தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Friday, May 14, 2010

சர்வதேச கள்ளர் பேரவையின் நிருவனதலைவரும் பொதுச் செயலாளருமான ஜெயராம் கண்டியர் கிருபாகரன் தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக சுற்றுப் பயணம் மேற் கொண்டு தஞ்சை, திருச்சி, கோவை, மதுரை, திருவாரூர், சென்னை, மன்னார்குடி மற்றும் ஒரத்தநாடு முதலிய இடங்களில் கள்ளர் குல உறவினர்களை சந்தித்து பல கள்ளர் சம்பந்தப்பட்ட செய்திகளையும் திரட்டியுள்ளார். அவை யாவும் உங்களின் பார்வைக்கு சமர்ப்பணம்.

செந்தமிழ்ப் புலவன் மா மனிதன் இராஜாளியார் சிலை திறப்பு விழா.
காலத்தால் அழியாத செயற்கரிய செயல்களை செய்தவர்கள் எத்தனையோ இன்னல்களையும் இடையூறுகளையும் களைந்து வரும்காலத் தலைமுறையினருக்கு வழி காட்டியுள்ளார்கள். ஈன்ற மண்ணையும், இனத்தையும், குலத்தையும் இமயத்தில் உயர்த்தி, சீர்மிகு சிந்தனையால் தொல்காப்பியனுக்கு சிலை அமைத்து வாழ்ந்தும், மறைந்தும், நினைவில் வாழும் கொடை வள்ளல் மற்றும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கள்ளர் குல வரலாற்றுக்கு மீண்டும் முகவரி கொடுத்த அறவானர் மாண்பு மிகு ரகுநாத ராஜாளியார் அவர்களுக்கு எழுப்பப்படும் இச் சிலை வழிபாட்டிற்கு உரியது. குல வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்ட மா மனிதனை வணங்குவோம், வளர்வோம்.

மா மனிதன் ராஜாளியாரின் வாழ்கையை படித்தோம். அது எதார்த்தத்தையும் தாண்டிய சாமர்த்தியம் என்பதனையும் அறிந்தோம். அவர் செய்தது, செய்து முடித்தது அனைத்தும் நன்றே! அதனை ஏற்று நடப்பது அதனினும் நன்றே.




































தேவாரதில் அரதைப் பெரும்பாழி, செப்பேட்டில் அதிவீரராகவமங்கலம், தலபுராணதில் சமீவனம் என்றும் இன்று அரித்துவாரமங்கலம். சான்றோன், பெரும் புலவன், கொடைவள்ளல், கோவேந்தன் கோபால் சாமி ரகுநாத இராஜாளியாரை ஈன்ற பெருமை இம்மண்ணுக்கு உண்டு.




































நூறாண்டுகளுக்கு முன்பே நம்குல மேம்பாட்டுக்காக இந்திரகுலாதிபர் சங்கத்தைத் தோற்றுவித்தவரும், குன்னூரில் தொல்காப்பியப் புலவனுக்கு சிலையை நிறுவியருமான மா மனிதர் அரதைப் பெரும்பாழி ரகுநாத இராஜாளியார் சிலை திறப்பு விழா 24/04/2010 சிறப்பாக நடந்தேறியது. பேராசிரியர் விருத்தாசல நாட்டார் அவர்கள் சங்க இலக்கியங்களில் சான்றாண்மை என்ற தலைப்பில் இராஜாளியாரின் சான்றாண்மையை நினைவூட்டி இலக்கிய உரையாற்றினார்.





































32 ஆண்டுகளுக்கு மேலாக சிலை திறப்பை மெற்கொண்டு படாத பாடு பட்ட இராஜாளியாரின் பேரன் திரு கோபால் சாமி ரகுநாத இராஜாளியார் அவர்களுக்கு நம் குலம் மிகவும் கடமைப் பட்டுள்ளது.



















இராசராசன் கல்விப் பன்பாட்டு கழகம், சர்வதேச கள்ளர் பேரவை மற்றும் தமிழ்நாடு கள்ளர் பேரவை சார்பில் கணேசத்தேவர், சோமசுந்தரத்தேவர், பழனியப்ப சோழகர், மணிமொழியன் விசுவராயர், சந்திரமோகன் விஞ்சிராயர் ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தி விழாவை சிற்ப்பித்தனர்.

ஊர்ப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி நாதஸ்வர இன்னிசையுடன் மக்களின் பெரும் கையொலிக்கிடையே திருவாளர் துளசிஅய்யா வாண்டையார் அவர்கள் மா மனிதர் இராஜாளியாரின் சிலையை திறந்து வைத்து மலர் மாலை சூட்டினார்கள்




















சர்வதேச கள்ளர் பேரவை தலைவருக்கு மாலை அணிவிக்கும் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள்







பொன்னாடை அணிவித்து மகிழும் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள்





பொன்னாடை அணிவித்து மகிழும் மாநில தலைவர் திரு கணேசத்தேவர் அவர்கள்



பொன்னாடை அணிவித்து மகிழும் பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயர் அவர்கள்



பொன்னாடை அணிவிக்கும் தமிழ்நாடு கள்ளர் பேரவை தலைவரும் கள்ளர் இன முழக்கம் பத்திரிக்கை ஆசிரியருமான திரு நாகூர் சோமசுந்தரத் தேவர் அவர்கள்



















பொன்னாடை அணிவிக்கும்  திருச்சி புறநகர் மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழக தலைவர் திரு மனேகரன் ஏற்றாண்டார்



















பொன்னாடை அணிவித்து மகிழும் திரு ராதாகிருஷ்னன்



















தஞ்சை மாவட்ட  இராசராசன் கல்வி பண்பாட்டு கழக மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் கண்டியர்



















மதுரை மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக செயலாளர் திரு அருனகிரி ஓந்திரியர் அவர்களுக்கு மாலை அணிவித்து மகிழும் கண்டியர்




















கோவை  மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் கண்டியர்



















கோவை மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக இளைஞர்களுடன் கலந்துரையாடல்



































மாமன்னன் இராசராசன்  நினைவிடத்தில் அஞ்சலி



















அரித்துவாராமங்கல கோபால்சாமி ரகுநாத ராசாளியாரின் நினைவிடத்தில் அஞ்சலி


















அரித்துவாராமங்கல கோபால்சாமி ரகுநாத ராசாளியாரின் வெண்கலச்சிலை முன்பு அஞ்சலி



































தஞ்சை பெரியகோவில் முன் வல்லுண்டார் மற்றும் மழவராயருடன் கண்டியர்



































தஞ்சை பெரியகோவில் முன் கருப்பூண்டார் மற்றும் வல்லுண்டாருடன் கண்டியர்




































புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயிலில் பரிவட்டம் கட்டி மரியதையை ஏற்றுக்கொள்ளும் கண்டியருடன் திரு அருணாச்சலம் வில்லவராயர்.


















கோவையில் இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழக மாநில பொதுச் செயலாளர் திரு ரெங்கராஜ் தொண்டமான் மற்றும் கோவை மண்டல செயலாளர் மதியழகன் ஆருசுத்தியாருடன் கண்டியர்.


















