தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Tuesday, March 30, 2010

சூரியகுல கள்ளர் சொந்தங்களே சர்வதேச கள்ளர் பேரவையின் சார்பாக எமது உளமார்ந்த வணக்கம்.

கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும்,
பழமையைப் போற்றுவதென்பதும்,
கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பரப்புவதென்பதும்
கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்றுப் பெருமை.
பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும்
தன் மூத்தோர், முன்னோர் புகழ் பாடாத கள்ளர் எவரும்
தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.

ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும்.

நம் மக்களை ஒன்று திரட்டுவது மிகவும் சுலபம் (அரசியல்)
ஒன்று பட வைப்பது தான் மிகவும் கடினம் (சமுதாய வளர்ச்சி)

எமது குலம் சூரியகுலம். நாம் திராவிடர் இல்லை.
எமது கோத்திரம் சிவகோத்திரம்
எமது குலதெய்வம் சிவன் மற்றும் பார்வதி
நாம் முதலில் அறிய வேண்டியது நாம் திராவிடர்கள் இல்லை. நேற்றைய அரசியல் வாதிகள் எம்மை திராவிடர்களாக சித்தரித்து, பிற்படுத்தப் பட்ட இனமாகவும் அறிவித்துள்ளார்கள். இப் பாதகமான செயலுக்கு இன்று எம் இனமக்களும் அறியாமையினால் துணை போகின்றனர்.

சூரிய குல வம்சமாகிய நாம் மட்டும் ஏன் எமது குல பெருமைகளையும் பட்டங்களையும் சொல்ல தயங்கி நிற்கின்றோம்? நாம் ஏன் நம்மை திராவிட குலத்தினருடன் இணைந்து அவர்களுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்? அடங்காப்பிடாரி என்ற சொல்லை நீங்கள் அடிக்கடி உபயோகித்திருப்பீர்கள். இச் சொல் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? அடங்க மறுத்தவன் சூரிய குல மா மன்னன் கரிகாலன். அடங்காப்பிரியன் என்ற பட்டம் கொண்ட கரிகாலன் பின் நாளில் அடங்காப்பிரியர் என்று உரு மாறி அடங்காபிடாரியான கதை இது.

மிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே!
கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது. பண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாக இக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும். நமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய ந்ம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.

நாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சபலங்களுக்கு அடிபணியாமை, லட்சியத்தில் உறுதிப்பாடு, உணர்சிவசப்படாமை மற்றும் விவேகத்தோடு செயலாற்றும் திறமை போன்ற பண்புகளை நமது இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்களின் முன்னேற்றம் தான் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமாக வருங்காலத்தில் அமையும். நாம் முன்னேற ஒவ்வொரு இளைஞனும் இடர்பாடுகளை நீக்கி கல்வியிலும், தொழில் தகுதியிலும் முன்னேற வேண்டும்.

கள்ளர் குலம் இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது என்று சிறிது சீர்தூக்கி பாருங்கள். நம் இளைய தலைமுறையினரின் செயல் பாடுகளை பாருங்கள். வேதனையாக இருக்கிறது. பார் ஆண்ட சூரிய குல வம்சம் இன்று எதையுமே தெரியாது என்று சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். ஜாதிகள் இல்லை என்று சொல்லும் திராவிட மானிடர்கள் கூட நாம் திராவிடர் என்ற ஜாதியை சொல்லி தான் செயல் படுகிறார்கள். அரசியல் வாதிகள் திராவிடர் என்ற ஜாதியை சொல்லித் தான் கட்சி நடத்துகிறார்கள்.

ஆங்கில ஆட்சியில் எம் இனம் குற்றப்பரம்பரையாக அறியப்பட காரணம் என்ன? ஆங்கில ஆட்சியில் 58 நாடுகள் அடிமைப் பட்டிருந்த போது, இந்தியாவில், தென் நாட்டில் மட்டும் எம் இன மக்கள் மட்டுமே குற்றபரம்பரையாக அறிவிக்கப் பட்டனர். காரணம் ஆங்கில ஆட்சியினருக்கு தெரிந்தது கள்ளர் குல மக்கள் அடங்க ம்றுக்கும் ஒரு பெருங்குடி சமூகம் என்றும் மிகவும் முன்னேறிய அறிவு படைத்த சமூகம் என்றும் இந்த சமூகத்தை அடக்காவிட்டால் ஆங்கில ஆட்சி நிலைக்காது என அறிந்து எம் குலத்தை குற்றப்பரம்பரையாக அறிவித்தனர்.

அது நாளடைவில் விரிவடைந்து முக்குலத்தோரையும் பாதித்தது

ஆங்கில ஆட்சியினர் எம் குல மக்கள் மிகவும் முன்ணேறிய வம்சத்தினர் என அறிய உதவியது எவை?

