பல்லவ மன்னர்களின் வரலாறு.
பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்கான பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.
பல்லவர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தை ஆளத் தொடங்கினர்.
தமிழகத்தின் இருண்ட காலமாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் தமிழும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், மத சுதந்திரமில்லாத நிலை. இந்த இருண்ட ஆட்சியை விரட்டி பலம்மிக்க அரசமைத்தனர் பல்லவர்களும் பாண்டியர்களும்.ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தனர்
பல்லவர்களின் காலத்தில் கலை மிகவும் சிறந்தது விளங்கியது, யுவான் சுவாங் என்ற சீனப் பயணி பல்லவ ஆட்சிப் பற்றியும் கலைப் பற்றியும் மிகப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார், கம்போடியா,ஜாவா நாடுகளின் பல புகழ்பெற்ற கோவில்கள் பல்லவர்களின் கட்டிட கலையை சார்ந்தவைகள், உலக அதிசயமான ஆங்கர் வாட்டை (கம்போடியா) உருவாக்கிய சூரியவர்மன் II மற்றும் ஜெயவர்மன் என்ற அரசர்கள் பல்லவர் வழி வந்தவர்கள் என சில குறிப்புகள் வரலாற்றாசிரியர்கள் சிலரால் தரப்படுகின்றன, வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.
மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,
மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.
வீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு.
ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் இலங்கையையும் மற்ற பிற தென் மாநில அரசுகளையும்( சோழர்களையும் சேர்த்து) வெற்றி கொண்டு பல்லவ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்,எல்லையிலிருந்த சாளுக்கியர்களுடன் நடந்த போர்களும் பாண்டியர்களுடன் நடந்த போர்களில் பெற்ற வெற்றியும் பல்லவர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன, யாராலும் முறியடிக்கப்படமுடியாமலிருந்த இரண்டாம் புலிகேசி (ஹர்ஷவர்த்தனர் என்ற வட நாட்டு பேரரசரே இவரிடம் தோல்வியுற்றார்) நரசிம்ம வர்மருடனான வாதாபி போரில் உயிரையும் இழந்து வாதாபி நகரே தீக்கிரையானது.
கலைகளில் சிறந்து விளங்கினர், வீரத்தில் சிறந்து விளங்கினர்,
சின்னம்: காளை.
தலைநகர்: காஞ்சிபுரம்.
கி.பி.600க்கு முந்தைய பல்லவ வரலாற்றுக்கு தெளிவான சான்றுகள் கிட்டவில்லை. சன்மானம் வழங்கி குறிக்கபட்ட செப்புப் பட்டயங்களில் சிவகந்தவர்மன்,
விஷ்ணு கந்தவர்மன், விஷ்ணு கோபன், புத்தவர்மன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.
பல்லவர்கள் ஒரு புறமும், பாண்டியர்கள் மற்றொரு புறமும் தொடர்ந்த தாக்குதல்களால் மதுரையை ஆண்ட களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சிம்மவிஷ்ணுவின் பரக்கிரமங்கள் பல்லவ ஆட்சியை காவேரிக்கரை வரை நீட்டியது.
முதலாம் மஹேந்திரவர்மன் புகழ் பெற்று விளங்கினான். தேர்ந்த கவிஞன், பாடகனும் கூட. தனிப் பாறையை குடைந்து கோவில் கட்டும் புதிய முறையை புகுத்தினான். சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.
பல்லவர்களுக்கு சாளுக்கியர்கள் எப்போதுமே எதிரிகள். மஹேந்திரவர்மனுக்கு சாளூக்கிய இரண்டாம் புலிகேசி தொடர்ந்து தொல்லை கொடுத்தான். முதலாம் நரசிம்மவர்மன் சாளூக்கியரை வென்றான். இலங்கையில் மனவர்மனுக்கு மீண்டும் மணிமுடி சூட்டினான். இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்) அராபியர்களுடன் போரிட்டு சீனத்திற்கு வர்த்தக வழிகளை நிலைநிறுத்தினான்.
கடைசியில் நிருபதுங்கனுக்கும் அபராஜிதனுக்குமிடையில் ஏற்பட்ட வாரிசு மோதலில், அபராஜிதனுக்கு உதவிக்கு வந்த சோழன் அவர்களை வென்றான். பின்னர் பல்லவர்கள் சிற்றரசர்களாயினர்.
பல்லவரின் தோற்றம் பற்றிய கூற்றுகள்.
வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 650 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்க வில்லை. இவர்கள் தமிழர்களே என ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம்,ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
தென்னிந்தியர்.
இந்திய வரலாறு நூலாசிரியரான 'வின்ஸென்ட் ஸ்மித்' என்பார், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகர் எனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.
ஆயினும் , ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பஹலவர், மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'கி.பி. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார். இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர்.
இலங்கையர்.
இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன்பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார்.
யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில்குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான பள்ளி மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர்.
பல்லவர் தமிழர் அல்லர்வின்செண்ட் ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராக்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ. 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.
பல்லவர் பஹலவர் மரபினர்பஹலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.
தொண்டைநாடும் சங்கநூல்களும்
வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும்வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடுகி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல்தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது.
வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்தது எனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில்காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப் படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடு பற்றி அறிய முடிகிறது.