கோவையில் திரு ஜெயராமன் கொங்குதரையர் சிறப்புரையாற்றுதல்                                                                               



















கோவையில் கூடியிருந்த பெருந்திரலான உறவினர்களில் சிலர்                                                                                     



















கோவையில் கூடியிருந்த பெருந்திரலான உறவினர்களில் சிலர்



















கோவையில் கூடியிருந்த பெருந்திரலான உறவினர்களில் சிலர்
                                                                             


















தமிழகத்தில் 10ம் வகுப்பில் முதன்மையிடம் பெற்ற நம் குல மாணவி செல்வி விணோதினி சுந்தரம் (மன்னார்குடி) சர்வதேச கள்ளர் பேரவையின் சார்பில் பொன்னாடை அணியப் பெற்று இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழக பரிசான 5000 ருபாயை கண்டியரிடமிருந்து பெருகிறார்.
இவரின் பட்டப் படிப்பு முடியும் வரை கல்விக்கான நிதியை சர்வதேச கள்ளர் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது



















சம்பந்தமூர்தி மழவராயர் வீட்டில் விருந்தோம்பல்



















பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயர் வீட்டில் விருந்தோம்பல்











                                               








பேராசிரியர் சந்திரமோகனுடன் கணேசன் கருப்பூண்டார், சோமசுந்தர தேவர், கண்டியர், கோபூ வல்லுண்டார் மற்றும் மதன்மோகன் விஞ்சிராயர்
                                                                                                                                                                  




தஞ்சை பொதுக் கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் வித்வான் திரு சாமி அய்யா நாட்டாரின் சிறப்புரை




















திரு தங்கவேல் கோபாலர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுக்கு சால்வையணிவித்து மகிழும் காட்சி



















திரு சோமசுந்தரதேவர் மலர் கொத்து அளித்து வரவேற்க்கும் காட்சி




















கவிஞர் வெற்றிவேலன் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரனுக்கு தன் படைப்பு நூல்களை பரிசளித்தல்

















































சென்னை வரவேற்புக் கூட்டத்திற்கு வருகை தந்த உறவினர்கள் சிலர்


















கிருஸ்னசாமி வாண்டையார், ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் மற்றும் மணிமொழியன் விசுவராயர்.


















மன்னார்குடி மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக விழாவில் கண்டியரின் பங்கேற்பு.


















மன்னார்குடி மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக விழாவில் கண்டியரின் பங்கேற்பு.



மன்னார்குடி மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக விழாவில் மணிமொழியன் விசுவராயர் உரையாற்றுகிறார்


















மன்னார்குடி மாவட்ட இராசராசன் கல்வி பண்பாட்டு கழக விழாவில் உரையாற்றும் மதியழகன் ஆருசுத்தியார்



















விழாவில் உரையாற்றும் திரு கோவிந்தராஜ் ராஜாளியார்


















விழாவில் சிறப்புரையாற்றும் ஜெயராம் இராசகண்டியன்


















விழாவில் நினைவு பரிசு பெரும் மாநில இராசராசன் கல்வி பண்பாட்டு கழக தலைவர் திரு கணேசத்தேவர்


















விழாவில் நினைவு பரிசு பெரும் திரு கோவிந்தராஜ் ராஜாளியார்


















ஜெயராம் இராசகண்டியனுக்கு மாநில இராசராசன் கல்வி பண்பாட்டு கழக தலைவர் திரு கணேசத்தேவர் சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி




















சர்வதேச கள்ளர் பேரவை நிருவனர் மற்றும் பொதுச்செயளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி



















சர்வதேச கள்ளர் பேரவை நிருவனர் மற்றும் பொதுச்செயளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயருக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி




















மாநில இராசராசன் கல்வி பண்பாட்டு கழக தலைவர் திரு கணேசத்தேவர் திரு மணிமொழியன் விசுவராயருக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி



















சர்வதேச கள்ளர் பேரவை நிருவனர் மற்றும் பொதுச்செயளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி




















மாநில இராசராசன் கல்வி பண்பாட்டு கழக தலைவர் திரு கணேசத்தேவர்  மதியழகன் ஆருசுத்தியாருக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி





















திரு கணேசத்தேவர் திரு முருகேசன் கண்டியருக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி




















திரு கணேசத்தேவர் திரு வேனுகோபால் மாதுரார் அவர்களுக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி




















சர்வதேச கள்ளர் பேரவை நிருவனர் மற்றும் பொதுச்செயளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் மன்னார்குடி மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிபெண்களைப் பெற்ற மாணவிக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி



















சர்வதேச கள்ளர் பேரவை நிருவனர் மற்றும் பொதுச்செயளாளர் ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன் மன்னார்குடி மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிபெண்களைப் பெற்ற மாணவிக்கு சால்வையணிவித்து நினைவு பரிசு வழங்கும் காட்சி

சோழர்சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள், உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள் மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழர் குலம்
கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.

கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முற்பட்டசோழர்
1. சிபி சோழச் சக்கரவர்த்தி
சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளான். இவனது வரலாறு மகா பாரதம், இராமாயணம் முதலிய காப்பியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவன். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
புறநானூறு
சிலப்பதிகாரம்
கலிங்கத்துப்பரணி
மூவருலா
பெரியபுராணம்

2. முசுகுந்த சோழன்
கருவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னன். சிறந்த சிவ பக்தன். இந்திரன் என்னும் பேரரசனுக்கு போரில் உதவி செய்து இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்களை பெற்று அவற்றைத் திருவாரூர் (வீதிவிடங்கத்தியார்), திருநாகைக் காரோணம் (சுந்தரவிடங்கத்தியார்), திருக்காறாயில்(ஆதிவிடங்கத்தியார்), திருக்கோளிலி(அவனிவிடங்கத்தியார்), திருமறைக்காடு (புவனிவிடங்கத்தியார்), திருநள்ளாறு (நகவிடங்கத்தியார்), திருவாய்மூர் (நீலவிடங்கத்தியார்) ஆகிய ஏழு திருப்பதிகளிளும் எழுந்தருளச் செய்தான். வெள்ளிடைமன்றம்(திருட்டு வெளியாக்கும்), இலைஞ்சிமன்றம் (கூன், குறள், ஊமை, செவிடு, பெருவியாதி போக்கும்), நெடுங்கல்மன்றம்
(நஞ்சருந்தல், பாம்பு கடித்தல், பேய் பிடித்தல் நீக்கும்), பூதசதுக்கம் (பொய்த்தவஞ் செய்வோர், பிறர் மனை நயப்போர், பொய்யுரைப்போர், புறங்கூறுவோர், தண்டனை அடையவும்), பாவைமன்றம் (அரசன் நீதிதவறினாலும், அரசனுக்கு தீங்குநேரிடுவதாயிருந்தாலும் பாவை நின்றலும்) என்னும் ஐவகை மன்றங்களையும் புகார் பட்டினத்தில் தாபித்தவன். முசுரி என்னும் ஊரையும் உருவாக்கி பூம்புகார் பட்டினத்தை நன்னிலை படுத்தி காவிரிப்பூம் பட்டினம் மேனாடுகளுடன் வாணிபம் சிறக்க உதவினான். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கலிங்கத்துப்பரணி
கந்தபுராணம்
ஒரு துறை கோவை

3. காந்தன்
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்ட சோழ மன்னன். அகத்திய முனிவரிடம் பேரன்புடையவன். அவர் அருளால் காவிரி தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான். (காந்தன் காவிரி கொணர்ந்தான்) என்று மணிமேகலையில் ஒரு குறிப்புண்டு.

4. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
இம் மன்னன் ஒரு சிறந்த வீரன். அகத்திய முனிவரது கோரிக்கையை ஏற்று காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன்.இவன் அழித்த அரண்கள் மூன்று என சிலப்பதிகாரம் செப்புகிறது. பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன் என்பதால் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என பெயர் பெற்றான். இவனது சிறப்புக்களை புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப் பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் கூறுகின்றன.

கி.மு. 3ம் நூற்றாண்டுச் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் - கி.மு. 290 - 270
இளநகரை தலைநகராகக்கொண்டவன். பகைவருடைய வீரக்கழலையும், யானையின் துதிக்கையையும் எறிந்த காரணத்தினாலும் காவல் மிகுந்த வடுகரின் போர்ப்படை தங்கியிருந்த பாழி என்ற நகரை மீட்டதினாலும், கோசர், வடுகர், மற்றும் மோரியர் ஒன்று சேர்ந்த பெரும் போர்ப்படைகளை வென்றதனாலும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என பெயர் பெற்றான். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை பற்றி புறநானூற்றில் குறிப்பிடுள்ளார். (பாடல் 370 மற்றும் 378)

கி.மு. 2ம் நூற்றாண்டுச் சோழர்
1. மநுநீதிச் சோழன்
மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன்.
ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எழ்ளாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எழ்ளாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏழாரன் என்று இருக்கக்கூடும்.

