தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Tuesday, August 16, 2011

சர்வதேச கள்ளர் பேரவையின் 3ம் ஆண்டு பிறந்த நாள் விழா

சர்வதேச கள்ளர் பேரவையின் 3ம் ஆண்டு பிறந்த நாள் விழா 3/8/2011 (ஆடி 18ம் நாள்) லண்டன் மாநகரில் 8 மணியளவில் காலை உணவுடன் துவங்கியது. திருமதி கமலா பாக்கியநாதன் மல்லிகொண்டார் விளக்கேற்றி துவக்கி வைத்தார். பல்வேறு நாடுகளில் இருந்து 206 அங்கதினர்கள் பங்குபெற்றனர். ஜெயராம் இராசகண்டியர் பணி நிமித்தமாக வெளி நாடுகளுக்கு சென்று இருந்தமையால், திரு பழனிச்சாமி தெங்கொண்டார் தலைமையில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

திரு ராமநாதன் வாண்டையார் தனது வரவேற்புரையில் திரு இராசகண்டியரின் பெரு முயற்சியின் பயனாக இன்று நமது பேரவை பெருமளவில் உலக நாடுகளில் கால் பதித்து உள்ளதையும் அங்கத்தினர் பெருகிவருவதையும் குறிப்பிட்டார். மேலும் இராசகண்டியரின் வாழ்துரையையும் அவையில் படித்தார்.

கள்ளர் குல சொந்தங்களே!
இராச கண்டியரின் பணிவான வணக்கங்கள். உங்களின் வாழ்த்துக்களை மலர் போல தூவ உங்கள் அணைவரையும் இந்நன்நாளில் அன்புடன் அழைக்கிறேன். இன்று நம் எல்லோருக்கும் ஒரு பொண்ணான நாள். சர்வதேச கள்ளர் பேரவை 4ம் ஆண்டில் கால் பதிக்கும் நன்நாள்.பணி நிமித்தம் காரணமாக இன்று என்னால் பங்கு பெறமுடியவில்லை என்ற ஆதங்கமிருந்தாலும் நமது வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைகிறேன்.

ஊரோடும், உறவோடும் வாழும் கலாசாரம் தான் நம் கள்ளர் இன சமுதாயத்தின் ஆணிவேர். ஆனால் சுழற்றும் வேலை சூழல், அள்ளும் சம்பளம், பெருகிப்போன சுயநலம், தனிமை என்று சொல்லி கூட்டுக்குள் சுருங்கும் மனோபாவம் இதுபோன்ற பல காரணங்களால் சொந்த பந்தங்களிடமிருந்து விலகி அக்கம் பக்கத்து தொடர்புகளும் அற்றுப்போய் வாழும் நிலை நம்மில் இன்று பெருகிவிட்டது.

எவ்வளவு முன்னோறினாலும், அதுக்குப் பின்னால உங்கள் உழைப்பு, தன்னம்பிக்கை, முயற்சினு பல இருக்கும். இது எல்லாத்துக்கும் மேல் எங்கயோ ஒரு மூலையில் ஏதாச்சும் விடிஞ்சுடாதானு காத்துகிடக்கிற பாவப்பட்ட கள்ளர்குல ஜீவன்கள்ல ஒருதரையாச்சும் கை தூக்கிவிடுங்க.அதுவே உங்களின் உண்மையான முன்னேற்றம். சேவை என்பது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிறைவு

திறமை என்பது முடிவில்லாத ஒரு பயணம், கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் திறமைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகள் கடுமையாக இருக்கும் போது அமைதியான மனப்பான்மை அவசியம், அப்போது தான் தெளிவாக யோசிக்கமுடியும், சரியாகவும் திட்டமிட்டு முன்னேறவும் முடியும். தோல்வி நெருங்குவதுபோல் தெரிந்தாலும் பதற்றப்படாமல் அந்த நிலைமையை எப்படிச்சாமாளிப்பது என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். புகழ் பெற்ற ஒருவரை குறை கூறி பழிப்பதன் மூலம் நீங்கள் புகழ் பெற முடியாது. உங்களின் அறிவற்ற செயலை விளம்பரம் செய்ய மட்டுமே அது உதவும். தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேறுவது போல் வெற்றிகளையும் அலசி ஆராய்ந்து தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள். முங்கூட்டியே யோசியுங்கள் முன்னேற்றம் பிரகாசமாகி பொங்கிப்பெருகும். நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, புத்திசாலியாகவும் இருக்கப் பழகிக்கொள்வோம்.

