தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Saturday, November 23, 2013

கள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.

கள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்

செம்பியன் மாதேவி
Picture

பெரிய பிராட்டி என்றும் கள்ளர் குல பேரரசி என்றும் அழைக்கப்பெறும் ’’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001)
சித்திரை மாதம்  கேட்டை  நட்சத்திரத்தில்  மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர்  கண்டராத்தினாரை  மணந்தார். 

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின்  மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளானகுந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.

10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் (மழவராயர் குடும்பத்தில் பிறந்த ) இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே  செம்பியன் மாதேவி.

கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.

கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.

சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.

சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.

ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.

சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.

அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?

அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.

செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 90ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவி ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள்.  கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ  மாமன்னர்களின்ஆட்சியைக் கண்டவர்.

1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன். 
2. கணவர் கண்டராதித்த சோழன் 
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன் 
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்) 
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன் 
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் 

உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும். 

செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை 
1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்

புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.

கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை  பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.

இன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில் இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை  சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர். ஒரு சரித்திரப் பெண்மனியின்  வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரை உளமார வாழ்த்துவோம். 


திருநல்லம்

கோனேரிராஜபுரம்
Picture

திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
இறைவன் : ஸ்ரீ உமாமகேஸ்வரர்
இறைவி : ஸ்ரீ அங்காள நாய்கி
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம். பூமிதீர்த்தம். ஞானகூபம்.   
          
கல்லால நிழல்மேய கரைசேர் கண்டாவென்றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த எல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே
(திருஞானசம்பந்தர்)
நல்லனவற்றையெல்லாம் அள்ளித்தரும் நல்லவருள் ஸ்தலம் திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) மூர்த்தி தலம் தீர்த்தம் என மூவகையாளலும் சிறப்புற்று உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி நமக்கு நல்லது நல்லம் அடைவதே என அப்பர் பெருமானால் ஆராதிக்கப்பட்ட க்ஷேத்திரம் எனும் பெருமைக்கொண்ட இத்தலம் பூமிதேவியால் வழிப்பட்டதால். முன்னொருயுகத்தில் அசுரன் ஒருவன் பூமியை தூக்கி கொண்டுபோய் பாதாளத்தில் வைத்துவிட்டான். ஸ்ரீ மஹாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பூமியை வெளியில் கொண்டு வந்து பூமியைக் காப்பாற்றினார்.

பின் பூமிதேவியிடம் இதுபோல் மீண்டும் நடக்காதிருக்க சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் எனத் திருமால் கூற அதற்காண வழிமூறைகளை அவரிடமே கேட்டறிந்தாள். அதன் படியே பூஜைக்கான இடம் தேடினாள் பூமிதேவி. ஸ்ரீமஹாவிஷ்ணு நேத்ரார்ப்பணம் செய்து பல ரிஷிகள் வழிபட்ட தல்முமான திருவீழிமிலைக்கு வடமேற்கில் ஒரு அற்புதமான இடத்தைக் கண்டாள். அங்கே பத்ராஸ்வத்தம் (அரசமரம்) விருட்சமும் அதில் பலவித பறவைகள் கூடுகட்டி வாழ பிரம்மாவினால் ஏற்ப்படுத்தபட்ட பிரம்மதீர்த்தமும் இருக்கக் கண்டு இவ்விடமே பூமியைக்காக்க வரபெற வேண்டிய ஸ்தலம் என அறிந்தாள்.

தேவசிற்பியான விஸ்வகர்மா கோவில் அமைக்க வைகாசி மாதம் குருவரத்தில் உரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுபநாளில் விருஷப லக்கணத்தில் தேவகுருவாகிய பிருகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தருள; பூமாதேவி முறைப்படி வளிப்பட்டாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் தரிசனம் தந்து உலக உயிர்கள் பாவங்களிலிருந்து வீடுபட தீர்த்தம் ஒன்றை உண்டாக்க பூமிதேவியைப் பணிந்தார். பூமிதேவியால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் பூமி தீர்த்தமாகும்.

