறிப்பிடப் பட்டுள்ளது. திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் தொண்டை நாட்டினை இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் கோபங்கொண்டான்.தோல்வி மனதை வாட்டியது.தஞ்சை கும்பகோணம் அன்று குடமூக்கு என்றிருந்தது.குடமூக்குப் போரில் பாண்டியன் ஆற்றலுடன் போரிட்டான்; நந்திவர்மன், உடன் வந்த கங்கர், சோழர், காலிங்கர் ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் வாகூர்ச் செப்பேட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளான்.
நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. லால்குடி, கண்டியூர், திருச்சின்னம் பூண்டி, திருக்கோடிகா போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும்.
கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.
இரண்டாம் வரகுண பாண்டியன் (கி.பி. 862-885).
சீமாறன் சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சீவல்லபனின் மூத்த மகன் வரகுணவர்மன் என்பவன் ஆவான். இவனே பிற்காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் எனப்பட்டான். இவ்விரண்டாம் வரகுண பாண்டியன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு பாண்டியப் பேரரசை மாயப்பாண்டியனிடமிருந்து மீட்டுக் கொண்டான். இதனால் பாண்டியருக்கும் பல்லவருக்கும் சிலகாலம் நட்புறவு நிலவியது.
இரண்டாம் வரகுண பாண்டியன் தன் தந்தை இழந்த சோழ நாட்டுப் பகுதியை மீண்டும் அடைய எண்ணி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இதனால் அவனுக்குக் காவிரிக்கு வடக்கேயுள்ள இடவை என்னும் நகர் கிடைத்தது. இப்போரில் சோழ இளவரசனான ஆதித்த சோழன் இரண்டாம் வரகுண பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை.
இவ்வாறு வெற்றி பெற்றதால் வரகுண பாண்டியனின் செல்வாக்கு உயர்வடைந்தது. இதனால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணினான். அபராசிதவர்மன் என்னும் பல்லவ மன்னன். எனவே அவன் பெரும்படையுடன் வரகுண பாண்டியனுடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், சோழ இளவரசன் ஆதித்த சோழனும்பல்லவ மன்னனுக்கு உதவியாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பாண்டியப் படைக்கும் பல்லவக் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இப்போரில் கங்க அரசன் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். ஆயினும் அபராசித வர்மனும், ஆதித்த சோழனும் போரில் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்தான். தோல்வி அடைந்த வரகுண பாண்டியன் சோழ நாட்டில், தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினான். இவ்வெற்றியால் மகிழ்ந்த அபராசிதவர்மன் ஆதித்த சோழன் தனக்குச் செய்த உதவிக்காக, அவனுக்குச் சோழ நாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.
இரண்டாம் வரகுண பாண்டியன் நிறைய அறப்பணிகளைச் செய்தான். இதற்குச் சான்றாக, இம்மன்னன் சுமார் 1400 பொற்காசுகளைத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள் வழிபாடு நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கினான். இதனால் இவன் திருச்செந்தூர் முருகனின் மீது பக்தி கொண்டிருந்தது தெரியவருகிறது.
பராந்தக பாண்டியனும் அவனது மகனும் (கி.பி. 885-920)
இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் (கி.பி.885-900) ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.
பராந்தகப் பாண்டியன் கி.பி. 860-905.
பராந்தகப் பாண்டியன் கி.பி. 860 முதல் 905 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.அண்ணனின் இறப்பிற்குப் பின்னர் முடிசூட்டிக் கொண்டான்.சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான்.திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது.இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.
பராந்தக பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வேணாட்டு அரசனை வெற்றி கொண்டான் என்று கூறப்படுகிறது. அதோடு கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்து வெற்றி கொண்டான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது. இம்மன்னன் தேவதானங்களும், பிரமதேயங்களும், பள்ளிச் சந்தங்களும் அளித்து உயர்வடைந்தான்.
பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்
கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான்.கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம்,பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்.
மூன்றாம் இராசசிம்மன் கி.பி 900-945.
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தகப் பாண்டியனின் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன்,இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம்,தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.
மூன்றாம் இராசசிம்மன்.(கி.பி. 900-920).
பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம்,தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.
இவன் ஆட்சிக்கு வந்தபின் தஞ்சை, கொடும்பாளூர் ஆகிய இடங்களை ஆண்ட மன்னர்களை வென்றான். இச்சமயத்தில் சோழர்கள் நன்கு வலிமை பெற்றிருந்தனர். சோழர்கள் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றனர். இப்போருக்காகப் பாண்டிய மன்னன் இலங்கை அரசன் ஐந்தாம் காசிபன் உதவியை நாடியும் பயன் இல்லாமல் போயிற்று. இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது.
மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்
1-மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.
2-முதற் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
3-பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்
* உலப்பிலி மங்கலத்தில் மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.
* கொடும்பாலூர் அரசனான விக்கிரமகேசரி சோழனுடனான போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.
* வஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது.அங்கு சோழன் ஒருவனை வைப்பூரிலும்,நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.
* கி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.
* வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஜந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான் யானைப் படையினை சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான் என்பது வரலாறு.
மூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம்
வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான் பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான்.ஜந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும்,வாள்,குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான்.மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான்.பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.
அமர புயங்கன் கி.பி. 930-945.
அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராசன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான். அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் ஆட்சி பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955.
சீவல்லப பாண்டியன் கி.பி. 945 முதல் 955 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டாம் இராசேந்திர சோழன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த சமயம் சோழ மன்னனிற்குத் திறை செலுத்தி வந்த காரணத்தினால் விடுதலை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.கி.பி. 1054 ஆம் ஆண்டளவில் சீவல்லப பாண்டியனின் பட்டத்தரசியால் சோழ நாட்டுத் திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கப்பட்டது.
வீரபாண்டியன் கி.பி. 946-966.
வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை ஆட்சி புரிந்தவனாவான்.மூன்றாம் இராசசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். சோழாந்தகன்,பாண்டி மார்த்தாண்டன் போன்ற சிறப்புப்பெயர்களை இவன் பெற்றிருந்தான் என திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி,இராமநாதபுரம்,திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம். வீரபாண்டியனின் 9 மற்றும் 10 ஆம் ஆண்டு ஆட்சிக் காலங்களில் குறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திருமங்கலம் வட்டம்,கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் காணலாம்.
சோழரிடமிருந்த முதலில் பாண்டிய நாட்டைனை மீட்டுப் பின் முதல் கண்டராதித்தன் இராட்டிரகூட மன்னன் மூன்றாங் கிருட்டிணதேவனிடம் போர் புரிந்து தோல்வியுற்றதனால் பாண்டிய நாட்டினை இழந்தான் எனக் கருதப்படுகின்றது. சோழ மன்னர்களிற்குக் கப்பம் கட்டாமல் தன்னுரிமை ஆட்சியினை நடத்திய வீரபாண்டியனின் தகவல்களைக் கூறும் கல்வெட்டுக்கள் மதுரை,நெல்லை,இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. சேவூர்ப் போரில் வீரபாண்டியன் தோற்றான் என சுந்தரசோழனின் கல்வெட்டொன்றில் "மதுரை கொண்டகோ இராச கேசரிவர்மன்" எனவும் 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.சோழ மன்னனுக்குத் துணையாக கொடுப்பாலூர் மன்னன் பூதவிக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் போர் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'சோழன் தலைக் கொண்டான் கோவீரபாண்டியன்' என தன்னைக் குறித்துக் கொண்ட வீரபாண்டியன் கொங்கு நாட்டினை தன்னாட்சியில் வைத்திருந்தான். இவன் பெயரால் வீரபாண்டி என்ற ஊர் ஒன்று உள்ளதுகொல்லிமலையில் பாண்டியாறு என்னும் ஆறு இவன் பெயரில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.வீரபாண்டியனின் 20 ஆண்டு ஆட்சிக் காலக் கல்வெட்டுக்களே இன்றளவும் உள்ளன. இப்பாண்டிய மன்னனின் ஆட்சியின் பின்னர் சோழப் பேரரசினால் பாண்டிய நாடு ஆட்சி செய்யப்பட்டது.
தன் தந்தை இழந்த பாண்டிய நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்திருந்தான். அப்போது இராஷ்டிரகூட நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். தக்கோலம் என்னும் இடத்தில் நடந்த போரில் மூன்றாம் கிருஷ்ணன் சோழர்களை வெற்றி கொண்டான். மேலும் சோழ நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் வலுவிழந்த சோழர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்த பாண்டிய நாட்டைத் தொடர்ந்து பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தனர். இத்தருணம் பார்த்து மூன்றாம் இராசசிம்மனின் மைந்தன் வீரபாண்டியன் சோழர்களைப் போரில் தோற்கடித்து மதுரையை மீட்டுக் கொண்டான். ஆயினும் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பகைமை ஓய்ந்த பாடில்லை. சோழ நாட்டை ஆண்டு வந்த சுந்தரசோழன் என்பவன் தன் மைந்தன் ஆதித்த கரிகாலனுடன்படையெடுத்துச் சென்று வீரபாண்டியனோடு சேவூர் என்னும் இடத்தில் போரிட்டான். கி.பி. 966இல் நடைபெற்ற அப்போரில் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். இப்போர் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் மதுரை சோழர்களின் கைவசம் வந்தது.
இதன் விளைவாகப் பாண்டிய நாடு கி.பி. 966 முதல் சோழ நாட்டுப் பேரரசின் ஒரு மண்டலமாக மாறியது. இது சோழ நாட்டு ஆளுநர்களால் நிருவாகம் செய்யப்பட்டுவந்தது. இத்துடன் முற்காலப் பாண்டியர் வரலாறு முடிவுற்றது எனலாம்.
செண்பக பாண்டியன்
வங்கிய சூடாமணி பாண்டியன் சண்பக நந்தவனம் ஒன்றை அமைத்து சோமசுந்தரப் பெருமானுக்கு செண்பக மாலை சூட்டி நாள் தோறும் வணங்கி வந்தான். இதனால் இவன் செண்பக பாண்டியன் என்றும் வழங்கப்பட்டான்.