முற்காலப் பல்லவர்கள்.
முற்காலப் பல்லவர்களில்
பப்பதேவன்,
சிவகந்தவர்மன்,
விசய கந்தவர்மன்,
இளவரசன் புத்தவர்மன்,
புத்யங்குரன்
ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன. இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.
இடைக்காலப் பல்லவர்கள்.
இடைக்காலப் பல்லவர்கள்இடைக்காலப் பல்லவர்களின் காலம் கி.பி. 340 முதல் கி.பி. 615 வரை நீண்டது.
விட்ணுகோபன் I
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்கந்தவர்மன் II
சிம்மவர்மன் I
விட்ணுகோபன் II
குமாரவிட்ணு II
கந்தவர்மன் III
சிம்மவர்மன் II
புத்தவர்மன்நந்திவர்மன் I
விட்ணுகோபன் III
குமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
என பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.
பிற்காலப் பல்லவர்கள் மரபு.
பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன்,இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.
பிற்காலப் பல்லவர்கள்.
சிம்மவர்மன். கிபி 550
சிம்மவிஷ்ணு. கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I. கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I(மாமல்லன்). கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II. கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன். கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்). கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II. கிபி 705 - 710
நந்திவர்மன் II(பல்லவமல்லன்). கிபி 732 - 796
தந்திவர்மன். கிபி 775 - 825
நந்திவர்மன் III. கிபி 825 - 850
நிருபதுங்கவர்மன். கிபி 850 - 882
அபராஜிதவர்மன். கிபி 882 - 901
கம்பவர்மன். கிபி 902 - 912

பல்லவர் ஆட்சிக் கால போர்கள்.
எல்லைப்போர்கள்.
பல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர், சோழர்கள், சாளுக்கியர்கள், ராட்டிரகூடர்கள் எனப் பல்லவர்களின் மூன்று பிரிவினரும் இடைவிடாது தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கோ குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப்புள்ளியாய் அமைந்தது.
பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்.
பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாணமை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண பௌத்த சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது.
பல்லவர் ஆட்சி முறை.
பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.
மன்னர்.
நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவன் எனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இர்ண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். ப்[அல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர்.
அரசு அலுவலர்கள்.
பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர்.
சின்னம்.
பல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர்.
நீதி.
காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர்.
பல்லவர் படை வலிமை.
பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், நரசிம்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி(சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர்.
பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே.
ஊராட்சி முறை.
ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர்.
சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர்.
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாக பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வரவேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும்.

பல்லவ மன்னர்களின் அரசியல்.
பஞ்சபாண்டவர் இரதங்கள்
பல்லவர்கள் வரலாறு (கி.பி. 250-890)
பல்லவ மன்னர்களின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அவர்கள் வெளியிட்ட பட்டயங்கள் துணை புரிகின்றன. பல்லவ மன்னர்கள் தொடக்க காலத்தில் (கி.பி. 250-575) வெளியிட்ட பட்டயங்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் (கி.பி. 575-730) வெளியிட்ட பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்தில் (கி.பி. 731-890) வெளியிட்ட பட்டயங்கள் கிரந்தத் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பட்டயங்களைப் பிராகிருத மொழியில் வெளியிட்டவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் வெளியிட்டவர்களை இடைக்காலப் பல்லவர்கள் என்றும், கிரந்தத் தமிழில் வெளியிட்டவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் மூன்று பிரிவினராக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர்.
முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-575)
முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். இவர்கள் தொடக்கத்தில் தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் விளங்கினார். அப்பேரரசுக்குத் திறை செலுத்திக் காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தினர். சாதவாகனப் பேரரசு கி.பி.225இல் வீழ்ச்சியுற்றது. அதற்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப் பொறுப்பையும் சுமார் கி.பி. 250 அளவில் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணாநதி வரை விரிவடைய ஆரம்பித்தது. பல்லவர்கள் சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்ததால், சாதவாகனரின் மொழியாகிய பிராகிருத மொழியிலேயே தொடக்க காலத்தில் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பட்டயங்கள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைக்கப்பெற்றன.
இப்பட்டயங்கள் வரலாற்று உண்மைகளை அவ்வளவாகத் தரவில்லை. ஆகையால், இவைகளைக் கொண்டு அக்காலத்துப் பல்லவ மன்னர்களைப் பற்றியும், அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் பப்பதேவன், சிம்ம வர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் என்போர் முற்காலப் பல்லவர் என்று கூறப்படுகின்றனர். இவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவன்.
சிவஸ்கந்தவர்மன்
சிவஸ்கந்தவர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே தென்பெண்ணை நதிவரையில் பரவியிருந்தது.
சிவஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன் ஆவான் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஏனென்றால் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணுகோபன் ஆண்டு வந்ததாகச் சமுத்திரகுப்தன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. (சமுத்திர குப்தன் என்பவன் கி.பி. 335 முதல் 380 வரை வட இந்தியாவில் குப்தப் பேரரசை ஆண்டு வந்த அரசன் ஆவான்.)