நாம் கடந்து வந்த மூன்றாடு சாதனைகளை பட்டியலிடநான் விரும்பவில்லை, நேரமும் இல்லை. உங்கள் அனவருக்கும் அவை பற்றி தெரியும்.சர்வதேச கள்ளர் பேரவை கடும் விமர்சனங்களையும், கோபம், பொறாமை, அவமதிப்பு,கர்வம், வெறுப்புணர்ச்சி, களைப்பு,சலிப்பு போன்ற பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தபோது எல்லாம் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிதுக்கொள்கிறேன்.நம் குல வளர்ச்சி ஒன்றே நமது நோக்கம், அரசியல் வேண்டாம்.

நமது சர்வதேச கள்ளர் பேரவை வலை தளங்களில் இருந்து தகவல்களை திருடி பலரும் தங்கள் வலை தளங்களில் பதிவு செய்துள்ளனர் என்றும் இதனை சட்ட பூர்வமாக தடை செய்ய நடவடிக்கை தேவை என்று சில அங்க்த்தினர்கள் என்னிடம் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக இராசராச சோழனை பல்வேறு சாதியினரும் உரிமை கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் வரலாறு பதில் சொல்லும். நமது செய்திகள் திரிந்து பிற சாதி வலை தளங்களில் வெளிவரும் போது படிப்பவர்கள் மத்தியில் அவ்வலை தளத்தை பற்றிய நம்பகத்தன்மை சரிந்துவிடும். நமது செய்திகளும் வரலாற்று நூல்களிலும், ஆவணங்களிலும் இருந்து பெறப்பற்றவை என்பதனையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வீழ்ந்தது கர்வம், வென்றது நியாயம் என்ற பாதையில் நம் பயணம் தொடரவேண்டும். மகிழ்சியாக தெரியுமிடத்தில் வாழ நினைபதை விட நாம் வாழும் இடத்தை மகிழ்சியாக மாற்றிவிடுவோம் இதுவே எம் குலத்திற்கு நாம் செய்யும் நன்மையாகும்.

உருண்டோடும் நாளில், கரைந்தோடும் வாழ்வில் ஒளி தோடும் சிலர்
மனம் போன போக்கில் சென்று மல்லாந்தவர் பலர்
கால் போன போக்கில் சென்று தடம் மாறி தடுமாறி கவிழ்ந்தவர்கள் பலர்
விதி என்று சொல்லி வீழ்ந்தவர்கள் ஏராளம்
லட்சியயங்கள், கனவுகளைத் துரத்தி வெற்றி பறித்தவர்கள் சிலர்
சூழ்நிலையால் துரத்தப்பட்டு பிழைப்புக்கு வழிதேடி உயரம் தொட்டவர்கள் பலர்.
மதிகொண்டு உயர்ந்தவர்கள் மிகச்சிலரெர!
இவர்களில் நீங்கள் யார் என்பதனை உணருங்கள்.

உங்கள் ஆர்வத்தையும் தன்னம்பிகையும் ஒளியாக சர்வதேச கள்ளர் பேரவை மீது நீங்கள் பாய்ச்சி கொண்டிருக்கும் வரையில் நமது வளர்ச்சி மேலும் மேலும் பிரகாசமாகிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி
வணக்கம்
ஜெயராம் இராசகண்டியன்.