பரிகார சிறப்புகள்
உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் மாலை மாற்றிக்கொள்ளும் நிலையில் வீற்றிருந்து இத்தலம் வந்து வழிப்படுவோர்க்கு திருமணத் தடையை நீக்குகின்றனர். நல்லத்தான் நமையாளுடையான் சுழல் சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே என அப்பர் அருள் வாக்கிற்கிணங்க குழந்தையில்லா துயரம் இத்தலத்தில் தீரும். ஊழ்வினைப் பயனால் பில்லி சூனியம் பகை என எதிரி வழி வரும் எல்லாத் துயரமும் நல்லம் மேவிய நாதனடி தொழவெல்ல வந்த வினைப்பகைத் தீருமே என நவுக்கரசரின் நல்வாக்கிற்கு ஏற்ப இத்தல இறைவனை வழிபட பொல்லாத் துயரமும் பொடிப்பொடியாகும். புரூரவஸ் பிரதிஷ்டை செய்த ஸ்ரீவைத்திய நாதரை வழிப்பட்டு நோய் நீக்கியோர் ஏராளாமானோர்.

வரலாற்றுப் பாதையில் திருநல்லம்
சோழ சாம்ராஜியத்தின் செல்லக் கோயிலாக விளங்கியது திருநல்லம் கண்டாதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியாரால் கருங்கல் கற்றிளியாக்கப்பட்ட இக்கோயிலில் 42க்கும் மேற்பட்ட சோழ அரசர்கள் பெருபான்மையோரின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் மிகப்பெரிய அற்புதம் செம்பியன் மாதேவி காலத்து உலகின் மிகப்பெரிய நடராஜர் சிற்பம் சிற்பக்கலையின் சிகரமாக ஆறடி உயரத்தில் சிலிற்க்கவைக்கும் வகையில் உள்ளது.

சிறுபுன்னைகையில் உலக மாயையை அலட்சியமாகப் பார்க்கும் கம்பீரம் கண்கொள்ளாக் காட்சியாகும். விரிசடையில் நட்சத்திரங்களும் கொக்கிறமும் ஊமத்தம் பூவும் செருகிய முடியுடன் ஆடைகள் பறக்க அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்க அந்த இடமே பூமீயைக் காக்கும் இடம். கன்னத்தில் இயற்கையான மச்சமும் இடக்கை தோள்பட்டையின் கீழ் மருவும் தூக்கிய இடப்பாகத்தில் காயம் பட்டவடுவும் கொண்ட நடராஜரின் திருமேனி எங்கும் காணமுடியாத வார்ப்புக்கலை வடிவம். இலக்கியத்தில் அமரர் கல்கியின் சரித்திரப்படைப்பான பொன்னின் செல்வனின் திருநல்லம் பேரிடம் வகிக்கிறது. செம்பியன் மாதேவியார் இத்தலத்தில் கட்டிய வசந்தமாளிகையில் இராஜராஜ சோழன் (அருள் மொழிவர்மன்) தன் வருங்கால பட்டத்தரசியான வானதியை எதிர்பாராத விதமாக சந்திப்பதாக எழுதியுள்ளார். அப்பரும் ஞானசம்மந்தரும் இத்தலத்தைப் போற்றிப்பாடியுள்ளனர்.

திருநல்லம் (கோனேரிராயபுரம்) திருக்கோயில்
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்ககோனமையாள் வானல்ல நகரானே

என்று காழிப்பிள்ளை பாடும் திருநல்லம் எனும் ஊர் தற்போது கோனேரிராயபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அமைந்த பெயர் மாற்றமாகும். இவ்வூரில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் கண்டராதித்தம் எனும் கற்றளி எடுப்பித்து அதில் தம் கணவனின் திருவுருவத்தையும் இடம்பெறச் செய்தார். இத்தளி தற்போது உமாமகேசுவரர் திருக்கோயிலென அழைக்கப்படுகிறது.

இதன் தென்புறச் சுவரில் ஒரு சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில்
ஒரு சிவலிங்கத்திற்குப் பட்டர் ஒருவர் ஆடை சுற்றிக்கொண்டிருக்க எதிரே கால்களை மடித்து அமர்ந்த நிலையில் வணங்கும் கோலத்தில் கண்டராதித்தரும் அவருக்குப் பின்புறம் ஒரு கையில் வாளும் மறு கையில் சாமரமும் ஏந்தி நிற்பவரும் தாடியுடனும் கொண்டையுடனும் குடை தாங்கிக் கொண்டு பின்னால் அமர்ந்திருப்பவரும் காணப்படுகின்றனர்.