இடைக்காலப் பல்லவர்கள் (கி.பி. 575-730)
இடைக்காலப் பல்லவர்கள் சமஸ்கிருத மொழியில் பட்டங்களை வெளியிட்டனர். இக்காலத்தின் தொடக்கத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலைக்குக் காரணம் களப்பிரர்களின் படையெடுப்பு என்கின்றனர். குமாரவிஷ்ணு, ஸ்கந்தவர்மன், வீரவர்மன், இரண்டாம் ஸ்கந்தவர்மன், சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு முதலியோர் இக்காலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். புகழ் பெற்ற முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் முதலியோரும் இக்காலத்தைச் சார்ந்தவர்களே ஆவர்.
சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)
இடைக்காலப் பல்லவர்களை மகா பல்லவர்கள் என்றும் கூறுவர். ஏனெனில் இவர்கள் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தனர். இடைக்காலப் பல்லவ மன்னருள் முதல்வன் சிம்மவிஷ்ணு ஆவான். முதலில், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த களப்பிரர்களை அடக்கினான். பின்பு சோழருடன் போராடி வெற்றிவாகை சூடினான்; சேரனையும், இலங்கை வேந்தனையும் புறங்கண்டான்.
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630)
சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம் மகேந்திரவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு மகேந்திர விக்ரமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் விசித்திரசித்தன் எனப் புகழப்பட்டான். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும், கல்வியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு. இவன் சாளுக்கியரை வென்றான்; கங்கர்களை அடக்கினான்.
முதலாம் மகேந்திரவர்மன் பொதுப்பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்தான். இவன் முதலில் சமணனாக இருந்தான். பின்னர், சைவ சமயத் தொண்டரான திருநாவுக்கரசர் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினான். கட்டடக் கலை, சிற்பக்கலை, சித்திரக் கலை, இசைக்கலை ஆகியவற்றிற்கு இவன் ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கு அரியன.
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668)
முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் அரியணை ஏறினான். இவனது காலத்தில் அரசியல், பண்பாடு ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கின. இவன் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். இதனால் இவனை வாதாபி கொண்டான் என்றனர். இவ்வெற்றிக்குக் காரணமான தளபதி பரஞ்சோதியே பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் எனப் போற்றப் பெற்றார்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அரிய பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவன் சாளுக்கியரை வென்றதோடு பாண்டியருடனும், இலங்கையருடனும், கங்கருடனும் போர் புரிந்து வெற்றி பெற்றான். யுவான்-சுவாங் என்ற சீனப் பயணி இவனது ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்குக் கி.பி. 640இல் பயணம் செய்தார். அவர் தமது குறிப்பில் காஞ்சி மாநகரைப் பற்றிச் சிறப்புறக் கூறியுள்ளார்.
முதலாம் நரசிம்மவர்மன் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. பல்லவ நாட்டில் மலையைக் குடைந்து பல குகைக்கோயில்களை அமைத்தான். நாமக்கல் மலையடியில் தென் மேற்கு மூலையில் உள்ள நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்கள் இவன் அமைத்தன ஆகும். முதன்முதலாக ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை இவனையே சாரும். மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் தேர்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால் அமைக்கப்பட்டனவே ஆகும்.
முதலாம் நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இப்பட்டப் பெயர் கொண்டு மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும் அழைக்கப்பட்டது. மகாபலிபுரம் இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது.
முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் இரண்டு ஆண்டுகளே (கி.பி. 668-670) அரசாண்டான்.
முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695)
இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்திற்கு வந்தான். இவன் சாளுக்கிய அரசன் முதலாம் விக்கிரமாதித்தனோடும் அவனுக்குத் துணையாக வந்த மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமனோடும் செய்த போரில் தோல்வியுற்றான். இவன் சிறந்த சிவத் தொண்டனாக விளங்கினான். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்னும் இடத்தில் இவன் கட்டிய சிவன் கோயில் புகழ் வாய்ந்தது.
இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 695-722)
முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு இராசசிம்மன் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவன் காலத்தில் பல்லவப் பேரரசிற்கும், சாளுக்கியப் பேரரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த போர் ஓய்ந்திருந்தது. இதனால் உள்நாட்டில் அமைதி நிலவியது. இதைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைத்தொண்டில் ஈடுபட்டான் இராசசிம்மன். இவனுக்குப் பெரும்புகழையும், சைவ சமய வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் ஆகும். மகாபலிபுரத்தில் சிறந்து விளங்கும் கடற்கரைக் கோயிலும் இவன் எழுப்பியதே ஆகும்.
இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 722-730)
இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே பகைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது போர் தொடுத்தான். இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான். இவனுடன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் வந்த மகாபல்லவர்களின் ஆட்சி முடிந்தது. அதன் பின்பு சுமார் கி.பி. 731 அளவில் சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் பரம்பரையில் வந்த பிற்காலப் பல்லவ மன்னர்களின் ஆட்சி தொடங்கியது.
பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 731 – 890)
பிற்காலப் பல்லவர்கள் எனக் கூறும்போது பல்லவருக்குள்ளே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் பல்லவ நாட்டை இறுதியாக ஆண்ட இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச் சித்திர மாயன் என்னும் மைந்தன் இருந்தான். வயதில் சிறுவனாக இருந்ததால் இவன் அரசபதவிக்கு வருவதைப் பெரியோர்களும், குடிமக்களும் விரும்பவில்லை. யார் அரசபதவிக்கு வருவது என்பது பற்றிக் குழப்பம் ஏற்பட்டது. மக்கள், உயர் அதிகாரிகள், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் பரம்பரையில் வந்த இரணியவர்மன் அரசபதவிக்கு வருவதையே விரும்பினர். இரணியவர்மன் இக்கோரிக்கையை மறுத்துவிட்டுத் தனது மைந்தன் இரண்டாம் நந்திவர்மனை ஆட்சியில் அமர்த்துவதற்கு வாரிசு உரிமைப் போரில் இறங்கினான். இப்போரில் இரணியவர்மன் வெற்றி பெற்றான்.
இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-795)
பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ நாட்டிற்கு மன்னன் ஆனான். இவன் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியருடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. அரசபதவி கிடைக்காமல் போன சித்திரமாயன் வெகுநாள் பகைவரான சாளுக்கியரின் உதவியை நாடி, காஞ்சியைக் கைப்பற்றி அரச பதவியை இரண்டாம் நந்திவர்மனிடமிருந்து கைப்பற்றினான். இருப்பினும் இரண்டாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரின் உதவியை நாடி மீண்டும் காஞ்சியைச் சித்திரமாயனிடமிருந்து கைப்பற்றினான்.
தனது சொந்த நாட்டை இழந்த சித்திரமாயன் பாண்டிய நாட்டின் உதவியை நாடினான். அப்போது பாண்டிய நாட்டை அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் பாண்டிய படையுடன் பல்லவ நட்டைத் தாக்கத் தொடங்கினான். தற்போதைய தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டுப் பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) கோட்டையில் தங்கி இருந்தபோது சிறைபிடிக்கப்பட்டான். இதனை அறிந்த அவனுடைய படைத்தலைவன் உதயசந்திரன் பெரும்படையுடன் நந்திபுரம் வந்து இரண்டாம் நந்திவர்மனைச் சிறைமீட்டான். இரண்டாம் நந்திவர்மன் அரச பதவியை மீண்டும் பெற்றான். பல போர்களில் ஈடுபட்ட பிற்காலப் பல்லவர்கள் சமய, கலைத் தொண்டுகளிலும் ஈடுபட்டார்கள். இரண்டாம் நந்திவர்மன் சுமார் 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இம்மன்னன் அதிக பகைமையை வளர்த்துக் கொண்ட போதிலும் சமயம், கலை இவைகளில் அக்கறை கொண்டிருந்தான். இம்மன்னன் வைணவ சமயத்தைத் தழுவினான். இவனது ஆட்சியில் திருமங்கை ஆழ்வார் என்னும் பெரியார் வாழ்ந்தார்.
இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியிலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம், முத்தீச்சுவரர் ஆலயம் முதலிய கோயில்களையும் கட்டினான். இவனது காலத்தில் கல்வியின் நிலை ஓங்கி இருந்தது. கல்வி நிலையங்கள் நிறையத் துவங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் நந்திவர்மன் அவன் காலத்துப் பட்டயங்களைக் கிரந்தத் தமிழில் வெளியிட்டான். இதனால் தமிழ்மொழி இவனது ஆட்சியில் சிறப்புப் பெற்றது.
தந்திவர்மன் (கி.பி. 796-846)
இராஷ்டிரகூடர்களின் ஆதரவுடன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியைப் பெற்றதால் இராஷ்டிரகூட இளவரசி ரேவாவை இரண்டாம் நந்திவர்மன் மணம் புரிந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்தவன் தந்திவர்மன் என்பவன் ஆவான்.
தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூட நாட்டில் வாரிசு உரிமைப் போர் நடைபெற்றது. முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் இரண்டாம் கோவிந்தன், துருவன் ஆகிய இருவருக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கிற்று. தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். வாரிசு உரிமைப் போரில் துருவன் வெற்றியடைந்தான். தனது பகைவனுக்கு ஆதரவு அளித்த தந்திவர்மனைத் துருவன் பழிவாங்க எண்ணினான்; காஞ்சியைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினான். துருவன் இறந்தபின்னர் இரண்டாம் கோவிந்தன் மகன் மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராஷ்டிரகூட மன்னராட்சி மாறியவுடன் தந்திவர்மன் கப்பம் கட்ட மறுத்துவிட்டான். எனவே மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோல்வியுற்றான். இதன் காரணமாகப் பல்லவப் பேரரசு சிற்றரசாக மாறியது.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)
தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.
மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.
தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான். மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.
மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.
நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் (கி.பி. 869-890)
மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.
நிருபதுங்கவர்மன் இரண்டாம் வரகுண பாண்டியனின் உதவியைக் கோரிப் பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத் துணைநின்றனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றுப் பல்லவ நாட்டு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டான்.
அபராசிதவர்மன் பதினெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அப்போது தலையெடுத்து வந்த சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.
இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இப்பாண்டியன் தன் தந்தை சீமாற சீவல்லபன் இழந்த சோழநாட்டுப் பகுதியை மீட்க எண்ணி, அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இழந்த பகுதியை மீட்டுக் கொண்டான். இவ்வெற்றியால் பாண்டியன் செல்வாக்கு உயர்ந்தது. பாண்டியரால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணிய அபராசிதவர்மன் பெரும்படையுடன் சோழ நாட்டுப் பகுதியில் இருந்த பாண்டியருடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், விசயாலய சோழனுடைய மகன் ஆதித்த சோழனும்அபராசிதவர்மனுக்குத் துணையாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடந்த போரில் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். அபராசிதவர்மனும், ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்து மதுரை திரும்பினான். அபராசிதவர்மன் போரில் தனக்கு வெற்றி தேடித் தந்த ஆதித்த சோழனுக்கு, சோழநாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான். எனினும் சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் தனக்குப் பலன் கருதியே இப்போரில் அபராசிதவர்மனுக்குத் துணை நின்றான். விரைவில் அவன் பல்லவ நாட்டைத் தாக்கி அபராசிதவர்மனை வென்று பல்லவ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இச்செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம். நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் இருவருக்குப் பின் பல்லவர் ஆட்சி சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அச்சமயத்தில் இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

பல்லவர் கால வரிகள்.
மகாபலிபுர கடற்கரைக் கோயில்
வரிகள்.
வேளாண்மை வரிகள் தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன. மருக்கொழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன.
தொழில் வரிகள்.
ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.
பண்டாரம்.
ஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் "மன்றுபாடு" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர்.
அளவைகளும் நாணயங்களும்.
நில அளவை.
பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின.
முகத்தலளவை.
முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.
நிறுத்தலளவை.
கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள்
நாணயங்கள்.
கி.பி. 300 பல்லவர் காலத்துக் கப்பல் பொறிக்கப்பட்ட நாணயம்
பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன.
நீர்ப்பாசன வசதிகள்.
காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்கு காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு[17]. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர்.
ஏரிகள்.
இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.[18]
கிணறுகளும், கால்வாய்களும்.
பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவ் அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்ஹ்டு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில.
பஞ்சங்கள்.
பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன் காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.
நடுகல்.
பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும்.

பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்.
பல்லவர் கோயில் சிலை
பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.
கல்வி.
மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது.[21] காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
சமயநிலை.
துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமயத்ஹ்டின் உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன. சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர். இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன.
கலை இலக்கிய வளர்ச்சி.
பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம்,கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன.கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும்.
இலக்கியம்.
தமிழிலக்கியங்கள்.
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே.
வடமொழி இலக்கியங்கள்.
பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.
இசைக்கலை.
பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன
தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாக சமயம் வளர்த்தனர்.
சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதி என அழைக்கப்பட்டான்.
இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான்.
ஆடற்கலை.
மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
கட்டடக்கலை.
மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும். இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும்.
சிற்பக்கலை.
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது.
ஓவியக்கலை.
ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்னக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சேர்ந்தன.

தமிழகத்தில் பல்லவராட்சி
பல்லவ நாடு.சிவப்பு நிறம். கிபி 3-5
கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.இக்காலகட்ட பகுதியில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியமும் பல்லவர் செப்பேடுகளும்.
உலக வரலாற்றில் மொழி களுக்கு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட பின்னரே இலக்கியங்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன் இலக்கியங்கள் இல்லை என்று கருதுதல் தவறு. வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். எழுத்துருக்கள் உலகின் வெவ்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு ஊடகங்களில் எழுதப்பட்டன.
சீனத்திலும், சுமேரியத்திலும் மண்ணோடுகளில் எழுதப்பட்டன. பழந் தமிழகத்தினைப் பொறுத்தவரை இரும்புக் காலத்தில் எழுத்துருக்கள் தோன்றின. ஒரே காலகட்டத்தில், அவ்வெழுத்துக்கள் கற்பாறைகளிலும், பானையோடுகளிலும் வடிக் கப்பட்டன. தொடர்ந்து செப்புப் பட்டயங்களிலும் எழுதப்பட்டன.
இரும்புக் காலத்திற்கு முன்பிருந்த வாய்மொழி இலக்கியங்கள், எழுத்துக்கள் உருவாக்கப்பட்ட கால கட்டமான கி.மு. 300 தொடக் கம் நூல் வடிவத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அதே காலத்தினைச் சார்ந்த சங்க இலக்கியங்கள் எனப்படும் தொகையிலும், பாட்டி லும் உள்ள செய்திகளும் சில வர லாற்றுக் குறிப்புகளும் ஒத்துப்போகின் றன.
இக்கூறு தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றினைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு: புகழூர் கல்வெட்டுக்களின் செய்திகள் பதிற்றுப் பத்தின் செய்திகளோடு ஒப்பிடப்பட்டு இரண்டின் வரலாற்றுத் தன்மைகளும் உய்த்துணரப்பட்டன.
தமிழகத்தில் அரசுருவாக்கம் ஓர் இயக்கமாக எழும்போதே வாய்மொழி வடிவில் இருந்த தொகை நூல்களும், பாட்டும் எழுத்து வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும். அவ்வடிவாக்கத்தில் வடபுலத்தின் இலக்கியங்களில் உள்ள சில கூறுகள் தொன்ம வடிவில் பதியப்பட்டுள்ளன. ஏனென்றால் அதற்கான தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது.