தொடர்ந்து பேசிய திரு ராமநாதன் வாண்டையார் அங்கத்தினர் சேர்க்கையில் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கள்ளரில் பலர் கலப்புத் திருமணம் செய்துள்ளமை காரனமாக அங்கத்தினராக சேர்க்கப்படவில்லை என்றும் இவர்கள் அங்கத்தினராக சேருவதற்க்கு வழிவகைகளை ஆராயவேண்டும் என்றும், கடந்த மூன்று வருடங்களாக அங்கத்தினரிடம் இருந்து கட்டணமாக ஏதும் வாங்கப்படவில்லை என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இவரை தொடர்ந்து திரு வைத்திலிங்கம் பல்லவராயர் அடுத்த வருடம் சர்வதேச கள்ளர் பேரவையின் 4ம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை தென்னாப்பிரிக்காவில் கொண்டாட விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி அனுமதியும் பெற்று வருமாறு தன்னை அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் அதிகமான கள்ளர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் சர்வதேச கள்ளர் பேரவையின் செயலாக்கம் பெரிதும் தங்களை கவர்ந்து வருவதாகவும் தங்களின் இனத்தை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அடுத்த ஆண்டு விழா அங்கு நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாசுதேவன் மல்லிகொண்டார் தனது உரையில் சர்வதேச கள்ளர் பேரவையின் இனைய தளங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியில் இயங்கி வருவதால் தமிழ் மொழி தெரியாத இனப்பற்றுள்ள கள்ளர்கள் தங்கள் இனம் பற்றி அறிய முடியவில்லை என்று குறிப்பிட்டு ஆங்கிலத்தில் ஒரு தளம் உருவாக்கி இவர்கள் பயனடைய வழி வகைகள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொன்டார்.

பாஸ்கர நரங்கியர் சர்வதேச கள்ளர் பேரவையின் புத்தக வெளியீட்டை வேலைப்பளு காரனமாக இராசகண்டியர் தன்னிடம் ஒப்படைத்து இருந்ததாகவும்,அங்கத்தினர் சிலரின் படைப்புகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் அதிகமான கட்டுரைகள் ஆங்கிலதில் இருந்தமையால் மொழியாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இன்னும் மூன்று மாதத்தில் நூலை வெளியிட அங்கத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பெரும்பாலன அங்கத்தினர் கண்டனம் தெரிவித்து தங்களுக்கு இது பற்றி ஏதும்தெரியாது என்றும் இதனை நரங்கியர் முன் கூட்டியே அங்கத்தினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

திருமதி வாசுகி மணவாளன் கண்டியர் தமது உரையில் சர்வதேச கள்ளர் பேரவையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் பாஸ்கர நரங்கியர் மொழி பெயர்ப்பை தன்னிடம் கொடுத்திருக்கலாம் அல்லது இங்குள்ள பெண் கல்வியாளர்களிடம் கொடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தூள்ளார். பெண்களின் பங்கேற்பு சர்வதேச கள்ளர் பேரவையின் விரிவாக்கத்திற்கு மிகவும் அவசியம் என்றும் வரும் காலங்களில் பெண்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு பேரவையின் மகத்துவத்தை உயர்த்த பாடு பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மதிய உணவிற்குப் பின் பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது

நடராஜன் தெங்கொண்டார். பிரான்ஸ்.
திருமதி உமாராணி சுந்தரம் கலியராயர் டென்மார்க்.
மதிவானன் வல்லுண்டார். நார்வே
விசுவநாதன் காலிங்கராயர். இத்தாலி.
நாகநாதன் இராசாளியார். ஜெர்மனி.
மாணிக்கம் கரைமீண்டார். துபாய்.
திருமதி கமலா பாக்கியநாதன் மல்லிகொண்டார். நெதர்லாந்து

ஆகியோர் சர்வதேச கள்ளர் பேரவையின் நிறை குறைகளை பட்டியலிட்டு பேசினார்கள். முக்கியமாக அங்கத்தினர் சேர்க்கையில் கவனமாக செயல் படவேண்டும் என்றும் கள்ளர் இனமற்றவர்கள் சிலர் தவராக அங்கத்தினர்களாகவும் சேர்ககப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நீக்கப்படுவதுடன் இனிமேல் தற்போது அங்கத்தினராக உள்ளவர்கள் பரிந்துரை செய்த பின்பு தான் புதியவர்களுக்குஅங்கத்துவம் வழங்கப்பட வெண்டும், புதிய அங்கத்தினர் தேர்வில் அவர்கள் கள்ளர் குலத்திற்கு ஆற்றிய சேவைகளை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும், அங்கத்தினர் வின்னப்ப படிவத்தில் இதற்கான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

திரு பழனிச்சாமி தெங்கொண்டார் தனது நிறைவுரையில் கலப்புத் திருமணம் செய்தவர்களின் நிலைப்பாட்டை அறிய அங்கதினர்களின் கருத்துக்களை கேட்டபோது ஒட்டுமொத்தமாக எல்லோரும் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கக்கூடாது என்றனர். அங்கத்தினர் கட்டணம் பற்றி இராச கண்டியரின் முடிவே இறுதியானது என்றும் 4ம் ஆண்டு பிறந்த நாள் விழா தென்னாப்பிரிக்காவில் நடை பெற பெரும்பாலாணோர் சம்மதம் தெரிவித்த நிலையில் இராசகண்டியரின் வருகைக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

