தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Thursday, February 4, 2010

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மாமன்னன் கோச்செங்கசோழன் 

மாடக்கோவில்கள்

1800 Year Old Sivan Temple at Thiruvanaikaval.




தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாக கூறலாம்.இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு விதியாசமாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாக இருக்கும். யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பது இதன் காரணம்.

புவியாண்ட மாமன்னன் கோச்செங்கசோழன் தான் மாடக்கோவில்களை கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன்.மேலும் அதிக சிவன் கோவில்களை கட்டிய மன்னன் என்ற பெருமை பெற்ற இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது.

இவனது தாய் சோழ அரசி கமலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்ந பிறக்கும் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாபெறும் மன்னனாக இருப்பான் என்றனர். இதனை அறிந்த அரசி அந்த நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விட ஆனையிட்டாள். நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டதனால் பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன ஆனால் அரசி இறந்துவிட்டார்.சிவந்திருந்த கண்கள் பெற்ற குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் சூடினர்.

காவிரிக் கரையில் திருவானைக்காவல் என்னும் சிவதளத்தில் கோச்செங்கண் கட்டிய முதல் மாடக்கோவில் இன்றும் நம்மை வியக்கவைக்கிறது.

சிவாலயங்களில் மாமன்னன் கோச்செங்கசோழனுக்கு மாசி மாத சதய நட்சத்திரத்தில் விழாக்களும் சிற்ப்பு பூஜைகளும் ஆரதனைகளும் நடத்தப்படுகிறது.மாடக்கோவில்கள் என்ற கலைச்சிற்பங்களை எமக்களித்த வான் புகழ் கோச்செங்கசோழன் என்ற கள்ளர் குல மா மன்னனை நாம் நினைவு கொண்டு கள்ளர் இன மக்களாகிய நாம் பெருமை அடைவோம்

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்
 
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு " சடையாய் எனுமால் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம் " என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.
இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.
திருநாவுக்கரசர் (அப்பர்)சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்125
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்98
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்51
திருஞானசம்பந்தர்சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்219
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்12
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்43
சுந்தரர்சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்84
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள்54
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்136

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. நடராஜர் சிதம்பரம்

2. பசுபதீஸ்வரர் திருவேட்களம்

3. உச்சிநாதேசுவரர் திருநெல்வாயல்

4. பால்வண்ண நாதர் திருக்கழிப்பாலை

5. சிவலோக தியாகேசர் திருநல்லுர் பெருமணம்

6. திருமேனிஅழகர் திருமயேந்திரப்பள்ளி

7. முல்லைவன நாதர் தென்திருமுல்லைவாசல்

8. சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர்

9. சாயாவனேஸ்வரர் திருசாய்க்காடு (சாயாவனம்)

10. பல்லவனேஸ்வரர் திருபல்லவனீச்சுரம்

11. சுவேதஆரன்யேஸ்வரர் திருவெண்காடு

12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை திருக்காட்டுப்பள்ளி

13. வெள்ளடையீசுவரர் திருக்குருகாவூர் வெள்ளடை

14. பிரம்மபுரீசர் சீர்காழி

15. சத்தபுரீசுவரர் திருகோலக்கா

16. வைத்தியநாதர் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

17. கண்ணாயிரநாதர் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )

18. கடைமுடிநாதர் திருக்கடைமுடி

19. மஹாலக்ஷ்மி நாதர் திருநின்றியூர்

20. சிவலோகநாதர் திருபுன்கூர்

21. அருட்சோம நாதேஸ்வரர் நீடூர்

22. ஆபத்சகாயேஸ்வரர் திருஅன்னியூர்

23. கல்யாணசுந்தரர் திருவேள்விக்குடி

24. ஐராவதேஸ்வரர் திருஎதிர்கொள்பாடி

25. அருள்வள்ள நாதர் திருமணஞ்சேரி

26. வீரட்டேஸ்வரர் திருக்குருக்கை

27. குற்றம் பொருத்த நாதர் திருக்கருப்பறியலூர்

28. கோந்தல நாதர் திருக்குரக்குக்கா

29. மாணிக்கவண்ணர் திருவாளொளிப்புத்தூர்

30. நீலகண்டேசர் திருமண்ணிப்படிக்கரை

31. துயரந்தீர்த்தநாதர் திருஓமாம்புலியூர்

32. பதஞ்சலி நாதர் திருக்கானாட்டுமுல்லூர்

33. சௌந்தரேசுவரர் திருநாரையூர்

34. அமிர்தகடேசர் திருக்கடம்பூர்

35. பசுபதி நாதர் திருபந்தனைநல்லூர்

36. அக்னீஸ்வரர் திருகஞ்சனூர்

37. திருக்கோடீஸ்வரர் திருகோடிக்கா

38. பிராண நாதேஸ்வரர் திருமங்கலக்குடி

39. செஞ்சடையப்பர் திருப்பனந்தாள்

40. பாலுகந்த ஈஸ்வரர் திருஆப்பாடி

41. சத்யகிரீஸ்வரர் திருசேய்ஞலூர்

42. கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )

43. வில்வஆரன்யேஸ்வரர் திருவியலூர்

44. கோடீஸ்வரர் திருக்கொட்டையூர்

45. எழுத்தறிநாதர் திருஇன்னாம்பர்

46. சாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்

47. விஜயநாதர் திருவிசயமங்கை

48. வில்வவனநாதர் திருவைகாவூர்

49. குலைவணங்குநாதர் வடகுரங்காடுதுறை

50. ஆபத்சகாயநாதர் திருப்பழனம்

51. ஐயாரப்பர் திருவையாறு

52. நெய்யாடியப்பர் திருநெய்த்தானம்

53. வியாக்ர புரீசர் திருப்பெரும்புலியூர்

54. வஜ்ரதம்ப நாதர் திருமழபாடி

55. வடமூலநாதர் திருப்பழுவூர்

56. செம்மேனி நாதர் திருக்கானூர்

57. சத்யவாகீஸ்வரர் திருஅன்பில் ஆலாந்துறை

58. ஆம்பிரவன நாதர் திருமாந்துறை

59. திருமூலநாதர் திருபாற்றுறை

60. ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா

61. ஞீலிவனேஸ்வரர் திருபைஞ்ஜிலி

62. மாற்றுறை வரதீஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)

63. மரகதேஸ்வரர் திருஈங்கோய்மலை


காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்

1. ரத்னகிரிநாதர் திருவாட்போக்கி

2. கடம்பவன நாதேஸ்வரர் திருகடம்பந்துறை

3. பராய்த்துறை நாதர் திருப்பராய்த்துறை

4. உஜ்ஜீவ நாதர் திருகற்குடி

5. பஞ்சவர்னேஸ்வரர் திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)

6. தாயுமானவர் திருச்சிராப்பள்ளி

7. எறும்பீசர் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)

8. நித்திய சுந்தரர் திருநெடுங்களம்

9. தீயாடியப்பர் மேலை திருக்காட்டுப்பள்ளி

10. ஆத்மநாதேஸ்வரர் திருவாலம்பொழில்

11. புஷ்பவன நாதர் திருபூந்துருத்தி

12. பிரம்மசிரகண்டீசர் திருக்கண்டியூர்

13. தொலையாச்செல்வர் திருசோற்றுத்துறை

14. வேதபுரீசர் திருவேதிகுடி

15. வசிஷ்டேஸ்வரர் திருதென்குடித்திட்டை

16. ஆலந்துறை நாதர் திருபுள்ளமங்கை

17. சக்ரவாகேஸ்வரர் திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)

18. முல்லைவன நாதர் திருக்கருகாவூர்

19. பாலைவன நாதர் திருப்பாலைத்துறை

20. கல்யாண சுந்தரேஸ்வரர் திருநல்லூர்

21. பசுபதீஸ்வரர் ஆவூர் பசுபதீச்சரம்

22. சிவகொழுந்தீசர் திருசத்திமுற்றம்

23. தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்

24. சோமேஸ்வரர் பழையாறை வடதளி

25. கற்பகநாதர் திருவலஞ்சுழி

26. கும்பேஸ்வரர் திருக்குடமூக்கு (கும்பகோனம்)