செம்பியன்மாதேவி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில்

ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில்
Picture

இறைவர் திருப்பெயர் : கயிலாசநாத சுவாமி.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி (பிருகந்நாயகி).
தல மரம் : அரசு
தீர்த்தம் : நான்மறை தடம்
வழிபட்டோர் : செம்பியன்மாதேவி, (இவருக்குப்பின் வந்த சோழ வம்சத்தினர்)


தல வரலாறு
  • சோழர் மரபில் தோன்றி தி.பி. 985 முதல் 989 வரையில் ஆட்சி செய்த கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியரான செம்பியன்மாதேவியாரால் இவ்வூர் அமைக்கப்பட்டதினால் "செம்பியன்மாதேவி" என்ற பெயருடன் விளங்குகிறது.
  • இக்கோயில் 'ஸ்ரீ கயிலாயம்' என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாச நாதர் திருக்கோயில் என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
  • இக்கோயில் 1 - 82 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
  • கிழக்கு மேற்காக 310 அடியும், வட தெற்காக 275 அடி நீளம், அகலம் கொண்டு இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
  • இக்கோயில் சிற்ப ஆகம விதிப்படி சிவன் கோயில்களுக்குரிய அங்கங்களுடன் சிறப்பாகவும் கற்றளியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ கயிலாயம் என்ற இத்திருக்கோயிலை புதிய கற்றளியாக கட்டியவர் செம்பியன்மாதேவியாரே.
  • இதுகாறும் கல்வெட்டுச் சான்றுகள் ஆராய்ந்து கண்ட அளவில் செம்பியன்மாதேவியார் தமிழகத்தில் செங்கற்கோயிலாகவும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்த பழங்கோயில்களுள் பத்துச் சிவன் கோயில்களைக் கருங்கல் திருப்பணியாகக் (கற்றளி) கட்டியுள்ளார். (அவை : திருநல்லம், திருமுதுகுன்றம் [விருத்தாச்சலம்], திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, ஆனாங்கூர், திருத்துருத்தி [குத்தாலம்], திருவக்கரை, திருச்சேலூர் என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களேயாகும்.)
  • இக்கோயிலிலுள்ள மண்டபமொன்று, செம்பியன்மாதேவி பெருமண்டபம் என்று பெயர் பெற்றது.
  • கருவறை விமானம் உயரமானது.
  • செம்பியன்மாதேவி உருவச்சிலை வழிபாட்டிலுள்ளது.
  • ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் செம்பியன்மாதேவியாரின் சித்திரைக் கேட்டைப் பெருவிழாவும் சிறப்புடன் நிகழும்.
  • இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் உள்ளன.
  • கல்வெட்டுக்களை 80 வருட முன்பு கல்வெட்டுத் துறையினர் படியெடுத்து ஆண்டறிக்கை வழியே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
  • கல்வெட்டுச் செய்திகளால் செம்பியன்மாதேவியார் வரலாற்றுடன் அக்காலச் சோழ மன்னர்களின் அறச்செயல்கள், உத்தம சோழனின் மனைவியர், செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரின் நிகழ்ச்சிகள் ஆகிய வரலாற்றுச் செய்திகள் புலனாகின்றன.
  • கல்வெட்டுக்களுள் உத்தம சோழன் காலத்து கல்வெட்டுக்கள் 8, முதல் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் 4, முதல் இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்கள் 4, முதல் இராசாதிராசன் காலத்து கல்வெட்டு 1, மூன்றாம் இராசராசன் காலத்து கல்வெட்டு 1, சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டுக்கள் 2, சிதைவுடன் உள்ள கல்வெட்டுக்கள் 3 ஆக 23 கல்வெட்டுக்கள்.
  • இக்கோயிலுக்கு நன்சென் 279 ஏக்கர், 81 செண்டும், புன்சென் 115 ஏக்கர் 10 செண்டும் உள்ளன.
  • செம்பியன்மாதேவியாரின் கணவரான கண்டராதித்தர் தில்லைப்பெருமான் மீது திருவிசைப்பா பதிகம் பாடியவர்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - நாகப்பட்டினம் இருப்புப் பாதையில், கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே தேவூர் என்ற பாடல் பெற்ற தலத்தையடைந்து, அவ்வூரிலிருந்து தென்கிழக்கே போகும் சாலையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில். ஆருர் அரநெறி.