2. முதற் கரிகாலன்
முதற் கரிகாலன் கி.மு 120 - கி.மு. 90
இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன். அழுந்தூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். பின்னர் குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். இவன் பதினொரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தர்களையும் வெண்ணி வாயில் என்ற இடத்தில்
வென்றான். பின் ஒரு கால கட்டத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் ஒன்பது அரசர்களை வென்று புறங்காட்டி ஓட வைத்தான். திதியன் என்பான் இவனது படைத்தலைவனாவான். சேரன் பெருஞ்சேரலாதன் இவனுடன் வெண்ணிப் பறந்தலையிற் போர் செய்து, கரிகாலன் எய்த அம்பில் மார்பில் துளையிட்டு ஊடுருவி முதுகினின்றும் வெளியேறியது. முதுகில் காயம் பட்டமையால் வெட்கம் தாங்கமல் சேரன் பெருஞ்சேரலாதன் கையில் பிடித்த வாளுடன் வடக்கிருந்து பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்
இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)
இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் எனும் பெயர்களையும் பெற்றவன். இளஞ்செட்சென்னிக்கும் அழுந்தூர்வேள் பெருமாட்டிக்கும் பிறந்த மகனாவான். இளஞ்செட்சென்னி முடிபுனைந்து அரசாண்டவன் இல்லை. அரசனுக்கு இளையவன். கரிகாற் பெருவளத்தான் பல கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருந்தான். இவனது பெரிய தந்தையாகிய அரசனும், இவன் தந்தையும் அடுத்தடுத்து இறக்கவே நாட்டில் குழப்பம் ஏற்பட்டு திருமாவளவன் உறையூரினின்று வெளியேறி பல இடங்களில் அலைந்து திரிந்தான். அக்கால மரபுப் படி பட்டத்து யானை பல இடங்களிலும் அலைந்து திரிந்து கருவூரில் இருந்த திருமாவளவனை தேர்வு செய்து தன் மீது ஏற்றிக்கொண்டு உறையூரை அடைந்தது. திருமாவளவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். கயவர்கள் சிலர் இவன் மீது புகார் கூறி சிறையில் அடைத்து சிறைக்கு தீயும் இட்டனர். சிறையில் இருந்து தப்பி தன் தாய் மாமன் உதவியுடன் பகைவரை வென்று மீண்டும் அரியணை அமர்ந்தான். கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.  சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

வெண்ணிப்போர்
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்
பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம், இறப்பு
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார். பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.


கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்
1. நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, மாவளத்தான்
2. கிள்ளிவளவன்
3. பெருநற்கிள்ளி
4. கோப் பெருஞ்சோழன்

நெடுங்கிள்ளி.
முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

நலங்கிள்ளி
நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)


கிள்ளிவளவன்
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன


பெருநற்கிள்ளி.
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. (புறம். 367)
பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.

கோப்பெருஞ்சோழன்.
உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

கோச்செங்கண்ணன்.
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்
1. நெடுமுடிக்கிள்ளி
2. இளங்கிள்ளி முதலியோர்.

வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்

மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848

இடைக்காலச் சோழர்கள்
VIJAYALAYA CHOLESWARAM
NARTHAMALAI - PUDUKKOTTAI

















பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.


















திருப்புறம்பயம்
தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.




















இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன்(பாண்டிய மன்னன்) காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870 யிலிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான்


ஆதித்த சோழன் 871-907
Nageswaran Temple - Kumbakonam. Built By Aditya Cholan
























ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள்
பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு
சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

முதலாம் பராந்தக சோழன் கி.பி. 907-950

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்
தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்
கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம்
முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர் மற்றும் பிரதிவீபதியின் மரணம்
சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.
இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.

கண்டராதித்தர் கி.பி. 949/50-957
இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.

இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.

சுந்தர சோழன் கி.பி. 956-973
DHENUPUREESWARAR TEMPLE AT MADAMBAKKAM
BUILT BY SUNDARA CHOLAN


















இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும்
ஆவான். தனது முன்னோர்


















காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.

கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.

சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.

சுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.

ஆதித்த கரிகாலன் கி.பி. 957-969
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த [[வீரபாண்டியன்
வீரபாண்டியனுடன்] போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன் கொலை
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு [[இராஜராஜ சோழன்
இராஜராஜ சோழனுடையது] என்பது தெளிவாகிறது.
உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய [[உத்தம சோழன்
சிற்றப்பன்] அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.என்று தெரிவிக்கின்றன.

இரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை
இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது."

பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை தெரிவித்ததின் முடிவுகள்.
மன்னர் காலம்
இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.

பரந்தூர்க் கல்வெட்டு
பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.
அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே, பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15 ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969 உத்தம சோழன் அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 695ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

உத்தம சோழன் கி.பி. 970-985
உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.

.முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985-1014

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

புகழ் பெற்ற இளவரசன்
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை
இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்து இறந்தான்.

உத்தம சோழனுக்கு இக்கொலையில் சம்மந்தம் இல்லையென்று சொல்லவதற்கில்லை, உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதிவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதிதான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,

அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.
சோழர்களின் மெய்க் கீர்த்திகள்
பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவனுக்குப் பிறகு இவன் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவன் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள்
சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

இரண்டாம் வகையான மெய்க் கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

போர்கள்
கேரளப் போர்
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மலைநாடு
கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.
ஈழப் போர்

ஈழம்
இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஈழப் படையெடுப்பின் விளைவுகள்
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

ஈழத்தில் சோழக் கோயில்கள்



















இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

பிற வெற்றிகள்
மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலைச் சாளுக்கியர்
மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான்.(சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி கி.பி 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)

சத்யாசிரயனுடன் போர்
922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.

இராஜேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.
பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள்
சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

வேங்கி
இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரூம் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்ற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.
மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.

வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.

வேங்கிப் போர்
கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.

கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.

இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இராண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.

பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.

ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.

வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.
1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

மாலத் தீவுகளைக் கைப்பற்றல்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவு.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்









































இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.


இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்
இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.

நிர்வாகம்
நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராஜேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.
சமயக் கொள்கை
ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜன் இந்தியாவின் பெரும் இராஜதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்ட்டன் பட்டயங்கள் கூறுகிறது.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.
இராசரானின் சிறப்புப்பட்டங்கள்.
01. இராசகண்டியன்
02. இராசசர்வக்ஞன்
03. இராசராசன்
04. இராசகேசரிவர்மன்
05. இராசாச்ரயன்
06. இராசமார்த்தாண்டன்
07. இராசேந்திரசிம்மன்
08. இராசவிநோதன்
09. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

குடும்பம்
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலுக், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள்.

மாமன்னன் இராசரானின் மனைவியர்
1. ஒலோக மகாதேவி - (தந்திசக்தி விடாங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி - பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி - இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி

இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்
இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.

மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.

கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.


கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் அந்தச் சிலை தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. அந்தச் சிலையை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும்

கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்குச் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 

ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு கூடிய ஒரு நினைவகம் கட்ட வேண்டும.

சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில
அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரியக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை

தஞ்சாவூரின் பெயர் காரணங்கள் பல சொல்லப்படுகின்றன
1. தண்செய் என்பது தஞ்சை என மருவி தஞ்சாவூர் ஆயிற்று என்றும்

2. பஞ்சம் போக்க மக்கள் தஞ்சம் புகுந்த ஊர் தஞ்சஊர், தஞ்சாவூர் ஆயிற்று
    என்றும்

3. தஞ்சாறை என்ற ஊரின் பழைய பெயர் மருவி தஞ்சாவூர் ஆயிற்று என்றும்

4. தண்சாய் கோரை புல் அதிகம் வளர்ந்த இடமாகியபடியால் தஞ்சாவூர்
   ஆயிற்று என்றும்

5. பிற்கால சோழர்கள் ஆவூரிலிருந்து தஞ்சைக்கு குடிபெயர்ந்ததையடுத்து
   தஞ்சாவூர் ஆயிற்று என்றும்

6. தஞ்சாசுரன் என்னும் அரசன் ஆண்டபடியால் தஞ்சாவூர் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும்  சொல்லப்படுகிறது.

இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள்
1. கிழக்கு எல்லை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
2. மேற்கு எல்லை - வல்லம் களிமேடு
3. வடக்கு எல்லை - விண்ணாறு (வெண்ணாறு)
4. தெற்கு எல்லை - நாஞ்சிக்கோட்டை தெரு

தஞ்சாவூர் அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன. 

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்
இராசராசசோழன்

வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட
கலைஞன்

மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட
கலைஞன் )

இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்

இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை
கட்டிட கலைஞன் )

ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு

இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்

இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்

சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )

தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன்
சூரியனார் ( கோயில் நிர்வாக அதிகாரி)

பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)

தஞ்சாவூரை ஆண்ட மன்னர்கள்
1. பல்லவர் - கி.பி 6ம் நூற்றாண்டிலும்
2. முத்தரையர் - கி.பி 7ம் 8ம் நூற்றாண்டிலும்
3. சோழர்கள் - கி.பி. 846 முதல் கி.பி 1219 வரையிலும்
4. பாண்டியர்கள்
5. போசளர்
6. விஜயநகர அரசர்கள். -
7. நாயக்கர்கள். - கி.பி 1532 முதல் 1675 வரையிலும்
8. மாராட்டியர்கள். - கி.பி 1676 முதல் கி.பி 1855 வரையிலும்

தஞ்சாவூரின் சோழர் கால மறுபெயர்கள்
தஞ்சாபுரி
குபேரபுரி
விஜயபுரி
அழகாபுரி

தமிழ் நாட்டில் தஞ்சாவூர் எனும் பெயரில் நான்கு ஊர்கள் உள்ளன
1. தஞ்சாவூர் மாவட்ட தலைநகர்

2. மன்னார் குடி வட்டத்திலுள்ள தஞ்சாவூர்

3. பெரியார் மாவட்ட சத்தியமங்கலம் வட்டத்திலுள்ள தஞ்சாவூர்

4. பாண்டிய மன்னனின் அமைச்சர் சந்திரவாணனின் தஞ்சாவூர்.

சோழ மன்னர்களின் மண உறவுகள்
விசயாலய சோழன் மனைவி வலங்கைமான் ஆவூருக்கு அருகில் உள்ள
ஊத்துக்காடு என்னும் ஊரில் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர்

விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்தசோழன் வல்லவராயர்
குடும்பத்தில் பிறந்த இளங்கோப்பிச்சியை மணந்தான்

முதலாம் ஆதித்தசோழன் மகன் கன்னரதேவன் கொடும்புரார் புதல்வி
பூதிமாதேவி அடிகளை மணந்தான்

முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகளை மணம் புரிந்தான்

கண்டராதித்த சோழன் மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவி
என்பவரை மணந்தான்

அரிஞ்சய சோழன் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய கல்யாணி
என்பவளையும், கொடும்புரார் புதல்வி பூதி ஆதித்த பிடாரி என்பவளையும்
மணந்தான்.
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மலையமான் ( சேதிராயர்) வம்ச
வானவன்மாதேவியை மணம் புரிந்தான்

உத்தம சோழன் மழபாடியார் (மழுவாடியார்) வம்ச மழபாடித் தென்னவன்
மாதேவியையும், இருங்களார் குடும்பத்தில் பிறந்த இருங்கோளர் மகள்
வானவன் மாதேவியையும், விழுப்பரையர் குடும்பத்தில் பிறந்த கிழானடிகள்  என்பவளையும் மணந்திருந்தான்

இராசராசசோழனின் தாய் திருக்கோவிலூர் மன்னன்      மலையமான்(சேதிராயர்) மகளான செம்பியன் மாதேவியாவார்

மாமன்னன் முதல் இராசராச சோழன் பழுவேட்டரையர் மகள் பஞ்சவன்
மாதேவியை மணந்தான்

மாமன்னன் முதல் இராசராச சோழனின் தமக்கை முதலாம் குந்தவை
வல்லவரையன் வந்தியதேவனை மணந்தாள்

சோழரும் சிவன் கோயில்களும்
சிவ நெறியிலிருந்து சற்றும் பிறழாமல் ஆட்சி செய்த சிறப்புக்கு உரியவர்கள் சோழமன்னர்கள். சிவனை குலதெய்வமாக வழிப்பட்டவர்கள் சோழர்கள்.
மைவைத்த கண்டர் நெறியன்றி மற்றோர் நெறி கருதாத தெய்வ குடிச்சோழர் (நம்பியண்டார் நம்பிகள்)
தாங்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் விண்ணை முட்டும் கோபுரங்கள் அமைத்து, பிரமாண்ட லிங்கத் திருமேணிகளை உருவாக்கி தங்கள் தலைமுறைக்குப் பின்னரும் ஆலயவழிபாடு முறையாக தடையின்றி நடைபெற,ஏராளமான மானியங்களுடன் பொன்-பொருள்களையும். நில புலன்களையும் கோயில்களுக்கு எழுதி வைத்தனர்.


































மாடக் கோயில்களாகக் கட்டி சிவலிங்கத்தை வழிபட்டான் கோச்செங்கட் சோழன் ( திருவனைக்கா)

தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து வழிபட்டான் பராந்தகச் சோழன்

தஞ்சை பெரிய கோயிலை கட்டி பெயர் படைத்தான் ராச ராச சோழன்

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தை கட்டி சிறப்பித்தான் ராஜேந்திர சோழன்

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டி சிறப்பித்தான் இரண்டாம் ராச ராச சோழன்

திருபுவனம் கோயிலை கட்டினான் மூன்றாம் குலோத்துங்கன்

 செம்பியன் மாதேவி

இப் பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ மாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.
2. கணவர் கண்டராதித்த சோழன்
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன்
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்

உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும். செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை

1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்

புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.

கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.

இன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில் இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.

மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர்.
ஒரு சரித்திரப் பெண்மனியின் வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரை உளமார வாழ்த்துவோம்

உலக வரலாற்றில் தொடர்ந்து 433 ஆண்டுகள் (கி.பி 846 முதல் கி.பி. 1279) ஆண்ட இனமும் கள்ளரினமே. கள்ளரின நாகரீகம் மிகவும் பழைமையானது என்று வரலாறு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தற்காலத்து கள்ளர் சமூகம் தனது பெருமைகளை மறந்துவிட்டு அறியா சமூகமாக மாறி வருகிறது. நாம் நம்மைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாவிட்டாலும் அவற்றை பற்றி மேல் வாரியாக பொதுச் செய்திகளையாவது தெரிந்திருக்க வேண்டும்.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.
எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்
என்றும் கூறுகிறார்.

சோழ மண்டலத்தை விரிவுபடுத்திச் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காகச் சுமார் ஈராயிரம் புகழுடைய பட்டங்களை சுமந்த கள்ளர் குல வரலாற்றில் ஒரு கண்ணோட்டம்.

அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

கள்ளர், கள்வர் என்ற சொற்களுக்கு அரசன், மன்னவன், யானை,குரங்கு, கரியவன், கர்க்கடகம், முசு, திருடன், என்று பல அர்த்தங்கள் உண்டு. கள்ளர் குலம் என்று அறியும் போது அரசன், மன்னவன் என்று பொருள் அடக்கம் பெரும். இதனை நச்சினார்க்கினியரின் சீவகசிந்தாமணியின் உரைநடை அரங்கேற்றுகிறது. தாய்மண் காக்க தன் உதிரத்தை கொட்டிய கள்ளர் குல மறவர்க்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலக்கொடையை முதலாம் இராசராச சோழன் வழங்கிப் போற்றியதைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. இதையறியாத சில கத்துக்குட்டி ஆய்வாளர்கள் கள்ளர் என்ற சொல்லிற்குத் திருடர் என்று விளக்கம் கண்டனர்.

முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்தவர்கட்கு மண்ணையார் என்ற பட்டத்தையும், இலங்கையை வெல்ல போர் புரிந்தவர்கட்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்றும், மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்றோருக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்றும், ஸ்ரீவிசயம் என்ற சுமத்திராவை வென்றதற்காக விசயதேவர், விசயராயர் என்றும், நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக மாணக்கவாரர் என்றும் சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் பன்னையார் என்றும், வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது

சோழ பேராசு தம் குல மறவர்களுக்கு வழங்கிய பட்டங்களின் விரிவாக்கமும் விளக்கங்களும்.

1. அங்கராயர்
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.

2. அச்சிராயர்
சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.

3. அண்டங்கொண்டார்
சோழப்பேரரசன் அண்டசோழன் வம்சாவழியினர். அண்டபுரம், அண்டகுடி, அண்டக்குளம், அண்டத்துரை என்னும் ஊர்கள் இப் பட்டங்களின் அடியாகப் பிறந்தவைகளாகும். அண்டமாண்டார், அண்டப்பிரியர், அண்டமாளியார், அண்ணூண்டார், அண்ணூத்திப்பிரியர், அண்ணுப்பிரியர் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

4. அதிகமார்
அதிகமான் நெடுமானஞ்சி என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனான மன்னரின் பரம்பரையினர். அதியமான் நெடுமான் அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.

5. அதிகாரி
சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.

6. அச்சமறியார்
சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர்வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள்.மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்

7. அரியப்பிள்ளை
அரியசந்திர சோழன் மரபினர். இவன் அரிப்பிரியன் என்னும் இன்னொரு பெயரால் அழைக்கப்பட்டமையால் இவனது மரபினர் அரியப்பிள்ளை, அரியப்பிரியர் எனவழைக்கப்பட்டார்கள். அரியசந்திரபுரம், அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னும் ஊர்களையும் அரிசிலாறு, அரியசந்திரநதி என்னும் ஆறுகளையும் உண்டாக்கியவர்களும் இவர்களே.

8. அரசாண்டார்
அரசதேவன் என்னும் சோழ மன்னனின் சந்ததியினர். அரசதேவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டமையால் இவனது மரபினர் அரசாண்டார், அரசுக்குழைத்தார், அரசுக்குடையர் என்னும் பட்டங்களை பெற்றனர். அரசதேவன் அரசூர், அரசங்குடி, அரசமங்கலம், அரசங்குளம், அரசபட்டு என்னும் ஊர்கள் இவர்களால் உருவாக்கப்பட்டவை.

9. அம்மாலைத்தேவர்
செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.

10. அருவாநாட்டார்
அருவாநாட்டை ஆண்ட சங்ககால சிற்றசன்அருவன் என்னும் ஆதி அருமனின் மரபினர். அருவாநாடு இன்றைய கொள்ளிடத்திற்கு வடக்கே தென்னார்க்காடு மாவட்டதின் பெரும் பகுதியில் பரவிக்கிடக்கும் இடமாகும். குறுந்தொகைப் பாடல் 293ம் நற்றிணைப் பாடல் 367ம் இதனை உணர்த்துகின்றன.அருவாத்தலைவர், அருமைநாடர், அருமைநாட்டர், அருமைநாடார் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

11. அழும்புள்ளார்
மானவிறல் வேள் என்னும் குறுநில மன்னனின் மரபினர். புதுக்கோட்டை மாவட்ட அழும்பில் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டதால் இவனும் இவனது மரபினரும் அழும்பில்லார் என்றும் பின்னர் மருவி அழும்புள்ளார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

12. அன்னவாசல்ராயர்
அன்ன சோழ மன்னனின் சந்ததியினர். அன்னசோழன், அன்னவாயில், அன்னப்பன் பேட்டை, சித்தன்னவாசல் போன்ற பகுதிகளை ஆண்டவர்கள்

13. அமரகொண்டார்
சோழ மன்னர்களின் இறுதிவெற்றிக்கு வித்திடும் வித்தகர்களின் மரபினர். பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்கும் முறைமையும் உண்டு. (சிலப்பதிகாரம்). அமரண்டார், அமராண்டார் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

14. அகத்தியர்
பொதிய மலையை தமது இருப்பிடமாக கொண்டு தமிழ் சங்கம் நடத்தி வந்தவர் தொன்முதுக் குடி சார்ந்த அகத்திய முனிவர். சங்ககாலத்தில் தலைச்சங்கம், இடைச்சங்கம் என்பவற்றிக்கு தலைமை தாங்கி தமிழ் வளர்த்த பெருமை பெற்ற அகத்திய முனிவரின் வம்சமே அகத்தியர். அகத்தியர்அகத்தியார் எனும் பட்டங்களை சுமந்த கள்ளர்களும் இவர்களே. காவிரி ஆற்றின் உற்பத்திக்கு வித்திடவரும் அகத்தியர் என்று மணிமேகலை உரைக்கிறது. தொல்காப்பியர் முதலான பன்னிரு பெரும் புலவர்கட்கு ஆசிரியராகவும் அகத்தியர் இருந்தார் என இலக்கிய வரலாறு முதல் பாகம், பக்கங்கள் 43,44 கூறுகின்றன.

15. அசையாத்துரையர்
சோழ அரச மரபினர். அம்மையபுரம், அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களும், அம்மாணியாறு என்னும் பேராறும் இப் பட்டங்களுக்கு பெருமை சேர்ப்பவை. அசையாத்துரையார், அம்மைத்துரையர் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்

16. அச்சித்தேவர்
முதலேழு வள்ளல்களில் ஒருவரான செம்பியன் மரபில் வந்த அச்சுத மன்னனின் வம்சமே அச்சித்தேவர். இவர்கள் அமைத்த ஊர்கள் அச்சுதமங்கலம் மற்றும் அச்சுதன் குடி என்பனவாகும்.
அச்சுத்தேவர், அச்சுதர், அச்சுதராயர், அச்சுதபண்டாரம் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

17. அடைவளைஞ்சார்
அடைவளை சோழன் இவர்களின் மூதாதையாவான். அடைக்கப்பட்டு மற்றும் அடையாறு (சென்னை) இவர்களின் நகரமாகும். அடவளைஞ்சார், அடவளைந்தார், அடைவளைந்தார், அடைக்கப்பட்டார், அண்டம்வளைந்தார் என்னும் பட்டங்களும் இவர்களை சார்ந்தவையே.