ஆங்கிலத்தில் இனையதளம் உருவாக்கும் பொருப்பு திருமதி வாசுகி மணவாளன் கண்டியரிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தகவெளியீட்டை பாஸ்கர நரங்கியர் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி குமரன் ராஜபிரியர், திருமதி ஜானகி பாலகுமார் உழுவாண்டார் மற்றும் ஜெகதீசன் படைகொண்டார் கூட்டாக செய்துமுடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. நிறைவாக கள்ளர் குலம் பற்றிய தலைப்பில் கவிதை, கட்டுரைகள் படைத்த இளைய தலைமுறையினர் பலருக்கும் பரிசுகளை பழனிசாமி தெங்கொண்டார் வழங்கி கௌரவித்தார். மாலை சிற்றுண்டியுடன் விழா நிறைவு பெற்றது.

கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் முதல் பரிசை செல்வி நர்மதா தர்சிணி தஞ்சிராயர் பெற்றார். அவரின் படைப்பு உங்கள் பார்வைக்கு.

பாரதத்தையும் கடல் கடந்த நாடுகளையும் கட்டியாண்ட ஓர் இனத்தின் வீர வரலாறு

கரிகாலன் ஆற்றிய பெரும்போர் வாகைப் பறந்தலைப் போராகும். கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாக பெற்றிருந்த சேரன், பாண்டியன் மற்றும் பதினொருவேளீர்களையும் ஒன்று சேர வாகைப்பறந்தலை, வெண்ணியில் வெற்றிகண்டவன் மாமன்னன் அடங்காபிரியன் பெருவளத்தான் கரிகாலன். பகைவர்கள் தம் கொற்றக் குடைகளையும், புகழ்க் கொடிகளையும் களத்தில் எறிந்துவிட்டு ஓடினர் என்று பரணர் விரித்துரைத்துள்ளார். போர்களத்தை சூடாவாகை என்றும் பரணர் உரைத்துள்ளார். இதன் மூலம் வாகையை போர்க்களம் என்றும் வெற்றிக்குரிய பூவாக நாம் நினைக்க இடமில்லை என்றும் அறிய முடிகிறது