1. செங்குருதி சிந்த தயங்காத வீர மிகு வம்சம்
2. திட்டமிட்டு செயலாற்றும் திறமை
3. வேகமும் விவேகமும் கலந்த உறுதியான உழைப்பு
4. சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சித்திறமை.
5. 2000 க்கும் மேற்பட்ட பட்டங்களை உலகத்தில் உடைய ஒரே இனம்.
6. கரிகாலன் கட்டிய கல்லணை மற்றும் விவசாய தொழில் நுட்பம்
7. ராஜராஜ சோழனின் பெரிய கோவில் கட்டிட கலை நுட்பம்.
8. மனு நீதி சோழனின் நீதி தவறாமை

நமது சமூகத்தில் இயலாமையும் ஒற்றுமையின்மையும் தான் கோபத்தின் விதை மற்றும் பிரச்சனைகளின் பிறப்பிடம். வேண்டாதவற்றை ஜெயிப்பதற்காக வாழ்க்கையை முழுமையாக தொலைத்தவர்கள் நம்மில் எத்தனை? எதை ஜெயிக்க எதை எல்லாம் நாம் இழந்தோம் ? சிறிது சிந்தனை செய்யுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கு பயன் படாமல் ஜெயிப்பதற்கு மட்டுமே என்று நாம் நினைத்தால் அந்த வெற்றி தோல்வியில் தான் முடியும். எதை ஜெயித்தோம் நாம்? தேவையற்ற வெற்றிக்காக தேவையான எத்தனை உறவுகளை இழந்தோம் ?

ஒரு சமுதாயத்தில் தனி மனிதனின் வளர்ச்சிஅந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்று கூற முடியாது. ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு வளர்ச்சியை நிச்சயம் தரும். இந்த ஒரு லட்சிய நோக்கை பெரிதாகக்கொண்டு நாம் செயல் பட வேண்டும்.

சர்வதேசகள்ளர் பேரவை எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராமல் நமது மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் ஒரு சமுதாய அமைப்பு. கடல் கடந்து உலகெங்கும் வாழும் எம்மக்களை இணைக்கும் ஒரு பேரியக்கம். இயக்கத்தின் பெயரும் கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதை. இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

இளைய கள்ளர் குல சந்ததியினர் முன்னேற பாடுபடுவோம். வளர்வோம்.

எமது வளர்ச்சிப்பயனம்.

2006 ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் நாள் குழந்தையாக எம் பேரவை பிறந்தபோது ஆனந்தம் அடைந்தோம். அன்றே சர்வதேச கள்ளர் பேரவை என்ற பெயரும் இட்டு அங்கீகாரம் வேண்டி ஜக்கிய சாம்ராஜிய உள் துறை அமைச்சகத்திடம் மனுவும் அளித்தோம்.

மூன்று வருட இடைவிடா முயற்சிமூலம் 1/08/2009 அன்று உலக ரீதியாக செயல்பட இங்கிலாந்து உள் துறை அமைச்சகத்தில் அங்கீகாரமும் அனுமதியும் எங்களை அடைந்தபோது சின்னச் சின்னஅடிகள் வைத்து நடை பயின்றோம்.

ஆகஸ்ட் மாதம் 3ம் நாள் (ஆடிப்பெருக்குத் தினம்) 12 நாட்டுகளில் இருந்து பங்குபெற்ற 41 கள்ளர் குல சொந்தங்கள் சூழ இலண்டன் மாநகரில் எமது சர்வதேச கள்ளர் பேரவை அதிகார பூர்வமாக துவக்கம் பெற்றது.

நடை பயின்ற குழந்தை எம் எண்ணங்களை செழுமை படுத்தி, சேவை என்ற வரம் பெற்றபோது உற்சாகமானோம். இது எமது அன்பான, நம்பிக்கையான நட்பான ஆரம்ப பயணத்தின் பாக்கியம்.

கடிதம், மின் அஞ்ஞல், தொலைபேசி, எஸ்.எம்.எஸ் என்று பலவழிகளில், சந்தோசம், பெருமை, நன்றி, நெகிழ்வு என பலவும் கலந்து பல மாதங்களாக உங்களிடமிருந்து அன்பு வாழ்த்துகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இனிதே தொடர்கிறது எமது தொய்வில்லாப் பயணம்.

இன்று 27 நாடுகளில் கிளைகளுடன் வளர்ந்துள்ளோம்.

இக் குறுகியக்கால இடைவெளியில் சர்வதேச கள்ளர் பேரவை மூலமாக 202 வேலை வாய்புகளை கடந்த மாதம் எம் இன மக்களுக்கு வளை குடா நாடுகளில் வழங்கியுள்ளோம்.

மேலும் 19 இலங்கை வாழ் கள்ளர் குல மாணவ மாணவியற்கு 6 லட்ச ரூபாய் படிப்புக்காக நிதி உதவியும் வழங்கியுள்ளோம்.

கள்ளர் இன பட்டங்கள் 1935 சேகரிக்கப்பட்டு எமது இணையதளங்களில் வெளியிட்டுள்ளோம்.