கூந்தல் மணமும் மன்னனின் சந்தேகமும்
மன்னன் ஒரு நாள் நந்தவனத்தினுள் உலாவும் போது ஒரு வகைப் புது மணம் வந்தது.அது தன் மனைவியின் கூந்தலினின்று வந்த மணம் என்பதை அறிந்த மன்னனுக்கு இம்மணம் இயற்கையோ செயற்கையோ என்றொரு சந்தேகம் எழுந்தது. தன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கக் கூடியதாக யாரேனும் பாடல் செய்வரெனில் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாக மன்னன் அறிவித்தான்
திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்திரண்டாவது படலமாக தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. இதில் சோமசுந்தரப் பெருமான் வறுமையில் வாடிய வேதியனாகிய தருமி என்பவனுக்கு மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை தானே எழுதிக்கொடுத்து பொற்கிழி பெற்றுக் கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.
(சந்தேகத்தைத் தீர்த்த பாடல்)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவையர் கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவெ
வீரகேசரி கி.பி. 1065-1070.
வீரகேசரி கி.பி. 1065 முதல் 1070 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இவன் சோழ மன்னனான வீரராசேந்திரனுடன் 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் ஆட்சி செய்து வருகையில் கி.பி. 1070 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை பாண்டிய மன்னர் சிலர் ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாறவர்மன் சீவல்லபன் கி.பி 1132-1162.
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் "பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப" எனத் தொடங்கும். திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான். மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் சீவல்லபன் கி.பி 1145-1150.
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் 'திருமடந்தையும் சயமடந்தையும்' எனத்துவங்குவது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல நெய்வேலி, மதுரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160.
பராக்கிரம பாண்டியன் கி.பி. 1150 முதல் 1160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப்பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான். 'திருமகள் புணர' என இவனது மெய்க்கீர்த்தி தொடங்கும்.முதலாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டினை 40 ஆம் ஆண்டு ஆட்சி செய்த வேளை பராக்கிரம பாண்டியன் 23 ஆம் ஆண்டு ஆட்சியினை மேற்கொண்டிருந்தான்.
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162.
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி "திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர" என இருக்கும். சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து, காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து.விழிஞத்தைக் கைப்பற்றி தென் கலிங்க நாட்டில் தெலுங்கு வீமனை வென்று திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகளும் அளித்த பெருமையினை உடையவனுமாவான். கூபகத்தரசன் மகளை மணம் செய்து கொண்ட இவன் அளப்பன, நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரை இட வைத்தான். அதுவே கயல் முத்திரையாகும். பாண்டியர்களின் குலதெய்வமான கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடத்தி அடியார்களுக்கு உணவிட்ட பெருமையையும் உடையவன் சடையவர்மன் பராந்தக பாண்டியன்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இம்மன்னன் கி.பி. 1162 ஆம் ஆண்டளவில் முடிசூடிக்கொண்டான்.இவனது மெய்க்கீர்த்திகள் 'பூதலமடந்தை' எனத் தொடங்கும்.நெல்லையிலிருந்து பாண்டிய நாட்டில் இவன் ஆட்சி புரிந்த வேளை பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி செய்தான்.பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்ய வேண்டுமென்ற போட்டி இருவரிடத்திலும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்துப் போர்கள்
பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவாவினால் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டு பராக்கிரம பாண்டியனைப் போருக்கு அழைத்தான். பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடம் படையுதவிகள் வழங்குமாறு கேட்டதன் பொருட்டு தண்ட நாயகன் என்றவன் தலைமையில் பெரும்படையினை அனுப்பி வைத்தான். அப்படை மதுரையினை வந்தடைவதற்குள் பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையினைக் கைப்பற்றியிருந்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.இதனால் கோபமுற்ற தண்ட நாயகன் இராமேச்சுரம்,குந்துகாலம் போன்ற ஊர்களை மீட்டு வெற்றி பெற்றான்.இலங்கைப் படை அடிக்கடி போர் செய்தது இப்போர்களில் பாண்டிராசன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் தோற்றனர்.ஆளவந்தான் என்ற படைத்தலைவன் ஒருவனும் இறந்தான்.தண்ட நாயகன் போரில் வெற்றி பெற்றான்.கொங்கு நாட்டு மன்னனான தனது மாமனிடம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் படை உதவி கேட்டுப் பெற்றான். இரு படைகளுடன் தண்ட நாயகனை எதிர்த்துப் போரிட்டான் இப்போரில் தண்ட நாயகன் வெற்றி பெற்றான். மதுரையைக் கைப்பற்றினான். பராக்கிரம பாண்டியன்|பராக்கிரம பாண்டியனின் இறுதி மகனான சடையவர்மன் வீரபாண்டியன் மலை நாடு|மலை நாட்டில் மறைந்து வாழ்ந்தான் இவனை அழைத்து மதுரை ஆட்சிப் பொறுப்பினை அளித்தான் தண்ட நாயகன். மேலும் கீழை மங்கலம் மேலை மங்கலம் ஆகிய ஊர்களை கண்ட தேவ மழவராயனிடம் வழங்கி ஆட்சி செய்யச் சொன்னான். தொண்டி, கருத்தங்குடி, திருவேகம்பம் ஆகிய ஊர்களின் ஆட்சிப் பொறுப்பினை மழவச்சக்ரவர்த்திக்கு அளித்தான்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீண்டும் ஒருமுறை படை திரட்டியதை அறிந்த சடையவர்மன் வீரபாண்டியன் மழவச்சக்ரவர்த்தி, மற்றும் கண்ட தேவ மழவராயன் மூவரும் தண்ட நாயகனுடன் சேர்ந்து சடையவர்மன் குலசேகர பாண்டியனை மதுரையை விட்டுத் துரத்தினர்.