27. நாகேஸ்வரசுவாமி திருக்குடந்தை கீழ்கோட்டம்

28. காசி விஸ்வநாதர் திருக்குடந்தைக் காரோணம்

29. சண்பக ஆரண்யேஸ்வரர் திருநாகேஸ்வரம்

30. மஹாலிங்கேஸ்வரர் திருவிடைமருதூர்

31. ஆபத்சகாயநாதர் தென்குரங்காடுதுறை

32. நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி

33. வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில்

34. உமாமஹேஸ்வரர் திருநல்லம்

35. கோகிலேஸ்வரர் திருக்கோழம்பம்

36. மாசிலாமனி ஈஸ்வரர் திருவாவடுதுறை

37. உக்தவேதீஸ்வரர் திருத்துருத்தி (குத்தாலம்)

38. வேதபுரீஸ்வரர் திருவழுந்தூர்

39. மயூரநாதர் மயிலாடுதுறை

40. துறைகாட்டும் வள்ளலார் திருவிளநகர்

41. வீரட்டேஸ்வரர் திருப்பறியலூர் (பரசலூர்)

42. சுவர்ணபுரீசர் திருசெம்பொன்பள்ளி

43. நற்றுணையப்பர் திருநனிபள்ளி (புஞ்ஜை)

44. வலம்புரநாதர் திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

45. சங்கருனாதேஸ்வரர் திருதலைச்சங்காடு

46. தான்தோன்றியப்பர் திருஆக்கூர்

47. அமிர்தகடேஸ்வரர் திருக்கடவூர்

48. பிரம்மபுரீஸ்வரர் திருக்கடவூர் மயானம்

49. திருமேனிஅழகர் திருவேட்டக்குடி

50. பார்வதீஸ்வரர் திருதெளிச்சேரி (கோயில்பத்து)

51. யாழ்மூரிநாதர் திருதர்மபுரம்

52. தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு

53. ஐராவதேஸ்வரர் திருக்கோட்டாறு

54. பிரம்மபுரீசர் அம்பர் பெருந்திருக்கோவில்

55. மாகாளநாதர் அம்பர் மாகாளம்

56. முயற்சிநாதேஸ்வரர் திருமீயச்சூர்

57. சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோவில்

58. மதிமுத்தீஸ்வரர் திருதிலதைப்பதி

59. பாம்பு புரேஸ்வரர் திருப்பாம்புரம்

60. மங்களநாதர் சிறுகுடி

61. நேத்ரார்பனேஸ்வரர் திருவீழிமிழிலை

62. அக்னீஸ்வரர் திருவன்னியூர்

63. சற்குனநாதேஸ்வரர் திருக்கருவிலிக்கொட்டிட்டை

64. சிவானந்தேஸ்வரர் திருபேணுபெருந்துறை

65. சித்தி நாதேஸ்வரர் திருநறையூர்

66. படிக்காசு அளித்த நாதர் அரிசிற்கரைப்புத்தூர்

67. சிவபுரநாதர் சிவபுரம்

68. அமிர்தகலேஸ்வரர் திருகலயநல்லூர்

69. சற்குனலிங்கேஸ்வரர் திருக்கருக்குடி

70. வாஞ்சிநாதர் திருவாஞ்சியம்

71. மதுவனேஸ்வரர் நன்னிலம்

72. பசுபதீஸ்வரர் திருகொண்டீச்சரம்

73. சௌந்தர்யநாதர் திருப்பனையூர்

74. வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி

75. அக்னீஸ்வரர் திருப்புகலூர்

76. வர்த்தமானேஸ்வரர் திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்

77. இராமணதேஸ்வரர் இராமனதீச்சுரம்

78. திருபயற்றுநாதர் திருபயற்றூர்

79. உத்தராபதீஸ்வரர் திருசெங்கட்டாங்குடி

80. இரத்தினகிரீஸ்வரர் திருமருகல்

81. அயவந்தீஸ்வரர் திருச்சாத்தமங்கை

82. காயாரோகனேஸ்வரர் நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)