அவைகூடி வந்தமர்ந்தான் மாமன்னன் பெருவளத்தான் கரிகாலன்
உளமார வாழ்த்தினான் உய்யங்கொண்டான்
பகைவனின் வருகை சொல்ல புயல் போல் வந்தான் புரங்காட்டான்.
பகையான் படையுடன் வரும் செய்தி பகிர்ந்தான் பணிபூண்டான்
எடுத்துரைத்தான் பேரறிவு ஒளிகொன்டான்
கொதித்தெழுந்தான் அரசுக்குடையான்.
அண்டமும் நடுங்க ஆவேசம் கொண்டான் அடங்காபிரியன்
சிலிர்த்தெழுந்தான் சிலுப்பியன். போர் ஒன்றே முடிவு என்றான் போர்பொருக்கியான்
களம் கான துடித்தான் காங்கேயன்
இராசதந்திரம் பகின்றான் இராசகண்டியன்
இசைவுடன் கண் அசைத்தான் இராசப்பிரியன்
ஒற்றையர் படை தந்தான் ஒற்றையன்
எதிரியின் பலம் படித்தான் எண்ணாட்டுப்பிரியன்
தலை அசைத்து ஆமோதித்தான் ஆளியான்
போர் விளைவினை விவாதித்தான் போர்முட்டியான்
கலங்காமல் போர் இலக்கனம் தொகுத்தான் கரைமீண்டான்
காவலில் தன் பங்கை எடுத்துரைத்தான் காவல்குடியான்
மதிணுற்பம் பகின்றான் மழநாட்டு மழவராயன்
அணிகலன் திரட்டினான் ஐந்னூற்றுப்பிரியன்
சேனை திரட்டினான் சேதி நாட்டான் சேதிராயன்
நம் படை பலம் பகன்றான் வில்லேந்தி வில்லவராயன்
வியூகமமைதான் விஞ்சிராயன்.
துனை நின்றான் மதினுட்ப இராசாளியன்
தனிப் படை அமைத்தான் தனிராயன்
வெண்ணியில் களம் காண்போம் என்றுரைத்தான் வெண்ணுமலையான்
வெண்ணியில் வாகைப்பறந்தலை தேர்ந்தெடுத்தான் வாண்டையான்
களவழி அமைத்தான் காடுவெட்டி களனி கண்ட காடுவெட்டியான்
நெடுங்களம் அமைத்தான் நெடுவாண்டான்
அமுது பொங்க வழி வகுத்தான் உழுக்கொண்டான்
நீர் நிலைகள் காண விரைந்தான் விசலாண்டான்
மருந்தகம் அமைந்திட நிலம் தேடினான் நிலங்கொண்டான்
வைதியர் பட்டியல் பரைசாற்றினான் வைதும்பராயன்
வடக்கே வாற்படை அமைத்தான் வங்கத்தரையன்
தென் திசையில் அணி படைத்தான் தெங்கொண்டான்
மேற்கு மேட்டில் காத்து நின்றான் மேற்கொண்டான்
கிழக்கில் கிளர்தெழுந்தான் கிளாமுடையான்
குதிரைப்படையுடன் குடிகொண்டான்
காலால்படையுடன் கார்கொண்டான்
விற்படையுடன் வில்லத்தேவன்
வாட்படையுடன் வாள்கொண்டான்
ஈட்டியுடன் ஈழத்தரையன்
யானைகளுடன் சாமுத்திரியன்
புரவி மேல் புன்னகை பூத்தான் புலிக்கொண்டான்
தலைமை ஏற்றான் அச்சமறியான்
ஆத்திமாலை புனைந்து ஆர்பரித்தான் ஆர்சுத்தியான்
வீரத்திலகமிட்டான் வீரமுண்டான்
சங்கொலி எழுப்பினான் சங்கப்பிரியன்
படைகள் களமிறங்க வாள் வீசினான் வாணாதிராயன்
ஆயிரக்கணக்கான மறவர்கள் பங்கேற்க களம் கண்டான்ஆயுதபிரியன்
மோதல் வெடித்தது எங்கும் கள்ளர்குல மறவர்களின் ஆரவாரம்
முதல்நாள் சேரன் தன் பலம் இழந்தான் முழக்கமிட்டான் சேனாதிபதியான்
இரண்டாம் நாள் பாண்டியன் தன் முடி இழந்தான் கர்ஜித்தான் தஞ்சிராயன்
மூன்றாம் நாள் பதினொருவேளீர்களும் படை இழந்தனர் வாகை சூடினான் சூரக்கோட்டையான்
எதிரிகள் படை இழந்து ஓட எழுச்சியுடன் நின்றான் ஏனாதிகொண்டான்
புலிக்கொடி அசைத்து கொண்டாடினான் கொடிகொண்டான்.
போர் முடிந்து வெற்றி முரசு கொட்டினான் முடிகொண்டான்
மன்னனுடன் கலங்கிய கண்களுடன் களம் வந்தான் கலிங்கராயன்
மடிந்தோர் முன் மண்டியிட்டான் மாமன்னன்

செங்குருதி நீக்கி நீராட்டினான் செயங்கொண்டான்
மலர் தூவி மரியாதை செய்தான் மன்றாயன்
ஆத்திமாலை அணிவித்தான் மாலையிட்டான்
சிதையிட்டான் சிவலிங்கதேவன்
நீர் தெளித்தான் மன்னவன் அரசுடையான்
கூடி நின்றோரை கைகூப்பி நின்றான் கூராயன்
கல் நட்டான் கங்கைநாட்டான்
கண்ணீர் விட்டான் கலங்கா கருப்பூண்டான்
அனைத்துக்கும் ஆணையிட்டு அடங்கி நின்றான் அண்டங்கொண்டான்
பகைவரின் உயிரில்லா உடல் அனைத்திற்கும் சிதையூட்ட ஆனையிட்டான் பெருவளத்தான்.
செவ்வனே செய்து முடித்தான் செம்மைகொண்டான்
பரிவாரங்களுடன் களம் அகன்றான் தலைநகர் நோக்கி அரசுக்குடையான்.
வெற்றியின் விலை சொன்னான் வெற்றியன்
தலை அசைத்து ஆம் என்றான் தானாதிபதியான்
அரன்மனை காத்து நின்றான் காவாளியான்
வெற்றிச்செய்தி செப்பினான் வெள்ளங்கொண்டான்
மனமகிழ்ந்தான் மந்திரியான்
மங்களம் பாடினான் மதில்சுற்றியான்
முரசு கொட்டி முழக்கமிட்டான் முனையதரையன்
நாடே வீர மறவர்களை வரவேற்க காத்திருக்க தலைமை ஏற்றான் நாட்டரசன்.
தலைநகரில் கால் பதித்தான் மாமன்னன் கரிகாலன்.
மரித்த மறவர்களின் மனை நோக்கி நடந்தான் பெருவளத்தான்
உயிர் நீத்த மறவர் வாரிசுகளுக்கு ஆறுதல் பகிர்ந்து கொடை அளித்தான் அரசுக்குடையான்
புண்பட்ட மறவர்களுக்கு ஆவண செய்ய பணிக்கப்பட்டான் புண்ணைகொண்டான்
அரன்மனை நோக்கி நகர்ந்தது மன்னனின் தேர் சாரதியானான் அங்கராயன்
நாடே விழாக்கோழம் கண்டது தலைமை ஏற்றான் சோழப்பிரியன்
அரன்மனை வாயிலில் வரவேற்றான் வணங்காமுடிபண்டாரத்தான்
வென்ஆத்தி மலர் தூவி வரவேற்றான் வெற்றிகொண்டான்
வாழ்த்துரை வழங்கினான் வாயாளியான்
பாமாலை பாடினான் பத்துடையான்
வெண்சாமரை வீசினான் விளப்பன்
இசைமழை பொழிந்தான் இராங்கியன்
நர்மதா தர்சிணி தஞ்சிராயர்

மூன்றாம் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
கள்ளர் குலம் கற்பனையில் எழுந்த சமுதாயம் அல்ல.கதை சொல்லும் சமூகம் அல்ல. இளைய சமுதாயத்தினர், இன்று வாழுகிற, எதிர்காலத்தில் வாழப் போகிற களளர் குல சமுதாயத்தினர் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து காட்டுகிற ஓர் ஆவணம் சர்வதேச கள்ளர் பேரவை மட்டுமே.வளர்ந்து பெருகிவரும் உன்சேவைக்கு பாராட்டுக்கள்
வைகுந்தநாதன் சுரக்குடையார்.
லாகோஸ்.நைஜீரியா.

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
சர்வதேச கள்ளர் பேரவை இதுவரை சாதித்தவை மகத்தானவை. சாதிக்க எண்ணியிருபவை பல. அவை மேலும் மகத்தானவை. வளர்ந்து சேவை புரிந்திட வாழ்த்துக்கள்.
ஜெயராமன் ஓந்திரியர்
பொஸ்டன். அமெரிக்கா

பிறந்த நாள் கானும் சர்வதேச கள்ளர் பேரவைக்கு வாழ்த்துக்கள்.

பார்த்தீபன் மழவராயர். சிங்கப்பூர்.

ஒளிரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

4ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் சர்வதேச கள்ளர் பேரவையே சிரம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறோம். உன் சேவை மேலும் பன்மடங்கு பெருகி கள்ளர் சமூகம் வளர்ந்திட நல் வாழ்த்துக்கள். கண்டியரின் அயராத சேவை மேன்மேலும் வளர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.
ராமசாமி வன்னியர்
ஒஸ்லோ.நார்வே

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாதனை சரித்திரம் படைத்த நம் குல முத்துக்களைத் தேர்தெடுத்து தன் முகத்தழகாக மாற்றிக்கொண்ட சர்வதேச கள்ளர் பேரவையே உனது ஒவ்வொரு நிகழ்வும் நொடிக்கொருதரம் நம் இன உணர்வுகளை புதுப்பிதுக்கொண்டே இருக்கும். வளர்க உந்தன் சேவை.
கருணாகர தொண்டைமான்
கோலாலம்பூர். மலேசியா.