பராக்கிரம பாகுவிடம் படையுதவியைப் பெற்ற தண்ட நாயகன் சகத்விசய தண்டநாயகன் தலைமையில் பெரும்படையினைப் பெற்றான்.இப்படை வலிமையுடன் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வென்று மீண்டும் சடையவர்மன் வீரபாண்டியனிற்கு மதுரையை ஆளும் பொறுப்பினைக் கொடுத்தான் தண்ட நாயகன்.இப்போரின் பின்னர் சீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற போரிலும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தோல்வியைத் தழுவி நெல்லிக்குச் சென்று தங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி, பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது. காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம், கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான். சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக் கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது. இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம் கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான். சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து, சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான். சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன், இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான். இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான் வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான், அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான். இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான்.
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180.
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் 'பூமடந்தையும், சயமடந்தையும்' எனத் தொடங்கும்.
சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை
இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான். பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் சேர நாட்டிலிருந்து வந்து மதுரையினை ஆட்சி செய்தான். கி.பி. 1180 வரை வேதவனமுடையான், அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான்.பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான். நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான். வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங் குலோத்துங்கன் போர் செய்தான். இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து.ஏழகப்படைகளும்,மறவர் படைகளும் ஈழப் படையும் தோற்றனர். போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன்னிடம் அடைக்கலம் கொண்டவிக்கிரம் பாண்டியனிடம் ஆட்சிப் பொறுப்பினை அளித்தான்.போரில் தோற்ற சடையவர்மன் வீரபாண்டியன் சேர மன்னனிடம் அடைக்கலம் கொண்டான் அச்சேர மன்னனும் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் இவனிடம் பகை கொள்வான் என்ற காரணத்தினால் சடையவர்மன் வீரபாண்டியனை மூன்றாம் குலோத்துங்கனிடம் அழைத்துச் சென்று மதுரையில் ஒரு பகுதியை அவனின் ஆட்சிக்கு கீழ் கொடுக்க வைத்தான்.சடையவர்மன் வீரபாண்டியனது மகன்களான வீரகேரளன், பருதி குலபதி இருவருக்கும் தன் பக்கம் இருந்து விருந்துண்ணும் சிறப்பினை அளித்தான் மூன்றாம் குலோத்துங்கன். இரு நிதி, பரிச்சட்டம், இலங்கு மணிக்கலன் போன்றனவற்றினையும் 1180 காலப்பகுதியில் அளித்தான் என திருவக்கரை திட்சைக் குடிக் கல்வெட்டு குறிப்பிடும்
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-90.
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180 முதல் 1190 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றான்.மூன்றாம் குலோத்துங்கனுடன் மிகுந்த மரியாதையுடனும், பண்பினையும் உடையவனாகத் திகழ்ந்த விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 ஆம் ஆண்டளவில் இவ்வுலக வாழ்வை நீத்தான் என்பது வரலாறு.
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218.
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான்.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் மீது படை எடுத்து வென்று முடி கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீராபிடேகம் செய்துகொண்டு சிதம்பரத்தைத் தரிசித்தான். பின்னர் சோழ நாட்டைத் திருப்பிக்கொடுத்துச் சோழரிடம் கப்பம் பெற்றான். சில காலத்தின் பின்னர் சோழர் கப்பஞ் செலுத்த மறுக்க மீண்டும் சோழ நாட்டைக் கைப்பற்றினான்.
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250.
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இவனது மெய்க்கீர்த்தி "பூமலர்த்திருவும்,பொருசய மடந்தையும்" எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. போசாள அரசனான் வீரசோமேச்சுரன் இவனது மாமன் முறையினனும் கொங்கு நாட்டு விக்கிரம சோழன் இவனது மைத்துனனும் ஆவான். மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வெற்றி கொண்டான். ஆனால் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மாமனான வீரசோமேச்சுரன் பாண்டிய நாட்டினை மீட்டெடுத்துக் கொடுத்தான். தனது சகோதரியின் மகன் என்ற காரணத்தினால் பாண்டிய நாட்டின் மீது கவனம் செலுத்தி வந்தான் வீரசோமேச்சுரன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் மதுரையில் உள்ள சிங்காசனத்திற்கு மழவராயன், பல்லவராயன் எனப் பெயரிட்டிருந்தான். இவனது பட்டத்தரசி உலக முழுதுடையாள் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்கி.பி. 1251-1271.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள் போன்ற பட்டப் பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்றிய போர்கள்
* சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
* மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
* போசளர் கண்ணனூரினைத் (சமயபுரம்) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான வீரகோமேச்சுரன் என்பவனை தோற்கச்செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டான்.
* கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் சேமன் என்பவனைக் கொன்றான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் களிறுகளினைத் திரையாகக் கொடுத்தான் சோழ நாட்டின் ஒரு பகுதியினை ஆண்ட வீர ராமநாதன்.
* இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திரையாகப் பெற்றான்.
* பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினை கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.
* சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
* தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.
ஆற்றிய கோயில் அறப்பணிகள்
சிதம்பரத்தில் ஆற்றிய பணிகள்
சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.
திருவரங்கத்தில் ஆற்றிய பணிகள்
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு.
காஞ்சிபுரத்தில் ஆற்றிய பணிகள்
தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில்
“"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"”
என இவனைப் பாடப்பட்டுள்ளது.தமிழ்பற்றும்,வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம். கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் எனபது வரலாறு.
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281.
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு, கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன். விசயகண்ட கோபாலனின் சோழ நாடு மற்றும் ஈழ நாடு,கொங்கு நாடு போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று கப்பம் கட்ட வைத்து தில்லையில் வீராபிடேகம் மற்றும் விசயாபிடேகம் போன்றனவற்றினையும் செய்தான். கொடுவடுகு வல்லான் என்பவனைவும் வென்று தில்லையில் உள்ள சிவகாமக் கோட்டத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.
ஈழ நாட்டில் போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். திருகோணமலை, திருகூடமலை போன்ற இடங்களில் கயற்கொடி பொறித்தான். காவிக்களத்தில் சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு புதுக்கோட்டையிலும் 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு நெல்லையில் உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் வீரமரணம் அடைந்தான் என்பது வரலாறு.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இராக்கள் நாயகன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'திருமகள் செயமகள்', 'திருமலர் மாது' என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் அஸ்ட நாளில் பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு போன்ற பகுதிகளில் காணலாம். சிவன், திருமால் கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற இறையிலி நிலங்களினை அளித்து தென்னார்க்காடு, திருநறுங் கொண்டையில் அமண்பள்ளி ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் தைத் திங்கள் திருநாளினை நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.
மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய','கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றி கொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறியவருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி1284இல் தனது படைத்தலைவன் ஆரிய சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான; கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான்.
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மைந்தர்கள், சுந்தர பாண்டியன், வீரபாண்டியன், இடையே எழுந்த உரிமைச் சண்டையை பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
குலசேகரன் அரசவையில் தாகியதீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல்பட்டிணம், பிடான்,மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அராபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார்.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293.
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276 முதல் 1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு போன்ற பகுதிகளினையும் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை பாண்டிய நாட்ட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை, நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.
ஆற்றிய போர்கள்.
திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.
ஆற்றிய அறப்பணிகள்.
* விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
* திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.
* நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
* தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
* தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
* தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
* செங்கோல் ஆட்சியை நடத்திய சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1429-73.
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506.
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன், ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது. இவன் காலத்திலேயே குலசேகர தேவன் என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543.
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகனானான இம்மன்னன் பாண்டியராச்சிய தாபனாசாரியன், இறந்த காலமெடுத்தான் போன்ற பட்டங்களினை உடையவனும் ஆவான். திருவாங்கூர் நாட்டில் உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேர மன்னன் ஆட்சி செய்து வந்தான் அவன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான் இச்சேர மன்னனைப் பற்றிய கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு போன்ற ஊர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென்பாண்டி நாட்டினை சேர மன்னனிடம் தோற்ற சடையவர்மன் சீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசனான அச்சுததேவராயரிடம் முறையிட்டான் அவனும் பாண்டிய நாட்டினை மீட்டுக் கொடுத்தான். உதயமார்த்தாண்டவர்மன் விஜயநகரப் பேரரசிடம் கப்பம் கட்டாதிருந்த காரணத்தினாலும் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கேட்டுக் கொண்டதற்கிணையவும் அச்சுததேவராயர் இவனுடன் போர் செய்து வெற்றி கொண்டார். தென்பாண்டிய நாட்டினை மீட்டுக்கொடுத்த காரணத்தினால் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் தனது மகளை அச்சுததேவராயனுக்கு மணம் முடித்து வைத்தான் என்பது வரலாறு.
பராக்கிரம குலசேகரன் கி.பி 1543-1552.
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564.
நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன், பொன்னின் பாண்டியன், தர்மப் பெருமாள், அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தன்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு இராமகிருஷ்ணர் என்ற வடமொழி அந்தணர் உதவிகள் பல செய்தார். கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612.
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன், வீரபாண்டியன் போன்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தான். சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான், வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான். பிரமோத்தர காண்டம், கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.
வரகுணராம பாண்டியன் கி.பி 1613-1618.