18. அண்ணாகொண்டார்
அண்ணா என்றழைக்கப்படும் திருவண்ணாமலையை வெற்றி கொண்டு ஆண்ட சோழ மன்னர் பரம்பரையினர். (அண்ணா திருவண்ணாமலை பக்கம் 21 கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்)

19. அத்தணியார்
திருவோலக்க மண்டபத்திற்கு உரிய அரச மரபினர். அரசன் போர்க்களம் புகுந்தபோது திருவோலக்க மண்டபத்தை காத்து, அரசன் நாடு திரும்பும்வரை நிர்வாகப் பொறுப்பை ஏற்று செயல் பட்டவர்கள்

20. அத்தியரையர்
அத்தி என்னும் சிற்றரசனின் வழிவந்தவர்கள் (அகநானூறு) அத்தங்குடி, அத்திக்கரை, அத்திப்பட்டு, அத்திப்புலியூர், அத்திச்சோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னும் ஊர்களும் கோயில் தலங்களும் இவர்களின் பட்டப் பெயர்களின் அடிப்படையில் ஏற்பட்டவையே. அத்திஅரையர், அத்திரையர், அத்திராயர், அத்தியாக்கியார், அட்திரியாக்கியார், அத்திரிமாக்கியார், அத்திப்பிரியர், அத்தியாளியார்,அத்திரியர் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

21. அயிரப்பிரியர்
அய்வசோழனின் (ஐவசோழன்) மறு பெயரான அயப்பிரியன் வழி வந்தவர்கள். அய்யப்பிரியர் என்றும் அழைக்கப்படுவர். அய்யம்பேட்டை, ஐயனாபுரம், ஐவூர், ஐவனல்லூர் என்னும் ஊர்களையும் ஐயனாறு, ஐயவையனாறு என்னும் ஆறுகளையும் உண்டாக்கியவர்கள்

22. அம்பர்கொண்டார்
சோழ நாட்டின் நன்னிலம் வட்டத்தில் அம்பர் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பரம்பரையினர். சங்கச் சான்றோரை ஆதரித்தஅம்பர்கிழான் அருவந்தை இவர்களின் மூதாதைகளில் ஒருவனாவான். அம்பர் நாடு உய்யக்கொண்டார் வளநாடு என்றும் அழைக்கப்பட்டது. இன்றைய வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட அரச பரம்பரையினர் அம்பர்கொண்டார் என்று உரைப்பாரும் உண்டு. இவை ஆய்வுக்கு உட்பட்டவை. அம்பர்த்தேவர், அம்பராண்டார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

23. ஆச்சராயர்
ஆச்சன் என்னும் அரசனின் மரபினர். இவனின் மறு பெயர்கள் ஆச்சராயன், ஆச்சாபிரியன், ஆட்சிப்பிரியன், இராசாப்பிரியன் என்பனவாகும். ஆச்சாபுரம், (பெருமண நல்லூர்) ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்பன இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆச்சாப்பிரியர், ஆட்சிப்பிரியர், இராச்சாப்பிரியர் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

24. ஆர்சுற்றியார்
சோழ மரபினர். ஆர் என்னும் ஆத்தி மாலை சூடியவர்கள். ஆத்தி மலர், பட்டை, இலை, வேர், மரம் போன்றவை மிகுந்த மருத்துவ குணம் உடையவை. சோழ மன்னர்களின் மலரும் ஆத்தி மலாரே. போர் காலங்களில் போர் வீரர்கள் அனைவரும் ஆத்தி மாலை அணிந்தே போர்க்களம் புகவேண்டும். போரில் ஏற்படும் காயங்களுக்கு இம் மாலையே மருந்தாகும். இம் மலர் தோட்டங்களை வளர்ப்பதும், மலர் மாலைகள் தொகுப்பதும், போர்வீரர்களை மாலை அணிய பணிப்பதும் இவர்களே. ஆத்திக்கோட்டை, ஆரம்பூண்டான் பட்டி, ஆத்தூர், ஆத்தங்குடி, ஆத்தமங்கலம், ஆர்சுற்றிப்பட்டு என்பன இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆரம்பூண்டார், ஆரக்கண்ணியார், ஆரமுண்டார், ஆர்சுத்தியார், ஆரிச்சுற்றியார், மாலையிட்டார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

25. ஆலங்கொண்டார்
சோழ மரபினர். ஆலங்கோட்டை, ஆலங்குடி, ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி என்னும் ஊர்கள் இப் பட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஊர்களாகும். ஆலத்தரையர், ஆல்த்தொண்டமார், ஆலம்பிரியர், ஆலமாண்டார், ஆவத்தியார், ஆவாத்தியார் என்னும் பட்டங்களிளும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்

26. ஆய்ப்பிரியர்
கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் மரபினர். ஆயின் மறு பெயரான ஆளற்பிரியன் என்னும் பெயரால் ஆளற்பிரியர் என்றும் அழைக்கப்படனர். மேலும் ஆய் அண்டிரன், அண்டிரன் எனும் பெயர்களும் இவனுக்குண்டு. ஆய் பொதியமலையின் தலைவன். அதிசிறந்த பேர்வீரன். ஆய் குடி என்னும் ஊரைச் சார்ந்தவன்.சுரபுன்னை பூமாலை அணிந்தவன். பாணர்களுக்கும் இரவலர்களுக்கும் யானைகளையும், பொன், பொருள் என பரிசுகள் அளித்தவன். யாதொரு பயனையும் கருதாது இரவலர்களுக்கு கொடுத்து மகிழ்வித்தலையே கடமையாகக் கொண்டவன். (புறநானூற்றுப் பாடல்கள் 127, 136,240, 241,374, 375)

27. ஆரூரார் (ஆரார்)
சேழா வம்சத்தினர். திருவாரூரைத் (ஆரூரைத்) தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சேழானின் பட்டமே இது. ஆரூண்டார், ஆரூராளியார், ஆராளியார் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர்.

28. ஆவணத்தார்
சேழா மரபினர். ஆவணம் என்னும் பகுதியை அரசாண்ட அரச குலத்தினர். தஞ்சை, திருவரூர் மாவட்டங்களில் ஆவணம் என்ற பெயரில் பல ஊர்கள் உண்டு.

29. ஆதித்தர்
ஆதித்தசேழானின் வசாவழியினர்.ஆதித்தசேழான் இலங்கையை வென்றவன். கொங்கு நாட்டையும் வென்று பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பல கூரையை பொன்னால் வேய்ந்தவன். ஆதிவாத்தார், ஆதியார் என்ற பட்டங்களும் இவர்களுக்குண்டு.

30. இடங்காப்பிறந்தார்
இடைமச் சோழனின் மரபினர். இடைமச் சோழனின் வேறு பெயரான இடங்காப்பிறந்தார் என்னும் பெயரில் இவனது மரபினர்கள் இடங்காப்பிறந்தார் எனஅழைக்கப்பட்டார்கள். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை வழங்கியவனும் இடைமச் சோழனே. இடங்கான் கோட்டை, (எட மேலையூர்) இடை மருதூர், இடையாறு, இடைவாய் (விடைவாய்) இடைக்குலம், இடைப்பள்ளம், இடையாத்தி மங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்னும் ஊர்களை உண்டாக்கியவர்களும் இவர்களே

31. இரட்டைப்பாடியார்
முதல் இராஜெந்திர சோழன் காலத்தில் மேலைச்சாளுக்கிய நாட்டின் நடுப்பகுதியாக இருந்த இரட்டைப்பாடியை வெற்றிக்கொண்டு ஆண்ட அரசமரபினர். இவர்களை இரட்டப்பிரியர் என்றும் அழைப்பதுண்டு.

32. இராசாளியர்
சோழ மரபினர். இராயசோழன் இவர்களின் மூதாதையாவான். இராயன்பேட்டை, இராயபுரம், இராயநல்லூர் (இராயந்தூர்) இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) என்னும் ஊர்கள் இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியவைகளாகும். இவர்களை இராசாபிரியர், இராங்கியர்,இராயளியார், இராயர், இராயங்கொண்டார், இராயமுண்டார் என்றும் அழைப்பதுண்டு.