83. வெண்ணைலிங்கேஸ்வரர் சிக்கல்

84. கேடிலியப்பர் திருக்கீழ்வேளூர்

85. தேவபுரீஸ்வரர் தேவூர்

86. முக்கோண நாதேஸ்வரர் பள்ளியின் முக்கூடல்

87. வன்மீகி நாதர் திருவாரூர்

88. அறனெறியப்பர் திருவாரூர் அரநெறி

89. தூவாய் நாயனார் ஆரூர் பறவையுன்மண்டளி

90. பதஞ்சலி மனோஹரர் திருவிளமர்

91. கரவீரநாதர் திருக்கரவீரம்

92. பிரியாதநாதர் திருப்பெருவேளுர்

93. ஆடவல்லீஸ்வரர் திருதலையாலங்காடு

94. கோனேஸ்வரர் திருக்குடவாயில்

95. செந்நெறியப்பர் திருச்சேறை

96. பாலசவனநாதர் திருநாலூர் மயானம்

97. சொர்ணபுரீசுவரர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்

98. ஆபத்சகாயேஸ்வரர் திருஇரும்பூளை (ஆலங்குடி)

99. பாதாளேஸ்வரர் திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)

100. சாட்சி நாநர் திருஅவளிவநல்லூர்

101. பரிதியப்பர் திருப்பரிதிநியமம்

102. வெண்ணிக்கரும்பர் திருவெண்ணியூர்

103. புஷ்பவனநாதர் திருப்பூவனூர்

104. சர்ப்ப புரீஸ்வரர் திருப்பாதாளீச்சரம்

105. களர்முலைநாதேஸ்வரர் திருக்களர்

106. பொன்வைத்த நாதேஸ்வரர் திருசிற்றேமம்

107. மந்திர புரீஸ்வரர் திருவுசத்தானம்

108. சற்குனநாதேஸ்வரர் திருஇடும்பாவனம்

109. கற்பகநாதர் திருக்கடிக்குளம்

110. நீணெறிநாதர் திருத்தண்டலை நீணெறி

111. கொழுந்தீசர் திருக்கோட்டூர்

112. வெண்டுறைநாதர் திருவெண்டுறை

113. வில்வவனேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர்

114. ஜகதீஸ்வரர் திருப்பேரெயில்

115. அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு

116. வெள்ளிமலைநாதர் திருதெங்கூர்

117. நெல்லிவனநாதேஸ்வரர் திருநெல்லிக்கா

118. மாணிக்கவண்ணர் திருநாட்டியாத்தான்குடி

119. கண்ணாயிரநாதர் திருக்காறாயில்

120. நடுதறியப்பர் திருகன்றாப்பூர்

121. மனத்துனைநாதர் திருவலிவலம்

122. கைசின நாதேஸ்வரர் திருகைச்சினம்

123. கோளிலிநாதர் திருக்கோளிலி

124. வாய்மூர்நாதர் திருவாய்மூர்

125. மறைக்காட்டு மணாளர் திருமறைக்காடு (வேதாரண்யம்)

126. அகஸ்தீஸ்வரர் அகத்தியான்பள்ளி

127. அமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் 
இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சொக்கநாதர்திருஆலவாய் (மதுரை)
2.ஆப்புடையார்திருஆப்பனுர்
3.பரங்கிரிநாதர்திருப்பரங்குன்றம்
4.ஏடகநாதேஸ்வரர்திருவேடகம்
5.கொடுங்குன்றீசர்திருகொடுங்குன்றம்
6.திருத்தளிநாதர்திருப்புத்துர்
7.பழம்பதிநாதர்திருப்புனவாயில்
8.இராமநாதசுவாமிஇராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
9.ஆடானைநாதர்திருவாடானை
10.காளையப்பர்திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
11.பூவணநாதர்திருப்பூவணம்
12.திருமேனிநாதர்திருச்சுழியல்
13.குறும்பலாநாதர்குற்றாலம்
14.நெல்லையப்பர்திருநெல்வேலி