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப் பெயரினையும் இணைத்து வைத்துக் கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர். மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.
கொல்லங்கொண்டான்.
கொல்லங் கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங் கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடும். மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப் பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் "எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்" என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங் கொண்டான். ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்தபாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர்.பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தலைநகராக கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக்கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டைபோன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர்வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.
எண். பெயர். காலம்.
1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422-14632.
2. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன். கி.பி. 1429-14733.
3. அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1473-15064.
4. குலசேகர தேவன். கி.பி. 1479-14995.
5. சடையவர்மன் சீவல்லப பாண்டியன். கி.பி. 1534-15436.
6. பராக்கிரம குலசேகரன். கி.பி. 1543-15527.
7. நெல்வேலி மாறன். கி.பி. 1552-15648.
8. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன். கி.பி. 1564-16049.
9. வரதுங்கப் பாண்டியன். கி.பி. 1588-161210.
10. வரகுணராம பாண்டியன். கி.பி. 1613-161811.
11. கொல்லங் கொண்டான். (தகவல் இல்லை)
வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையிலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. அவை
விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும்ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர்.
இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளை கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாக பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்க மானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும்.[9] அவர்களுக்கு பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களை தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை
செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
ஆதாரங்கள்
பாண்டிய குலோதயம்
பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதிலுள்ள தகவல்கள்:
தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

- நிலம் தந்த பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது (கி. மு. 400 அளவில்)
- நிலம் தந்த நெடியோன் சங்க காலத்தவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன். நாகன் இவனது படைத்தலைவன். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன்.

- சச்சிதானந்தபுரம்
- முத்துத்தாண்டவநல்லூர்
- ஆனந்தக்கூத்தனூர்
- சைவமூதூர்
- தென்புலியூர்
- குயின்குடி
- சித்தர்வாசம்
- செண்பகப்பொழில்
- சிவமணவூர்
- சத்தமாதரூர்
- சித்திரமூலத்தானம்
- மயிலைக்குடி
- பலாலிங்கப்பாடி
- வசந்தக்குடி
- கோசிகை
- சித்தர்புரி
விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும்ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர்.
இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளை கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாக பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்க மானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும்.[9] அவர்களுக்கு பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களை தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை
செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
ஆதாரங்கள்
பாண்டிய குலோதயம்
பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதிலுள்ள தகவல்கள்:
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
- அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
- சுமார் கி.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டியமன்னாவான்.
தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
பாண்டிமா தேவி மங்கையர்க்கரசி
பாண்டிமா தேவி
பாண்டிமா தேவியின் திருநீற்று நெறி
மன்னுயிர்த் தொண்டே மாதவன் தொண்டு என்பர். அப்படி மன்னன் உயிர்க்கு மட்டுமின்றி மன்னுயிர்க்கும் தொண்டு செய்த மாதேவி பாண்டிமா தேவி! மன்னன் கூன் பாண்டியனும், அமைச்சன் குலச்சிறையாரும் நாயன்மார் வரிசையில் இடம்பெற மூலகாரணம் ஆனவர் இவரே!
மனித குலத்தையே பாடாத நற்றமிழ் வித்தகன் ஞானசம்பந்தர் மங்கையர்க்கரசி மேல் பதிகம் பாடியிருக்கிறார் எனில் அது அம்மங்கையின் மகத்துவமே! தான் பிறந்த தேசத்திற்காக, தான் கொண்ட கொள்கைக்காக, தான் மேற்கொண்ட குறிக்கோளுக்காக, தான் வாழும் சமூகத்திற்காக எனப் பல்வேறு மங்கையர் போராடியிருப்பினும், தான் சார்ந்த சமயத்திற்காகத் துணிச்சலுடன் போராடி நாட்டையே தன் பக்கம் திசை திருப்பிய பாவையே இந்தப் பாண்டிமா தேவி!
பாண்டிமா தேவி பிறப்பும் வளர்ப்பும் : கத்தும் கடலும், அதனில் முத்தும் மூத்த முத்தமிழும் சந்தனமும், செந்தண்மையும், தவசீலர்கள் பலர் உதித்த தரணி போற்றும் நாடு பாண்டிய நாடு. பார் போற்றும் பாண்டி நாட்டை ஆண்டவன் நிறை கொண்ட சிந்தையான் நின்ற சீர் நெடுமாறன். உடலாலும் ஏன் உள்ளத்தாலும்தான் ஊனமாக இருந்தான் அந்தக் கூன் பாண்டியன்.
ஒரு காலத்தில் காவிரிக் கரையோரம் மான்போல துள்ளி விளையாடியவள் மங்கையர்க்கரசி. சோழநாட்டு இளவரசி அவள். மன்னனாகிய தன் தந்தை சொல் தட்டக் கூடாது எனக் கூன் பாண்டியனின் கரம் கோர்த்தவளே அக்காரிகை.