33. இருங்களர்
கடடைச்சங்க காலத்தில் வாழ்ந்த இருங்கோவேள் என்ற மன்னனின் மரபினர். இருங்களார், இருங்கள்ளர், இருங்கோ இளர் (இருக்கோளர்) என்றும் இவர்களை அழைப்பதுண்டு. சோழமண்டலத்திற்கும் பாண்டிமண்டலத்திற்கும் இடைப்பட்ட கொடும்பாளூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர்கள். இருங்கோவேளனின் மகள் வானவன் மாதேவி உத்தமசோழனின் மனைவியாவாள் ( பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கங்கள் 7, 94)

34. ஈங்கொண்டார்
சோழ மரபினர். ஈசசோழனின் வம்சாவழியினர். ஈங்கை, ஈங்கோய்மலை (திருவீங்கோய்மலை) ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர் என்னும் ஊர்கள் இப் பட்டப் பெயர்களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

35. ஈழங்கொண்டார்
சோழ மரபினர். இலங்கை மேல் படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும், கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும் இலங்கை அரசனின் கோட்டையையும் முடியையுங் கொண்டதால் கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலச் சோழர்களில் அனபாயசோழன் என்றழைக்கப்படும் குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்னும் பட்டப்பெயர்களை தன் சிறப்புப் பெயர்களாகக் கொண்டிருந்தான் என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

36. கருப்பட்டியார்
கரும்பைப் பிழிந்து காய்ச்சிச் சர்க்கரை செய்து திருக்கோவில்களுக்கு பூசனை பொருள்களாகச் சர்க்கரை, கருப்பட்டி, கரும்புச்சாறு, கரும்பு போன்றவற்றை வழங்கியவர்கள். புதுக்கோட்டை, கருப்பட்டிவிடுதி, கருப்பட்டிப்பட்டி, மடிகை, ஒரத்தநாடு முதலிய ஊர்களில் இவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

37. கருடியார்
போர்ப்பயிற்சி செய்கின்ற மறவர் கூட்டம் கருடிக்கூட்டம் என்றழைக்கப்ப்டும். எனவே இப்பட்டம் கள்ளர்களில் படைப்பயிற்சியை வழங்கியவர்களுக்குரியதாகும். நாட்டாட்சியோடும், போர்களங்களோடும் இவர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள்

38. கோதண்டப்பிரியர்
சோழர் படையில் வில் ஏந்தி போர்புரிந்தோர். வில் வித்தையில் சிறந்த போர்த் தளபதிகளாக விளங்கியவர்கள். ஒரத்தநாடு, சூரக்கோட்டை போன்ற ஊர்களில் இவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

39. சங்காத்தியார்
போர்க்களங்களில் போரின் தொடக்கத்தையும் வெற்றியையும் சங்கொலி எழுப்பி அறிவிக்கும் உரிமை கொண்ட மரபினர். இவர்கள் பெயரில் திருத்துறைப்பூண்டிற்குப் பக்கத்தில் சங்கேத்தி என்னும் ஊரும் உண்டு.

40. கண்டியர்
இராசகண்டியன், இராசராச சோழனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்றாகும். இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். செம்பியன் மரபில் வந்தவர்கள். கண்டியூரென்னும் (தேவாரம் பெற்ற) சிவதலத்தையும், கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு என்னும் ஊர்களையும் உருவாக்கி ஆண்டவர்கள். இவர்க ளின் கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு. இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ
ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

41. உத்தங்கொண்டார்
சோழ மரபினர். பிற்காலச் சோழர்களில் இரண்டாம் இராசேந்திர சோழன் இப்பட்டத்தை சிறப்பு பட்டமாக கொண்டிருந்தான். உத்தமுண்டார், உத்தமங்கொண்டார், உத்தமண்டார், உத்திமாண்டார், உத்தப்பிரியர், உத்தமப்பிரியர், யுத்தப்பிரியர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்.

42. உய்யக்கொண்டார்
சோழ மரபினர். இராசராச சோழன் இப்பட்டத்தை சிறப்பு பட்டமாக கொண்டிருந்தான். உய்யக்கொண்டார் என்னும் பெயரில் இராசராச சோழன் காலத்தில் ஒரு வள நாடும் சோழநாட்டில் இருந்தது. உய்யக்கொண்டான் சோழபுரம், உய்யக்கொண்ட ராவியும், உய்யக்கொண்டான் ஆகிய ஊர்கள் இப்பட்டங்களில் அமைந்த ஊர்களாகும். உய்யக்கொண்டான் வாய்க்கால், உய்யக்கொண்டான் மலை என்பனவும் இப்பட்டங்கள் சார்ந்தவையாகும்.

43. உலகங்காத்தார்
தமிழ்கூறு ந்ல்லுலகத்தைக் காத்தவர் மரபினர். சோழர்களில் உலகநாத சோழன் இப் பட்டத்தை பெற்றிருந்தான். உலகுண்டம், உலகங்காத்தான்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களில் அமைந்த ஊர்களாகும். உலகுகாத்தார், உலகாண்டார், உலகுடையர், உலகுடையார், உலகுய்யர், உலயர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்.

44. உழுக்கொண்டார்
அரச மரபினர். பகை அரசர்களை வென்றபின் அவர்களுடைய கோட்டைகளை அழித்து ஏர் பூட்டி யானை, கழுதை, மாடு கொண்டு உழுதவர்கள்.இவர்களுக்குரிய வேறு பட்டங்கள் உழுப்பிரியர், உழுவாண்டார், உழுவண்டார், உழுவாட்சியார், உழுவாளர் உழுவடையர், உழுவுடையார் என்பன

45. உறந்தைகொண்டார்
உறையூர் சோழ மரபினர். உறந்தை ஊர்களுக்கெல்லாம் தலை சிறந்த ஊராக திகழ்ந்தது. உறந்தைப்பிரியர், உறந்தையர், உறந்தையாண்டார், உறந்தையாளர், உறந்தைராயர், உறயர், உறியர் எனும் பெயர்களிலும் இவர்கள் அழைக்கப்ப்டுகிறார்கள்..

46. ஊணர்
போர் வெற்றிக்குப் பின் பகை அரசர்களின் முடிதலைகளை அடுப்பாக கொண்டு பேய்களுக்கு உணவு படைத்த வீரர்களின் மரபினர்.

47. மண்வெட்டிக்கூழ்வாங்கியார்
கூழைமன் என்ற அரசனின் மரபினர். கூழைமன் காலத்தில் பூமியில் சுரங்கம் வெட்டி பொன் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்ணை வெட்டிப் பொன்னை எடுத்ததாலும் கூழ் என்றால் பொன் என்பதனாலும் மண்வெட்டி க்கூல்வாங்கியார் என்ற பட்டம் உண்டாயிற்று. மண்வெட்டியில் கூழ்வாங்கியார், மண்வெற்றிக்கூழ்வாங்கியார், மன்வெற்றிக்கூழ்வாங்கியார், கூழாக்கியார், கூழாளியார்,கூழாணியார், கூழையர் என்ற பட்டங்களும் இவர்களையே சார்ந்தவை.

48. மாள்சுத்தியார்
அரண்மனைகளையும், மாளிகைகளையும் காவல் காத்து நின்ற காவல் மரபினர். போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.மாளிச்சுத்தியார், மாளிச்சுற்றியார், மாளிகைசுத்தியார், மாளுசுத்தியார், மா ளுசுற்றியார் என்றும் அழைக்கப்பட்டனர்.