கள்ளர் இன அரச பரம்பரைகளின் பட்டியல்கள் கண்டு பிடிக்கப்பட்டு 13 அரச பரம்பரைகளின் ஏடுகள் ஆராயப்பட்டு அவற்றில் சில இனையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.

ந.மு வேங்கடசாமி நாட்டார் ஐயாவின் கள்ளர் சரித்திரம் என்ற புத்தகம் எமது இனைய தளத்தில் இன்று ஏற்றம் பெற்றுள்ளது.

கூடிய விரைவில் இராஜாளியார் பற்றிய புத்தகமும் இணைய தளத்தில் இடம் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கவிஞ்ஞர் வேணுகோபால் அவர்களின் சோழ மண்டல பாடல்கள் சி டி யாக மாற்றம் பெற்று எமது இணைய தளத்திலும் கடல் கடந்து வாழும் எம் குல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கள்ளரின் காலச்சுவடுகள் என்ற தலைப்பில் சுமார் 500 பக்கங்களுடன் எமது முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் சமூக பணிகள் பற்றிய புத்தகம் ஒன்றிணையும் எமது 1வருட பூர்த்தி தினமான 3ஆகஸ்ட் 2010 அன்று வெளியிட உள்ளோம். இதற்கு உங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச கள்ளர் பேரவை மறைந்து கிடக்கும் நம் குல பண்பாடுகளையும், வரலாற்றுச்சுவடுகளையும் மலர வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

முதல் கட்டமாக மூன்று தலைப்புகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பட்டதாரி மாணவ மாணவியர்களை தேர்வு செய்து ஆராய்ச்சிக்கான நிதி உதவிகள் வழங்கப்படும.

நமது ஆராய்ச்சி தலைபுகள்

1. மா மன்னன் ராஜ ராஜன் தோற்றம், மறைவு, சாதனைகள், வாழ்க்கை வரலாறு,மரபணு, கட்டிய கோவில்கள் மற்றும் சரித்திர சான்றுகள்.

2. கள்ளர் குல பட்டங்கள் மற்றும் அப்பட்டங்களுக்கான காரணங்களும் சான்றுகளும்.

3. கள்ளர் குல சிற்றசர்களும், ஆண்ட நாடுகள், ஊர்கள், வாரிசுகள் வரலாற்று சாதனைகள் மற்றும் சான்றுகள்.

இம் முயற்சிகளுக்கு கள்ளர் குல சான்றோர், ஆராய்ச்சி வல்லுனர்கள், சரித்திர ஆராய்ச்சியாளர், ஆய்வாளர்கள் மூலம் உதவிகள் தேவை.

2010 மார்ச் மாதம் 21ம் தேதி தஞ்சை மாநகரில் கூடிய ராஜ ராஜன் கல்வி பண்பாட்டுக் கழக விழாவில் திருமண மண்டபம் கட்டும் பணிக்காக சர்வதேச கள்ளர் பேரவை Rs15 லட்சம் ராஜ ராஜன் கல்வி பண்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த வருடம் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற நம் இன மாணவி  தன் தந்தையை இழந்த நிலையில் மேலும் படிப்பைத் தொடர முடியாத நிலை அறிந்து சர்வதேச கள்ளர் பேரவை இக் கல்வி ஆண்டு முதல் இம் மாணவியின் பட்ட படிப்பு முடியும் வரை ஏற்படும் அனைத்து செலவினங்களையும் ஏற்றுள்ளது.

கள்ளர் குல அரச பரம்பரை

01. சோழர்

02. பழுவேட்டரையர்

03. மலையமான்

04. வல்லவராயர்

04. கண்டியர்

05. முனியரையர்

06. புவிராயர்

07. சேதிராயர்

08. வனடராயர்

09. நிலக்கிழார்

10. தொண்டைமான்

11. கலியராயர்

12. வேலர்

13. காடவராயர்

14. சம்புவராயர்

15. மழவராயர்

இவர்களிடம் நம் இளைய தலைமுறையினர் அறியவேண்டிய கற்றுக்கொள்ள வேண்டிய நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அள்ளிக்கொள்ளுங்கள் நீங்களும் நாளைய வரலாற்றில் சரித்திரம் படைக்க உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள்

நம் சமுதாய முன்னேற்றம் உங்கள் கையில். கைகோர்த்து வாருங்கள் காலச்சுவடுகளாக மாற்றம் பெறுங்கள். நம் சமுதாயம் வளர சாதனைகள் பல படைத்திடுவோம்.

கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அரியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாறும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம்
கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம். வாருங்கள்

உங்கள் இதயங்களில், இதழ்களில், உறவினர்களிடம் எங்களை அறிமுகம் செய்யுங்கள், உங்களை நாங்கள் உலகிற்கே அறிமுகம் செய்கிறோம்.

No comments:

Post a Comment