அவள் பிறந்தகமோ சோறுடைத்த சோழ நாடு! புகுந்தகமோ முத்துடைத்த பாண்டிய நாடு! வாழ்ந்த இடம் சைவத்தில் உலவியது என்றால், வந்து சேர்ந்த இடமோ சமணத்தில் மூழ்கியது எனலாம். ஆம்! மன்னவனோ சமண சமயம்! மங்கையோ சைவ சமயம்! சமய நெறிகளில்தான் இருவருக்கிடையே மாற்றம். மற்றபடி இல்லற நெறியோ எவ்வித ஏமாற்றமும் இன்றி ஏற்றத்துடன் இருந்தது.
முரண்பாடுகள் அற்ற முழுமையான வாழ்வு அவர்கள் இருவரது வாழ்வு. பாண்டியர் குலத்தில் பல்லாயிரம் பேர் சமண மதம் சார்ந்திருக்க, மன்னனை வழிநடத்தும் குலச்சிறையாரும், பட்டத்தரசி பாண்டிமா தேவியும் மட்டுமே, சைவத்தின் மேல் சமயமுமில்லை! சிவத்தின் மேல் தெய்வமுமில்லை! எனும் கோட்பாட்டில் ஈடுபட்டனர்.
திருநீற்று நெறி : திருமறைக்காட்டில் வருகை புரிகிறார் நற்றமிழ் விரகன் ஞானசம்பந்தன்! பாண்டிமாதேவிக்கோ உள்ளார்ந்த மகிழ்ச்சி! கலந்து ஆலோசிக்கிறார் தலைமை அமைச்சரான குலச்சிறையாரிடம். பெருநம்பியாம் குலச்சிறையார் திருத்தொண்டர் மட்டுமல்ல! மெய்த் தொண்டரும் கூட! அமைச்சரிடம் ஆலோசித்ததற்குக் காரணம், தன் துணைவனாம் பாண்டிய மன்னன் சமய நெறியினைச் சரியான நெறி என்று நம்பி வாழ்ந்தவர். அமணர்களின் வலையில் அகப்பட்டவர். தடுமாறும் சமணநெறியினைத் தவமென்று எண்ணியவர். திருநீற்றுப் பெருமையைத் திறம்பட மன்னனுக்கு விளக்கத் தூது அனுப்பினார், குலச்சிறையாரை மனத் துணிச்சலுடன் பாண்டிமாதேவி.
பையவே வந்து பற்றுக : இதற்கிடையே, ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடம் மன்னனின் இசைவோடு, சமணர் சூழ்ச்சியால் நெருப்பு வைக்கப்பட, ஐந்தெழுத்து மந்திரமோ, அன்புக் கட்டளையோ அந்த அக்னி எரியாமல் ஏமாற்றியது. அக்னிக்கு அவரிட்ட ஆணை, அது பையவே வந்து பாண்டியனைப் பற்றிக் கொண்டது. இந்த இடத்தில் பையவே சென்று பாண்டியனைப் பற்ற வைத்ததற்குக் காரணம் என்னவெனில்,
பாண்டிமா தேவியின் மங்கல நாணுக்குக் கேடுவரக் கூடாது என்ற சம்பந்தனின் நல்லெண்ணம்.
அமைச்சர் குலச்சிறையாரின் அளவற்ற அன்பு.
மன்னனைச் சிவநெறி அடையச் செய்ய வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம்.
ஆனால், பையவே பற்றிய தீயால் வேந்தனின் மேனி விதர்ப்புற்றது; பின் வெதுப்புற்றது; மெய் வாடியது. பின் வதங்கியது; மன்னனின் உயிரை உலுக்கியது; பின் உருக்கியது. மன்னன் அருகில் நிற்பவர் உடலையும் தீய்த்தது. மருந்துக்கும் மாயத்துக்கும் அடங்கவில்லை அந்த வெப்பு நோய்! சிறிது நேரங் கடந்து பார்க்கும் பொழுது மன்னனிடம் பேச்சில்லை! அதன்பின் மூச்சுமில்லை!
மன்னனின் இசைவோடு : சமணர்களோ மயிற்பீலி கொண்டு மன்னனின் மேனியை நீவ, பீலிகளோ பிரம்போடு தீப்பிடித்துக் கொண்டன. இந்த வேளையில் பாண்டிமாதேவி சிறிதும் மனங்கலங்கவில்லை. சமணர்களால் வந்த நோய் ஒரு போதும் சமணர்களால் தீராது; சம்பந்தரின் ஞானப்பார்வை; உடற்பிணியோடு உள்ளப் பிணியையும் போக்கும் என எடுத்துக் கூறுகிறார் மன்னனிடம்.
பாண்டிமா தேவியின் சொல்லுக்குச் செவி சாய்க்கிறான் பாண்டிய மன்னன். தான் கரம்பிடித்த கணவனுக்காக, அவரைத் திருநீற்று நெறிக்கு மாற்றி விடலாம் என்ற ஆர்வமும், ஆசையும் சேர்ந்துகொள்ள, பட்டத்தரசியாம் பாண்டிமா தேவி சீர்காழி நாதனை நேரில் காணச் செல்கிறாள். இந்த இடத்தில்தான் மிதவாதப் பெண்ணியம் நம் நினைவிற்கு வருகின்றது. தான் மேற்கொண்ட இலட்சியத்தைச் சரிவரச் செயல்படுத்த மன்னனும் இசைவு தருகின்றான் பாண்டிமா தேவிக்கு.