வெவ்வெறு திணைச் சூழல்களில் இயங்கி வந்த சீறூர் மன்னர்கள், குறுநில மன்னர்கள், வேளிர்கள், வேந்தர்கள் என்போர் தங்களுக்குள் நடத்திக் கொண்ட இனக் குழுச் சண்டைகளில் தம் தம் குல அடையாளங்களை இழக்கத் துணிந்து ஒரு கற்பனாவாத ஆளுமையோடு தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம், தங்களுக்கு ஒரு புதிய புகழ் வழிபாட்டினையும் தெய்வீகத் தன்மையினையும் உருவாக்கிக்கொள்ள விழைந்தனர்.
வீர குணத்தினை விட்டு, விந்தையான கடவுள் குணத்தினைப் பெறத் துடித்தனர். அதன் மூலம் மக்களைத் தம் வசப்படுத்த முனைந்தனர். இவ்வீர புருஷர்கள் தாம் தோழமையுடன் பழகி வந்த பாணர் குலத்தினரைப் புறக்கணித்துப் புலவர் கூட்டத்தினரைத் தம்மோடு களிப்புடன் இருத்திக் கொண்டனர்.
வட புலத்துப் பண்புகளைக் கொண்ட இப்புலவர்களை நம்பினர். தானமளித்தனர். பதிலுக்கு, புலவர்கள் வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் வருணிக்கப்பட்ட கடவுளர்களுடன் தமிழகத்து மன்னர்களை ஒப்பிட்டனர். இவர்களுக்கு, மக்களின் அறிந் தேற்பினைப் பெறத் தொன்மங்கள் தேவைப்பட்டன. எனவே, ஆள விரும்புவோர் தங்கள் குலத்தினரைத் தொன்மங்களுக்குள் இட்டுச்சென்றனர்.
இவ்வாறு பெருஞ்சோற்று உதியன் மக்களிடத்தில் வேந்தன் என்னும் அறிந்தேற்பினைப் பெறும் பொருட்டுத் தம்மைப் பாரதப் போர் என்னும் தொன்மத்தோடு தொட்புபடுத்திக் கொண்டான்? இப்படித் தமிழ் மன்னர்கள் இந்திய மயமாதலுக்குத் தம்மை இணைத்துக் கொண்டனர். வழுதிகளும், கிள்ளிகளும் வீரகுணத்தினை விடுத்து வேதகுணத்தினைத் தொட்டு நடத்தினர்.
போரிட்டு பிற இனக் குழுக்களை வெல்வதைக் காட்டிலும் வேள்வி நடத்தி மக்களின் இதயங்களை வென்றிடலாம் என்று நம்பினர். தமிழகத்தில் தோன்றிய இனக் குழுத் தலைவர்களுக்கே மக்களின் அறிந்தேற்பினைப் பெறுதற்குத் தொன்மங்களையும் புராணக் கதைகளையும் இலக்கியங்க ளில் பதிய வேண்டிய தேவை இருந்ததென்றால், சாதவாகனர்களிடம் குறுநிலத் தலைவர்களாக இருந்த பல்லவர்கள் மொழிபெயர் தேயமான வட வேங்கடத்திற்கு அப்பால் இருந்து தமிழகத்தில் தம் செங் கோலை ஊன்றுவதற்கு எவ்விதமான தொன்மங்களைத் தாம் வெளியிட்ட பட்டயச் சான்றுகளில் பதித்திருப்பர் என்று கண்டறிவது இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது.
இந்திய மொழிகளில் தமிழிற்கும் பிராகிருதத்திற்கும் தான் ஒரே கால கட்டத்தில் இலக்கிய வளமும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. தென்னகத்தின் ஆந்திரப் பகுதிகளில் உள்ள சாதவாகனர்களின் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் போக முற்பல்லவர் (கி. பி. 300 – 600) என்போர் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் செப்புப் பட்டயங்களை வெளியிட்டனர்.
அச்சான்றுகளின் மொழி சமஸ்கிருதம் கலந்த பிராகிருதமாயிருக்க, எழுத்துக்கள் கிரந்தமாயிருந்தன. தமிழ் மொழியிலும் சான்றுகளை வெளியிட்டனர். இச் செப்புப் பட்டயங்களில் பல்லவர்கள் சில தொன்மங்களைப் பதித்துள்ளனர்.
இத்தொன்மக் கதைகளில் தங்களின் முன்னோர்களாக புராணங்களில் சொல்லப்பட்ட கடவுளர்களையும், முனிவர்களையும் அடையாளம் காட்டுகின்றனர். இவற்றுள் சொல்லப்பட்ட கடவுளர் பாத்திரங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்ட கடவுளர்களாக உள்ளனர். பல்லவர்கள் தங்கள் முன்னோர்களாக தொன்மங்களில் சுட்டியவற்றுள் சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற புருட கடவுளர்களும், துரோணர் போன்ற நரபுருடர்களும் மீண்டும் மீண்டும் சுட்டப்படுகின்றனர். இங்கு, பல்லவர் செப்பேடுகளில் சொல்லப்பட்ட தொன்மங்களையும் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட தொன்மங்களையும் இணைத்துப் பார்க்கலாம். (பின்னிணைப்பு)
சமணம் தமிழகத்தில் பரவலாக ஆதரவு பெற்றதனைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்த போதிலும் அக் கல்வெட்டுக்களில் சமணத் தத்துவங்கள் பதியப்படவில்லை. பல்லவ மன்னர்களில் சிலர் சமணராயிருந்தும், தம் செப்புப் பட்டயங்களில் வைதீகத் தொன் மங்களைப் பதித்தனரேயன்றிச் சமண சமயக் கொள்கையினை அன்று ஒழுக்கத்தினைப் போதிக்கும், கொல்லாமையை (போரினைத் தவிர்க்கும்) வலியுறுத்தும் சமண சமயக் கருத்தினைப் பின்பற்றி மெல்ல எழும்பும் பல்லவர் தம் ஆட்சியினை விரிக்க முடியாது. இதனை அறிந்தே காலத் தேவை க்கேற்ப மதம் மாறியிருப்பர்.