அசலேஸ்வரர் கோயில்
Picture

மூலவர்:அசலேஸ்வரர், அரநெறியப்பர்
உற்சவர்:அரநெறியப்பர்
அம்மன்:வண்டார்குழலி
தல விருட்சம்:பாதிரி தீர்த்தம்:சங்கு தீர்த்தம், கமலாலயம்.
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆருர் அரநெறி
ஊர்:ஆருர் அரநெறி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு


பாடியவர்கள்:   
திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம்
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 88வது தலம்.

திருவிழா:   
மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.    

தல சிறப்பு:   
இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.   

திறக்கும் நேரம்:   
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.   

முகவரி:   
அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 திருவாரூர் மாவட்டம்.    போன்:    +91- 4366 -242 343, +91-94433 54302.    

பொது தகவல்:   
கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.

மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார்.
அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.

பிரார்த்தனை:   
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.   

நேர்த்திக்கடன்:   
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.    

தலபெருமை:   
கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.
அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

தல வரலாறு:   
நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், ""கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே.

அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,""இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,""அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான்.
இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சிறப்பம்சம்:   
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விஞ்ஞானம் அடிப்படையில்: 
அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்.  திருமணஞ்சேரி.

திருமணஞ்சேரி

Picture    
மூலவர்:உத்வாகநாதர்.
அம்மன்:கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை தீர்த்தம்:சப்தசாகரம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:மணஞ்சேரி, கீழைத் திருமணஞ்சேரி  ஊர்:திருமணஞ்சேரி மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு.
பாடியவர்கள்: தேவாரப்பதிகம்
அப்பர், சம்பந்தர்
விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.  
திருவிழா:                                                                                                                                 
சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாட்களில் ஊரே மணக்கோலத்துடன் காட்சி தரும். ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.   

தல சிறப்பு:    
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.    

திறக்கும் நேரம்:    
காலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.    

முகவரி:    
அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம்.    போன்:    +91 - 4364 - 235 002     

பொது தகவல்:    
இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.     பிரார்த்தனை    திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.

பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.   

நேர்த்திக்கடன்:   
திருமண வரம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து கல்யாணசுந்தரருக்கு கல்யாணஅர்ச்சனை செய்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டருளியுள்ள ராகு பகவானுக்குப் பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டால் ராகு தோசம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள்.சனீசுவரனுக்கு எள் தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றுகிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.    

தலபெருமை:   
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது. பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து அறிவிக்கிறார்.

இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.

குழந்தை வரம் : 
அம்மாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர்.

குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வளரி போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.

காமன் சாபம் நீங்கப் பெற்ற தலம் : 
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.

இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: 
தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.

தல வரலாறு:   
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.

ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.    சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

தெங்குரங்காடுதுறை

ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
Picture

தெங்குரங்காடுதுறை
இறைவன் : ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
இறைவி : பவளக்கொடியம்மை
தீர்த்தம் : ஆபத்சகாய தீர்த்தம்

சுக்ரீவன் வழிபட்ட தலம்
திருஞான சம்பந்தராலும்,அப்பராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இத்தலக்கோயிலில் சுக்ரீவன் ஆபத்சகாயேஸ்வரனை வழிபடுவது போன்ற கதைச் சிற்பம் உள்ளது.