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சங்கமேஸ்வரர்திருநணா (பவானி)
2.அர்த்தநாரீஸ்வரர்திருச்செங்கோடு
3.பசுபதிநாதர்கருவூர் (கரூர்)
4.திருமுருகநாதசுவாமிதிருமுருகப்பூண்டி
5.கொடுமுடிநாதர்திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6.அவிநாசியப்பர்திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7.விகிர்தநாதேஸ்வரர்வெஞ்சமாக்கூடல்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள
இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.அரத்துறை நாதர்திருநெல்வாயில் அரத்துறை
2.சுடர்கொழுந்தீசர்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3.நெறிகாட்டுநாயகர்திருக்கூடலையாற்றுர்
4.திருநீலகண்டர்திருஎருக்கத்தம்புலியூர்
5.சிவக்கொழுந்தீசர்திருத்திணை நகர்
6.சோபுரநாதர்திருச்சோபுரம்
7.அதிகை வீரட்டநாதர்திருவதிகை
8.திருநாவலேஸ்வரர்திருநாவலூர்
9.பழமலைநாதர்திருமுதுகுன்றம்
10.வெண்ணையப்பர்திருநெல்வெண்ணை
11.வீரட்டேஸ்வரர்திருக்கோவிலூர்
12.அறையணிநாதர்திருஅறையணிநல்லூர்
13.இடையாற்று நாதர்திருவிடையாறு
14.தடுத்து ஆட்கொண்டநாதர்திருவெண்ணைநல்லுர்
15.சிஷ்டகுருநாதர்திருத்துறையூர்
16.வடுகூர்நாதர்வடுகூர்
17.வாமனபுரீஸ்வரர்திருமாணிகுழி
18.பாடலீஸ்வரர்திருப்பாதிரிப்புலியூர்
19.சிவலோக நாதர்திருமுண்டீச்சரம்
20.பனங்காட்டீசர்புறவர் பனங்காட்டூர்
21.அழகிய நாதர்திரு ஆமாத்தூர்
22.அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலை

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.ஏகாம்பரேஸ்வரர்கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2.திருமேற்றளிநாதர்திருக்கச்சி மேற்றளி
3.ஓணகாந்தேஸ்வரர்திருஓணகாந்தான்தளி
4.அநேகதங்கா பதேஸ்வரர்கச்சி அநேகதங்காபதம்
5.காரை திருநாதேஸ்வரர்கச்சிநெறிக் காரைக்காடு
6.வாலீஸ்வரர்திருகுரங்கணில் முட்டம்
7.அடைக்கலம்காத்த நாதர்திருமாகறல்
8.வேதபுரீஸ்வரர்திருவோத்தூர்
9.பனங்காட்டீஸ்வரர்திருப்பனங்காட்டூர்
10.வில்வநாதேஸ்வரர்திருவல்லம்
11.மணிகண்டேஸ்வரர்திருமாற்பேறு
12.ஜலநாதேஸ்வரர்திருஊறல் (தக்கோலம்)
13.தெய்வநாதேஸ்வரர்இலம்பையங்கோட்டூர்
14.திரிபுரநாதர்திருவிற்கோலம்
15.வடாரண்யேஸ்வரர்திருவாலங்காடு
16.வாசீஸ்வரர்திருப்பாசூர்
17.ஊண்றீஸ்வரர்திருவெண்பாக்கம்
18.சிவானந்தேஸ்வரர்திருக்கள்ளில்
19.ஆதிபுரீசர், படம்பக்கநாதர்திருவொற்றியூர் (சென்னை)
20.வலிதாய நாதர்திருவலிதாயம்
21.மாசிலாமனி ஈஸ்வரர்திருமுல்லைவாயில்
22.வேதபுரீசர்திருவேற்காடு
23.கபாலீஸ்வரர்திருமயிலை (சென்னை)
24.மருந்தீஸ்வரர்திருவான்மியூர் (சென்னை)
25.விருந்திட்ட ஈஸ்வரர்திருக்கச்சூர் ஆலக்கோவில்
26.ஞானபுரீஸ்வரர்திருஇடைச்சுரம்
27.வேதகிரீஸ்வரர்திருக்கழுகுன்றம்
28.ஆட்சீஸ்வரர்அச்சிறுபாக்கம்
29.சந்திரசேகர்திருவக்கரை
30.அரசிலிநாதர்திருஅரசிலி
31.மாகாளேஸ்வரர்இரும்பை மாகாளம்    

No comments:

Post a Comment