ஆட் சிப் பரப்பினை விரிக்க வேண் டும்மெனில் போரிட வேண்டும். அதற்கு வீரகுணத்தினை அரச குடும்பங்களுக்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டும். எனவேதான். இதிகாச கதாபாத்திரங்களின் வீர புருஷர்களான துரோணரையும், அசுவத்தாமனையும் முன்னோராக ஏற்றுக்கொண்டனர் போலும்.
அரச வம்சத்தினர் மதம் மாறியதனைத் தமிழர் புறக்கணிப்பரோ என்று பல்லவர் எண்ணியிருப்பர். இம் மனவோட்டத்தின் விளைவாக வந்த உளக்காய்ச்சலை ஈடுகட்டுவதற்கு மருந்து தேடியிருப்பர். தமிழ்ச் சமூகம் ஏற்கெனவே சங்க இலக் கியங்களில் பதித்து வைத்திருந்த வைதீகத் தொன்மங்கள் இவர்களுக்கு மருந்தாய்ப் பயன்பட்டன. சங்க இலக்கியங்களில் கடவுளர்களைச் சுட்டும் சில சொற்கள் அரசர்களைச் சுட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனை உணர்ந்த பல்லவர் தாமும் வைதீகத் தொன்மங்களைப் பட்டயச் சான்றுகளில் பதித்திருப்பர். இது தமிழோடும் தமிழரோடும் தம்மைப் பல்லவர் இணைத்துக்கொண்ட உத்தியாகும். இதனால், வேங் கடத்திற்கு - அடுத்த மொழிபெயர் தேசமான வட புலத்திலிருந்து பல்லவர் நிலம் பெயர்ந்தனர் என்ற கூற்று தமிழர் மனங்களில் மறக்கடிக்கப்படுகிறது.
இவ்வாறு, தமிழ் மண்ணோடு தம க்கு ஒரு தொப்புள் கொடி உறவு இல்லாத நிலையில் இத்தொன்மங்கள் உறவினை உண்டாக்கின என்று கொள்ளலாம். இரத்த உற வினை உண்டாக்குவதற்குப் பிறி தொரு தொன்மமும் உருவாக்கப்பட் டது. தமிழகர்கள் வணங்கி வந்த கடவுளர்களைத் தாமும் வழிபடத் தொடங்கியதன் மூலம் தமிழரின் சமய வலயத்திற்குள் வந்துவிட்டபல்ல வர் நாககன்னிகைக் கதையினைத் தொடர்புறுத்தி தமிழரின் சமூக வட்டத்திற்குள் வந்தனர்.
தொன்மங்களில் தாங்கள் குறிப்பிட்ட கடவுளர்களுக்குச் சிலையுரு தந்து போற்றிய பல்லவர் இரத்த உற வினைப் பெற்றுத் தந்த நாக கன்னிகைக்கும் சிலையுறு வைத்தனர்.
குறிப்புகள்.
1. இக்கருத்தினை ஓராய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெ. மாதையன், சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004, ப. 158 ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை (புறம் : 76, 2) என்ற பாடல் வரியினை இவ்வறிஞர் நம் கவனத்திற்குத் தருகிறார்.
2. ச. வையாபுரிப்பிள்ளை தம் ஆய்வில் இக்கருத்தினை வலியு றுத்தியுள்ளார். ‘அரசர் முதலியவர்களை இசை யினாலும் கூத்தினாலும் மகிழ்வித்து அவர்களுக்குத் தோழர் என்ற நிலையில் பல சந்தர்ப் பங்களிலும் உதவி வந்த பாணர்கள் தங்கள் பதவியை இழந்து விட் டார்கள். இவர்களால் பேணப்பட்டு வந்த இசையும் கூத்தும் ஆதர விழந்தன என்று பாணரின் சரிவு பற்றிக் கூறுகையில் அரசர் - ஆரியர் உறவு பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்.
‘அரசருக்கு நிமித்திகராக வும், புரோகிதராகவும் மந்திரிகளாக வும் இவர்கள் (ஆரியர்) அமைந்தனர். அரசருக்கும் அந்தணருக்கும் இடை யிலான உறவு பற்றிப் பேசும்போது பின்வருமாறு கூறுகிறார்.