இராமாயணத்தில் வாலி சுக்ரீவனைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது கிஷ்கிந்தையின் அரசரான வாலி தன் தம்பி சுக்ரீவனுடன் ஆட்சி செய்து வந்தான். அப்போது வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே நடைப்பெற்ற போரில் மாயாவி வாலியிடம் தோற்று ஒரு குகைக்குள் ஒட வாலி அவனைக் கொல்லாமல் விடுவதில்லை என்று குகைக்குள் சென்று விடுகிறான் பல நாட்கள் ஆகியும் வாலி வெளியே வரவில்லை. இதனால் வாலி இறந்து விட்டான் என்றெண்ணி குகையின் வாயிலை ஒரு பாறையால் முடிவிட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறான் சுக்ரீவன். பல நாள் கழித்து மாயாவியை கொன்று விட்டு மூடியிருந்த பாறையை தகர்த்து விட்டு வருகிறான் வாலி.
சுக்ரீவன் அரசனாக இருப்பதை அறிந்து தன்னை சதிசெய்து ஏமாற்றிவிட்டான் சுக்ரீவன்
என்று தவறாக எண்ணி சுக்ரீவனை அடித்து விரட்டி விட்டு அவன் மனைவியையும் கவர்ந்து கொள்கிறான் வாலி.

அப்படி அடித்து விரட்டப்பட்ட சுக்ரீவன் வாலிக்கு பயந்து சுற்றியலைந்த போது இத்தல இறைவனான ஆபத்சகாயேஸ்வரரை வணங்கி அருள் பெற்று பின்னரே ஸ்ரீராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துனையினால் கிட் கிந்தையின் அரசனாகிறான்.

சிற்பச்செய்தி
சோழமண்டலத்துத் திரை மூர்நாட்டுக் தெங்குரங்காடுதுறை எனக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆடுதுறையில் திருகுரங்காடுதுறை மகாதேவர் திருக்கோயில் உள்ளது. பரகேசரி உத்தம சோழனுடைய கல்வெட்டொன்று இத்திருக்கோயிலைக் கற்றளியாகப் புதுக்கியவர் சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடுகிறது. இக்கோயில் ஆபத்சகாய யேசுவரர் திருக்கோயிலெனத் தற்போது அழைக்கப்படுகிறது.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 13கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை (தெங்குரங்காடு துறை)

இக்கற்றளியில் கருவறையின் சுவரில் கண்டாதித்த தேவர் சிவலிங்கத்தை வணங்கும் திருக்கோலத்தில் சிற்பமாகக் காணப்படுகிறார். செம்பியன் மாதேவியார் கட்டுவித்த திருக்கோயில்களில் தம் கணவரான கண்டாதித்தரின் உருவச் சிலைகளை எடுத்துள்ளது நோக்குதற்குறியது.

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்

கோடீஸ்வரர் திருக்கோயில்
Picture
 இறைவன்:திருக்கோடிஸ்வரர்.        இறைவி:வடிவாம்பிகை.                                    தீர்த்தங்கள் :சிருங்க தீர்த்தம்,காவிரி நதி.      தலவிருட்சம் :பிரம்ம மரம்.  தலப்பெயர்கள்: திருக்கோடிக்கா.                            தலமும் இருப்பிடமும்:கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு களிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது.

சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.

ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.

செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம்.

செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்துதான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோகச்சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலே கூறிய செய்திகளைத்தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது.

கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

தினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்துவந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.

பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது.

கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன.

இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள்.

வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ளபூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார்.

கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

திருவக்கரை

திருவக்கரை
Picture

சிவஸ்தலம் பெயர்: திருவக்கரை
இறைவன் பெயர்: சந்திரசேகரர்
இறைவி பெயர்: வடிவாம்பிகை
பதிகம்: திருஞானசம்பந்தர்

வராக ந்திக்கரையில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி த்ன் வாயால் உறிஞ்சினாள்.வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷடபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

அஷடபுஜகாளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேநே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரித கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.

2வது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும், முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளதயும் காணலாம். இதற்குக் கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. வலமாக வந்து படிகளேறி மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். துவார பாலகர்கள் இருபுறமும் உளர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகர், துர்க்கையஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகிறது

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.

வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாளு வரதராஜப்பெருமாள் என்ற பெயருடம் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.

வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604304
இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

சந்திரமவுலீஸ்வரர் ஆலயம்
Picture

மூலவர்: சந்திரமவுலீஸ்வரர் 
அம்மன்: அமிர்தாம்பிகை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரியபுஷ்கரிணி
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: வக்ராபுரி
ஊர்: திருவக்கரை
மாவட்டம்: விழுப்புரம்
மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்

ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 30வது தலம்.