49. விசயத்தேவர்
முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில் ஸ்ரீ விசயம் என்ற நாட்டை வென்றவர்கள். ஸ்ரீ விசயநாடு இன்றைய சுமத்ரா நாடாகும்.ஸ்ரீவிசயத்தேவர் என்று அழைக்கப்பட்ட இவர்கள் ஸ்ரீ தவிர்த்து விசயத்தேவர் மற்றும் விஜயதேவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


50. விஞ்சைராயர்
வாஞ்சி சோழன் இவர்களின் மூதாதையாவான். வாஞ்சியாறு, வாஞ்சியூர், வாஞ்சிமங்கலம், வாஞ்சிகுடி என்னும் ஊர்கள் இவர்களின் கோட்டைகளாகும். வீர தீர செயல்களுக்கு பெயர் பெற்றவர்கள்.விண்னையும் மண்னையும் விஞ்சியவர்கள் என்பது இவர்களின் சிறப்பு.வஞ்சிராயர், விஞ்சிராயர், வாஞ்சிராயர்,விஞ்சிரார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

51. விசுவராயர்
விசயாலய சோழன் இவர்களின் மூதாதையாவான். சோழ சாம்ராஜியத்தை மீண்டும் நிலை நாட்டியவன். விசராயர், விசுவரார், விசயராயர், விசையராயர்
என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

52. தொண்டைமான்
தொண்டை நாட்டு அரச மரபினர். கரிகால சோழனின் இளைய மகன் தொண்டைமான் கிழக்கே கடலையும், தெற்கே பொண்ணையாற்றையும், மேற்கே பவள மலையையும் வடக்கே திருவேங்கிடமலையையும் எல்லைகளாகவும் காஞ்சிபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆண்டவன்.
தொண்டைமான் இளந்திரையன்,சோழன் நெடுமுடிக்கிளிக்கும், நாகநாட்டு இளவரசி பீலிவளைக்கும் பிறந்தவன். தலை சிறந்த வீரமும் கொடை நலமும் வாய்க்கப்பெற்றவன். கவி பாடும் திறமை பெற்றவன், புறநானூற்றிலும், நற்றிணையிலும், பெரும்பாணாற்றுப்படையிலும் அவ்வையார் பாடலிலும் இடம் பெற்றவன். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான் இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

53. நந்தர், நந்தியர், நந்திராயர், நந்தியராயர்
சோழ மரபினர், நந்திசோழன் இவர்கள் மூதாதையாவான். நந்திசோழன் காலத்தில் தோல் காசுகள் முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது.தஞ்சை மாவட்டம் உத்தமர்குடியில் இவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்

54. நல்லப்பிரியர், நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளியின் மரபினர். நள்ளியின் வேறுபெயரான நள்ளிப்பிரியர் என்னும் பெயரால் இவனதுமரபினர் இப்பட்டப் பெயர்களைப் பெறுவாராயினர். நள்ளி வலக்கையால் கொடுப்பதை இடக்கை அறியாது கொடுத்த வள்ளலாவான்.

55. மழவராயர், மழுவாடியார்,
பிற்காலச் சோழ மன்னர்களின் கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் குடியில் பிறந்தவளாவாள். விசயாலய சோழன் மனைவிமழவராயர் குடியிலும், உத்தம சோழன் மனைவி மழுவாடியார் குடியிலும் பிறந்தவர்களாவர். மழவராயர் குடி சார்ந்தாவர்கள் அனைவரும் வீரத்தில் சிறந்து இருந்தனர். இவர்களின் குடியிருப்புப் பகுதிகள் மழ நாடு என்று அறியப்படுகிறது. அதியமான், சேரன், சோழன் போன்ற மன்னர்களுக்கு மெய்காப்பாளராக இருந்து சேவை செய்துள்ளனர்.

சோழ மன்னர்கள் மற்ற மரபினருக்கு வழங்கிய பட்டங்க்கள்
நாட்டிய ஆசிரியனுக்கு - நிருத்தப்பேரரையன்
இசைக்கருவி ஆசிரியனுக்கு - வாச்சியமாராயன்
நாடக ஆசிரியனுக்கு - நாடகப்பேரரையன்
சிற்பிகளுக்கு - கற்றாளிப்பிச்சன்
கூற்றுக்கலைஞர்களுக்கு - பூங்கோயில் நாடகத் தலைக்கோலி

இன்றைய உலகில் பலருக்கும் பலராலும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இப் பட்டங்களின் வயது அதிக பட்சமாக 85 வயதுகள் வரை தான் நீடிக்க முடியும். எடுத்துக்காட்டாக உங்களுக்கு தெரிந்த
பாரதரத்னா
பத்மஸ்ரீ
பத்மபூஷன்
பரம்வீர்
செவாலியர்
பெரியார்
அறிஞர்
மூதறிஞர்
புரட்சித்தலைவர்
கலைஞர்
இவை எல்லம் ஒரு தனி நபருக்காக அவர் மறைந்த பின்னர் காலாவதியாகும் பட்டங்கள். எமக்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட எமது பட்டங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வளர்ந்து வரும் உயிருள்ள அழிக்கமுடியாத ஜீவனுள்ள மரபனு பட்டங்களாகும். ஈராயிரம் பட்டங்களை சுமந்த எம் பெருங்குடி சமூகம் ஏன் நம் குல பட்டங்களை உச்சரிக்க தயங்குகிறது? நம் குலம் காக்க முன்னேரிய இனமாக அடையாளம் காட்ட நாம் நம் பட்டங்களை பெருமையுடன் அலங்கரிக்க வேண்டும். எமக்குள்ள இப்பட்டங்களை யாராலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது.

நம் இனத்தில் சூரியகுலமென்றும், இந்திரகுலமென்றும் வழக்கில் உள்ளது. மனு சக்கரவர்த்தி காலமுதல் சோழன் என்னும் அரசன் காலம் வரையில் சூரியகுலம் எனவும், சோழன் காலந்தொடங்கி இராசேந்திரசோழன் காலம் வரை சோழகுலம் எனவும், இராசேந்திரசோழன் காலந்தொடங்கி கோனேரிமேல்கொண்டான் என்னும் அரசன் காலம் வரை இராசேந்திரகுலம் எனவும் பெயர் வழங்கின. கோனேரிமேல்கொண்டான் வீரவிருப்பண்ணவுடையான் என்ற அரசனிடம் போரில் தோல்வி கண்டு அரசிலந்து திருச்சிராப்பள்ளியை விட்டு நீங்கிய பின்னர் (இற்றைக்கு ஐந்நூற்றி ஐம்பது ஆண்டுகளாக ) இராச என்ற சொல் நீக்கி இராசேந்திரகுலம் இன்று இந்திரகுலமாகி விட்டது என்று சிலரும்
இந்திரகுலமென்பது சூரியகுலத்தினர் பெண் எடுத்து மணவுறவு ஏற்படுத்திக்கொண்ட குலமாகும்  என்றும் பண்டயகால பட்டயங்களிலும், பத்திரங்களிலும் இந்திர குலத்தை சார்ந்த இன்னார் இன்னார் என்று இருக்கும். இவை எல்லாம் பெண் எடுத்த இந்திரகுலத்திற்கு சீர்வரிசையாக சூரியகுல மணமகன் அளித்தவகையாகும் என்று சிலரும் கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக உங்களுக்கு தெரிந்த இந்திரகுல வம்சங்கள் சில
மழவராயர்
காடுவெட்டியார்
சேதிராயர்
பழுவேட்டரையர்
கலியராயர்
தொண்டைமான்
வேலர்
வல்லவராயர்
பல்லவராயர்
புவிராயர்
வேளிர்
நாகர்
செம்பியர்

கள்ளர் குல தலைவர்களின்று ஒன்றுபட்டு இல்லை, ஆளுக்கொரு தலைவன், ஆளுக்கொரு கொள்கை, ஆளுக்கொரு அரசியல் கட்சி, ஆளுக்கொரு சங்கம் என்று இருந்தால் எப்படி ஒற்றுமையும் முன்ணேற்றமும் ஏற்படும்? இளைஞர்கள் கல்வியில் பாதிப்பு, படித்து வேலைக்குப் போகாமுடியாமல் சினிமா மோகத்திற்கு ஆளாகி தன் உயர்வு கெட்டு சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் பாரமாக வாழும் அவலம். இந்த அவல நிலை மாற கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்க்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்
உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?
உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?
உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?
விடை கண்டு உயர்வு அடையுங்கள.

1 comment:

  1. கோபாலர் பட்டத்தின் விளக்கம், வரலாறு தெரிந்தால் கூரவும்.

    ReplyDelete