வென்றவன் பக்கம் சேர்வோம் என்ற பாண்டிய மன்னனின் சொற்களும் பாண்டிமா தேவியின் காதில் ஒலிக்கின்றது. சம்பந்தரும் வந்தார். அவரது விழியுறு நோக்கால் வெம்மை நோய் குறைந்தது.
“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன்
திரு ஆலவாயான் திரு நீறே”
என்ற பாடலைப் பாடி வெண்ணீறு பூசியவுடன், வந்த வழி தெரியாமல் பறந்து போனது அந்த வெப்பு நோய்! நோய் தீர்ந்தாலும் சமணமா? சைவமா? என்ற வாதம் தொடர்ந்தது. பிணி தீரும் முன் அனல் வாதம், புனல் வாதம் புரிய வேண்டும் என்ற துணிச்சலோடு, சம்பந்தர் ஒருவராக இருக்கிறார் அது சிறுவராக இருக்கிறார், சம்பந்தர்க்கே முன்னுரிமை கொடுங்கள் எனத் தீர்க்கமாகக் கூறி, மன்னனிடம் இசைவு வாங்கியது பாண்டிமா தேவியின் சாமர்த்தியம்தான்.
அனல் வாதமும் புனல் வாதமும் : தீயிலிட்ட சமணர் ஏடு பஞ்சு போல் பற்றி எரிந்தது, சம்பந்தர் ஏடோ பச்சை ஏடாக பளீரென்று எழும்பி நின்றது! புனல் வாதத்திலோ சமணர் ஏடோ நீரில் அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டது. சம்பந்தர் ஏடோ எதிர்த்து வந்தது. அதில் வேந்தன் ஓங்குக! என்று எழுதியிருந்தமையால், கூன் பாண்டியனின் உடல் ஊனம் இருந்த இடம் தெரியவில்லை.
ஆம்! பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்தது. நின்ற சீர் நெடுமாறன் ஆனவன் ஞானசம்பந்தனின் பாதம் நான் உய்ந்தேன் என்றான். மன்னனோடு மக்களும் ஒருசேர திருநீற்று நெறியாம் சிவக் கோட்பாட்டில் இணைந்தனர். காரணம் பங்கயச் செல்வி பாண்டிமா தேவிதான்.
மிதவாதப் பெண்ணியம் : எவ்வித வற்புறுத்தலோ, வலியுறுத்தலோ இல்லாமல்; தென்னவன்; திருவாயினால்; சமண சமயம்; விடுத்துச் சைவம் சார்வேன் எனச் சொல்ல வைத்தவர் வரிவளையாள் மங்கையர்க்கரசி.
மிதவாதப் பெண்ணிய நோக்கில் ஒரு நாட்டையே தன் பக்கம் ஈர்த்தவள்தான் பாண்டிமாதேவி என்றால் மிகையாகாது. வளவர் கோன் பாவை &- தென்னர் குலப் பழிதீர்த்த தெய்வப்பாவையாய் மாறினாள் எனில், அவர் சமயம் மீது கொண்ட அதீதப் பற்று, அரசன் என்றாலும், தன் துணைவனிடம் தன் எண்ணத்தைத் தயங்காமல் கூறி, அடுத்தடுத்த சமயப் பணிகளை அழகாகச் செய்தது, அரண்மனைவாசியாக இருப்பினும், அதிலிருந்து இறங்கி சமூகத்தை நல்வழிப்படுத்த முயன்றது.
தன் துணைவனால் சம்பந்தருக்கு, அவரது உயிருக்கு ஏதேனும் ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, தன் பக்கம் ஆள் பலம் இல்லையெனினும் மன பலத்துடன் தன் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றியது, மன்னனின் அசையா மனதையும் படிப்படியாக அசையச் செய்து அறநெறியாம் சிவநெறிக்கு மாற்றியது எனத் தன் லட்சியப் பயணம் ஈடேற மிதவாத முறையில், எந்தவித வன்முறையும் இன்றி மங்கையர்க்கரசி எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிதான் இன்று பெண் உலகிற்கு அளப்பரிய பெருமையையும், புகழையும் தேடித் தந்திருக்கிறது.
காரைக்கால் அம்மையார் கடவுளோடு கலந்தார். திலகவதியோரோ திருநாவுக்கரசரைத் திசைத் திருப்பினார். மங்கையர்க்கரசியோ மன்னனோடு ஒட்டுமொத்த மக்கள் அனைவரையும் மகத்தான சமயமாம் மாண்புறு சைவத்திற்கு மாற்றிக் காட்டினார், மக்கள் பலம் எதுவுமில்லாமல். சமய வரலாற்றை நாமெல்லாம் உற்று நோக்கும் வேளையில் உன்னதத் தொண்டு புரிந்த உத்தமியாகப் பரிமளிக்கிறார் பாண்டிமா தேவி!

சங்ககால பாண்டியர் வெள்ளி காசுகள்