பிறந்த தின வாழ்த்துக்கள்
இனத்திற்காக எதையும் மன்னிக்கும், மறக்கும், தோளனைக்கும், தோள் கொடுக்கும் வலிமை உடையவர் கள்ளர் என்றும்
இனம் இல்லாவிடின் பெரும்பாலோர் துன்பத்தின் தூணாகவே நின்று இருப்பர் என்றும்
இனத்தின் சிறப்பை நாமுணர்ந்து விட்டால் நம்மில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று உறைக்கும் சர்வதேச கள்ளர் பேரவையே நல்வாழ்த்துக்கள்.உன்னை சிறப்புடன் இயங்க வைக்கும் இராசகண்டியருக்கும் கள்ளர் குல மணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
மார்த்தாண்டன் பல்லவராயர்.
அபுதாபி.யு.ஏ.இ.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சமத்துவம், சாதிகள் இல்லை, கலப்புத்திருமணம் என்ற விசக்கிருமிகளே நாளைய சமுதாய நோய் என்று அறியுங்கள்.
வாழும்போது ஒருவராய் வாழும் நாம் என்றோ ஒருநாள் நம் இனத்தையும் குலத்தையும் மறந்தவர்களுக்கும்,மறைத்தவர்களுக்கும் புரியும் என்ற
நம்பிக்கையில் நாம் வளர்வோம்.நடந்தவைகளை ஆராயுங்கள், பேசுங்கள். குலம் காத்திட சர்வதேச கள்ளர் பேரவையின் முன் அணிவகுத்து
நில்லுங்கள். கள்ளர் இனமே ஒன்று பட்டு செயல் படுவோம் உயர் அடைவோம்.
நாகசாமி சிலுக்கியார்
பொர்ட் எலிசபெத். தென்னாப்பிரிக்கா.

சர்வதேச கள்ளர் பேரவைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எத்தனையோ கள்ளர் வளர்ச்சிக் கழகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் செயல் பட்டாலும் சர்வதேச கள்ளர் பேரவைக்கு ஈடு இனை இல்லை.வளர்ந்து வாழ்க உன் தொண்டு.மதிவாணன் தெங்கொண்டார்
அம்மான்.ஜோர்டான் 

மண்ணையும் பொண்ணையும் நேசிக்கும் இவ்வுலகில் இனத்தையும் குலத்தையும் கட்டிக்காக்க பாடுபடும் சர்வதேச கள்ளர் பேரவைக்கு எமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
சிவகாசிநாதன் அதிகாரி
மடகாஸ்கார்


சர்வதேச கள்ளர் பேரவை தேவையா என்றனர் சிலர்.
தேவை என்றோர் பலர்.
முடியுமா என்றனர் சிலர்.
முடியும், முடியும் என்று களம் கண்டவர் இராசகண்டியர்.
விதையாக உன்னை பார்த்தபோது முளைக்குமா என்று நினைத்தோர் பலர்.
முளைவிட்டபோது செடியாகுமா என்று நினைத்தோர் சிலர்.
செடியானபோது பாதுகாத்து வேலி அமைத்தனர் சிலர்.
மரமாக வளர்ந்து வரும்போது இளைப்பாற உன் நிழல் தோடிணோர் பலர்.
பூத்துக் குழுங்கி காயாகி கனிந்தபோது வரவேற்றோர் ஏராளம்.
இன்று விருட்சமாக நீ நிற்கும்போது உன்மடியில் தவழ நினைப்போர் எண்ணிலடங்கா.
பிறந்த நாள் வாழ்த்துக்கள். வளர்க உந்தன் சேவை.
வெற்றிவேல் மயிலாண்டார்
இங்கிலாந்து


தாண்டிய தடைகள், பெருகிவந்த ஆதரவு, பொங்கிய மகிழ்ச்சி, ஆற்றிய சேவைகள் இவையே சர்வதேச கள்ளர் பேரவைக்கு கிடைத்துள்ள நல்முத்துக்கள். மேலும் மேலும் வளர்ந்து சேவைகள் புரிந்திட நல்லாசிகளுடன் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
செந்தில்குமரன் இராங்கியர்
இங்கிலாந்து


சர்வதேச கள்ளர் பேரவையின் மூன்று ஆண்டு கால வளர்ச்சியும், ஆற்றலும், சேவையின் உச்சமும் சகலவும் அடங்கிவிட்டது உன்பணியில். எத்தனையோ கள்ளர் வளர்ச்சிக் கழகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் செயல் பட்டாலும் சர்வதேச கள்ளர் பேரவைக்கு ஈடு இனை இல்லை. வளர்ந்து வாழ்க உன் தொண்டு.
ராமசுந்தரம் கங்கைநாட்டார்
ஏமன்