திருவிழா:
சித்ரா பவுர்ணமி - வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் - 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு - சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.
தல சிறப்பு:
மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.

பொது தகவல்:
இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
சுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான்.
அம்பாளின்  பிறபெயர்கள்: அமிர்தாம்பிகை,வடிவாம்பிகை.

பிரார்த்தனை:
இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.

நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேர்த்திக்கடன்:
திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர்,விபூதி, சந்தனம்,பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிசேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிசேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம்செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

தலபெருமை:
இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார்.

தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.

எல்லாமே வக்கிரம்: 
கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

பவுர்ணமி இரவு 12 மணிக்கு - அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் - வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.

வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள்.

வக்ர சனி: 
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது.  அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு:
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

வக்ரகாளியம்மன்: 
வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.

சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.

முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 
மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். 

Picture
இரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் இது என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு நிறைய சிறப்புகளையும் சொல்கிறார்கள்.

தொண்டை மண்டலத்தில் (காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தமிழகத்தின் வடபகுதி) முப்பத்தியிரண்டு சிவத்தலங்கள் குறித்து தேவாரத்தில் குறிப்புகள் உள்ளன. அந்த முப்பத்தியிரண்டில் இந்தத் தலம் முப்பதாவது தலம்.

தேவர்களைத் துன்புறுத்திய வக்ராசுரனை பெருமாள் வதம் செய்ய அவன் தங்கையை காளி வதம் செய்கிறாள். வதம் செய்யும் நேரத்தில் வக்ராசுரனின் தங்கை கர்ப்பவதியாக இருக்க, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் தன் காதுகளுக்குக் குண்டலமாக அணிந்து இங்கேயே அமர்கிறாள் காளி.

இங்கே சந்திர மௌலீஸ்வரர் முக வடிவு கொண்டு காட்சி தருகிறார். அதாவது, பொதுவாக சிவன் சன்னதியில் லிங்க வடிவையே நாம் காண்போம். இங்கே கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று திசைகளிலும் மூன்று முகங்கள் கொண்டு காட்சி தருகிறார் பெருமான். நேபாளத்திற்குப் பிறகு இத்தகைய தோற்றம் இங்கேதான் உண்டு என்று குருக்கள் சொன்னார்.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலம் இது.
சனீஸ்வரர் தெற்கு நோக்கி காக வாகனத்துடன் காட்சி தருகிறார்.
சிவன் கோயிலுக்குள்ளே வரதராஜ பெருமாளுக்கும் தனியே பெரிய சன்னதி உண்டு.
மூல்வர், நந்தி, கொடிக்கம்பம் - இவை மூன்றும் நேர்க்கோட்டில் அமைந்தவை அல்ல. இது ஒரு வக்ரம் என்கிறார்கள்.

சந்திரமவுலீஸ்வரர் ஆலயம்

Picture

திருவக்கரை திருக்கோயில் தல புராணம்.  இறைவர் திருப்பெயர் : சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று. மற்றொன்று சிதிலமாகியுள்ளது)
வழிபட்டோர் : வக்கிராசுரன்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - கறையணி மாமிடற்றான்.
தல வரலாறு :
வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.

குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.
சிறப்புகள்:
"வராகநதி " என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.

மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தை.
இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி " உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.

சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.

சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.

உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.

அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.

நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.

மாதேவி தஞ்சைக்கு அனுப்பிய நந்தி
Picture

செம்பியன் மாதேவி தஞ்சை பெருஉடையாருக்கு  அனுப்பிய  பிரம்மாண்டமான நந்தி.