‘அந்தணனடைந்த பெருவெற்றியெ ன்று கூறத் தகுவது ஒரு பாண் டியனைப் பல யாகங்கள் இய ற்றும்படி செய்து அவனைப் பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்ற பெயராற் சிறப்பித்ததும் (புறம் : 15), ஒரு சோழனை இராஜசூய யாகம் புரியும்படி செய்து அவனை இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயராற் சிறப்பித்ததும் (புறம் : 16) பல்யானை செல்கெழு குட்டுவன் என்ற சேரனிடமிருந்து பாலைக் கெளதமன் தானும் தன் பத்தினியும் சுவர்க்கம் புகுதற்காக ஒன்பது பெருவேள்வி வேட்கப் பெரும் பொருள் பெற்று, பின் அவனைத் துறவு பூண்டு காடு செல்லும்படி செய்ததும் (பதிற்றுப்பத்து, 3 பதிகம்) ஆம். இவ்வுதாரணங்களி லிருந்து (பதிற்றுப்பத்து, 3 பதிகம்) ஆம் இவ்வுதாரணங்களிலிருந்து ஆரியரது கலைப் பண்பாடு தமிழ் நாட்டில் தமிழ்ச் சமுதாயத்தில் உயர்ந்த படியிலுள்ள அரசர் முதலிய பெருமக்களையே முதன் முதலாக வசீகரித்தார் என்பது விளங்கும். எஸ். வையாபுரிப் பிள்ளை, காவியகாலம் : நூற்களஞ்சியம், தொகுதி – 3 (முதற்பதிப்பு) சென்னை. 1991. பக். 62; 82. இந்நூலிலேயே குமட்டூர்க் கண்ணனார். காப்பியாற்றுக் காப்பியனார், கபிலர் போன்ற அந்தணப் புலவர்கள் அரசர்களுக்கு இணையாக அந்தஸ்து பெற்ற தனையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலது, ப. 68
3. புறம் – 2லும், அகம்-233லும் பதியப்பட்ட உதியஞ் சேரல் என்ற சேர மன்னன் பாரதப் போருக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பதே தமிழகத்திற்கு வந்த வடவுலத்துப் பண்பாட்டுக் கருத்துக்களில் அரசியலுக்கு மிகவும் பயன்பட்டது எனக் கொள்ளலாம். இத்தொன்மம் பற்றிப் பலரும் பல்லாண்டுகளாக ஆய்ந்துள்ளனர்.
4. குறிப்பாக நெடியோன் என்னும் சொல் கடவுளைச் சுட்டுவதற்கு மட்டுமல்லாமல் ‘மன்னனைச் சுட்டவும்’ பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. பெ. மாதையன், வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2001, ப. 101.
5. பல்லவர் தோற்றுவாய்பற்றி வரலாற்றறிஞரிடையே வெவ்வேறு கொள்கைகள் நிலவி வருகின்றன. பல்லவர் தமிழரே என்பர் சிலர்; தமிழரல்லர் என்பர் சிலர். பல்ல வரைத் தமிழரென்போர் தொண்டைமான் இளந்திரையன், தொண்டையோர் மருக, திரையர் என்ற சங்கச் செய்யுள்களின் தொடர்களைத் தொண்டைநாடு, தொண்டையர் போன்ற பிற்காலச் செய்யுள்களிலுள்ள குறிப்புகளோடு பல்லவரை இணைத்துப் பார்ப்பர்.
மணிபல்லவத்தீவு, நாக கன்னிகைக் கதை போன்றவற்றையும் கருத்திற் கொள்வர். பல்லவர் தமிழரென்றால் புராண இதிகாசக் கதைகளின் புருடபாத்திரங்களைத் தம் முன்னோராகக் குறித்திருக்க மாட்டார். சங்ககால மன்னர்கள்/ வேந்தர்கள் வடபுலத்து வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினரேயன்றி தங்களின் முன்னோராக புராணப் பாத்திரங்களைக் கொள்ளவில்லை.
பல்லவர் தோற்றுவாய் பற்றியும் அவர்கள் தமிழரா? இல்லையா? என்பது பற்றியும் சென்ற நூற்றாண்டின் முதல் கூற்றிலேயே வாதங்கள் தொடங்கிவிட்டன. எஸ். கிருஷ்ணசுவாமி அய்யங்கார், பி. டி. ஸ்ரீநிவாச ஐயங்கார் போன்றோரின் வாதங்கள் முன்னுதாரணங்களாய் அமைந்தன. நூறாண்டுகளைத் தாண்டும் நிலையி லும் இவ்விவாதம் தொடர்கிறது. பல்லவர் தோற்றுவாய் பற்றிப் பல கொள்கைகளை வாதிட்ட ஆர். கோபாலன் தெளிவான முடி விற்கு வரவில்லை. அண்மையில் ‘பல்லவர்கள் ஆந்திரர்கள் என்ற கருத்தே ஏற்றுக்கொள்ளும்படியாய் உள்ளது’ என்று கல்வெட்டறிஞர் சு. இராஜவேலு கூறியுள்ளார்.
இக்கூற்று உண்மையெனில், இங்குக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைச் சரியெனக் கொள்ளலாம். இல்லையேல் தள்ளலாம்.
(Thinakaran Paper from Sri Lanka FRIDAY, AUGUST 27, 2010)

தொண்டைநாடும் சங்கநூல்களும்.
கி.பி. 300 பல்லவர் நாணயம்
தொண்டைநாடும் சங்கநூல்களும்.
நரசிம்மவர்மன் காலத்தில்பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள்,மாமல்லபுரம்.
வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை
மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது.
வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது. முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும்.
இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது.
வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின்மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்தது எனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவேஅகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடு பற்றி அறிய முடிகிறது.