ஒவ்வொரு ஊராக சென்று, தங்கி, அங்குள்ள பழைய செங்கல் கட்டுமான கோயில்களை கற்றளிகளாக மாற்றிக் கொண்டே வந்தவர் ராஜ ராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்கள், திருவக்கரையில் உள்ள "வக்கிரகாளி அம்மன்" ஆலயத்தை திருப்பணி செய்துகொண்டிருந்த போது, அது வரை எந்த தேசமும் பார்த்திராத அளவான, நான்கு பனை உயர அளவிற்கு தஞ்சையில் ஒரு கோயிலை ராஜ ராஜன் எழுப்புகிறான் என்ற செய்தி கேட்டு, தன்னுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க வேண்டும் என்று ஒரு நந்தியை பரிசாக "திருவக்கரையிளிருந்து" வராக நதிக்கரை வழியாக அனுப்பி வைக்கிறார்,

நந்தி வராக நதியில் சென்ற போது பெரு வெள்ளம் வந்து ஆற்றில் சிக்கிக்கொண்டு தஞ்சைக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி விட்டது. தஞ்சை பெருஉடையாருக்கு எதிரே கம்பீரமாக உட்கார வேண்டிய நந்தி, தற்போது திருவக்கரை அருகில் உள்ள "சன்னியாசி குப்பம்" என்ற இடத்தில் அனாதையாக நின்று கொண்டுள்ளது, இது குறித்து "கவிழ்ந்த பொக்கிஷம்" என்ற தலைப்பில் "பால குமாரன்" அவர்கள் 90 களில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நந்தி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை படத்தில் இருக்கும் மனிதர்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

திருவக்கரை தொல்லியல் அகழாய்வு.

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி.
திருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது.  நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய  தளம் ஆகும்  இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்நாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகும். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.

அகழாய்வுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் முனைவர் சா. குருமூர்த்தியின் தலைமையில் திட்டையின் (mound) உச்சிமேல் நிகழ்த்தப்பட்டன. அகழிகள் வாழிடப் பரப்பிலும் தோண்டப்பட்டன, ஆனால் குறைந்த அளவான மட்கலங்களும் சிறு தொல்பொருள்களுமே திரட்டப்பட்டன. அகழாய்ந்த அகழியில் பெரும்பால் அடுக்குகள் வறிதாகவே இருந்தன. இது ஒரு போலிப் புதைப்புத் தளமாகலாம்.

இத்தளத்தின் காலக் கணக்கீடு கி.மு. 1000 அல்லது அதற்கும் முன்பு எனப் பொருத்தலாம் ஏனெனில் நிலத்தியல் பொருள் மற்றும் சான்றின் அடிப்படையில் இத்தளத்தின் தொன்மை முந்து வரலாற்றுக் காலத்திற்கும் முன்பாகச் செல்கின்றது.

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு).

நன்றி.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி'  

திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில்.

உக்தவேதீஸ்வரர் கோயில். குத்தாலம்
Picture


திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில். 
மூலவர்:உத்தவேதீஸ்வரர்.
அம்மன்:அரும்பன்ன வனமுலைநாயகி
தல விருட்சம்:உத்தாலமரம்
தீர்த்தம்:பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை:காரண, காமீகம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருத்துருத்தி, குற்றாலம்
ஊர்:குத்தாலம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
சம்பந்தர், அப்பர்,சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இறைவன்: வீங்கு நீர் துருத்தி உடையார்
இறைவி: அரும்பன்ன வனமுலை அம்மை
தீர்த்தம்: காவிரி, வடகுளம்

பாடியவர்கள்:   
தேவாரப்பதிகம்
திருஞானசம்பந்தர்

கங்குல் கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வ தென்கொலோ.
திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 37வது தலம்.   

திருவிழா:   
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.    

தல சிறப்பு:   
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.   

திறக்கும் நேரம்:   
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   

முகவரி:   
அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி)-609 801. நாகப்பட்டினம் மாவட்டம்.   
போன்:    +91- 4364-235 225    

பொது தகவல்:   
இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.    

பிரார்த்தனை:  
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.   

நேர்த்திக்கடன்:   
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.    

தலபெருமை:   
பாம்பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.

மூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.

தல வரலாறு:   
காதல் புரிந்தோம் என்பதற்காக பெற்றவர்களைப் பகைத்துக் கொண்டு காவல்நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள். அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும் படி இறைவனிடம் கேட்டாள்.

நற்குணமுடைய இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும். பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.

இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள்.

எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே! என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார்.

சில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, "உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.

சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் "குத்தாலம்' எனப்பட்டது.

சிறப்பம்சம்:   
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment