தஞ்சை கள்ளர் உலகம்

கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள், முயன்றால் முடியாதவற்றிற்கும் முடிவுரைகளால் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரிதாய், அருமருந்தாய், என்றும் இளமை நல்கும் குணமுடைய ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட வம்சமிது.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கள்ளர்குல முன்னோர்கள் நமக்கொனச் சேகரித்து வைத்துச்சென்ற கலாச்சார பண்புகளை இக்கால இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதில் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்.
கள்ளர்குல சந்ததியினர்களாக இந்நாளில் சாதிப்போம்.
நம் வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

நிமிர்ந்து நிற்க நமக்கேது தடை?
ஆநிறை கவர்ந்து அடிமை கொண்ட நாடுகள் எத்தனை?
காடழித்து களனி படைத்த களஞ்சியங்கள் எத்தனை?
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கும்போது அதில் நாம் சிற்பமா?
சிதறி விழும் கற்துண்டுகளா?
சிந்திப்போம் செயல்படுவோம்.

கள்ளர் வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை. அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை. வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் என பெருமை கொள்வோம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம்.

அகர எழுத்துக்களில் கள்ளர் பெருமை.
டங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
நிறை கவர்ந்தவரும் கள்ளரே.
ந்திரனும் கரிய கள்ளரவரே.
சனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
ழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ர் காத்தவரும் கள்ளரே.
ளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
னாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ங்காரம் பாடியவரும் கள்ளரே.
வைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அன்பு செலுத்துபவர்கள் நாமாக இருப்போம்.
என்றும் அன்புடன்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
லண்டன்.
இங்கிலாந்து.


இனையதள முகவரிகள்.
1. www.kallarperavai.weebly.com
2. www.kallarperavai.webs.com
3. www.kallarperavai.hpage.com
4. www.kallarperavai.blogspot.com
5. www. thanjaikallarulagam.blogspot.com

மின்னஞ்ஞல் முகவரி.
kallarperavai@yahoo.co.uk

Sunday, November 24, 2013

சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள்.

சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள். (தமிழர் வரலாறு - History of Tamil ) 
புறநானூறு பாடல்களில் இருந்து பெறப்பட்ட சோழமன்னர்களின் பெயர்கள். தோராயமாக அறியபட்ட அவர்களின் ஆட்சி காலங்கள்.

ஏறி ஒலியன் வேந்தி 3023 B.C.E 
மாந்துவாழி C. 2980 B.C.E 
எல் மெய் நன்னன் C. 2945 B.C.E 
கீழை கிஞ்சுவன் C. 2995 B.C.E 
வாழிசை நன்னன் C. 2865 B.C.E.
மெய் கியகுசி ஏற்று C. 2820 B.C.E.
ஆய் குழி அகுசி ஏற்று C. 2810 B.C.E.
திழகன் மாந்தி C. 2800 B.C.E.
மாந்தி வேலன் C. 2770 B.C.E.
ஆய் அடும்பன் C. 2725 B.C.E.
ஆய் நெடுஞ செட் சோழ தகையன் C. 2710 B.C.E.
எல் மெய் ஆக்குவன் (அ) கீழ் நெடு மன்னன் C. 2680 B.C.E.
முடிகோ மெய் காளையன் தகையன் C. 2650 B.C.E.
இளங்கோ கீழ் காளையன் தகையன் (எ) இலங்கீழ் நன்னன் C. 2645 B.C.E - இவருடைய சகோதரர் ஆய் கீழ் நன்னனால் கடம்பர் வழி தோற்றம். 
காளையன் குடின்ஞான் C. 2630 B.C.E.
நெடுங்காளையான் தகயன் C. 2615 B.C.E.
வேங்கை நெடுவேல் வரையன் C.2614 B.C.E.
வேட்கால் குடின்ஞான் C. 2600 B.C.E.
மெய்வேல் வரையன் C. 2590 B.C.E.
சிபி வேந்தி C. 2580 B.C.E.
பருநோஞ்சி சாமழிங்கன் C. 2535 B.C.E.
செம்பிய சோழன் C. 2525 B.C.E.
சாமழி சோழிய வேளாண் C. 2515 B.C.E.
உதிவேன் காளை தகன் C. 2495 B.C.E.
நன்னதட் காளை தகன் C. 2475 B.C.E.
வேல் வேன் மிந்தி C. 2445 B.C.E.
நெடுஞ் செம்பியன் C. 2415 B.C.E.
நெடுனொஞ்சி வேந்தி C. 2375 B.C.E.
மெய்வேல் பகற்றி C. 2330 B.C.E.
ஆய் பேருண் தோன்னொஞ்சி C. 2315 B.C.E.
குடிக்கோ புங்கி C. 2275 B.C.E.
பெருங்கோப் பொகுவன் C. 2250 B.C.E.
கோத் தற்ற்ரி C. 2195 B.C.E.
வடிசெம்பியன் C. 2160 B.C.E.
ஆலம் பொகுவன் C. 2110 B.C.E.
நெடுஞ்செம்பியன் C. 2085 B.C.E.
பெரும்பெயர் பொகுவன் C. 2056 B.C.E.
கடுஞ்செம்பியன் C. 2033 B.C.E.
நெடுங்கதன் C. 2015 B.C.E.
பருநக்கன் C. 1960 B.C.E.
வனிசெம்பியன் C. 1927 B.C.E.
உதசிர மொந்துவன் C. 1902 B.C.E.
பெருங்கத்தன் C. 1875 B.C.E.
கடுங்கன்தலன் C. 1860 B.C.E.
நக்கமொஞ்சுவன் C. 1799 B.C.E.
மார்க்கொவேல் மாந்துவன் ஆத்திக்கோ C. 1786 B.C.E.
முசுகுந்தன் வேந்தி C. 1753 B.C.E.
பெருனக்கன் தற்ற்ரி C. 1723 B.C.E.
வேர்கத்தன் C. 1703 B.C.E.
அம்பலத்து இருமுன்றுவன் C. 1682 B.C.E.
காரிமொந்துவன் C. 1640 B.C.E.
வேன்னக்கன் தற்ற்ரி C. 1615 B.C.E.
மார்கோ சுந்துவன் C. 1565 B.C.E
வேற்பருந்தோன் முன்றுவன் C. 1520 B.C.E.
உதன்கத்தன் C. 1455 B.C.E.
காரிகோ சுந்துவன் C. 1440 B.C.E.
வென்றி நுன்குணன் C. 1396 B.C.E.
மோந்துவன் வேந்தி C. 1376 B.C.E.
காந்தமான் C. 1359 B.C.E.
முன்றுவன்வேந்தி C. 1337 B.C.E.
காந்தமான் C. 1297 B.C.E.
மொஞ்சுவன் வேந்தி C. 1276 B.C.E.
அனிசெம்பியன் C. 1259 B.C.E.
நுன்குணன் வேந்தி C. 1245 B.C.E.
மாற்கொப்பெரும் சென்னி C. 1229 B.C.E.
மொஞ்சுவன் நன்வேந்தி C. 1180 B.C.E.
கோப்பெருனர் சென்னி C. 1170 B.C.E.
மோந்துவன் செம்பியன் C. 1145 B.C.E.
நற்சென்னி C. 1105 B.C.E.
செட்செம்பியன் C. 1095 B.C.E.
நக்கர் சென்னி C. 1060 B.C.E.
பருண் செம்பியன் C.1045 B.C.E.
வெஞ்சென்னி C. 998 B.C.E.
முசுகுந்தன் C. 989 B.C.E.
மார்கொப் பெருஞ்செம்பியன் C. 960 B.C.E.
நெடுஞ்சென்னி C.935 B.C.E.
தட்செம்பியன் C. 915 B.C.E.
அம்பலத்து இருவேர் செம்பியன் C. 895 B.C.E.
காரிகோ சென்னி C. 865 B.C.E.
வேன்வேர் சென்னி C. 830 B.C.E.
கந்தமன் C. 788 B.C.E.
கந்தலன் C. 721 B.C.E.
செட் சென்னி C. 698 B.C.E.
வணி நுன்குணன் C. 680 B.C.E.
முதுசெம்பியன் வேந்தி C. 640 B.C.E.
பீலன் சேம்பிய சோழியன் C. 615 B.C.E.
மேயன் கடுங்கோ C. 590 B.C.E.
தித்தன் C. 570 B.C.E.
பெருநற்கிள்ளி போர்வைக்கோ C. 515 B.C.E.
கடுமுன்றவன் C. 496 B.C.E.
கோப்பெருஞ்சோழன் C. 495 B.C.E.
நற்கிள்ளி முடித்தலை C. 480 B.C.E.
தேவ்வன் கோ சோழன் C. 465 B.C.E.
நரன் செம்பியன் C. 455 B.C.E
நக்கன் பீல வளவன் C. 440 B.C.E.
இனியன் தேவன் சென்னி C. 410 B.C.E.
வர்செம்பியன் C. 395 B.C.E.
நெடுந்செம்பியன் C. 386 B.C.E.
நக்கன் அரண் சோழன் C. 345 B.C.E.
அம்பலத்து இருங்கோ சென்னி C. 330 B.C.E.
பெருநற்கிள்ளி C. 316 B.C.E.
கோ செட் சென்னி C. 286 B.C.E.
செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E.
நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E.
சென்னி எல்லகன் C. 205 B.C.E. - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
பெருங்கிள்ளி C. 165 B.C.E.
கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E.
பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E.
பெரும்பூட்சென்னி C. 100 B.C.E.
இளம்பெருன்சென்னி C. 100 B.C.E.
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E.
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E.
ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E.
உருவபக்ரர் இளஞ்சேட்சென்னி C. 10 - 16 C.E.
16 C.E. - 30 C.E. உறையூர் சோழர்கள் ஆட்சி 
கரிகாலன் II பெருவளத்தான் C. 31 C.E.
வேர் பெருநற்கிள்ளி C. 99 C.E.
பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய C. 99 C.E.
நலங்கிள்ளி C. 111 C.E.
பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E.
பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட C. 143 C.E.
வேல் கடுங்கிள்ளி C. 192 C.E.
கோச்செங்கனான் C. 220 C.E. நல்லுருத்திரன் C. 245 C.E.


தொன்மச் சோழர்கள்

Picture
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள்.
உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள்.
உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள். 
மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழர் குலம்.
கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

சோழ மரபினர்.
சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.

சோழர்களின் கொடி புலிக்கொடி . சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம்
அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில்
கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி .

ஆத்தி. 
ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 - 2 அங்குல நீளமிருக்கும்.இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள்5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்
கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 - 12 அங்குல நீளமும் 3/4 - 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.

சோழர் ஆட்சியின் வரைவிலக்கணம் என்ன?
நடுநிலை தவறாத ஆட்சி.
விழுப்புண்படாத நாளெல்லாம் வாழ்ந்தும் வீணான நாட்கள் என்ற படை மறவர்கள்
அறம் உரைக்கும் புலவர் பெருங்குடி மக்கள்
சான்றோர் நிறைந்த சமூகம்
அறநெறி பிறழாத குடிமக்கள்
நடுநின்ற நன்நெஞ்சு படைத்த வணிகர்கள்.

தொன்மச் சோழர்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்

தொன்மச் சோழர்.
மூவருலாவில் அடங்கியுள்ள விக்கிரம சோழன் உலா நூலில் அந்த நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுக்கு முன்னர் ஆண்டதாகச் சோழர் பரம்பரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். அவர்களில் பழங்கதைகளாகத் தெரியவரும் சோழர்களைத் தொன்மச் சோழர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களில் வரலாற்றுச் சோழர்களாத் தெரியவரும் சோழர்களும் உள்ளனர்.
வரிசை பாடலில் காட்டப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சோழ அரசர்கள்.
  • பிரமன், உலகம் படைத்தவன்
  • காசிபன், பிரமன் மகன்
  • மரீசி, மேதக்க மையறு காட்சியன்
  • சூரியன், எல்லாளன், ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன்
  • மனுச்சோழன், பசுவுக்கு நீதி வழங்கியவன்
  • ஆடுதுறை அறனாளன், புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன்
  • வானூர்தி அரசன்
  • தேவருலகைக் காத்தவன்
  • வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன்,
  • முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன்
  • தூங்கும் எயில் எறிந்த சோழன்
  • மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன்
  • நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன்
  • சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன்
  • காவிரி தந்தவன், குடகு மலையைப் பிளந்து காவிரியாற்றைச் சோழநாட்டில் பாயச் செய்தவன்
  • இமயத்தில் தன் ஆண்-புலிச-சின்னத்தைப் பொறித்தவன்
  • காவிரியாற்றுக்குக் கரை கட்டியவன்
  • களவழி நாற்பது பாடலைக் கேட்டுக் கணைக்காலிரும்பொறையின் கால் விலங்கை நீக்கியவன்
  • தொண்ணூற்றாறு விழுப்புண் கொண்ட சோழன்
  • தில்லைக்குப் பொன் வேய்ந்தவன்.
  • ஒரே பகலில் 18 பாலைநிலங்களையும், மலைநாட்டையும் (சேரநாட்டையும்) வென்றவன்
  • கங்கையையும், கடாரத்தையும் தன் படையை அனுப்பி வென்றவன்
  • வங்கநாட்டுக் கல்யாணபுரத்தை மூன்று முறை தாக்கி அழித்தவன்
  • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன்.
  • திருவரங்கப் பெருமானுக்கு மணிகளாலான பாம்புப்படுக்கை அமைத்துக் கொடுத்தவன்
  • கூடல் சங்கமப் போரில் 1000 யானைகளை வெட்டி வீழ்த்திப் பரணி நூல் கொண்டவன்

சங்ககாலச் சோழர்கள்
மனுநீதிச் சோழன் மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

இலக்கியக் குறிப்புக்கள்
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக்  கண்ணகி  குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

கதை
மனுநீதிச் சோழனது மகன், தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு ஆ கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனை தேரேற்றிக் கொன்றான்.

மகாவம்சம்
கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளிநூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது.

சிபிச் சக்கரவர்த்தி 
சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.

'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.

புறநானூறு
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.

சிலப்பதிகாரம்
தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.

கொடைமடம்
பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படிபெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்

சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி.  

இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் விளங்கும் சோழ மன்னர்கள் ஐவருள் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பவன் ஒருவன்.

பாமுள்ளூர் என்பது சேர அரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர். இவ்வூர்க் கோட்டையை வென்றழித்த காரணத்தால் இவன் இந்த அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.

புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனைக் கண்டு பாடி, சில அறிவுரைகளும் கூறி, பரிசில் வழங்குமாறு வேண்டுகிறார்.
  • மாற்றார் மதில்களைக் கைப்பற்றுமுன்பே இரவலர்களுக்கு அதனைப் பரிசாக வழங்கும் பண்புள்ளவனாம்.
  • முன்பே பரிசில் பெற்றுச்சென்றார் என எண்ணிப் பார்க்காமல் வழங்க வேண்டுமாம்.
·
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. 
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி.
  • பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ விளக்கம்’  இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம்.
  • இவனுக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, மலையமான் திருமுடிக்காரி சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான்.
  • சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர்.
  • மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன்.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. 
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.  இவனது இறுதிக் காலம்  இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் நிறைவுற்றது.
  • இவன் வேல் தாங்கித் தேரேறிப் போருக்குச் செல்வது வழக்கம். 
  • இவனைத் தாக்கியவர் வாழக் கண்டதும், அடி தொழுதவர் வருந்தக் கண்டதும் இல்லையாம்.
  • நெல்வயலில் களையெடுக்கும் உழத்தியர் சிறந்த ஆம்பல், நெய்தல் பூக்களைக் களைந்து எறிவார்களாம்.
  • உழவர் விலாப் புடைக்க புதுநெல் சோறு தின்றுவிட்டு நெல்கட்டுகளைச் சுமந்து செல்லும்போது நடை தடுமாறுவார்களாம்.
  • உழவரின் சிறுவர்கள் வைக்கோல் போரில் ஏறி இளநீரையும், நுங்கையும் பறித்து விளையாடுவார்களாம்.

சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன்.
  • இவன் குதிலை பூட்டிய தேரில் ஏறிப் போரிட்டது, கடலில் தோன்றும் ஞாயிறு போன்று இருந்ததாம். இவனது வாள் குருதிக்கறை பட்டுச் செவ்வானம் போலவும், தாள் கொல்லேற்றின் தந்தம் போலவும், தோல் என்னும் மார்புக் கவசம் அம்புத் துளை பட்டு விண்மீன்கள் போலவும், குதிரைப்படை பாயும் புலி போலவும், களிறு கோட்டைக் கதவுகளைக் குத்தி கூர் மழுங்கிய திலையிலும் காணப்பட்டவாம்.
  • ’வயமான் சென்னி’ எனப் பாராட்டித் தன் வறுமையைப் போக்குமாறு புலவர் வேண்டுகிறார்.   
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்.
சங்க காலச் சோழ அரசர்களில் இருவர் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது காலமானார்கள். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்போர் அவர்கள்.

கோவூர் கிழார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

பிட்டை சேர வேந்தர்களில் ஒருவன்.

கொங்குநாட்டுக் கருவூரை இந்தக் கிள்ளிவளவன் வீழ்த்தியபோது அதன் அரசன் பிட்டை உடல் காயத்தாலும், உள்ள உளைச்சலாலும் பெரிதும் வருந்தினான். இந்தப் போர்  வஞ்சி முற்றம் என்னுமிடத்தில் நடந்தது. இவன் தன் நண்பர்களுக்கு எல்லா நலன்களும் உதவும் பண்பினன்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன்.
இவனைப் பாடிய புலவர்கள்:
  1. ஆடுதுறை மாசாத்தனார்
  2. ஆலத்தூர் கிழார்
  3. ஆவூர் மூலங்கிழார்
  4. இடைக்காடனார்
  5. ஐயூர் முடவனார்
  6. கோவூர் கிழார்
  7. தாயங்கண்ணனார்
  8. நல்லிறையனார்
  9. மாறோக்கத்து நப்பசலையார்
  10. வெள்ளைக்குடி நாகனார்
ஆகியோர். 

இவனைப் பற்றிய செய்திகள்
புறநானூற்றில் இவனைப் போற்றிப் பாடிய பாடல்கள் 18 உள்ளன. மேலும் இவன் புலவனாக விளங்கிப் பாடிய இவனது பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.

தோற்றம்
  • பசும்பொன் ஆரமும் கழுத்துமாக இவன் விளங்கியிருக்கிறான். ’பசும்பூண் வளவன்’  ‘பொலம்பூண் வளவன்’  என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இதனால்தான்.
முன்னோர்
  • புறாவுக்காகத் தன்னைத் துலாக்கோலில் நிறுத்துத் தந்தவன். தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோர் இவனது முன்னோர். 
வள்ளல் 
கொடையாளி
  • இவனது அரண்மனையில் அடுதீ அல்லது சுடுதீ இல்லையாம். உணவு சமைப்பதும் வழங்குவதும் நிகழ்ந்துகொண்டே இருக்குமாம்.
  • பாணர்க்கு நிலையான செல்வம் வழங்கினான். வடகிழக்குப் பருவ மழையால் சோழநாட்டில் பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல நாள் இந்த வளவன் வாழவேண்டும். 
  • பாணர்களுக்குப் பொன்னால் செய்த தாமரைகளைப் பரிசாக வழங்கினான்.
  • இவன் சுடச்சுட அளித்த விருந்து உண்ட வியர்வை அல்லது புலவர்க்கு வேறு வியர்வை இல்லையாம்.
  • புலவரின் சுற்றத்தார் அனைவருக்கும் நல்லுணவு, நயவுடை தந்து பேணினானாம். [8]
  • வைகறைப் பொழுதில் வழங்கியிருக்கிறான்.
கொடையாளியைப் போற்றிய புலவன்
  • சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் பண்ணனை தனது வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வாழவேண்டும் என வாழ்த்துகிறான். 
ஆட்சி
போரும், புலவர் அறிவுரையும்
  • உடையோர் ஈவதும், இல்லோர் இரத்தலும் கடவது அன்று என்றாலும் வேறு வழியில்லை என்று இவனிடம் புலவர் கூறுகிறார். 
  • காலம் பார்க்காமல் போர் தொடுப்பவன். 
  • இவன் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனின் காவல் மரங்களை வெட்டினான். அதன் ஓசையைக் கேட்டுக்கொண்டு, சோழனுக்குப் பயந்து சேரன் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். இத்தகைய பயந்தாங்கொள்ளியோடு போரிடுவது இழுக்கு என்று வளவனுக்கு எடுத்துரைத்தார். 
  • ’செம்பியன் மருகன்’ என இவன் போற்றப்படுகிறான். வேந்தன் (சேரன்) உள்ளே இருக்கும்போதே கோட்டையைச் சிதைத்தவன். 
  • பகைவர் (சேரன்) முடியால் தனக்கு வீரக்கழல் செய்துகொண்ட இவன் இனிய சொல்லும், எளிய காட்சியும் தருபவனாக விளங்க வேண்டும். [15]
  • புலவரெல்லாம் இவனை நோக்கும்போது இவன் மாற்றார் மண்ணையே நோக்குவானாம். 
  • மலையமான் மக்களை இவன் யானைக் காலடியில் இடும்போது, குழந்தைகள் அழுகை மறந்து வேடிக்கை பார்ப்பதைச் சொல்லிக் காட்டி, வளவனின் கொடுமையைத் தடுத்து நிறுத்தினார். 
உழவரின் வரிக்கடனைத் தள்ளுபடி செய்தவன்
  • அரசனின் வெண்கொற்றக் குடை அவனுக்கு நிழல் தருவதற்காக அன்று, குடிக்களின் துன்பம் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காக எனவும், அரசன் வெறும் வெற்றிகள் அவனது படையால் விளைந்தவை அன்று, உழவர் உழும் படைச்சாலில் விளைந்தவை என்றும் அறிவுறுத்திப் பாடி, வறுமை காரணமாக அரசனுக்குத் தான் செலுத்த முடியாமல் நிலுவையில் இருந்த நிலவரிச் சுமையிலிருந்து விடுதலை பெற்றார். 
ஆட்சிப் பரப்புஇவன் காவிரிப் படுகையை ஆண்டவன் எனக் குறிப்பிடப்படுவதாலும், கொங்கு நாட்டை வென்றான் எனத் தெரிவதாலும் இன்றைய தமிழ்நாட்டின் காவிரிப்படுகை நிலப்பரப்பு முழுமையும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்ததை அறியமுடிகிறது.

இறுதிக்காலம்.
  • இவனை யாராலும் கொல்ல முடியாது. இவன் கொடையாளி ஆகையால் எமன் (குளமுற்றம் என்னும் ஊரிலிருந்தபோது) இவனிடம் இரந்து இவனது உயிரைப் பெற்றான் போலும் என்கிறார் புலவர். 
  • பகைவர் பலரது உயிர்களைக் கொன்று எமன் பசிக்கு உனவூட்டிக்கொண்டிருக்கும் இவனை எமன் உண்டு உனவில்லாமல் ஏமாந்துவிட்டதாம்.
  • இவன் இறந்தபோது இவனை அண்டி வாழ்ந்த பலர் இவனோடு சேர்ந்து உயிர் துறந்திருக்கிறார்கள். 

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி.  

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் செய்த போர் பற்றியும். இவனது இயல்புகள் பற்றியும் ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் ஐந்து சோழ மன்னர்கள் உள்ளனர்.

போர்க்களம்
  • இந்தச் சென்னி உழவர் மாடுகளை நடத்தி வைக்கோலைப் போரடிப்பது போல, யானைகளை நடத்தி பிணங்கல் மேல் போரடித்துக்கொண்டிருந்தான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் அந்தப் போர்களத்துக்குச் சென்று யானைகளைப் பரிசாகக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
வெற்றியும் கொடையும் 
  • தென்பால் பரதவரின் வலிமையை ஒடுக்கினான். தென்பரதவர் மிடல்சாய
  • வடபால் வடுகர் தாக்குதலை வாள் போரால் முறியடித்தான். வடவடுகர் வாளோட்டிய
  • தன் வெற்றியைப் பாடிய புலவர்க்கு பல அணிகலன்களை இவன் வழங்கினான். அவற்றை எங்கே அணிந்துகொள்வது என்றுகூட அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு வழங்கினான். 
அடிக்குறிப்பு
  1. புறநானூறு 370
  2. புறநானூறு 378
  3. இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது இராமனுக்கு வழிகாட்டும் அடையாளமாகச் சீதை ஆங்காங்கே ஒவ்வொன்றாகப் போட்டுச் சென்ற அணிகலன்களைப் பார்த்த குரங்குகள் அவற்றை விரலிலும் - காதிலும், கழுத்திலும் – இடுப்பிலும் மாற்றி அணிந்துகொண்டது போல புலவரின் சுற்றம் இந்தச் சோழன் தந்த அணிகலன்களை அணிந்துகொண்டார்களாம்.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.  

சோழன் நலங்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னன். இவன் தம்பி மாவளத்தான். தாமப்பல் கண்ணனார் நலங்கிள்ளியின் அவைக்களப் புலவர். இவர் பார்ப்பார். புலவரும் மாவளத்தானும் வட்டு விளையாடினர். புலவர் விளையாட்டுக் காயைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். இதனைக் கண்டுகொண்ட மாவளத்தான் புலவரை வட்டுக்காயால் அடித்தான். புலவர் தன் பாடலில் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். மாவளத்தான் அண்ணனை இவர் ‘தேர்வண் கிள்ளி’ எனக் குறிப்பிடுகிறார். பருந்துக்குப் பயந்து தன் மடியில் விழுந்த புறாவைக் காப்பாற்றவேண்டி, தன்னையே புறாவின் எடைக்கு எடையாகத் துலாக்கோலில் நிறுத்துக் கழுகுக்கு இரையாக வழங்கிய முன்னோனின்
(சிபிச் சக்கரவர்த்தி) வழியில் வந்தவர்கள் இவர்கள் ஆதலால் பார்ப்பார் நோவன செய்யார் என்று குறிப்பிட்டார். அது கேட்ட மாவளத்தான் தான் வட்டாலடித்த செயலுக்காக நாணினான். பிழை செய்ததற்காக நாண வேண்டியது தானாக இருக்கையில், அடித்ததற்காக நாணும் மாவளத்தானின் மாண்பை வியந்து பாராட்டுகிறார்.

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 43

சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி.
சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன்.  தித்தன் என்னும் மன்னன் உறையூரைத்தலைநகராகக் கொண்டு நாடாண்டபோது  போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்தவன்.

தித்தன் மகள் ஐயை. தித்தன் இவளை இந்தக் கிள்ளிக்கு மணம் செய்து தர ஒப்பவில்லை எனத் தெரிகிறது. இந்தக் கிள்ளி ஆமூர் மல்லன்என்பனோடு மற்போர் புரிந்து வென்றதைத் தித்தன் காணவும் மறுத்திருக்கிறான். ‘பெருங்கோழி’ (கோழியூர்) என்பது  உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். மாநாய்கன் மகள் சிலப்பதிகாரக் காலக் கண்ணகி. உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக விளங்கியவன் ‘பெருங்கோழி நாய்கன்’. இவன் மகள் நக்கண்ணையார். சாத்தன் என்னும் சொல் நில வணிகனைக் குறிக்கும். மாசாத்துவான் மகன் சிலப்பதிகாரக்  கோவலன். உறையூரில் வாழ்ந்த சாத்தனின் தந்தை ‘சாத்தந்தையார்’. இந்தச் சாத்தந்தையாரும், நக்கண்ணையாரும் இந்தக் கிள்ளியைப் பாடியுள்ளனர்.

  • சாத்தந்தையார் போர்வை என்னுமிடத்தில் ஆமூர் மல்லன் தாக்கியபோது நடந்த போரைப் பாடுகிறார்.
  1. இந்தக் கிள்ளி ஒருகாலை மண்டியிட்டுக்கொண்டு ஆமூர் மல்லனோடு போரிடுவதைத் தித்தன் காணவேண்டும்.
  2. கிள்ளியின் போர்யானைக்கு இன்று பலியாகப்போகும் அளியர் (இரங்கத்தக்கவர்) யார் யாரோ! 
  3. போர் நடந்த இடம் போர்வை. ஊரில் திருவிழா. மனைவிக்கு மகப்பேறு. மழை பொழிகிறது. இந்தக் கால நெருக்கடியில் மனைவிக்குக் கட்டில் பின்னுபவன் கை போல, கிள்ளியின் கைகள் விரைந்து சுழன்று போரிட்டன. 
  • பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கிள்ளி, ஆமூர் மல்லன் ஊருக்கே துரத்திச் சென்று போரிட்டதைப் பாடுகிறார்.
  1. இந்தப் பெண்புலவரின் காதலன் இந்தக் கிள்ளி. இவன் பிரிவை எண்ணியதால் இவளது வளையல்கள் கழன்றன.
  2. உமணர் ஆற்றுத்துறையைக் கடக்க நேரும்போது அஞ்சுவது போல, பகைவர் கிள்ளியோடு போரிட அஞ்சுவர்.
  3. என் கிள்ளிக்கு நாடு இது அன்று. ஊர் இது அன்று. எனவே அங்குள்ள மக்களில் சிலர் கிள்ளி பெற்றது வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி அன்று என்கின்றனர். ஆனால் எனக்குத் தெரியும், கிள்ளி வெற்றி பெற்றான் என்று.
அடிக்குறிப்பு
  1. புறநானூறு 80
  2. புறநானூறு 81
  3. புறநானூறு 82 பாடல் ஆமூர் மல்லனை “”ஊர் கொள வந்த பொருநன்” எனக் குறிப்பிடுகிறது.
  4. புறநானூறு 83
  5. புறநானூறு 84
  6. புறநானூறு 85

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் உறையூர். இவன் காலத்தில்கருவூரில் இருந்துகொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை சோழன் சேரனைக் காணக் கருவூர் வந்தான். சேரனின் வேல் வீரர்கள் நட்புக்காக வந்துள்ளமை அறியாது தாக்கினர். சோழன் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அம்புகள் சிதைத்தன. சோழனின் பட்டத்து யானை படைக்கடலின் நடுவே நாவாய்க்கப்பல் போலவும், வான மீன்கூட்டத்துக்கு இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர்கள் யானையைச் சூழ்ந்து மொய்த்தனர். அதனால் சோழனின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானைமீதிருந்த சோழனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரனும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும்கண்டனர். சோழன் துன்பம் இல்லாமல் திரும்ப வேண்டும் எனப் புலவர் வாழ்த்தினார். பாடல் புறநானூறு 13 (இந்த வாழ்த்துதலின் உட்பொருளைச் சேரன் உணர்துகொண்டான். தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழனைக் காப்பாற்றினான்.)

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி.  

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். இவன் சோழன் வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி எனவும் வழங்கப்பட்டுள்ளான்.

இவனுக்கும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.

குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்தபோது புலவர் கழாத்தலையார் அவனது கழுத்திலிருந்த மணியாரம் என்னும் அணிகலனைக் கொடையாகக் கேட்டுப் பெற்றார்.

அடிக்குறிப்பு
  1. கழாத்தலையார் புறநானூறு 62,
  2. பரணர் புறநானூறு 63
  3. கழாத்தலையார் புறநானூறு 368

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்.
 
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.

அடிப்படைச் சான்று
  • நத்தத்தனார் பாடல் சிறுபாணாற்றுப்படை அடி 79 முதல்
ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும்
தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தை

  • நப்பசலையார் பாடல் புறநானூறு 39
சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்


தித்தன். 
தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு  சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த  சோழமன்னன்.

தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை,  பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்)

காவிரியில் நீர் விளையாட்டு
தித்தன் ஆட்சிக் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும். தித்தன் மகன் தித்தன் வெளியன்.

இவன் மகன் வெளியன். இக்காலத்தில் தந்தை பெயரை முதலில் வைத்து நாம் நம் பயர்களைக் குறிப்பிடுவது போல இவன் பெயரும் தித்தன் வெளியன் எனக் குறிப்பிடப்படுகிறது. தித்தன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்த காலத்தில் அவன் மகன் தித்தன் வெளியன் கானலம் பெருந்துறை எனப்படும் புகார் நகரத்தில் இருந்துகொண்டு மரக்கல ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைக் கவனித்துவந்தான்.

தித்தன் மகள்
தித்தனின் மகள் ஐயை.

தித்தன் மகன் போர்வைக்கோ
போர்வைக் கோப்பெருநற் கிள்ளியையும் தித்தனின் மகன் என அறிஞர்கள் காண்கின்றனர். போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு போரிடுவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தித்தன் காண்பானாக எனப் புலவர் சாத்தந்தையார் குறிப்பிடுகிறார். போர் எனப்பட்ட இக்காலப் பேட்டைவாத்தலையில் இருந்துகொண்டு ஆண்ட இவனைத் தித்தன் விரும்பவில்லை என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

கட்டி ஓடியது
தந்தை தித்தனுக்குப் பின்னர் அவன் மகன் தித்தன் வெளியன் ஆட்சிக்காலத்தில்  கட்டி என்பவன் உறையூரைத் தாக்கப் படையுடன் வந்திருந்து ஊருக்கு வெளியே திருட்டுத்தனமாகத் தங்கியிருந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறையூர் நாளவையில் முரசு முழங்கிற்று. அதனைக் கேட்ட கட்டி தித்தன் தான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு போர்முரசு கொட்டுகிறான் என்று எண்ணிப் பயந்து போரிடாமலேயே ஒடிவிட்டான்.

வீரைவேண்மான் வெளியன் தித்தன்.
வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்பவன் வீரை என்னும் ஊரையாண்ட  வேளிர்  குலத்தவனாவான். முதுகூத்தனார் என்னும் புலவர் இவன் மாலையில் முரசில் விளக்கேற்றி வைத்ததைக் குறிப்பிடுகிறார்.

முற்காலச் சோழர்கள்
முற்காலச் சோழர்களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் [1] முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும்.

செம்பியன்.
செம்பியன் என்பவன் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறான். இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான். இவனின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எல்லாளன்.
எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச்  இலங்கை  வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில்இருந்து படையெடுத்து வந்த  சோழ  நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது.

ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர்  மகாவம்சத்தில்   அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார். எனினும் இது குறித்துத் தெளிவான முடிவு எடுப்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வரலாறு
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை  ஈழசேனனுக்குமுரியவை.  ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

சேனனும் குத்திகனும்
கி.மு 177 ஆம் ஆண்டு சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய சேனனும் குத்திகனும் நீதியான ஆட்சி நடத்தியதாக மகாவம்சம் கூறுகிறது. பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான்.

எல்லாளன் பற்றி மகாவம்சம்
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை எனமகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின்  கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும்  கோட்டைவாசலில்  தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

  • எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.
  • பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.
  • ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.
மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப் பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாது கோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல்  தாதுகோபம்  புனரமைக்கும்  வரை அங்கேயே தங்கியிருந்தான்.

எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக  விகாரைமகாதேவியால்  பயன் படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில்  விகாரைமகாதேவி  தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

விகாரைமகாதேவியும் எல்லாளனும்
கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும், அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள். இதை  மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். திருமணத்தின் பின் துட்டகாமினியைக் கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாகமகாவம்சம் கூறுகின்றது.
  • பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
  • எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
  • அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்
இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.

துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும் 
காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக   உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்த போது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.

இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனை கொன்றதாக சில சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்
  1. Parker, Henry (1909). Ancient Ceylon. London: Luzac and Co..
  2. Parker.H, Ancient Ceylon. London : 1909
  3. Geiger,W., The Mahawamsa - Introduction, Colombo 1950. Page XXXVII
  4. புஸ்பரட்ணம், ப., இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் - 5.
  5. சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20
  6. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.
  7. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 - 18
  8. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 19 - 20
  9. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 27 - 33
  10. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 21 - 26
  11. குணராசா, க. (2003). மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம். யாழ்ப்பாணம்: கமலா பதிப்பகம். pp. 86.
  12. மகாவம்சம் 25: 48 - 49
  13. மகாவம்சம் 25: 8 - 9
  14. http://mahavamsa.org/mahavamsa/original-version/25-victory-duttha-gamani/#footnote_9_1768
  15. 15.0 15.1 History grade 10 by Kumudini Dias

இளஞ்சேட்சென்னி.
இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய  நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது  பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.

இவன்காலத்துப் பிற மன்னர்கள்
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறான்.

கரிகால் சோழன்
கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும்  பெருவளத்தான்  என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.

வெண்ணிப் போர்.
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன்  பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர்  நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக் கதைகள்.
பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

நெடுங்கிள்ளி.
நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்  கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

நலங்கிள்ளி.  ·
நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான  நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார்,  கரிகாலனைப் போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு,உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)

கிள்ளிவளவன்.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய குளமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்.
உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான். ·

கோச்செங்கணான்.
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.  புறநானூற்று  பாடலொன்றும்  பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும்.  திருஞானசம்மந்தரும்  திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

களவழி.
நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'  தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

செங்கணான், கணைக்கால் இரும்பொறை போர்க்களமும் போர் முடிவும்
  • போர் 'திருப்போர்ப்புறம்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. [2]
  • களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

சமயச் செங்கணான் திருமால் வழிபாடு

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம்.போர் வெற்றிகள்

செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்தை, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார்.சிவாலயங்கள்

ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.அன்பில் செப்பேடு

நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும்  ஜம்புகேஸ்வரம்  உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

வரலாறு
  1. சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். சங்ககாலச் சேரரின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. இவர்கள் காலம் கி.பி. 125-150
  2. கழுமலப் போரில் பிடிபட்ட கணைக்காலிரும்பொறையைப் புலவர் பொய்கையார் களவழி நாற்பது பாடிச் செங்கணானிடமிருந்து விடுவித்துக்கொண்டார். காலம் கி.பி. 400-க்குச் சற்று முன்பின். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை தோன்றிய காலம்)
  3. சிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் கி.பி. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்)

பெருநற்கிள்ளி.
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க.
(புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.


கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முற்பட்டசோழர்
1. சிபி சோழச் சக்கரவர்த்தி
சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளான். இவனது வரலாறு மகா பாரதம், இராமாயணம் முதலிய காப்பியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவன். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
புறநானூறு
சிலப்பதிகாரம்
கலிங்கத்துப்பரணி
மூவருலா
பெரியபுராணம்

2. முசுகுந்த சோழன்
கருவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னன். சிறந்த சிவ பக்தன். இந்திரன் என்னும் பேரரசனுக்கு போரில் உதவி செய்து இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்களை பெற்று அவற்றைத் திருவாரூர் (வீதிவிடங்கத்தியார்), திருநாகைக் காரோணம் (சுந்தரவிடங்கத்தியார்), திருக்காறாயில்(ஆதிவிடங்கத்தியார்), திருக்கோளிலி(அவனிவிடங்கத்தியார்), திருமறைக்காடு (புவனிவிடங்கத்தியார்), திருநள்ளாறு (நகவிடங்கத்தியார்), திருவாய்மூர் (நீலவிடங்கத்தியார்) ஆகிய ஏழு திருப்பதிகளிளும் எழுந்தருளச் செய்தான். வெள்ளிடைமன்றம்(திருட்டு வெளியாக்கும்), இலைஞ்சிமன்றம் (கூன், குறள், ஊமை, செவிடு, பெருவியாதி போக்கும்), நெடுங்கல்மன்றம்
(நஞ்சருந்தல், பாம்பு கடித்தல், பேய் பிடித்தல் நீக்கும்), பூதசதுக்கம் (பொய்த்தவஞ் செய்வோர், பிறர் மனை நயப்போர், பொய்யுரைப்போர், புறங்கூறுவோர், தண்டனை அடையவும்), பாவைமன்றம் (அரசன் நீதிதவறினாலும், அரசனுக்கு தீங்குநேரிடுவதாயிருந்தாலும் பாவை நின்றலும்) என்னும் ஐவகை மன்றங்களையும் புகார் பட்டினத்தில் தாபித்தவன். முசுரி என்னும் ஊரையும் உருவாக்கி பூம்புகார் பட்டினத்தை நன்னிலை படுத்தி காவிரிப்பூம் பட்டினம் மேனாடுகளுடன் வாணிபம் சிறக்க உதவினான். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கலிங்கத்துப்பரணி
கந்தபுராணம்
ஒரு துறை கோவை

3. காந்தன்
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்ட சோழ மன்னன். அகத்திய முனிவரிடம் பேரன்புடையவன். அவர் அருளால் காவிரி தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான். (காந்தன் காவிரி கொணர்ந்தான்) என்று மணிமேகலையில் ஒரு குறிப்புண்டு.

4. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
இம் மன்னன் ஒரு சிறந்த வீரன். அகத்திய முனிவரது கோரிக்கையை ஏற்று காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன்.இவன் அழித்த அரண்கள் மூன்று என சிலப்பதிகாரம் செப்புகிறது. பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன் என்பதால் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என பெயர் பெற்றான். இவனது சிறப்புக்களை புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப் பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் கூறுகின்றன.

கி.மு. 3ம் நூற்றாண்டுச் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் - கி.மு. 290 - 270
இளநகரை தலைநகராகக்கொண்டவன். பகைவருடைய வீரக்கழலையும், யானையின் துதிக்கையையும் எறிந்த காரணத்தினாலும் காவல் மிகுந்த வடுகரின் போர்ப்படை தங்கியிருந்த பாழி என்ற நகரை மீட்டதினாலும், கோசர், வடுகர், மற்றும் மோரியர் ஒன்று சேர்ந்த பெரும் போர்ப்படைகளை வென்றதனாலும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என பெயர் பெற்றான். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை பற்றி புறநானூற்றில் குறிப்பிடுள்ளார். (பாடல் 370 மற்றும் 378)

கி.மு. 2ம் நூற்றாண்டுச் சோழர்
1. மநுநீதிச் சோழன்
மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன்.
ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது. மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எழ்ளாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எழ்ளாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏழாரன் என்று இருக்கக்கூடும்.

2. முதற் கரிகாலன்
முதற் கரிகாலன் கி.மு 120 - கி.மு. 90
இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன். அழுந்தூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். பின்னர் குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். இவன் பதினொரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தர்களையும் வெண்ணி வாயில் என்ற இடத்தில் வென்றான். பின் ஒரு கால கட்டத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் ஒன்பது அரசர்களை வென்று புறங்காட்டி ஓட வைத்தான். திதியன் என்பான் இவனது படைத்தலைவனாவான். சேரன் பெருஞ்சேரலாதன் இவனுடன் வெண்ணிப் பறந்தலையிற் போர் செய்து, கரிகாலன் எய்த அம்பில் மார்பில் துளையிட்டு ஊடுருவி முதுகினின்றும் வெளியேறியது. முதுகில் காயம் பட்டமையால் வெட்கம் தாங்கமல் சேரன் பெருஞ்சேரலாதன் கையில் பிடித்த வாளுடன் வடக்கிருந்து பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

தோற்றமும் வரலாறும்
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், பரணர்கழாத்தலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இன்னொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

Statue of Karikal Cholan

கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்
இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)
இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் எனும் பெயர்களையும் பெற்றவன். இளஞ்செட்சென்னிக்கும் அழுந்தூர்வேள் பெருமாட்டிக்கும் பிறந்த மகனாவான். இளஞ்செட்சென்னி முடிபுனைந்து அரசாண்டவன் இல்லை. அரசனுக்கு இளையவன். கரிகாற் பெருவளத்தான் பல கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருந்தான். இவனது பெரிய தந்தையாகிய அரசனும், இவன் தந்தையும் அடுத்தடுத்து இறக்கவே நாட்டில் குழப்பம் ஏற்பட்டு திருமாவளவன் உறையூரினின்று வெளியேறி பல இடங்களில் அலைந்து திரிந்தான். அக்கால மரபுப் படி பட்டத்து யானை பல இடங்களிலும் அலைந்து திரிந்து கருவூரில் இருந்த திருமாவளவனை தேர்வு செய்து தன் மீது ஏற்றிக்கொண்டு உறையூரை அடைந்தது. திருமாவளவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். கயவர்கள் சிலர் இவன் மீது புகார் கூறி சிறையில் அடைத்து சிறைக்கு தீயும் இட்டனர். சிறையில் இருந்து தப்பி தன் தாய் மாமன் உதவியுடன் பகைவரை வென்று மீண்டும் அரியணை அமர்ந்தான்.

இவனே  இரண்டாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன்
இவனே. கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். கரிகாலனுடைய அம்பு சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று தகவல் தருகிறது. பாண்டிய மன்னர்களையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். முற்காலச் சோழர்களில் பிற்காலத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில், நல்லுருத்திரன், கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

Kallanai By Karikal Cholan - 1st View

Picture
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.


Kallanai By Karikal Cholan  - Another View

Picture
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலைபொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

Kallanai By Karikal Cholan - Another View

Picture
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

Temple Built By Karikal Cholan

Picture

The Inside Entry to the Temple

Picture

Territory Controlled By Karikal Cholan

Picture

The Chola Dynasty

சோழ மன்னர்களின் பட்டியல் 
முற்காலச் சோழர்கள்


கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்

1. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான்
2. கிள்ளிவளவன்
3. பெருநற்கிள்ளி
4. கோப் பெருஞ்சோழன்

கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்
1. நெடுமுடிக்கிள்ளி
2. இளங்கிள்ளி முதலியோர்.

வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி

05. தித்தன்
தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன்.

தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை, பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்)

காவிரியில் நீர் விளையாட்டு
தித்தன் ஆட்சிக் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.

தித்தன் மகன் தித்தன் வெளியன்
இவன் மகன் வெளியன். இக்காலத்தில் தந்தை பெயரை முதலில் வைத்து நாம் நம் பெயர்களைக் குறிப்பிடுவது போல இவன் பெயரும் தித்தன் வெளியன் எனக் குறிப்பிடப்படுகிறது. தித்தன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்த காலத்தில் அவன் மகன் தித்தன் வெளியன் கானலம் பெருந்துறை எனப்படும் புகார் நகரத்தில் இருந்துகொண்டு மரக்கல ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளைக் கவனித்துவந்தான்.

தித்தன் மகள்
தித்தனின் மகள் ஐயை. தித்தன் மகன் போர்வைக்கோ.
போர்வைக் கோப்பெருநற்கிள்ளியையும் தித்தனின் மகன் என அறிஞர்கள் காண்கின்றனர். போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு போரிடுவதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தித்தன் காண்பானாக எனப் புலவர் சாத்தந்தையார் குறிப்பிடுகிறார்.போர் எனப்பட்ட இக்காலப் பேட்டைவாத்தலையில் இருந்துகொண்டு ஆண்ட இவனைத் தித்தன் விரும்பவில்லை என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.கட்டி ஓடியது

தந்தை தித்தனுக்குப் பின்னர் அவன் மகன் தித்தன் வெளியன் ஆட்சிக்காலத்தில் கட்டி என்பவன் உறையூரைத் தாக்கப் படையுடன் வந்திருந்து ஊருக்கு வெளியே திருட்டுத்தனமாகத் தங்கியிருந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறையூர் நாளவையில் முரசு முழங்கிற்று. அதனைக் கேட்ட கட்டி தித்தன் தான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு போர்முரசு கொட்டுகிறான் என்று எண்ணிப் பயந்து போரிடாமலேயே ஒடிவிட்டான்.

நொச்சி
தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.

இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி

மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 

இடைக்காலச் சோழர்கள்

விசயாலயச் சோழன்          கி.பி. 848-871
ஆதித்தச் சோழன்               கி.பி. 871-907
பராந்தகச் சோழன் I            கி.பி. 907-950
கண்டராதித்தர்                    கி.பி. 949-957
அரிஞ்சயச் சோழன்            கி.பி. 956-957
சுந்தர சோழன்                     கி.பி. 956-973
ஆதித்தக் கரிகாலன்           கி.பி. 957-969
உத்தம சோழன்                  கி.பி. 970-985
இராசராசச் சோழன் I          கி.பி. 985-1014
இராசேந்திரச் சோழன்         கி.பி. 1012-1044
இராசாதிராசச் சோழன்        கி.பி. 1018-1054
இராசேந்திரச் சோழன் II      கி.பி. 1051-1063
வீரராசேந்திரச் சோழன்        கி.பி. 1063-1070
அதிராசேந்திரச் சோழன்      கி.பி. 1067-1070 

சாளுக்கிய சோழர்கள்

குலோத்துங்கச் சோழன் I     கி.பி. 1070-1120
விக்கிரமச் சோழன்               கி.பி. 1118-1135
குலோத்துங்கச் சோழன் II    கி.பி. 1133-1150
இராசராசச் சோழன் II           கி.பி. 1146-1163
இராசாதிராசச் சோழன் II      கி.பி. 1163-1178
குலோத்துங்கச் சோழன் III   கி.பி. 1178-1218
இராசராசச் சோழன் III          கி.பி. 1216-1256
இராசேந்திரச் சோழன் III       கி.பி. 1246-1279 

சோழர் சமூகம்

சோழ அரசாங்கம்
சோழ இராணுவம்
சோழர் கலை
சோழர் இலக்கியம்
பூம்புகார்
உறையூர்
கங்கைகொண்டச் சோழபுரம்
தஞ்சாவூர்


இளஞ்சேட்சென்னி.
பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்
  1.  புறநானூறு நான்காம் பாடல்
  2.  புறநானூறு 266 ஆம் பாடல்
  3.  அகநானூறு 375 ஆவது பாடல்: .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
உசாத்துணை நூல்கள்
  • அகநானூறு, மதுரைத் திட்ட மின்பதிப்பு
  • புறநானூறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 1958, மறுபதிப்பு 2004.
  • கனகசபை வி., 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், அப்பாத்துரையார் கா. (தமிழாக்கம்), வசந்தா அதிப்பகம், சென்னை, 2001.
  • செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995, மறுபதிப்பு 2002.

கரிகால் சோழன் 
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான்என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமானவெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்

நெடுங்கிள்ளி.
முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

நலங்கிள்ளி 
முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார்,கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினதுவெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியைஎழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக

கிள்ளிவளவன்
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்.உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

கோச்செங்கணான்.

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

மாடக்கோவில்கள்
தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாக கூறலாம்.இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு விதியாசமாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாக இருக்கும். யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பது இதன் காரணம்.

புவியாண்ட மாமன்னன் கோச்செங்கசோழன் தான் மாடக்கோவில்களை கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன்.மேலும் அதிக சிவன் கோவில்களை கட்டிய மன்னன் என்ற பெருமை பெற்ற இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது.

இவனது தாய் சோழ அரசி கமலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்ந பிறக்கும் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாபெறும் மன்னனாக இருப்பான் என்றனர். இதனை அறிந்த அரசி அந்த நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விட ஆனையிட்டாள். நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டதனால்
பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன ஆனால் அரசி இறந்துவிட்டார்.சிவந்திருந்த கண்கள் பெற்ற குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் சூடினர்.

காவிரிக் கரையில் திருவானைக்காவல் என்னும் சிவதளத்தில் கோச்செங்கண் கட்டிய முதல் மாடக்கோவில் இன்றும் நம்மை வியக்கவைக்கிறது.
சிவாலயங்களில் மாமன்னன் கோச்செங்கசோழனுக்கு மாசி மாத சதய நட்சத்திரத்தில் விழாக்களும் சிற்ப்பு பூஜைகளும் ஆரதனைகளும் நடத்தப்படுகிறது.மாடக்கோவில்கள் என்ற கலைச்சிற்பங்களை எமக்களித்த வான் புகழ் கோச்செங்கசோழன் என்ற கள்ளர் குல மா மன்னனை நாம் நினைவு கொண்டு கள்ளர் இன மக்களாகிய நாம் பெருமை அடைவோம்

பெருங்கிள்ளி
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. 

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.

Picture
சங்க கால சோழர் நாணயம்
சங்க கால சோழர் நாணயம். 
முன்பக்கம் யானையும் பின்பக்கம் புலியும் காணப்படுகிறது.
அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர்காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையிலும் பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டும் இருக்கிறது. இந்நீள்சதுர வடிவச் செப்புக் காசில் காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரைக் காசுகளில் உள்ள காளையைப் போலவே உள்ளதால் இக்காசு வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து செய்யப்பட்டுளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது

திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம்.

Picture
திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம்.
பராந்தகசோழனினின் 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இச்செப்பேடு ஆங்கில ஆண்டு கி.பி. 932 ஆகும்.

விஷ்ணு,பிரம்மா, மரிச்சி,காஸ்யபா, சூரியா,உஷினாரா போன்றோர் இவன் குலத்தில் தோன்றினார்கள் என்றும், கர்காலன்,சிபி, கோச்செங்கணான் போன்ற சோழ முன்னோர்களின் செய்திகளும் காணப்படுகின்றன. இச்செப்புப்பட்டயத்தின் சமஸ்கிருதப் பகுதி சோழ மன்னர்களின் பட்டியலையும் தருகிறது. அதில் கோச்செங்கணான் என்று ஒருவன் குறிப்பிடப்படுகிறான், அவன் மகன் ஒன்றியூரான் என்றும், அவன் மகன் சிறந்த போர் வீரன் என்றும், அவன் மகன் ஆதித்யன் என்றும் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்யன் தந்தையான விஜயாலயனுக்கு ஒன்றியூரான் தந்தை என்றும், ஒன்றியூரானின் தந்தையான கோச்செங்கணான் என்பவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான் என்றும் அறிய முடிகிறது. இலக்கியங்களில் காணப்படும் பெருஞ்சேரல் இரும்போறையோடு போரிட்டு வெற்றி கண்ட கோச்செங்கணான் இவனா என்பது ஆய்வுக்குரியதாகும். மேலும் கரிகாலன் காலத்திய மூன்று நிகழ்ச்சிகள் பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
1. கரிகாலன் சோழர்களின் புகழை இமயம் வரை பரப்பினான்
2. காவேரியாற்றின் இரு கரைகளிலும் அணைகள் கட்டி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தினான்.
3. காஞ்சியில் பல அரண்மனைகள் கட்டினான்.

விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்றும் ஆதித்த சோழனின் மகனாகிய முதலாம் பராந்தகன் இராமேஸ்வரம், திருவரங்கம், கன்னியாகுமரி கோயில்களுக்கு துலாபாரம் அளித்துள்ளான் என்ற புதிய செய்தியையும் முதலாம் பராந்தகசோழனினின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

திருத்தணி. தமிழ்நாடு அரசு தொள்ளியல் துறை பதிப்பு 2010 பக்கம் 85
Picture
சுந்தர சோழன்

Picture
உத்தம சோழன்

Picture


மேற்கோள்கள்
  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று பக்கம் 211.
  2. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி - பாகம் ஒன்று. பக்கம் 221.
  3. ஆதித்த கரிகாலன் ISI.ii, பக்460-ம் N.2-ம்


உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957

உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.

சோழ மன்னர்களின் மண உறவுகள்
01. விசயாலய சோழன் மனைவி வலங்கைமான் ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு
       என்னும் ஊரில் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர்
02. விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்தசோழன் வல்லவராயர் குடும்பத்தில் பிறந்த
       இளங்கோப்பிச்சியை மணந்தான்
03. முதலாம் ஆதித்தசோழன் மகன் கன்னரதேவன் கொடும்புரார் புதல்வி பூதிமாதேவி
       அடிகளை மணந்தான்
04. முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் மகளை மணம் புரிந்தான்

05. கண்டராதித்த சோழன் மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவி என்பவரை
       மணந்தான்.
கல்வெட்டு திருக்கோடிக்கா திருக்கோடிக்காவுடையார் கோயில். கும்பகோணம். கி.பி 982 உத்தமசோழ்ன் 11ம் ஆட்சி ஆண்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்ம(ர்க்)கு யாண்டுயக 
ஆவது வடகரை நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவில்
மஹாதேவர்க்கு ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு
வாய்த்த மழவரையர் மகளார்
பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார்

06. அரிஞ்சய சோழன் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய கல்யாணி என்பவளையும்,
       கொடும்புரார் புதல்வி பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்தான்.
07. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மலையமான் ( சேதிராயர்) வம்ச
       வானவன்மாதேவியை மணம் புரிந்தான்
08. உத்தம சோழன் மழபாடியார் (மழுவாடியார்) வம்ச மழபாடித் தென்னவன்
      மாதேவியையும், இருங்களார் குடும்பத்தில் பிறந்த இருங்கோளர் மகள் வானவன்
      மாதேவியையும், விழுப்பரையர் குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும்
      மணந்திருந்தான்
09. இராசராசசோழனின் தாய் திருக்கோவிலூர் மன்னன் மலையமான்(சேதிராயர்) மகளான
       செம்பியன் மாதேவியாவார்
10. மாமன்னன் முதல் இராசராச சோழன் பழுவேட்டரையர் மகள் பஞ்சவன் மாதேவியை மணந்தான்
11. மாமன்னன் முதல் இராசராச சோழனின் தமக்கை முதலாம் குந்தவை வல்லவரையன்
      வந்தியதேவனை மணந்தாள்


முதலாம் இராஜராஜ சோழன்

Picture
இராசராச சோழன்.
சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

தொல்லியல் புலவன் டாக்டர் இரா. நாகசாமியின் தொல்சீர் பார்வையில் மாமன்னன் இராச ராசன்.
சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ!
செந்திரு மடந்தை வானவன் தேவி
எழில்மான் பயந்த புலியின் ஏறே!
கரிகால் வளவன் பின்வரு காவல!
ஐப்பசித் திங்கள் சதய நாள் பிறந்தோய்!
அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்!
அருமொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்!
இராசர் தம்ராசன் எனும்பெயர் ஏற்றோய்!
காந்தளூர் சாலை கலமறுத் துகந்தோய்!
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்
திந்திறல் வென்றி தண்டார் கொண்ட
ராஜகே சரிக் கோவே உந்தன்
வாளொளி படரா நாடும் உளதோ?

வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட
காடும் நாடும் கல்லும் தெற்றியும்
திணைத் திளியளவே ஆயினும் தவிரா
தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து
விளைநிலமிது; விளையா நிலமிது@
இறைதரு நிலமிது; இறைஇலி இதுவென
வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து
வளநா டுடனே பல்புரம் அமைத்து
பழம்பெயர் தவிர்த்து தன்பெயர் நிறீஇ
மண்டலம் கூற்றம் வளநா டூரென
மண்ணுவ கறியா ஆண்புடன் வகுத்து
வரியி லிடுவோர், வகைபல செய்வோர்
கணக்கர், ஓலை, கண்காண் புரிவோர்
பண்டா ரத்தின் பொத்தக முடையோர்,
பட்டோ வையிடு பூட்சிப் பாட்டம்,
திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி,
நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர்,
பெருத்தரம், சிறுகரம், வேளைக் காரர்,
அதிகார கரெனப் பாங்குட நமர்த்தி
ஊர்தொறும் குடவோ லைமுறை நிறுவிய
உலகளந்த சோழ! உன்சீர் இந்த
உலகெலாம் பரவி புலவர்தம் நாவில்
இன்றும் உளதெனில் பிறிதும் உண்டோ
புகழ்தனைப் பெறவே!

தென்னா டுடைய தேவினை நாளும்
தேந்தமிழ் இசையால் பாடிய மூவர்
தேவரங்கள் காணா தொழிய
திருநா ரையூர் நம்பியின் துணையால்
தில்லைப் பதியில் பொல்லாப் பிள்ளை
திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து
மன்றுள் ஆடும் தௌ¤ தேனுக்கும்
மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும்
பதிகம் பாடிய மூவர் தமக்கும்
அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து
திருந்திய கதவம் திறனுடன் திறந்து
மறைந்த பாக்களை புற்றினில் கண்டு
மறையோர் புகழ இமையோர் வியக்க
இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த
திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ!
நின்பெயர்
தமிழ் உளவரியும் திகழ்ந்திடும் அன்றோ!

தஞ்சைமா நகர்தனிலே தரணியெலாம் போற்றவே
தக்கின மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே
பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனயே
கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே!
கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே
சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே
கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே
எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே
பண்செய்த பயிர்நிலங்கள் நெல்அளக்க விடுத்தனையே
நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே
பதிகங்கள் பாடிடவும் பரதங்கள் ஆடிடவும்
பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும்
மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே
உயிர்அனைய தமக்கையுடன் உயர்காதல் தேவியரும்
உந்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே
கல்லிலே வெட்டிவைத்துப் புதுச்சரிதம் படைத்தோய்நீ!
பரதவள நாடுமே பார்த்திப் புரவலன்நீ!
சொற்கோயில் எடுப்போரும் புனைந்தறியா புகழ்கோயில்
கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ!
புதியரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ!
பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ!
சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர!
முத்தமிழ் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!
இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்
ஆயிரம் ஆயிரம் அயீரம் ஆண்டே!

தஞ்சை தந்த இராஜ ராஜ!
தரணியில் நிலைப்பாய்!
ஆயிரம் ஆயிரம் ஆயிர மாண்டே!


தொல்லியல் புலவன்
டாக்டர் இரா.நாகசாமி


மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள் (ஆய்வுக்குரியவை)

இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)?

பிறந்தநாள் 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் - 42 
  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)

மனைவியர் 15
1. உலக மகாதேவி - (தந்திசக்தி விடங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி - பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி  (திருபுவன மாதேவி. வானதி) - இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி12. நக்கந்தில்லை அழகியார்
13. காடன் தொங்கியார்
14. இளங்கோன் பிச்சியார்
15. தைலாமாதேவி

மக்கள் - இராசேந்திர சோழன், எறிவலி கங்கைகொ ண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்கமாதேவியார், இரண்டாம் குந்தவைஎன்னும் மூன்று பெண்மக்களும் இருந்தனர்.
(30 கல்வெட்டுகள். வை.சுந்தரேச வாண்டையார். பக்கம் 29)

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்

சோழ கல்வெட்டு செய்திகள்
தமிழகத்தில் சோழர் காலத்தில் தான் ஆயிரகணக்கான கல்வெட்டுகள் கோயிற்சுவர்களில் பொறிக்கப்பட்டன
கல்வெட்டுகளின் அமைப்பு
கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைப் பெரும்பாலும் ஐந்து பெரும் பகுதிகளாக பிரித்தனர்
1. கல்வெட்டின் தொடக்கம் அல்லது மங்கலவாசகம்
2. கல்வெட்டு எழுதப்பட்ட காலம்
3. கல்வெட்டுச்செய்தி
4. கையெழுத்து
5. முடிவுரை அல்லது ஓம்படைக்கிளவி

சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி
சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர்.
கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர்.
கோயிலுள் இருக்கும் மண்டபத்தை திருலோக்கம் எனவும், கோயிலுள் இருக்கும் சபையை மன்று அல்லது அம்பலம் என்றும், அரண்மனையில் உள்ள இராசசபையை உள்ளாலை என்றும், கோயிலிலமைந்த மருத்துவ மனையை ஆதுலர் சாலை என்றும் அழைத்தனர்.

கோயிலில் ஆடுபவர்கள், மற்றும் பாடுபவர்கள் - பதியிலார்
பூசை வழி படைக்கும் பண்டங்கள் - அமுது படி
உணவு - அடிசில்
அரசசபையில் அடங்கிய பெருந்தரத்து அதிகாரிகள் - மன்றாடிகள்
சேனைத் தலைமை ஏற்று நடதிய அதிகாரிகள் - படைமுதலி
காலாட்படையினர் - கைகோளப் பெரும் படை
அமைச்சர்களுக்கு ஒத்த அதிகாரம் படைத்தவர்கள் - உடங்கூட்டம்
மன்னர்களுக்கு நெருங்கிய தொண்டாற்றிய ஆடவர் மற்றும் பெண்டிர் - அணுக்கமார்மற்றும் அணுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள்
1. கிழக்கு எல்லை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
2. மேற்கு எல்லை - வல்லம் களிமேடு
3. வடக்கு எல்லை - விண்ணாறு (வெண்ணாறு)
4. தெற்கு எல்லை - நாஞ்சிக்கோட்டை தெரு

தஞ்சாவூர் அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.

Picture
புகழ் பெற்ற இளவரசன் 
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்து இறந்தான்.[1]

உத்தம சோழனுக்கு இக்கொலையில் சம்மந்தம் இல்லையென்று சொல்லவதற்கில்லை, உத்தம சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதிவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதிதான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.[2]

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,

அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

Picture
"பெரிய கோயில்' என்ற அடைமொழியைப் பெற்றது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்.

இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

இங்கு தல விநாயகர் கன்னி விநாயகர் ஆவார். மூலவர் பிரகதீஸ்வரரை, ராஜராஜ சோழன் தன் காலத்தில் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் வணங்கியுள்ளான்.

உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவ லிங்கங்கள் உள்ளன.

தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கங்களுக்கே செய் யப்படுகிறது. கோபுரம் பிரமிடு அமைப் பில் இருப்பதாலும், ராஜராஜன் ஆத்மார்த்தமாக கட்டிய கோயில் என்பதாலும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் உஷ்ணமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

மிகப்பெரிய லிங்கம் இருந்தாலும் இங்கு பீடம் இல்லை. முதலில் உள்ள மராட்டிய நுழைவு வாயில் கோபுரம் 1803ல் கட்டப்பட்டது. இதை அடுத்துள்ள கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 நிலை 7 கலசங்கள் உள்ளன.

மூன்றாவது உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் 3 நிலை, 5 கலசங்கள் உள்ளன. இது கி.பி. 988ல் கட்டப்பட்டது. கருவூர் சித்தர் சன்னதி பின்புறம் உள்ள மரத்தில் மரப்பல்லியை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ராஜராஜ சோழன்- வானவன் மாதேவியின் மகன் ராஜேந்திர சோழன். இவன் தன் தந்தை கட்டிய பெரிய கோயிலைப் போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளான். ராஜராஜனும் மற்றவர்களும் இக்கோயிலுக்கு 183 கிலோ தங்க பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜைப்பொருள் மற்றும் நைவேத்தியத்திற்காக 40 கிராமங்கள், 10 ஆயிரம் பசுக்கள் தந்துள்ளனர்.

16.5 அடி உயரமும், 7.5 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய துவார பாலகர்கள் இங்குள்ளனர். இக்கோயிலின் கோபுர கலசம் 340 கிலோ எடையுள்ள செம்புத்தகடால் ஆனது. இதற்கு 12.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள கற்கள் தேவைப்பட்டது.

இவை திருச்சி அருகே உள்ள மம்மலையில் இருந்து எடுத்து வரப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. 


உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுனர்களே கிடையாது. இராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாக கட்டிய (கி.பி.985 - 1012)அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி . இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இங்குள்ள நந்தியைப்போல் வேறு எங்கும் கிடையாது. அத்தனை பிரமாண்டமாக இருக்கும். இது 12 அடிஉயரம் உடையது.

அகலம்(குறுக்களவு) 6 அடி ஆகும். உட்கார்ந்துள்ள நீளம் 9 அடி. இது திருச்சிக்கருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கல் எடுத்து வந்து இதை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.  கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம். இங்குள்ள முருகன் சந்நிதி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.500 வருடம் பழமையானது.  விநாயகர் சந்நிதி மகாராஷ்டிர சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் அடித்தளத்தில் சோழ மன்னரின் மானியங்கள் திருப்பணிகள், தானங்கள் குறித்த செய்திகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

சோழர்களின் மெய்க் கீர்த்திகள் பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவனுக்குப் பிறகு இவன் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவன் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள்.
சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

இரண்டாம் வகையான மெய்க் கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.

போர்கள் 
கேரளப் போர் இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

மலைநாடு கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

ஈழப் போர். 
ஈழம் இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஈழப் படையெடுப்பின் விளைவுகள் சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

திருக்கோணேஸ்வரம் கோயில் - இலங்கை

Picture
ஈழத்தில் சோழக் கோயில்கள் இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

பிற வெற்றிகள் மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் இராஜராஜன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. கி.பி 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான்.(சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி கி.பி 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் கி.பி.994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)

சத்யாசிரயனுடன் போர் 922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.

இராஜேந்திரன் தலைமை தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள் சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜராஜனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராஜராஜன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

வேங்கி இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரூம் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்ற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.

மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.

வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல் முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.

வேங்கிப் போர் கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் கி.பி 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.

கி.பி 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.

இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இராண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.

பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.

ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.

வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான்.

சோழமண்டலம்
தொன்மைக் காலத்திலிருந்தே சோழநாடு என்றிருந்த பெயர் இராசராசன் காலத்தில்தான் முதன் முதலில் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்டது.
சோழமண்டலம் எனும் பெயர் கி.பி. 1009 முதல் அழைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்

  1. இராசராசசோழன்
  2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )
  3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )
  4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்
  5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் - இரண்டாம் நிலை கட்டிட
      கலைஞன் )
  6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு
  7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்
  8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்
  9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )
10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார்
     ( கோயில் நிர்வாக அதிகாரி)
11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )

கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம்தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.

கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கு சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். ராஜராஜ சோழன் உயிருடன் இருக்கும் போட்தே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.

பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. இச் சிலைகளை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டும்

இராசராசன் இறந்த தினம்.
17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!

ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு கூடிய ஒரு நினைவகம் கட்ட வேண்டும. 

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது

Picture

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.

1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

மாலத் தீவுகளைக் கைப்பற்றல் இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவு.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

Picture
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

Picture
இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்
இராஜராஜ சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராஜேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராஜராஜ சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி கி.பி 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.
சமயக் கொள்கை
ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜன் இந்தியாவின் பெரும் இராஜதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்ட்டன் பட்டயங்கள் கூறுகிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

Picture
நிர்வாகம்
நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராஜேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

குடும்பம்
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள். இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். 
  
மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்

மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி

இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி

இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு 
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)

சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில:
அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை 
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரியக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை 
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை

இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.

இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.

மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.

வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

பெண் அதிகாரிகள்
அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்

சபைக்குரிய அலுவலர்கள்
பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்
கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.

கணக்கன்
சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்.

பாடி காப்பான்
கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.

தண்டுவான்
கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.

அடிக்கீழ் நிற்பான்
ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.

சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா? 
இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை 

சோழர்கால கப்பல்கள்.
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்
மேச ஞாயிறு - சித்திரை மாதம்
ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
கடக ஞாயிறு - ஆடி மாதம்
சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
மகர ஞாயிறு - தை மாதம்
கும்ப ஞாயிறு - மாசி மாதம்
மீன ஞாயிறு- பங்குனி மாதம்

சோழர் கால இலக்கண நூல்கள்
தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்

சோழர் கால நிகண்டு
பிங்கலந்தை

சோழர் கால ஏரிகள்
செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்
மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
பொன்னேரி - ஜெயங்கொண்டம்
வீரநாராயண பேரேரி- வீராணம்
திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
கவீர ஏரி ( கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை

சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்
பழவேற்காடு.
சென்னப்பட்டினம்
மாமல்லை.
சதுரங்க்கப்பட்டினம்
வசவ சமுத்திரம்
மரக்கானம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
காவேரிப்பூம்பட்டினம்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம்
முத்துப்பேட்டை
தொண்டி
தேவிப்பட்டினம்
அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
இராமேசுவரம்
பெரிய பட்டினம்
குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி
கொற்கை
காயல்பட்டினம்
குமரி.

உலகளந்தான் கோல்
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை

Picture

இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்

  1. இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
  2. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
  3. உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
  4. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.
மேற்கோள்கள்
  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
  2. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212.
  3. varalaaru.com.
  4. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 239.
  5. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 240.

இராசேந்திர சோழன்

Picture
Esalam : Built by Rajendra Cholan I (1012)lord sri Ramanatha Eswarar. The legend found in Sanskrit language and in grantha character. Written on the periphery of the seal is as follows, Rajad-Rajanya Makuta sreni-ratnesu sasanam Etad Rajendra Cholasya parakesari varmanah.

கங்கைகொண்ட சோழபுரம்

Picture
இராசேந்திர சோழன் 
சோழர்களின்புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

Picture
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிகரையும் வென்றான்.

இணை அரசனாக நிர்வகித்தல் இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும் இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030

Picture
நாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும் கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவ சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.

படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

Picture
பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்.
கடாரம் படையெடுப்பு இராஜராஜனின் ஆட்சியின் 14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது

மலையூர் கோயில்

Picture

பண்ணை இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம் இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல் தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.

எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிகாலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன.

தெற்கில் குழப்பம் பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இக்காலத்திய பாண்டிய கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.

'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று [[பாண்டியர்|பாண்டியர்களுடன்] இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த('தாதை முன்வந்த')விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும்.

பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழப்பேரரசின் கருணை சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.

இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள்ள், விஜயாலயச் சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழ நாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.

சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளை கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்க, குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர்.

விருதுகள்
இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது.

இராஜேந்திரசோழனின் சிறப்புப்பட்டங்கள்.
01. மதுராந்தகன்
02. உத்தமசோழன்
03. சோழேந்திரசிம்மன்
04. விக்ரமசோழன்
05. முடிகொண்டசோழன்
06. பண்டிதசோழன்
07. கடாரம்கொண்டசோழன்
08. கங்கைகொண்டசோழன்
09. வீரராஜேந்திரன்
10. பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்கொண்ட ஐயன்
11. அதிசயசோழன்
12. ஜயசிம்மசரபன்
13. மலைநாடுகொண்டான்
14. மன்னைகொண்டசோழன்
15. மகிபாலகுலகாலன்
16. வீரசோழன்
17. ராஜ ராஜேந்திரன்
18. இரட்டை படைகொண்டசோழன்
19. நிருபதிவாரகன்
20. மனுகுலசோழன்
21. ராஜ வித்யாதரன்
22. உத்தரவிடாங்கன்
23. தாணவிணோதரன்
24. பராக்கிரமசோழன்


பட்டத்தரசிகள் 
திருப்புவன அல்லது வானவன் மாதேவியார்,
முக்கோலான், பஞ்சவன் மாதேவியார்,
வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர்.

வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளித்தாள். இம்மன்னனின் மற்றோரு மகள் புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் 6-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044ல் காலமாயிருக்க வேண்டும்.

விசயால சோழன் கி.பி.850-871.

Picture
விசயாலய சோழன் கி.பி. 850-871

பிற்கால சோழ பேராசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன்  ஆவான்.  இவனது தந்தை பெயர்  தெரியவில்லை. முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே. விசயாலய சோழன் என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது.

பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன்  விசயாலய சோழன் ஆவான்.

விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர். இதே கால கட்டத்தில் சோழர்களைப் போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டு வந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண பாண்டிய மன்னன் காலத்தில், முத்தரையர் தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். 

திருப்புறம்பயம் போர்

Picture
திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.

இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர். அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.

இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின்
மாதண்ட நாயக்கராக போரிட்டான். அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.

அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து  பாண்டியர்களிடம் சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார். இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது. கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.

இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது
தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில்  இறக்கியது, "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களை  தோற்கடித்துத்   தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது.

இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர்.

இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு
உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான்.

திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவன் விசயலாய சோழன் ஆவான்.

இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.

வேங்கையின் வேந்தன் (பொன்னியின் செல்வனில் இருந்து)
முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான அக்கிழவன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான்.பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.
"நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள்.
"ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!"என்று சொன்னான்.
"உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.
"சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று கிழவன் அலறினான்.

இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள்.
"இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து அந்தக் கிழவனைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள்.

"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.
போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது.  தெற்கத்தி  மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த கிழவன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான்.அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். கிழவனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.
பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள்.  பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான்.
இக் கிழவன் தான் விசயாழய சோழன்
(நன்றி பொன்னியின் செல்வன்)

பழையாறை மாநகரம்

Picture
பழையாறை மாநகரம்
பழமைமிகு பழையாறை மாநகரில் விசயலாய சோழன் தோற்றுவித்த சோழப்பேராசு தான் உலக வரலாற்றில் நீண்டநெடிய காலமான சுமார் 430 ஆண்டுகள் செங்கோல் செலுத்தி கொடிகட்டி ஆண்ட வல்லரசு. வரும் காலங்களில் கூட ஆற்றல் மிக்க சோழவல்லரசு போல் ஒரு பேராசு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வியப்பிற்கும், பெருமைக்கும் தாண்டிய எல்லையுடையது பழையாறை மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு.

பழையாறை மாநகரம் பெற்றிருந்த பெயர்கள்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (மூவர் தேவார காலங்களில்)
1. ஆறை
2. பழையாறை
3. பழையாறு
4. பழைசை

கி.பி.எட்டாம் நூற்றாண்டில்
5. நந்திபுரம்
6. நந்திபுரி

கி.பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டில்
7. முடிகொண்ட சோழபுரம்
8. ஆகவமல்லகுலகாலபுரம்

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில்
இராச ராசபுரம்

உலக வரலாற்றில் எந்த ஒரு தலை நகருக்கும் ஒன்பது பெயர்கள் காலந் தோறும் மாறி மாறி வந்துள்ளதாக வரலாறும் இல்லை.

முதலாம் ஆதித்த சோழன் கி.பி.871-907 

Picture
முதலாம் ஆதித்த சோழன் கி.பி.871-907 

பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள் பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத் தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக  நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர்.

நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றி பெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள் , வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான்.

அபராசிதனும் சோழர்களுக்கு சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும்
முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும்
பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.

மறைவு
சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இறந்தும் இறந்திலான் ஆதித்த சோழன்
கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி
அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.

தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.

ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.

அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.

ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.

இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.

இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்

முதலாம் பராந்தக சோழன் கி.பி.907-955

Picture
முதலாம் பராந்தக சோழன் கி.பி.907-955

ஆதித்த சோழனின் மகனாவான். கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை   பரந்த  பாண்டி நாட்டை  சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச்சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது.
இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள்
1. இராஜாதித்தன்,
2. கண்டராதித்தன்,
3.அரிகுலகேசரி,
4. உத்தமசீலி,
5. அரிந்திகை

களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதை அவன் பெற்றான். இவன்  ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர் தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப்பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள் கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம் முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர் மற்றும் பிரதிவீபதியின் மரணம் சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.

மேற்கோள்.
ஆ.குணசேகரன், சரசுவதி மகால் நூலகம், சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் 

கண்டராதித்த சோழன் கி.பி.950-957

Picture
திருநாகேச்சுரம்
கண்டராதித்த சோழன் கி.பி.950-957

கண்டராதித்த சோழன், பராந்தக சோழனின் இரண்டாவது மகன்
மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் சிறிய பளுவேட்டரையரின் மருகன்


பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான்.  முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர்.

சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.

அரிஞ்சய சோழன் கி.பி.956-957 


அரிஞ்சயன் சோழன். கி.பி. 956-957 

இராசாதித்தன் மறைவுக்குப் பின் அரிஞ்சயசோழன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு சோழநாட்டு சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டான். இவன் ப்ராந்தக சோழனுக்கும் பழுவேட்டரையர் கந்தன் அமுதனின் மகள் அருள்மொழி நங்கைக்கும் பிறந்தவனாவான். சோழர் வரலாற்றில் முதன் முதலாய் ஒரு மன்னனின் மூன்று மகன்களும் இளவரசு பட்டம் கொண்டதையும் மூவரும் அரசர்களானதையும் இதன் மூலம் அறியமுடிகிறது.

இவன் முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த  இராட்டிர கூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.

அரிஞ்சய சோழனுக்கு வீமன் குந்தவை ( கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகள்) ஆதித்தன் கோதைபிராட்டி (சேரமன்னனின் மகள்) கல்யாணி ( வைதும்பராயர் மகள் அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன) மற்றும் பூதி ஆதித்தபிடாரி ( கொடும்பாளூர் மன்னன் பூதி விக்ரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவன் மகள்) என்று நான்கு மனைவிகள் இருந்தனர். அரசி கள்யாணியின்பாற் பராந்தகன் சுந்தர சோழன் ன்ற மகனும் அரிஞ்சிகைபிராட்டி ( வாணர்குல வேந்தன் மனைவி) என்ற மகளுமிருந்துள்ளதாக அன்பிற்செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

அரிஞ்சய சோழன் " படைவீடு" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, "ஆற்றூர் துஞ்சின தேவர்" என்றும், "ஆற்றூர் துஞ்சின பெருமாள்" என்றும் வரலாற்றில்  குறித்து வருகிறார்கள் !

( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.)   அரிஞ்சய சோழன்  படைவீடு அமைத்து தங்கி இருந்த இடமான மேல்பாடியில்  இறந்தார்.   மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்த  இடத்திலேயே  அவரது   நினைவாக, அரிஞ்சய சோழனின் பேரனாகிய இராசராச சோழன் தன் பாட்டனை நினைவு கூறும் பொருட்டு வடாஅற்காடு திருவல்லத்தை அடுத்த மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயேசுரம் எனும் கோயில் ("அவனீச்வரம் கோயில்")ஒன்றை கட்டி அதற்கு நிவந்தங்கள் பல்வும் அளித்துள்ளான். இந்நாளில் அக்கோயில் சோழேச்சுரம் என்றும் "அவனீச்வரம் கோயில்" என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

அவனீஷ்வர் கோயிலில் குந்தவை தங்கியிருந்து  தியானத்தில்  இருந்தார் எனவும்  அவரது இத செயலின் விளைவாக  கோயிலில் உள்ள இறைவிக்கு,  "தபஸ் இருந்த தேவி" என்று பெயர் ஏற்பட்டது  என்பதும் விளங்குகிறது!

இப்போது  இந்த நிகழ்ச்சியை  மறைக்கும் விதமாககோயில் இறைவியின்  பெயரை "தபஷ்கிருதா தேவி" என்று மாற்றி எழுதி உள்ளார்கள்!

மேல்பாடி அவனீஷ்வரம் கோயிலில்,  ராஜராஜன் தனது 21 -ஆவது ஆட்சியாண்டு
( கி.பி.1006 -முதல்) குந்தவையின் பிறந்த நாளான,  அவிட்ட நட்சத்திர நாளில் வெகு விமர்சையாக  விழா எடுத்து,கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்  என்பதை  அவனீஷ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது!

அரிஞ்சய சோழனின் நினைவாக  கட்டப்பட்ட     பள்ளிப்படைகோயிலான  அவனீச்வரம் கோயில், தொல்லியல் துறையினரின் நிர்வாகத்தில் கீழ் இன்று   இருந்துவருகிறது!

956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான். 

சுந்தர சோழன் கி.பி.957-973


சுந்தரச் சோழன் 2ம் பராந்தகன். அரிஞ்சய சோழனின் புதல்வன்.
மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக விளங்கியவன். மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி)

கடைசி புதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான். இருவருக்கும் நடுவில் பிறந்தவர் குந்தவை தேவி. 

சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.

எனினும்,பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல்
செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச்
சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான்
என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த   பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தான். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.

கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன்  சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம்.

ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால் துயருற்ற மன்னன் பாரிச நோய் தாக்கி நோயுற்று
காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் கி.பி 973 ல் காலமானான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். 

மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.

சுந்தர சோழனின் மகன் அருள்மொழிவர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.

ஆதித்த கரிகாலன்


ஆதித்த கரிகாலன்
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த [[வீரபாண்டியன்|வீரபாண்டியனுடன்] போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன் கொலை குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனுடையது] என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய [[உத்தம சோழன்|சிற்றப்பன்] அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

இரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது."

பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்
சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

நன்றி
அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

உத்தம சோழன் கி.பி.970-985


உத்தம சோழன் கி.பி.970-985  (மதுராந்தகன்)

சோழ மன்னன் கண்டராதித்தனின் ஒரே புத்ல்வன் உத்தமசோழன். கண்டராதித்தன் இறக்கும் போது இவன் சிறுவனாய் இருந்தமையால் கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சிய சோழனுக்கு முடி சூட்டப்ப்ட்டது. அரிஞ்சிய சோழனுக்கு பிறகு அவனது மகன் சுந்தரசோழனுக்கு முடிசூட்டப்பட்டது.

சுந்தரசோழனுக்கு பிறகு அவனது மகன் அருண்மொழித் தேவன் ஆட்சியேற வேண்டும் என்று குடிமக்கள் பெரிதும் விரும்பினாலும், தனது சிறிய தந்தையுடைய அரசாலும் உரிமையையும் விருப்பத்தையும் மதித்து அருண்மொழித் தேவன் விட்டுக்கொடுக்க உத்தமசோழன் அரியணையேறினான்.

இம்மன்னனது முடிசூட்டு விழாகி.பி. 968 டின் இறுதியிலோ அல்லது கி.பி. 970ன் தொடக்கத்திலோ நடை பெற்றிருக்கவேண்டும். உத்தமசோழன். பரகேசரி என்னும் பட்டம் கொண்டு ஆட்சிபுரிந்தான். இவனது ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் திருமுல்லை வாயில், காஞ்சிபுரம், திருவெற்றியூர், திருவடந்தை,மீஞ்சூர்,பழங்கோயில், திருமால்புரம், திருவதிகை, வீரட்டானத்திலும், காணப்படுகின்றமையால் அப்பகுதிகள் அடங்கிய திருமுனைப்பாடி நாடும், மற்றும்தொண்டை நாடும் இவ்வேந்தன் ஆட்சிக்குள்ளாகியிருந்தமையை அறியமுடிகிறது.

இவ்வேந்தன் காலத்து கல்வெட்டுக்கள் சோழ ராஜ்ஜியத்தில் மிகுதியாக காணப்படுகின்றன. அவை இவ்வேந்தனும், இவனது தாய் செம்பியன் மாதேவியும் செய்த அறச்செயல்களைக் கூறுவனவாக உள்ளன. அவற்றால் அக்காலத்தில் மக்களின் நிலை, வாழ்க்கவொழுக்கங்கள், பொருளாதாரம் பற்றியறியவும் முடிகிறது.

உத்தமசோழனின் பதினாறாமாண்டில் பதியப்பட்ட செப்பேடுகள் சென்னை பொருட்காட்சிச்சாலையில் இருக்கின்றன.அதன் மூலம் சோழரது ஆட்சிமுறையும் அக்கால செய்திகளையும் அறிந்துகொள்ளலாம். அக்கால 10ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்தின் வடிவங்களையும் அறிய முடிகிறது.

உத்தமசோழனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பதை செம்பியன் மாதேவி என்னும் ஊரில் காணப்படும்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.அவற்றுள் ஐவர் பெயர் ஒரே கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இவ்வேந்தனின் பட்டத்தரசியாக விளங்கியவள் திருபுவனமாதேவியாவாள்.
ப்ட்டன்தானதுங்கி
மழபாடித்தென்னவன் மாதேவி
வானவன் மாதேவி
கிழானடிகள் பழுவேட்டரையர் மகள்
ஓரட்டணம்
சொரப்பையார் (கன்னடப் பெயர்)
அக்கரமாதேவியார்
மூத்த நம்பிராட்டியார், ஆகியோர்களும் மனைவியாவர்

இவ்வேந்தனின் புதல்வன் மதுராந்தக கண்டாராத்தித்த சோழன் ஆவான்.
இவவரசிளங்குமரன் ஐவரங்கிய ஒரு குழுவுடன் அறநிலைகளின் கணக்குகளை ஆராய்ந்து வந்ததை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.இவவரசிளங்குமரன் இராசராச சோழனின் ஆட்சியில் கோயில் மற்றும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்கானித்து வந்ததையும் அரியமுடிகிறது.

இவ்வேந்தனின் ஆட்சிக்காலத்தில் சுந்தரசோழனின் மகன் அருண்மொழித் தேவன் என்ற இராசராசசோழன் இளவர்சுபட்டம் கட்டப்பெற்றான்.

நடுவில் புலியுருவம் பொறிக்கப்பட்டதாகவும் ஓரத்தில் உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற பொற்காசு உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டதாக சர் வால்டர் எலியட் என்னும் அறிஞர் தன்னுடைய "தென்னிந்திய நாணயங்கள்" என்ற நூலில் கூறியுள்ளார். இப்போது கிடைத்துள்ள சோழமன்னர்களின் நாணயங்களில் இதுவே பழமையானது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. மக்கள் யாவரும் துன்பங்களின்றி இனிதே வாழ்ந்து வருமாறு நல்ஆட்சி செய்து வந்த உத்தமசோழன் கி.ப்.985ம் ஆண்டு மரணமடைந்தான் 

இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.

கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்.

இராசராச சோழன் கி.பி 985-1014

Picture
இராசராச சோழன் கி.பி 985-1014
தஞ்சைக் கோயிலை கட்டியவன்.
தமக்கை குந்தவை நாச்சியார்
ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை.

கி.பி 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது.

இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. காந்தளூர்ச் சாலை இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர் , பாண்டியர் ,சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை , விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான்.

இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான். கங்கபாடி, நுளம்பாடி சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத்
தோற்கடித்து கங்கபாடியைக் ( மைசூரின்தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டைஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான்.

இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர் , கொங்கணர் , தெலுங்கர் , இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஈழத்துப் போர்
இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.

இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்தஅநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி . ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது  குறிப்பிடத் தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ
மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக
அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும்இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில்
தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

சோழ  அரசர்களின் வயதுகளுக்கு குறிப்புகள் இல்லை.
அவர்களின் மெய்கீர்த்தி ஆட்சி ஆண்டை தரும்.
ராஜ ராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் முக்கிய ஆண்டுகள்.
958        சுந்தர சோழர் அரியணை ஏறுகிறார்.
959        சேவூர் போர் - ஆதித்ய கரிகாலன் சிங்கக்குட்டி போல பாண்டிய படைகளுடன்
             போரிட்டது
964        ராஜேந்திர சோழர் பிறந்த ஆண்டாக இருக்கலாம்.
969       ஆதித்ய கரிகாலன் கொலை
970       உத்தம சோழர் அரியணை ஏறுவது
973        சுந்தர சோழர் மறைவு
985        அருள் மொழி வர்மர் அரியணை (உத்தம சோழருடன் மூன்று ஆண்டுகள் சேர்ந்து
               என்று ஒரு தகவல்)ராஜ ராஜர் என்ற பெயர் பெறுதல்
987        உத்தம சோழர் மறைவு / அல்லது பதவி நீத்தல்
993        ராஜ ராஜர் இலங்கை படை எடுப்பு
994        ராஜ ராஜர் சேர படை எடுப்பு (கண்டலூர் சாலை) மாலத்தீவு படை எடுப்பு.      
999        கங்கபாடி , நுரம்பபாடி படை எடுப்பு ( தற்போதைய கர்நாடகம் )
999        வெங்கி படைஎடுப்பு
1001        செம்பியன் மாதேவி மறைவு ( உத்தம சோழர் தாய் - பல கோவில்களை
                கற்றளியாக மாற்றிய அற்புத அம்மை )
1003         சாளுக்ய ரட்டபாடி படை எடுப்பு  ( ராஜேந்திரன் தலைமையில் )
1007        ஹோட்டுர் படை எடுப்பு ( ஹோட்டுர் கல்வெட்டு - ராஜேந்திரனின்
                தலைமையில் - கொடூரமான காரியங்களை செய்ததாக கல்வெட்டு )
1008         உதகை படை எடுப்பு ( சேர போர் )
1010        பெரிய கோவில் பனி நிறைவு
1012        ராஜேந்திரர் அரியணை ஏறுவது -  தன் தந்தையுடன் சேர்த்து ஆட்சி புரிதல்.
1014         ராஜேந்திரர் அரசர் - ராஜ ராஜர் மறைவு ?( இருபத்தி ஒன்பது ஆட்சி ஆண்டுகள் )
1015        முதல் சோழ பிரதிநிதி கூட்டம் சீன சங் அரசவைக்கு விஜயம்.
1018         ராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து ஆட்சி புரிதல் , இலங்கை படை எடுப்பு.
1019        கங்கை நோக்கி.
1020         இலங்கை போரில் வெற்றி - பாண்டிய குல ஹாரம்  மீட்பு, இலங்கை அரசன்
                 மகிந்தன் மற்றும் அவன் மனைவி சிறை பிடிப்பு ( மதுரையில் பன்னிரண்டு
                 ஆண்டுகள் சிறை வைப்பு )
1021        மேலை சாளுக்ய படை எடுப்பு.
1025         ஸ்ரீ விஜயம், கடாரம் கடல் வழி படை எடுப்பு.
1031         மேலை சாளுக்ய போர் வெற்றி, வெங்கி , களிடண்டி போர்.
1033         இரண்டாவது குழ சீன சென்றடைகிறது . இதனுடன் ராஜேந்திர சோழர் போர்கள்
                 முடிவு - கங்கை கொண்ட சோழ புறத்தில் இருந்து செயல் படுத்தல்.
1035        கங்கை கொண்ட சோழ புறம் கோவில் நிறைவு பெறுதல்.
1044        ராஜேந்திர சோழர் மறைவு

முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1012-1044

Picture
கங்கை கொண்ட சோழீச்சுரம்
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)

இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன் . இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக
விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர , கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக
இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.

சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு,
அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும்
படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில்
மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும்
சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன.

சாளுக்கியர் , கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில்
அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள்
தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற
காலப்பகுதியாகவே கழிந்தது. வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக்
கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில்
சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது.

தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட
சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத்
தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன்
இரசேந்திரனே ஆவான். பின்வந்த சோழ மன்னர்கள் முதலாம் இராசாதிராசன்
இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான
ஈழம் , பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப்
பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

இரண்டாம் இராசேந்திரன் இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும்
அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன்
எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப்
பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன்
என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள்
தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல்
நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

கங்கைகொண்டசோழேச்சரம்


பிற்காலச் சோழர்களில் விசயாலயன் காலம் முதல், முதலாம் இராஜராஜன் காலம் முடிய (கி.பி. 846-1014) பத்துத் தலைமுறைகளாகத் தஞ்சாவூர் சோழமன்னர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்திருந்தது.

இத்தஞ்சாவூர் பாண்டி நாட்டின் எல்லைக்கு அருகில் இருந்தமையால், தலைநகரம் பாண்டியர்களால் அடிக்கடித் தாக்கப்படும் என்ற காரணம் பற்றியும், அக்காலம் மாதம் மும்மாரிபெய்து கொள்ளிடப்பேராறு வெள்ளப்பெருக்கெடுத்து ஓடினமையால் முதலாம் இராஜேந்திர சோழன், (முதல் இராஜராஜ மன்னனின் மகன்) தன் குல தெய்வமாகிய தில்லை நடராசப் பெருமானைத் தன் பரிவாரங்களோடு சென்று அடிக்கடி வழிபடுவதற்கு அக்கொள்ளிடப் பேராறு தடையாய் இருந்தமை பற்றியும், அக்காலம் கொள்ளிடப் பேராற்றுக்கு இக்காலம் போல் அணைக்கட்டு இல்லாமையாலும் சோழநாட்டின் நடுப் பகுதி யில் தலைநகரை அமைக்க வேண்டும் என்ற காரணம் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டான்.

இங்கே தலை நகரை நிர்மாணம் பண்ணுவதற்கு வேண்டிய சுண்ணாம்பு, செங்கல் முதலியவைகள் தயாரித்த இடங்கள் எல்லாம் இக்காலம் அவ்வப் பெயர்களுடன் சுண்ணாம்புக்குழி முதலான சிற்றூர்களாகத் திகழ் கின்றன. கோட்டை இருந்த இடம் உள்கோட்டை (உக்கோட்டை) என்ற பெயருடனும், ஆயுத சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்னும் பெயருடனும் இன்றும் நிலவுகின்றன. இங்ஙனம் புதிய நகரை நிர்மாணம் பண்ணின முதலாம் இராஜேந்திர சோழன், அதனைக் கங்கைநீரால் புனிதம் பண்ணவேண்டும் என்று எண்ணி, கங்கைநீர் கொணர, தன்படைத் தலைவனிடம் ஒரு பெரும்படையை அனுப்பினான்.

அப்படைத் தலைவனும் வடவர்களை வென்று கங்கை நீரைக் கைக்கொண்டு திரும்புகையில், இராஜேந்திரன் அப்படைத் தலைவனைக் கோதாவரி யாற்றங்கரையில் கண்டு பெருமகிழ்வுற்றுத் தன் நாட்டிற்குத் திரும்பினான். இதனால் இவனுக்குத் கங்கைகொண்ட சோழன் என்னும் பெயர் தோன்றலாயிற்று. கொணர்ந்த கங்கை நீரை, சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றை வெட்டி அதில் ஊற்றினான்.

அந்த ஏரி இக்காலம் பொன்னேரி என்ற பெயருடன் விளங்குகின்றது. புதிதாக நிர்மாணம் பண்ணின தலைநகரும் கங்கைகொண்ட சோழ புரம் என்னும் பெயர் பெற்றது. கங்கைமாநகர் என்று வீரராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணி யிலும் இக்கங்கை கொண்ட சோழபுரம் குறிப்பிடப்பெற்றுள்ளது.

இங்கே இவன் கட்டிய கோயிலும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் பெயர் எய்திற்று. இச்சோழேச்சரம் உருவத்தில் தஞ்சை இராசராசேச்சரத்தை ஒத்தது. சிற்பத் திறன் வாய்ந்தது. இங்குள்ள சண்டேசுவர பிரசாத தேவரின் திருமேனி மிக்க வேலைப்பாடு உடை யது. கண்கவரும் வனப்புடையது. இந்தக் கங்கைகொண்ட சோழேச் சரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் மீது கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இந்தக் கங்கைகொண்ட சோழபுரம் எத்தனையோ வெற்றி விழாக்கள் நடந்த இடம்.

சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் முதலான புலவர் பெருமக்கள் வாழ்ந்த இடம். கலிங்கப்போரில் வெற்றிப்பெற்றுத் திரும்பி. முதற்குலோத்துங்க சோழன், தன் அவைக் களப்புலவராகிய சயங்கொண்டாரைப் பார்த்து, யானும் சயங் கொண்டான் ஆயினேன் எனக்கூற, சயங்கொண்டானை (வெற்றி பெற்றவனைச்) சயங்கொண்டான் பாடுதல் பொருத்தமுடைத்து என்று கூறி, கலிங்கத்துப் பரணியைப் பாடிய இடம். விக்கிரமசோழனுலா, இரண்டாம் குலோத்துங்க சோழனுலா, இரண்டாம் இராசராசனுலா இவைகளெல்லாம் பாடப்பட்ட இடம். குலோத்துங்கன், சேக்கிழார் பெருமானைத் திருத்தொண்டர் புராணத்தைத் தில்லையில் பாடச் செய்து, நாள்தோறும் எவ்வளவு எவ்வளவு பாடல்கள் நிறைவேறின என ஆள் இட்டுக் கேட்டறிந்த இடம்.

கங்கைகொண்ட சோழன் முதல், மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் முடிய உள்ள சோழ மன்னர்களுக்குத் தலைநகராய்த் திகழ்ந்திருந்த இடம். இத்துணைச் சிறப்பினைப் பெற்றிருந்த இடம், இதுபொழுது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. எனினும் கங்கைகொண்ட சோழேச்சரம் என்னும் கோயிலே பண்டைப்பெருமை அனைத்தையும் விளக்கி நிலவுகின்றது.

இக்கோயில், இந்நாளில் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் பெருவழியில் கொள்ளிடப் பேராற்றுக்குக் கட்டப்பட்டுள்ள கீழ் அணைக்கட்டுக்கு வடக்கேயுள்ள குறுக்குச்சாலை யிலிருந்து மேற்கே சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இக்காலப் பிரிவுப்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் அமைந்தது இவ்வூர். இக்கங்கைகொண்ட சோழேச்சரத்தில் உள்ள இறைவர்க்குப் பெரிய உடைய நாயனார் என்றும், அம்பிகைக்குப் பெரிய நாயகி என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன.

கல்வெட்டு. 
(1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1892 Nos. 75-83, -1908 Nos. 29-34 and South Indian Inscriptions(Texts) Volume IV Nos. 522-530. )

இத் திருக்கோயிலில் சோழமன்னர்களில் விசயராஜேந்திரன் (கி.பி. 1051-1065) வீரராஜேந்திரன் (கி.பி. 1063-1070) முதற் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) மூன்றாங் குலோத்துங்கன் இவர் கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் கோமாற பன்மரான திரி புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவர், கோனேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிய தேவர் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் - மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் குமாரர் பிரபுட விரூபாக்ஷராயர் முதலானோர் காலங் களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

கல்வெட்டுக்களினால் அறியப்படும் செய்திகள்.
மாறபன்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவன், தேவணிபுத்தூர் என்னும் ஊரிலுள்ள நத்தம், மனைகள், நன்செய், புன் செய், தோப்புக்கள், ஊருணி, குளம் முதலியன உள்பட அனைத்தையும் விலைக்கு வாங்கி, அதனைத் திருநாமத்துக் காணியாக, உடையார் கங்கைகொண்ட சோழேச்சரமுடையார்க்குக் கொடுத்துள்ளான்.

விக்கிரமபாண்டியன் தன்பேரால் கட்டின இராசாக்கள் நாயன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிவந்தங்களுக்கு மூலதனமாக குலோத்துங்கசோழ நல்லூரிலும், இராஜேந்திர சோழநல்லூரிலும் இருபது வேலி நிலத்தையும்;

சுந்தரபாண்டியன், தன்பேரால் நிறுவிய சுந்தரபாண்டியன் சந்திக்கு நிலமும் கொடுத்துள்ளனர். சோழ மன்னர்களில் விசயராஜேந்திரன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிலநிவந்தம் 216 வரிகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

அவைகள் பல இடங்களில் சிதைந்துவிட்டன. இக் கல்வெட்டுக்களில் இவ்வூர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணைகொண்ட சோழவளநாட்டு கங்கை கொண்ட சோழபுரம் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளிடப் பேராற்றிலிருந்து வீரநாராயணன் ஏரிக்கு (வீராணத்தேரிக்கு) நீர் போகும் ஆறு, வடவாறு என்று இக்காலம் வழங்கப்பெறினும் அது மதுராந்தக வடவாறு என்று பெயர் பெற்றிருந்தது.

மதுராந்தகன் என்பது கங்கைகொண்ட சோழனின் பெயர்களுள் ஒன்று. \"உடையார் திருப்புலீஸ்வரமுடையார் திருநாமத்துக் காணி குறுங்குடிக்கும், மன்னனார் திருவிடை யாட்டம் வீரநாராயண நல்லூர் திருவாழிக் கல்லுக்கும்\" என்னும் கல்வெட்டுத் தொடர் சிவ பெருமானுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக் காணி என்றும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்துக்குத் திருவிடை யாட்டம் என்றும் வழங்கும் வழக்காறுகளைத் தெரிவிக்கின்றன.

மன்னனார் என்பது திருமாலின் பெயர். அவர் எழுந்தருளிய காரணம்பற்றியே ஊர் மன்னார்குடி (காட்டுமன்னார்குடி) என்னும் பெயர்பெற்றது. அவ்வூரின் பழம்பெயர் வீரநாராயணநல்லூர் என்ப தாகும். இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்ட குறுங்குடி, கண்ணமங்கலம், வீரராஜேந்திர சோழபுரம், மழவதரைய நல்லூர், கிழாய்மேடு, கொல்லாபுரம் முதலான ஊர்கள் இன்றும் அப்பெயர்களுடன் நிலவுகின்றன.

முதலாம் ராஜாதிராஜ சோழன். கி.பி.1018-1054


முதலாம் ராஜாதிராஜ சோழன். கி.பி.1018-1054

ராஜராஜசோழரின் மகன் முதலாம் ராஜேந்திர சோழர்.    
அவருடைய மகன்களில் பட்டத்துக்கு வந்தவர்கள் மூவர்.ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன். 


இராசாதிராசன் பிறவியிலேயே பெருவீரமுடையவனாய் விளங்கியதால் இவனுக்கு கி.பி. 1018ல் இளவரசு பட்டம் கட்டி அரசியலில் ஈடுபடுத்தப்பட்டான். தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் இளவரசனாய் இருந்து அரசியலில் பயிற்சி பெற்றவன். இளவரசுக் காலத்திலேயே பாண்டியர், சேரர்,சிங்களர், மேலைச் சாளுக்கியர் என்பாரோடு பெரும்போர் புரிந்து வெற்றிமாலை சூடி புகழ் பெற்றான். தந்தை இறந்த பின் கி.பி.1044ல் முறைப்படி சோழநாட்டு சக்கரவர்த்தியாக "பரகேசரி" ன்னும் பட்டம் பூண்டு ஆட்சிபுரிந்தான்.

கோப்பரகேசரிவர்மன் ராஜாதிராஜ சோழன் எனும் பெயரோடு கூடிய இந்த சோழன், மிகப் புகழ்வாய்ந்த தனது தாத்தா ராஜராஜசோழன், தந்தை ராஜேந்திர சோழன் இவர்களுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன்.

தந்தை காலத்திலேயே இவன் வட இந்திய படையெடுப்பின் போது பல நாடுகளைப் பிடித்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவன். இலங்கை, வடக்கே வேங்கி, கலிங்கம் ஆகியவை இவன் வெற்றி கொண்ட பிரதேசங்கள். கடல்கடந்த நாடுகள் பலவற்றை இவன் கைப்பற்றியிருந்த நிலையில் அங்கெல்லாம் புரட்சிகள் ஏற்பட்டபோதும் அவற்றை மிக சாமர்த்தியமாகச் சமாளித்த பெருமை இந்த ராஜாதிராஜனுக்கு உண்டு.

இவனுடைய சோழ பெரும்படைகளுக்கு இவனே முன்னின்று தலைமை வகித்து போரில் தானே நேரில் பங்கு கொண்டு தன் வீரத்தை வரலாற்றில் பதிய வைத்த மாவீரன் இவன்.
இவனுடைய இளம் வயதிலேயே தன் தந்தைக்கு உதவியாக அவர் ஆண்ட காலத்திலேயே பொறுப்புகளைச் சுமந்தவன் இந்த ராஜாதிராஜன். தந்தையும், தனயனும் இணைந்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டனர். ராஜேந்திர சோழன் காலத்தில்  முழு உரிமை பெற்ற ஒரு அரசனாகவே இவன் திகழ்ந்தான். தந்தை நாட்டை நடத்திச் செல்லும்போது இவன் போர்க்களத்தில் யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

இராசாதிராசன், விசய ராசேந்திரன், சயங்கொண்ட சோழன்,ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரம்கொண்ட சோழன், வீரராசாதிராசோழன் என்னும் பட்டங்களையும் கொண்டான். ப்ட்டத்தரசி திரைலோக்கியமுடையாள் ஆவாள், உலகுடைய பிராட்டி என்றொரு மனைவியுமிருந்தாள் என்று கன்னியாகுமரி கல்வெட்டொன்றினாலறிய முடிகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். இவருக்கு நிறைய பிள்ளைகள். அசுவமேத யாகம் செய்த சோழன் என்ற பெயரும் இவனையே சாறும்.

இளவரசு காலமுதல் உயிர் துறக்கும் வரையில் தன் வாழ் நாளின் பெரும்பகுதியை போர்களத்தில் கழித்து, தனது தந்தை முதலாம் இராசேந்திர சோழன் அடைந்த பெரும் வெற்றிகளுக்கு காரணமாயிருந்த இவனது வாழ்க்கை வீரம் நிரம்பிய வாழ்க்கை எனலாம். இராசாதிராசன் சீவல்லபன் மதனராசன் என்ற சிங்கள மன்னனை கி.பி 1040ல் தோற்கடித்தான் என்று கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

இலங்கையில் போர்.
இலங்கை கி.பி. 993 முதல் 1077 வரையில் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இலங்கையில் சோழர் ஆட்சி முழுமையாக இல்லாமல் ஒருசில பகுதிகளில் மட்டுமே இருந்தது. ஆகையால் இலங்கை சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பான் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால், ராஜேந்திர சோழன் அங்கு படையெடுத்துச் சென்று கி.பி. 1017இல் மகிந்தனைத் தோற்கடித்து  சிங்கள நாட்டைக் கைப்பற்றியிருந்தான். மகிந்தன் அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்த பின் இறந்து போனான். ஆனால் சோழர் ஆட்சிக்கு எதிராக சிங்களர்கள் அடிக்கடி கலகம் விளைத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலைமையை மாற்ற எண்ணிய ராஜாதிராஜன் 95000 வீரர்களைக் கொண்ட சோழர் படையை அழைத்துச் சென்று கலகக்காரர்களை இலங்கையின் தெற்குப் பகுதியான ரோகணா வரை அடித்துத் துரத்திவிட்டார். பிறகு தான் பிடித்த இலங்கையின் சிங்களப் பகுதிகளுக்கு அரசரானார்.

சோழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த சிங்களர்களுக்கு பாண்டியர்கள் உதவி புரிந்து வந்தனர்.  சிங்களருக்கும் பாண்டியருக்கும் சோழர்கள் பொது எதிரிகள் என்பதால் ஒன்று சேர்ந்து கொண்டனர். சிங்கள அரச குடும்பத்தாரோடு பாண்டியர்கள் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டிருந்தனர்.

ராஜாதிராஜ சோழன் காலத்தில் சிங்கள பாண்டிய உறவு உச்ச கட்டத்தில் இருந்தது, இலங்கை அரசன் விக்கிரமபாகு அங்கு இருந்த சோழ படைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தான். அவனுக்கு உறுதுணையாக இருந்தவன் பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன். இவர்களோடு வடக்கே கன்னோஜியின் இளவரசன் ஒருவனும் துணைக்கு நின்றான். சோழர் படைகள் இந்த பொது எதிரிகளோடு தீரமாகப் போரிட்டு இந்த இளவரசர்களை இரக்கமின்று கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் சிங்கள பெளத்த நூலான மஹாவம்சம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த மஹாவம்சம் பெளத்தர்களுக்காக பெளத்தர்களால் எழுதப்பட்டதானதால் இதன் கூற்று அன்றைய வரலாற்றுச் செய்திகளை அப்படியே எடுத்துரைக்கிறது. சோழர் படைகள் சற்றும் கருணை காட்டாமல் இந்தக் கொடிய எதிரிகளை இரக்கமின்றி அழித்தொழித்தார்கள் என்பது தெரிகிறது. சோழர்களின் இந்த மனப்பான்மையை, செயலை மஹாவம்சம் கண்டிக்கிறது. இதை மனிதாபிமானமற்ற செயலாக வர்ணிக்கிறது.

இலங்கையில் சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகள் தனியான தமிழ்ப் பிரதேசமாக நிர்வகிக்கப்பட்டன. தென்கோடி இலங்கை மட்டும் எப்போதும் சிங்களவர்களின் பிரதேசமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

சிங்கள அரசன் விக்கிரமபாகுவின் மகன் கிட்டி என்பவன் 1058இல் விஜயபாகு எனும் பெயரோடு சிங்களருக்குத் தலைமை ஏற்றான். சோழர் படைத் தளபதிகள் இந்த சிங்களர்களைப் பிடித்துத் தண்டித்து தமிழ்நாட்டு வணிகர்களைக் காப்பாற்றினர்.

சாளுக்கியர்களோடு போர்.
சாளுக்கியருடன் நடந்த போரில் கம்பிலி நகரத்திலிருந்த சாளுக்கியரது மாளிகை தகர்தெரியப்பட்டு இராசாதிராசனின் வெற்றித்தூன் நிறுவப்பட்டதாக கலிங்கத்துப்பரணியில் கூறப்பட்டுள்ளது. (கம்பிலி ஸ்யத்தம்பம் நட்டதும்) இப்பொர் இவனால் மேலைச் சாளுக்கியர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது போர் என்று தெரிகிறது.

குந்தள இராச்சியம் மீது படை எடுத்து சென்ற இராசாதிராசன் கிருஸ்ணா ஆற்றுக்கரை ஓரத்தில் இருந்த பூண்டூரில் பெரும் போர் புரிந்து தெலுங்க விசையன், அதிராசன், அக்கப்பையன், கொண்டையராயன், முஞ்சன்,தண்டநாயகன், தணஞ்செயன், வீரமாணிக்கன் என்னும் சாளுக்கிய தலைவர்களை வென்று நகரை எரியூட்டி நகரில் புலி வடிவம் பொறிக்கப்பட்ட வெற்றித்தூன் ஒன்றையும் நாட்டினான்.

தனது பட்டத்து யானையை சிறுதுறை,பெருந்துறை,தெய்வவீமகேசி என்ற மூன்று துறைகளிலும் நீராட்டி வராகமுத்திரை பொறிக்கப்பட்ட வராகக் குன்றில் தன்னுடைய புலி முத்திரையை பொறிக்கச்செய்து வெற்றித்தூனையும் நிறுவியுள்ளான். இந்த அவமானத்தை தாங்கமுடியாத சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் பெரும் படையுடன் வந்து இராசாதிரானுடன் மீண்டும் போர் தொடுத்தான்.இராசாதிராசன் இப்போரில் வெற்றி அடைந்து ஆகவமல்லனின்ன் தலை நகர் கல்யாணபுரத்தையும் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரில் வீரபிடேகம்
செய்துகொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டப்பெயரையும் புணைந்து கொண்டான்.

குந்தளநாட்டின் மேல் மும்முறை படை எடுத்துச்சென்று நிகழ்த்திய வெற்றிச்செயல்களை கலிங்கத்துப்பரணியில் சயங்கொண்டாரும், விக்கிரம சோழன் உலாவில் ஒட்டக்கூத்தரும் பாடியுள்ளனர்.

ராஜாதிராஜன் தென் கர்நாடகப் பிரதேசங்களின் மீது படையெடுத்து சாளுக்கியர்களின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். உச்சங்கி, நுளம்பவாடி, கடம்பலிங்கே, கோகாலி போன்ற இடங்கள் அவை. இந்த வெற்றிகள் சோமேஸ்வரனைக் கலங்க அடித்தது. அவன் தனக்குத் தானே "திரைலோக்கியமல்லன்" எனும் விருதினைக் கொடுத்துக் கொண்டிருந்தான். வேங்கியில் சோழர்களின் உறவினர்களான வேங்கி அரசர்களை வென்று அங்கு தன் சார்பில் ஒரு பொம்மை அரசனை நியமித்துவிட்டு வந்திருந்தான் சோமேஸ்வரன். தன் தலைநகரை நோக்கி சோழர்கள் வருவதறிந்து தன் நாட்டைக் காத்துக்கொள்ள அவசரமாக சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பினான் அவன். சாளுக்கிய படைகளும், மாபெரும் சோழர் படைகளும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த கொப்பம் எனுமிடத்தில் சந்தித்தது.

ராஜாதிராஜனின் இறுதி நாட்கள்.
வடக்கே சாளுக்கியர்களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த யுத்தத்தில் பல போர்க்களங்களையும், பல வெற்றிகளையும் பெற்ற ராஜாதிராஜன் கொப்பம் போரில் தன்னந்தனியாகப் போரிட்டு மாண்டுபோனான். இந்த யுத்தத்தில் இவர் தன்னுடைய யானையின் மீதிருந்து போரிடுகையில் வேல் பாய்ந்து மாய்ந்து போனதால் இவருக்கு "யானைமேல் துஞ்சிய தேவர்" எனும் பட்டப்பெயர் கிடைத்தது. சோழர் படைகள் தோல்வியடையும் போல் இருந்த சமயத்தில் இரண்டாம் ராஜேந்திரர் போர்க்களத்திலேயே முடிசூட்டிக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தினார். வெறித்தனமான போர் நடைபெற்றது.  வெற்றி சோழர்களுக்கே 

தன் தந்தையார் ராஜேந்திரனுக்காக போர்க்களங்களைத் தன் இளம் வயதில் கண்ட ராஜாதிராஜன் கடைசியில் தன் உயிரை ஒரு போர்க்களத்திலேயே விட்டதன் மூலம் அவன் ஒரு போர்வீரனாகவே வாழ்ந்தான் வீழ்ந்தான் எனும் பெருமைக்கு உரியவனாகிறான்.


ராஜாதிராஜன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில காலத்துக்குள் இரண்டாம் ராஜேந்திரனை இளவரசாக நியமித்து நிர்வாகத்திலும் போர்களிலும் தனக்கு உதவி செய்யும்படி நியமித்துக் கொண்டார். ராஜாதிராஜன் காலமானவுடன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சோழ மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான்.

திருப்பைஞ்ஞீலி திருகோயில்
இக்கோயிலில் ராஜேந்திரசோழன் ராஜாதிராஜன், ராஜராஜதேவன் கோனேரின்மை கொண்டான் ஆகிய சோழ மன்னர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இத்தளம் இராஜேந்திர சிங்கவள நாட்டைச் சேர்ந்தது என்றும், இராஜத்திராஜா வளநாட்டுவடவழிநாட்டைச் சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இறைவனின் பெயர் திருப்பைஞ்ஞீலி மஹாதேவர் என்றும் கதலிவசந்தர் என்றும் கூறப்படுகிறது. கோனேரின்மை கொண்டான் இத்தலத்தில் ஏழுநிலை கோபுரத்தை கட்டத் தொடங்கினான் என்பதையும் பாண்டிய மன்னர்கள் செய்த திருப்பணிகளை இத்தல கோபுரவாயிலில் உள்ள கல்வெட்டுகளில் அறியலாம். பாண்டியர்கள் திருப்பணி மண்டபங்கள் முதலியவற்றில் பாண்டியரின் அச்சுக்களை பொருத்தியுள்ளார். இக்கோயில் புலிவரிக்கோடுடைய கற்களினால் கட்டப்பட்டுள்ளது.

முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேடு
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கால செப்பேடு.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், திருஇந்தளூர் எனும் ஊர் உள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக, கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில், பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் உள்ளது.கோவிலுக்கு முன், மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் 12 செப்புத் திருமேனிகள், பூஜைப் பொருட்கள், வாத்தியக் கருவிகள், சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள் கிடைத்துள்ளன.பொதுவாக, செப்பேட்டு முத்திரைகளில் உள்ள சின்னங்கள் புடைப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தச் செப்பேட்டில் சின்னங்கள் பள்ளமாக பொறிக்கப்பட்டு உள்ளன. இந்தச் செப்பேடு, முதலாம் ராஜாதிராஜன், தனது 35வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1053) அளித்த அறக்கொடையைக் குறித்து வெளியிடப்பட்டது.இவர், கங்கைகொண்ட சோழன் என வரலாற்றில் மிகப் புகழ் பெற்ற முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன். ஆம், ராஜராஜ சோழனின் பேரனே முதலாம் ராஜாதிராஜன். இவரோடு உடன் பிறந்த மற்ற சகோதரர்கள், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் மற்றும் அதிராஜேந்திரன் ஆகிய மூவர்.முதலாம் ராஜாதிராஜனின் தந்தையான முதல் ராஜேந்திரச் சோழன், தன்னுடைய இறுதிக்காலத்தில், தன்னுடைய மக்கள் நால்வரையும் அழைத்து, எப்போதும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமெனவும் கூறி, அவர்களிடம் அதற்கான உறுதியைப் பெற்றுக்கொண்டான் என, இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.

முதலாம் ராஜாதிராஜனின் இறுதி ஆட்சி 36 ஆண்டுகள். மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் சோமேஸ்வரனை எதிர்த்து, கொப்பத்தில் செய்த போரில், போர்க்களத்திலேயே யானையின் மீது அமர்ந்தவாறே உயிரை ஈந்தவன், இம்மன்னன்.ஏற்கனவே, அண்ணன் ராஜாதிராஜனால் இளவரசு பட்டம் சூட்டப் பெற்றிருந்த இரண்டாம் ராஜேந்திரன், அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டு, தலைமையின்றி சிதறிய சோழப்படையை ஒழுங்குபடுத்தி, தலைமையேற்று, ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றிவாகை சூடி, கொல்லாபுரத்தில் தன் வெற்றித் தூணையும் நிறுவியவன்.

கொப்பத்துப் போருக்குச் செல்லும் முந்தைய ஆண்டில் (கி.பி., 1053), அண்ணனால் அளிக்கப்பட்ட இவ்வாணை, அவனது தனயன் இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் (கி.பி., 1061) வரியிலிட்டுச் செப்பேடாக்கித் தரப்பட்டு உள்ளது. இரண்டாம் ராஜேந்திரச் சோழன், நாடு திரும்பிய பின், தன் அண்ணன் முதல் ராஜாதிராஜன் போருக்குச் செல்வதற்கு முன் வழங்கிய தானத்தை உறுதி செய்து வழங்கியதே, இப்போது கிடைக்கப் பெற்ற செப்பேடு.

தமிழகத்தில், ஏன், இந்தியாவிலேயே கிடைத்துள்ள செப்பேடுகளில் பெரிய செப்பேட்டுத் தொகுதியாகக் கருதப்பட்ட முதலாம் ராஜேந்திரனின் 57 கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகளை விட அளவிலும், எண்ணிக்கையிலும் பெரிதாக விளங்குவது இச்செப்பேடு.தமிழ்ச் சிங்கக் கூட்டமாம் நம்மை, தடம் மாற்றிப் போடுவதற்கு இந்தத் தரணியில் எவரும் இல்லை. பழம்பெரும் தஞ்சை மண்ணில் சோழ மன்னர் ராஜாதிராஜன் வழிவந்தோர் அன்றைக்கே திட்டமிட்டு, நமக்கென புதைத்து வைத்த 86 செப்பேடுகளும் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றன. (ஜூன் 18,2010.)

இரண்டாம் ராஜேந்திர சோழன். கி.பி. 1054  1063

Picture
சோழ ராஜகோவில். நாகர் கோவில்
11. ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063
Draft
இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063)

ராஜாதிராஜ சோழன் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அவனுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டவன் இந்த 2ஆம் ராஜேந்திரன். ராஜாதிராஜன் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பெருமையோடு மாண்டுபோன பின்பு அவனுடைய தம்பியான இவன் "ராஜகேசரி" எனும் பட்டப்பெயருடன் பட்டத்துக்கு வந்தான். இவனது தந்தை ராஜேந்திரன், அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோர் ஆட்சி நடத்திய கங்கை கொண்ட சோழபுரம் தான் இந்த மன்னனுக்கும் தலைநகராக விளங்கியது. வழக்கம் போல எல்லா மன்னர்களையும் போல இவனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அவர்கள் ராஜராஜ அருள்மொழியார் எனும் தென்னவன் மாதேவியார், உருத்திரன் அருள்மொழி எனும் பிருதிமாதேவியார், கோகிலனடிகள் ஆகியோராவர்.

2ஆம் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூத்த சகோதரனும் இவனுக்கு முந்திய சோழ அரசனாக இருந்தவனுமான ராஜாதிராஜனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். இவனுடைய தமையனாரான ராஜாதிராஜன் கொப்பம் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சியபோது இவனும் அந்தப் போரில் ஈடுபட்டு வீரமாகப் போராடினான். இவனுடைய தீரமிக்க போரினால்தான் போரின் முடிவு சோழர்களுக்கு சாதகமாகவும் சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு அழிவாகவும் முடிந்தது.

சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு எதிரான கொப்பம் யுத்தம்.

மேலைச் சாளுக்கிய மன்னர்களுக்கு எதிரான யுத்தம் சோழர்கள் நெடுநாட்களாக தொடர்ந்து வந்திருக்கின்றனர். முதலாம் ராஜேந்திர மன்னன் காலத்திலேயே சாளுக்கியன் சத்யாஸ்ரேயனுக்கு எதிராகப் போரிட்ட காலம் தொட்டு இந்த விரோதம் தொடர்ந்து வந்திருக்கிறது. அது தவிர ராஜராஜ சோழனுடைய மகளான குந்தவியை வேங்கிநாட்டு இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுத்து உறவு கொண்டதும், அவன் மகனுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கையாரைத் திருமண உறவு வைத்துக் கொண்டதும் சாளுக்கியர்களின் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்ததை முன் பதிவுகளில் பார்த்தோம். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவன் மகன் ராஜாதிராஜன் காலத்தில் இந்த மேலைச் சாளுக்கியர்களோடு துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த ஊரான கொப்பம் எனும் இடத்தில் 1053-54இல் உக்கிரமான போர் நடந்தது. ராஜாதிராஜனே இந்தப் போரில் சோழர் படையை தலைமை வகித்து வழிநடத்திச் சென்று போரிட்டான். யானை மேல் இருந்து போரிட்ட ராஜாதிராஜனை குறிவைத்து சாளுக்கியர்கள் வேல் வீசித் தாக்கி அவன் மரணத்துக்குக் காரணமானார்கள். அதே நேரத்தில் அவன் தம்பி 2ஆம் ராஜேந்திரன் மற்றொரு சோழர் படைக்குத் தலைமை தாங்கி போர்புரிந்து கொண்டிருந்தான். அண்ணன் யானை மேல் இருந்து கொல்லப்பட்டான் எனும் செய்தி அறிந்து ஓடோடி வந்தான் 2ஆம் ராஜேந்திரன். வீரமாகப் போரிடும் தம்பியைக் குறிவைத்து சாளுக்கியர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஆனால் தந்தைக்குச் சமமான வீரத்தோடு போரிட்ட 2ஆம் ராஜேந்திரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

போர்க்களத்தில் ராஜாதிராஜன் மாண்ட செய்தி கேட்டு சோழர் படை மனம் தளர்ந்து பின்வாங்கிய நேரத்தில் தன்னை சோழ மன்னனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு 2ஆம் ராஜேந்திரன் சோழர் படைக்கு தைரியக் கூறி அணிவகுத்து போரிடச் செய்தான். போர்க்களத்தில் நடந்த இந்த தீரமிக்க செயலால் சோழர் படை ஒன்று திரண்டு தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து சாளுக்கியர்களைத் தாக்கித் துவம்சம் செய்யத் தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்திலும் அவர் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் இருந்த பல சேனைத் தலைவர்கள் சோழர் படையில் இருந்ததாலும், தலைவன் மாண்டுபோன பின் அதே போர்க்களத்தில் அவன் தம்பி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இப்படியொரு தீரமான போரைச் செய்வான் என்று எதிர்பார்த்திராத சாளுக்கியர்கள் பயங்கரமான தோல்வியைச் சந்திந்தார்கள்.

ராஜாதிராஜன் கல்வெட்டுகளில் எல்லாம் அவன் போர்க்களத்தில் மாண்ட செய்தியையும், அவனோடு அவனது தம்பிகள் போரிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரில் 2ஆம் ராஜேந்திரனும் காயமடைந்த போதிலும், அதனால் சோர்வடையாமல் போரிட்டிருக்கிறான் என்பது தெரிகிறது. போரின் முடிவில் சாளுக்கியர்கள் பல படைத் தலைவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றார்கள்.

இந்த யுத்தம் பற்றி கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது:

"கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு.

இந்த கொல்லாபுரம் எனும் இடம் கோலாப்பூர் எனத் தெரிகிறது. சோழர்கள் முன்பு பெற்ற வெற்றிக்கு ஒரு தூணும், இப்போது 2ஆம் ராஜேந்திரன் பெற்ற வெற்றியைக் குறிக்க மற்றொரு தூணும் நாட்டப்பட்டது என்பதாகத் தெரிகிறது.

இந்த கொப்பம் யுத்தம் பற்றியும் சாளுக்கியர்களின் தோல்வி, சோழர்களின் வெற்றி பற்றியெல்லாம் சோழர் வரலாறுகள் தான் தெரிவிக்கின்றன. சாளுக்கிய வரலாற்றில் இவை பற்றிய குறிப்புகள் இல்லை.

இவனுடைய அண்ணன் ராஜாதிராஜன் தனக்குப் பிள்ளைகள் இருந்த போதும், தனது தம்பியான இந்த இரண்டாம் ராஜேந்திரனைத்தான் போரிலும் துணையாக, தனக்குப் பின் ஆட்சிக்கும் வாரிசாக நியமித்தான். அவன் விருப்பப்படி போரில் அவன் மாண்டதும் தம்பி ராஜேந்திரன் அரசனாக அறிவித்துக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றியையும் பெற்றான். இந்தச் செய்திகளையும் சோழர்கள் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, சாளுக்கியர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழிலக்கியமான கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த குப்பம் யுத்தம் பற்றி சிறப்பாகப் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளைகள் ராஜாதிராஜன் தொடங்கி வரிசையாக அவனது தம்பிமார்கள் அரசுக்கட்டிலில் ஏறிய செய்தி கவனிக்கத் தக்கது.

கூடல் சங்கம யுத்தம்.

கி.பி. 1062இல் நடந்த இந்த யுத்தம் சோழர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த யுத்தம். சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனுக்கும் இரண்டாம் ராஜேந்திரனுக்குமிடையே நடந்த மிகக் கடுமையான யுத்தம் இது. இங்கு கூடல் எனக் குறிப்பிடுவதிலிருந்து இரண்டு நதிகள் சங்கமிக்குமிடம் என்பது தெரிகிறது. ஆனால் அவை எந்தெந்த நதிகள். துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம் இது. கொப்பம் யுத்தத்தில் சாளுக்கியர்கள் சோழர்களிடம் தோற்று ஓடிப்போனார்கள். சோழ மன்னன் ராஜாதிராஜன் யானைமேல் துஞ்சிய போதும் அவன் இளையவனான 2ஆம் ராஜேந்திரன் போரைத் தொடர்ந்து நடத்தினான். ஓடிப்போன மேலைச் சாளுக்கியனை வலிந்து போருக்கு இழுத்து நடத்திய யுத்தம் இந்த கூடல் யுத்தம். இதில் சாளுக்கியர்களின் மன்னன் முதலாம் சோமேஸ்வரன் தன்னுடைய தளபதி தண்டநாத வாலதேவன் தலைமையில் ஒரு பெரும்படையுடன் யுத்தம் செய்தான். சோழர் படைக்கு 2ஆம் ராஜேந்திரன் தலைமை வகித்து நடத்தினான். நடந்த இடம் துங்கபத்ரா நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம்.
சோழர்களுக்கு ராஜேந்திரன் (2)வின் தம்பி ராஜமமேந்திரனும் மற்றொரு தம்பியான வீரராஜேந்திரனும் துணையாக நின்றனர். போர் கடுமையாக நடந்தது. சோழர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சோமேஸ்வரனின் பிள்ளைகளான விக்கலன் என்பவனும் சிங்கணன் என்பவனும் தோற்று ஓடிப்போனார்கள். இந்தப் போர் சோழர்களின் பக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி வெற்றியாக முடிவடைந்தது.

வீரராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இந்தப் போரைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம். சாளுக்கிய மன்னன் கங்கபாடியிலிருந்து துங்கபத்திரைக் கரைக்கு ஓடினான். அவனோடு வில்வித்தையில் தேர்ந்த அவனுடைய தளபதிகளும் கையிலிருந்து ஆயுதங்களைப் போட்டது போட்டபடி ஓடினார்கள். ஓடியவர்களுக்குத் தலைமை வகித்து ஓடியவன் விக்கலன் எனும் சாளுக்கிய படைத் தளபதி. இந்தப் போரில் மண்டனநாயகன் சாமுண்டராஜன் எனும் தளபதியின் தலை வெட்டப்பட்டது. அவனுடைய அழகிய மகளான நாகலை என்பவள் முகத்தில் மூக்கு சேதப்படுத்தப்பட்டது.

தோல்வியினால் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமுமாக சாளுக்கியர்கள் மூன்றாம் முறையாகவும் சோழர்களை எதிர்த்து வந்தார்கள். முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கிவிடத் துடித்தார்கள். ஆனால் அவர்களது வேகத்தை முறியடித்து சோழ இளவரசன் சாளுக்கிய ஆகவமல்லனின் இரண்டு மகன்களான விக்கலன், சிங்கணன் என்பவர்களைத் தோற்கடித்தான். கி.பி.1062இல் இந்தப் போர் நடைபெற்றது. மேலைச் சாளுக்கிய ராஜ்யம் வீழ்ந்த பின்னர் அவர்கள் வேங்கியை நோக்கிப் படைகொண்டு போனார்கள். அங்கும் சோழர்களிடம் பலத்த அடிவாங்கி ஓடினார்கள்.

2ஆம் ராஜேந்திரன் தன் அண்ணன் ராஜாதிராஜனுக்கு உற்ற துணையாக இருந்து வந்தான். அண்ணன் போரில் ஈடுபட்ட காலங்களில் நாட்டு நிர்வாகத்தை இவன் தான் கவனித்து வந்தான். இவன் யுத்தத்திலும் நிர்வாகத்திலும் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், நாட்டியம், நாடகம் என்று ஆர்வம் காட்டினான். தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் நடந்த ராஜராஜேஸ்வர நாடகத்தைப் பாராட்டி அதனை நடத்தியவர்களுக்க் அரிய பரிசுகளை வழங்கி கெளரவித்தான். அந்த நாட்டிய நாடகத்தை நடத்திய நடனக் கலைஞருக்கு 120 கலம் அதாவது 60 மூட்டை நெல் கொடுத்ததோடு, ஒவ்வோராண்டும் இதுபோன்ற நாடகங்களை நடத்தவும் ஆதரவு கொடுத்தான்.

இவனுடைய தம்பி வீரசோழன் என்பான் உறையூரில் இருந்து வந்தான். அவனுக்கு இந்த ராஜேந்திரன் 2 கரிகால சோழன் எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தான். இவனுடைய மகனான கடாரங்கொண்ட சோழனுக்கு சோழஜனகராஜன் எனும் பட்டத்தை வழங்கினான். இவனுடைய இன்னொரு மகன் இரட்டைபாடி கொண்ட சோழனையும் கெளரவித்தான்.

இந்த இரண்டாம் ராஜேந்திரன் தன்னுடைய முன்னோர்களைப் போலவே பாண்டிய நாட்டையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து நிர்வகித்து வந்தான். சாளுக்கியர்களை வென்று, வேங்கியைப் பாதுகாத்து அதன் பிறகு இவன் கலிங்கத்தின் மீதும் படையெடுத்தான். கலிங்கம் என்பது இப்போதைய ஒடிஷா பகுதிகள். இலங்கையும் இவனது படையெடுப்புக்குத் தப்பவில்லை, அங்கு நிகழ்ந்த கலவரங்களை அடக்க அங்கும் சென்று வெற்றி பெற்றான். இந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் கலிங்கத்து மன்னன் வீர சலமேகன் இலங்கை அரசன் மனபரணனுக்கு உதவியாக இருந்து கலகத்துக்குத் துணை நின்றதுதான்.

இலங்கை, சாளுக்கியம், கலிங்கம் தவிர வடக்கே அயோத்தி, கன்யாகுப்ஜம், ரெட்டபாடி, கடாரம் ஆகிய பகுதிகளும் இவனுடைய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கலிங்கத்துப் போரில் கலிங்க மன்னன் மனாபரணன் இறந்து போனான் அவன் இரண்டு மகன்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இப்படியொரு வீரமும், விவேகமும், நல்ல நிர்வாகமும், எதிரிகளை அடக்கி வைத்திருப்பதிலும் சிறந்து விளங்கிய 2ஆம் ராஜேந்திர சோழன் கி.பி. 1063இல் இறந்தான். இவனைத் தொடர்ந்து இவன் தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான்.

வீரராஜேந்திர சோழன்  கி.பி.1063- 1070 


வீரராஜேந்திர சோழன் த/பெ. ராஜேந்திர சோழதேவன் கி.பி.1063- 1070

வீரராஜேந்திரன்இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள் 
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான்.

கலிங்கத்துப் போர் 
வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.

இலங்கைப் போர்
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது.

கடாரப் படையெடுப்பு
வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் “அநபாயன்” என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் “குலோத்துங்க சோழன்” தான்.
சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது.

சாளுக்கியருடனான தொடர்பு
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

வீர ராஜேந்திரன் மக்கள்
வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார்.

2nd Draft
வீரராஜேந்திர சோழனைப் பற்றி சிறிது பார்ப்போம். இவனுக்கு "ராஜகேசரி" என்ற பட்டப்பெயர் உண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் இவன். இவனது ராணியார் பெயர் அருள்மொழிமங்கை என்பதாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் இவன். மூத்தவன் பெயர் ராஜாதிராஜன், இரண்டாமவன் 2ஆம் ராஜேந்திரன், இந்த வீரராஜேந்திரன் மூன்றாவது மகன். இவனுடைய பிள்ளைகள் மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன், மகள் ராஜசுந்தரி. இவன் இறந்த ஆண்டு 1070.

வரலாற்றில் அதிகம் இடம்பிடிக்காத ஒரு மன்னன் இந்த வீரராஜேந்திரன். காரணம் இவன் வாழ்க்கை முழுவதும் இவனுடைய அண்ணன்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன் ஆகிய முந்தைய சோழ அரசர்களுக்கு உதவுவதிலேயே போய்விட்டதால் அதிகமாக இவன் சாதித்தவை எவை என்று கூறமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதிலும் தந்தை ராஜேந்திர சோழனுக்கோ, தன்னுடைய மற்ற சகோதரர்களுக்கோ எந்தவிதத்திலும் குறைவில்லாத வீரனாகவே இந்த வீரராஜேந்திர சோழன் இருந்திருக்கிறான்.

சோழமன்னர்கள் தங்களது மூத்த குமாரன் தான் பதவிக்கு வரவேண்டுமென்ற கண்டிப்பான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், பிள்ளைகளில் வீரமும், விவேகமும், நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ளவனையே தனக்குப் பின் மன்னனாக அங்கீகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களில் யாரும் யாருக்கும் சோடை போகவில்லையாதலின் ராஜேந்திரனின் மூத்த மகன் ராஜாதிராஜன் பதவிக்கு வந்தான். அவனையடுத்து, அவனது அடுத்த தம்பி, அவனுக்குப் பின் அவன் தம்பி என்று வரிசைப்படி ஆட்சிக்கு வந்தனர்.

வீரராஜேந்திரன் தன் தந்தையார் காலத்திலும் சரி, தன்னுடைய அண்ணன்மார்கள் காலத்திலும் சரி பல்வேறு பணிகளில் இருந்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறான். தொண்டைநாட்டிலும், பாண்டிய நாட்டிலும், வேங்கி நாட்டிலும் இவன் ராஜப்பிரதிநிதியாக இருந்து சோழர் ஆட்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். சோழர்களின் கடற்படை ராஜேந்திர சோழன் காலத்தில் மிகவும் வலிமை பொருந்தியாதாக இருந்திருக்கிறது. இந்தக் கடற்படைக்குத் தலைமையேற்று வீரராஜேந்திரன் இலங்கைத் தீவுக்கும், ஸ்ரீவிஜயம், கடாரம், காடகம், பர்மா, சம்பா என பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான்.

விஜயாலயன் ஸ்தாபித்த கடைச்சோழ வம்சத்தில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்த ஆதித்தன், பராந்தகன், சுந்தரசோழன், ராஜராஜன், ராஜேந்திரன் இவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய வீரனாகத்தான் வீரராஜேந்திரன் தன் பெயருக்கு ஏற்ப இருந்திருக்கிறான்.

ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன் தன் தந்தைக்கு முன்னதாகவே காலமாகிவிட்டபடியால் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவனுடைய காலம் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கடல்கடந்தும் பரவிக் கிடந்தமையால் அதனைக் காப்பாற்றும் பொறுப்பு இவனுக்கு இருந்தது. ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மொத்தமாக 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்திருக்கின்றனர். இப்படி இவர்களது ஆட்சி இடைவெளி அதிகமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக பதவி வகித்ததால் ராஜராஜன் போலவோ, ராஜேந்திரன் போலவோ ஒரு ஸ்திரத்தன்மையோ, அல்லது எதிர்கள் பய்ந்து ஒடுங்கிப் போயிருந்ததைப் போலவோ இல்லாமல், எதிரிகளுக்குக் குளிர் விட்டுப் போய், நேரம் வாய்த்தால் சோழர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாயிருந்தனர், குறிப்பாக சிங்களர்களும், சாளுக்கியர்களும், பாண்டியர்களும் ஓரளவுக்கு சேர மன்னர்களும் பரம்பரை எதிரிகளாகவே இருந்திருக்கின்றனர்.

வீரராஜேந்திரனின் போர்க்கள சாகசங்கள் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. இலங்கை படையெடுப்பில் இவனுடைய பங்களிப்பு இருந்தது. இலங்கையின் வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டை ஆளும் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான் வீரராஜேந்திரன். தொடர்ந்து உறையூரிலும் தனித்து இருந்து சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாகச் செயல்பட்டான்.

சாளுக்கியர்களுக்கு எதிராகத்தான் இவன் அதிகம் போரில் ஈடுபட்டான். காரணம் வேங்கி அரசர்கள் சோழர்கள் பெண் கொடுத்த சம்பந்திகள். அவர்களை மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு தஞ்சை சோழர்களுக்கு இருந்தது. தற்போது ஆந்திராவிலுள்ள விஜயவாடாவுக்கு அருகில் கிருஷ்ண நதிக்கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த யுத்தம் மிகப் பெரிய யுத்தம். அதில் வீரராஜேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான்.

தொடக்கத்தில் இவன் சேரநாட்டில் போரிட்டு வெற்றிகளைப் பெற்றன், தொடர்ந்து பாண்டிய நாட்டையும் போரிட்டுப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படி இவன் சேர நாடு, பாண்டிய நாடு என்று போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் இவனைத் தோற்கடிக்க இதுவே சமயமென்று தனது முந்தைய தோல்விகளை மறந்து சாளுக்கியன் சோமேஸ்வரன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். வீரராஜேந்திரனின் அண்ணன்மார்களான 2ஆம் ராஜேந்திரன் அவன் அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோரிடம் இவன் அடைந்த தோல்விகளை மறந்தவனாக வீரராஜேந்திரன் மீது துணிச்சலுடன் படையெடுத்தான்.

சோமேஸ்வரனுடைய புதல்வனான விக்கலன் எனும் விக்கிரமாதித்தன் (VI) கங்கைகொண்ட சோழபுரத்தைத் தாக்கினான். அப்போதுதான் வீரராஜேந்திரன் பாண்டியனையும், இலங்கை மன்னனையும் தோற்கடித்துவிட்டு சோழ நாடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் போர் செய்துவிட்டுத் திரும்பிய சூட்டோடு இங்கு இந்த சாளுக்கியன் சோழர் தலைநகரத்தையே தாக்கியதால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் அந்த விக்கிரமாதித்தனை ஓடஓட விரட்டியடித்தான். அவர்களைப் பின் தொடர்ந்து தாக்கி கங்கபாடி நாட்டைப் பிடித்துக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குள்ளும் நுழைந்தான்.

வீரராஜேந்திரன் காலத்திய பல கல்வெட்டுக்கள் அவனது வெற்றியைப் பற்றி குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றனர். சோழர்களின் வீரத்துக்கு முன்பாக அவர்களுடைய ஆட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. ராஜராஜன் காலத்தில் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தவன் சத்யாஸ்ரயன். ராஜேந்திர சோழன் காலத்திலும் இதே சத்யாஸ்ரயன் ஓட்டம் பிடித்தவன் தான். அவனோடு இரண்டாம் ஜெயசிம்மாவும் ஓட்டம்பிடித்த சாளுக்கியன். 2ஆம் ராஜேந்திரன் காலத்தில் தோற்றோடிய சாளுக்கியன் த்ரைலோக்கியமல்லன் முதலாம் சோமேஸ்வரன். வீரராஜேந்திரனிடமும் தோற்றோடிய பெருமை இந்த த்ரைலோக்கியமல்லனுக்கு உண்டு.

சாளுக்கியர்களுக்கு எதிரான சோழர்களின் போர் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. மிகக் கடுமையான போர். சோழர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி சாளுக்கியர்களை ஒழித்துவிட முயன்று போரிட்டும் அவர்கள் மிக சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய் பிழைத்துக் கொண்டு வந்தார்கள். வீரராஜேந்திரன் தன் அண்ணன்மார்கள் காலத்திலேயே இந்த களம்விட்டு ஓடிடும் மாவீரர்களான சாளுக்கியர்களோடு போர் புரிந்திருக்கிறான். 2ஆம் சோமேஸ்வரன் தன்னுடைய தோல்விக்கு பழிவாங்கவும், களத்தை விட்டு ஓடிவிடாமலும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று தலைகீழாக முயன்றும் அவன் சாமர்த்தியம் எதுவும் வீரராஜேந்திரனின் முன் எடுபடவில்லை. சோமேஸ்வரனுடைய படைத் தளபதிகள் எல்லாம் பொலபொலவென்று சோழப் படைகளின் முன் வீழ்ந்தனர். சோழப் படைகளின் வீரத்துக்குத் தாக்குபிடிக்கமுடியாமல் சோமேஸ்வரன் மட்டுமல்லாமல் அவன் மகன் விக்கலன் எனும் 6ஆம் விக்கிரமாதித்தன் சிங்கணன் எனும் 3ஆம் ஜெயசிம்மா ஆகியோர் ஒட்டம்பிடித்த சாளுக்கியர்கள்.

தங்களது தொடர் தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்ட சாளுக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளையும், இடத்தையும் சொல்லி அங்கு போருக்கு வரும்படி சோழர்களை அழைத்தனர். அதன்படி சோழர்படை 1067 செப்டம்பர் 10எல் அந்த இடத்துக்குச் சென்று சாளுக்கியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்கிறது மணிமங்கலம் கல்வெட்டுக்கள்.

சோழர்கள் ஒரு மாதகாலம் அங்கு காத்திருந்தும் சாளுக்கியப் படைகள் வந்து சேரவில்லை. கோபம் கொண்ட சோழர்கள் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரங்களையெல்லாம் நாசம் செய்து ஆத்திரத்தைக் காட்டினர். பயந்து ஓடிய சாளுக்கியர்களின் கோழைத்தனத்தையும், தங்கள் வெற்றியையும் பறைசாற்றும் விதத்தில் சோழர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு வெற்றித்தூணை நிறுவினர்.

இலங்கைப் போர்.

இலங்கையில் அப்போது அரசனாக இருந்தவன் விஜயபாகு என்பவன். இலங்கையின் தெற்குப் பகுதியில் ரோஹணா எனுமிடத்தையடுத்த சிறுபகுதியை இவன் ஆண்டுவந்தான். இவனுக்கு வட இலங்கையில் ஆக்கிரமித்திருந்த சோழர்களை விரட்டிவிடவேண்டுமென்கிற வேகம் இருந்தது. புத்த இலக்கியமான மஹாவம்சம் சொல்ல்கிறபடி சோழர் படைகள் ரோஹணா பகுதின் மீது படையெடுத்து விஜயபாகுவை அடக்கிவைக்க எண்ணியது. அச்சமடைந்த விஜயபாகு பர்மாவின் அரசனுக்கு உதவிகேட்டு ஆள் அனுப்பினான். அவனும் தன்னுடைய படைகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்த அன்னியப் படையின் உதவியோடு விஜயபாகு தமிழர் ஆக்கிரமித்திருந்த வடபகுதியில் கலகத்தை உருவாக்கினான். சோழர் படைகள் இந்த கலகத்தை அடக்கிவிட்டது. இருந்தாலும் விஜயபாகு தொடர்ந்து சில ஆண்டுகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.

கடாரத்தின் மீது படையெடுப்பு.

வீரராஜேந்திரனின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழாம் ஆண்டில் கடாரத்து அரசன் உதவி கேட்டு அனுப்ப அவனுக்கு உதவியாகச் சோழர் படையை அங்கு அனுப்பி வைத்தான். அங்கு புரட்சியாளர்களை அடக்கிவிட்டு மீண்டும் ராஜ்யத்தை அந்த அரசனிடமே கொடுத்துவிட்டான் வீரராஜேந்திரன். இதெல்லாம் 1068இல் நடந்ததாக வரலாறு கூறுகிறது. சோழக்ர்ள் இப்போதைய இந்தோனேஷியா மலேசியா ஆகிய பகுதிகளை சுமார் 20 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவன் காலத்தில் தூரக்கிழக்கு நாடுகளை வென்று அங்கெல்லாம் வாணிபம் செய்யச் சென்ற உறவு 1215 வரை தொடர்ந்து வந்திருக்கிறது.

சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் உறவு.

சாளுக்கியன் சோமேஸ்வரன் (I) காலத்துக்குப் பிறகு அவனுடைய மகன் 2ஆம் சோமேஸ்வரன் 1068இல் ஆட்சிக்கு வந்தான். அவனுக்கும் அவனுடைய தம்பியான விக்கிரமாதித்தனுக்குமிடையே பூசல் எழுந்தது. இந்த 6ஆம் விக்கிரமாதித்தன் தன்னுடைய முன்னோர்கள் சோழர்களிடம் அடிவாங்கியதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களோடு மோதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆகையால் அப்போது சாளுக்கியப் பிரதேசத்தில் எழுந்த தாயாதிச் சண்டையில் தன்னை ஆதரிக்க சோழன் வீரராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கிய வீரராஜேந்திரன் அவன் பக்கம் நின்று சாளுக்கிய நாட்டுக்கு அவனை அரசனாக்கியதோடு அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.

வீரராஜேந்திரன் வாழ்க்கை.

இவன் ராஜாதிராஜனுக்கும், 2ஆம் ராஜேந்திரனுக்கும் தம்பி என்பதை முன்பே பார்த்தோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியிலிருந்து இவனது மனைவியின் பெயர் அருள்மொழிநங்கை என்பது தெரிகிறது. இவனுடைய மகள் ராஜசுந்தரி என்பாளைத்தான் கீழைச் சாளுக்கிய மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த ராஜசுந்தரியின் மகன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் என்பான் கீழைச் சாளுக்கிய மன்னனாக இருந்தான்.

வீரராஜேந்திர சோழனுக்கு "சகலபுவனஸ்ரயா", ஸ்ரீமேதினிவல்லபா", "மகாராஜாதிராஜ சோழகுலசுந்தரா", "பாண்டியகுலாந்தகா", "ஆகவமல்லகுல கலா", "ஆகவமல்லனை மும்மாடி வெண் கண்ட ராஜ்ஸ்ரயா", "வீர சோழ" எனும் விருதுகள் இருந்தன. இவன் 1070இல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் அதிகம் வயதி வித்தியாசமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வீரராஜேந்திரன் காலத்திலேயே தன்னுடைய மகனான மதுராந்தகனை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலாதிபதியாக நியமித்திருந்தான். அப்போது அவனுக்கு "சோழேந்திரன்" எனும் பட்டப்பெயரும் இருந்தது. இவனுடைய இன்னொரு மகனான கங்கைகொண்டசோழன் என்பவன் பாண்டிய நாட்டியத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். இவ்விருவரில் ஒருவர்தான் இவனுக்குப் பிறகு அதிராஜேந்திரன் எனும் பட்டப்பெயருடன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான், ஆனால் அது இவ்விருவரில் யார் என்பது தெரியவில்லை. வீரராஜேந்திரன் தில்லையம்பலத்தான் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவன். அந்த ஆடல்வல்லானுக்கு கழுத்துக்கு மிகுந்த விலை உயர்ந்த சிவப்புக் கற்கள் பதித்த மாலையொன்றை இவன் அளித்திருந்தான். இவன் சைவனாயினும் வைணவ ஆலயங்களையும் போற்றி வழிபட்டு பாதுகாத்து வந்தான்.
கி.பி. 1063 முதல் 1070 வரை ஆட்சிபுரிந்த வீரராஜேந்திரன் காலமான பின்னர் அவனது மகன் அதிராஜேந்திரன் என்பான் அரசு கட்டிலில் வீற்றிருந்தான் 

ஆதிராஜேந்திர சோழன்.கி.பி. 1067- 1070 


ஆதிராஜேந்திர சோழன். கி.பி. 1067- 1070

வீரராஜேந்திரன் காலமானதும் இவன் பட்டத்துக்கு வந்தான். அதற்கு முன்பே இவனுக்கு ஆட்சிப் பொறுப்பில் அனுபவம் இருந்தது, காரணம் வீரராஜேந்திரன் காலத்திலேயே அவன் தன் மக்களுக்கு தொண்டைமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள தன் மகன்களையே நியமித்திருந்தான் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த அதிராஜேந்திரனுக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயரும் உண்டு. ஒவ்வொரு சோழனுக்கும் இதுபோன்ற பட்டப்பெயர்கள் இருப்பதை கவனித்திருக்கலாம்.

இவனும் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டுதான் ஆட்சிபுரிந்தான். இவன் திருமணமானவனா இல்லையா பிள்ளை குட்டிகள் இருந்தனரா இல்லையா என்பது ஒன்றும் தெரியவில்லை. இவன் தந்தை காலமான பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவன் ஒருசில மாதங்களே ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் நாட்டில் நடந்த குழப்பத்தினாலோ என்னவோ கிளர்ச்சியும் கலகமும் ஏற்பட்டது. இந்தப் பூசலில் இளம் மன்னனான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. இவனை யடுத்து சோழர்களுடன் திருமண உறவு கொண்டிருந்த வேங்கிநாட்டைச் சேர்ந்த சோழ இளவரசன் ராஜிகா எனும் பெயருடையவன் முதலாம் குலோத்துங்கன் எனும் பெயருடன் சோழ மண்டல சக்கரவர்த்தியாக அமர்த்தப்பட்டான்.

சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கிய மன்னர்களான வேங்கி நாட்டவர்க்கும் நீண்ட நெடுங்காலமாகத் திருமண பந்தம் இருந்து வந்தது. ராஜராஜனின் மகள் குந்தவையை வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையும், அவர்களது மகனான ராஜராஜ நரேந்திரன் என்பானுக்கு முதலாம் ராஜேந்திரன் தன் மகளான அம்மங்காதேவியை மணம் முடித்துக் கொடுத்ததும், இப்படி அடுத்தடுத்து சோழர்களும் வேங்கி நாட்டாரும் திருமண பந்தம் கொண்டிருந்தனர். இதனால் வேங்கி நாட்டையாண்ட கீழைச் சாளுக்கியர்கள் பாதி சோழரும் பாதி சாளுக்கியருமாக இருந்திருக்கின்றனர். அந்த வழியில் வந்தவந்தான் முதலாம் குலோத்துங்கன்.

சாளுக்கிய வம்சம் சோழர்களுக்குப் பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கின்றனர். மேலைச் சாளுக்கியர்கள் சத்யாஸ்ரயன் காலத்திலிருந்து கீழைச் சாளுக்கியர்களோடும் சோழர்களோடும் போரிட்டு வந்திருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியர்களான வேங்கி நாட்டாரும் தங்களுக்குள் தாயாதி சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும், அதில் ஒரு பக்கம் மேலைச் சாளுக்கியரிடம் உதவி பெறுவதும், மற்ற பகுதியினருக்கு சோழர்கள் உதவி செய்வதும் தொடர் கதையாக இருந்திருக்கிறது.

அதிராஜேந்திரனின் தந்தையான வீரராஜேந்திரன் வேங்கி விஷயத்தில் தலையிட்டு சோழர்களின் மாப்பிள்ளையான ராஜராஜ நரேந்திரன் சார்பில் போரிட்டிருக்கிறான். குந்தவையின் மகனான இந்த ராஜராஜ நரேந்திரன் 1061இல் இறந்து போகிறான். அதனால் அவனுக்குப் பின் வேங்கி நாட்டை 2ஆம் சக்திவர்மன் என்பவன் கிளர்ச்சி செய்து வேங்கியின் ஆட்சி சிம்மாசனத்தை அபகரித்துக் கொண்டான். இப்படி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தது சோழர்களுக்குப் பிடிக்கவில்லை. சோழ ரத்தம் ஓடும் வேங்கி ராஜவம்சத்தானை பதவியில் அமரவைக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த 2ஆம் சக்திவர்மன் என்பவன் கொல்லப்பட்டான். அப்படி அவன் இறந்ததும் அவனுடைய தந்தையான விஜயாதித்தன் என்பான் பதவியில் உட்கார்ந்து கொண்டு சோழர்களை எதிர்த்துப் போரிட்டான். எனினும் சோழர்களின் வல்லமையின் முன்னால் தனித்து நிற்கமுடியாது என்பதை உணர்ந்தோ என்னவோ அந்த விஜயாதித்தன் சோழர்களுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் அரசனாக வேங்கியில் இருக்க ஒப்புக் கொண்டான்.

இப்படி சாளுக்கியர்களுள் இரு பக்கத்திலும் முழுமையாக சோழர்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த காலத்தில் அதிராஜேந்திரனின் தந்தையும் இவனுக்கு முன்பு அரசனாக இருந்த சோழனுமான வீரராஜேந்திரன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பெரும்பாலும் அந்தக் கால அரசர்கள் ராஜதந்திரத்துடன் எதிரி நாட்டிலும் திருமண உறவு வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பல மன்னர்களுக்கு பலதாரம் இருப்பதன் காரணம் இதுதானோ என்னவோ?

வரலாறு இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலைமையில் குந்தவையின் பேரனும், ராஜராஜ நரேந்திரனின் மகனுமான ராஜேந்திர சாளுக்கியன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கன்) வேங்கி தனக்குத்தான் உரிமை ஆனால் விஜயாதித்தன் எப்படியோ ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்து வேங்கியைத் தன்னதாக ஆக்கிக் கொள்ள முனைந்தான். என்ன இருந்தாலும் விஜயாதித்தன் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், சோழ பரம்பரை வாரிசு அல்லவா ராஜேந்திர சாளுக்கியன் எனும் முதலாம் குலோத்துங்கன்? சோழர்கள் அவனைத்தான் ஆதரித்தார்கள். விஜயாதித்தான் வேறு யாரும் இல்லை. குலோத்துங்கனின் பெரியப்பாதான், அதாவது காலம் சென்ற ராஜராஜ நரேந்திரனின் அண்ணன். இதெல்லாம் தாயாதிச் சண்டைகள்.

விஜயாதித்தனுக்கும் வேங்கியின் மீது உரிமை இருக்கிறது அல்லவா ஆகையால் ராஜேந்திர சாளுக்கியன் (முதலாம் குலோத்துங்கன்) வேங்கிக்கு வடக்கே உள்ள இப்போதைய சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் எனும் மலைப்பகுதியில் ஒரு ராஜாங்கத்தை அமைத்துக் கொண்டான். வீரராஜேந்திரன் காலமான பிறகு அதிராஜேந்திரனின் ஒருசில மாத ஆட்சிக்குப் பிறகு அவன் இறந்ததும் ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரசனாக முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் பதவியில் அமர்ந்தான்.

வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரனின் மரணம்.

சாளுக்கியர்கால பில்ஹணன் எனும் வரலாற்றாசிரியர் இந்த அதிராஜேந்திரனின் மரணம் பற்றிய குறிப்புகளைத் தருகிறார். வீரராஜேந்திரன் தன்னுடைய மகளை சாளுக்கியன் 4ஆம் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த சில காலத்திற்குள் இறந்து விடுகிறான். தன் மாமனார் இறந்து போன செய்தியும் மைத்துனன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்தபின் உள்நாட்டுப் போர் மூண்டுவிட்ட செய்தியையும் கேட்ட 4ஆம் விக்கிரமாதித்தன் தன் படைகளுடன் கலகத்தை அடக்க காஞ்சிபுரம் வருகிறான். அங்கிருந்து சாளுக்கிய விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வருகிறான். அங்கு கலகக்காரர்களை அடக்கிவிட்டு மைத்துனன் அதிராஜேந்திரனை அரியணையில் ஏற்றுகிறான். நாட்டில் அமைதி ஏற்பட்டு உரியவன் பட்டத்துக்கும் வந்தபின் சுமார் ஒரு மாதகாலம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துவிட்டு இனி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து தன் நாடு திரும்புகிறான்.

அவன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனனும் சோழ அரசனுமான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டான் என்கிற செய்தி கிடைக்கிறது. அந்த செய்தி மேலும் சொல்கிறது ராஜேந்திர சாளுக்கியன் தன் படைகளுடன் வந்து சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டுவிட்டான் என்றும் அவனது இப்போதைய பெயர் முதலாம் குலோத்துங்கன் என்றும் கேள்விப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த 4ஆம் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனை எதிர்க்கத் தன் படைகளுடன் புறப்பட்டான். அவனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கிய அரசன் 2ஆம் சோமேஸ்வரனும் சேர்ந்து கொண்டான்.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு அவன் மகன் அதிராஜேந்திரன் வரையிலும் கடைச் சோழர்கள் வம்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது, அதிராஜேந்திரனின் மறைவோடு அந்தப் பரம்பரை முடிவுக்கு வந்துவிட்டது குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழியில் வரும் வேங்கி வம்சத்துக்குப் போய்விட்டது.

குலோத்துங்கனின் பங்களிப்பு.

அதிராஜேந்திரனின் மரணத்துக்கு குலோத்துங்கன் காரணமா எனும் இந்த மில்லியன் டாலர் கேள்வி இன்னமும் தொக்கி நின்று கொண்டிருக்கிறது. அதிராஜேந்திரன் காலத்தில் காஞ்சிபுரத்துக் கலவரத்துக்கு யார் காரணம்? அந்த கலவரத்தை அடக்கத்தான் மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சிக்கு வந்து பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அமைதி நிலைநாட்டிவிட்டதாக நினைத்து ஊர் திரும்பினான். அப்படி விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்கு எதிரானவர்களை அடக்கினானே, அந்த எதிரிகள் யார்? அது குறித்து அங்கு கலவரம் அல்லது கலகம் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

அதிராஜேந்திரன் காலத்திய நிகழ்ச்சிகளை விவரிக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு விக்கிரமாதித்தன் தன் பெரும் படையோடு வந்து குலோத்துங்கனைத் தோற்கடித்து சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்ட செய்தி கிடைக்கிறது. இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கவனிக்கும்போது வேங்கி நாட்டானான குலோத்துங்கன் சோழ அரசுக்கு ஆசைப்பட்டு இங்கே வந்து வீரராஜேந்திரனின் மகனான அதிராஜேந்திரனுக்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் அவன் காலத்தில் தோன்றிய கலவரம் முன்பு சொன்னது போல உள்நாட்டு கலவரமாக இருக்க வாய்ப்பில்லை, வேங்கி நாட்டுப் படையெடுப்பே.

சோழ தேசத்தில் நடந்த அந்த கலவரத்துக்கு மதச்சாயமும் பூசப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜர் சோழ மன்னரால் துரத்தப்படுகிறார். இந்த காரணத்தினாலும் சோழ சாம்ராஜ்யத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கலாமோ எனும் எண்ணமும் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இவை எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் கூற்றுப்படி ராமானுஜர் வாழ்ந்தது 2ஆம் குலோத்துங்கன் காலத்தில். அவன் தான் ராமானுஜரை சோழநாட்டிலிருந்து விரட்டியனுப்புகிறார், அவரும் கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டையில் சென்று தஞ்சம் அடைகிறார். ஆகையால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோடு அதிராஜேந்திரனின் மரணத்தை முடிச்சுப் போட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை சோழ மன்னர்கள் அனைவருமே தீவிர சைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையே.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு சில மாதங்கள் அரசனாக இருந்த அதிராஜேந்திரன் மரணமடைந்த பின் முதலாம் குலோத்துங்கன் வேங்கிநாட்டு சோழன் பதவிக்கு வருகிறான் என்கிறது வரலாறு.

முதலாம் குலோத்துங்கன். கி.பி.1070 - 1120 


1ம் குலோத்துங்க சோழன். ராஜேந்திர சோழன் மகளின் மகன்  கி.பி. 1070-1120
சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது
பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள்.
என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. ,
கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.
கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.
(இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்)

1st Draft
இராசராசசோழனின் மகளான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.

முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது

2nd Draft

முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை)

கடந்த சில பதிவுகளில் ராஜேந்திர சோழன் தொடங்கி அதிராஜேந்திரன் வரையிலான சோழ மன்னர்களின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தீர்கள். கடைச் சோழர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ள விஜயாலயன் பரம்பரை இந்த அதிராஜேந்திரனின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது. பின்னர் பதவிக்கு வந்த முதலாம் குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழி வாரிசாக வேங்கிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இனி இந்த முதலாம் குலோத்துங்கன் பற்றி பார்ப்போம். சென்ற பதிவில் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்து ஒருசில மாதங்களுக்குள் கொல்லப்படுகிறான் என்பதையும், அவனைத் தொடர்ந்து வேங்கிநாட்டுச் சாளுக்கிய இளவரசனும், சோழர்களின் பெண்வழி வாரிசுமான குலோத்துங்கன் பதவிக்கு வந்ததையும் பார்த்தோம். இறந்துபோன அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் படையெடுத்து காஞ்சிபுரத்துக்கும், கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்குத் துணை புரிந்த வரலாற்றையும் பார்த்தொம். இனி முதலாம் குலோத்துங்கன்.

இவனை "ராஜகேசரி" எனும் பட்டப்பெயரோடு அழைக்கிறார்கள். இந்த மன்னன் தன்னுடைய தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொள்கிறான். கங்கைகொண்ட சோழபுரத்து சோழர்கள் அனைவரும் விஜயாலய பரம்பரையினர். கடைசி விஜயாலயன் பரம்பரை மன்னன் அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக வந்த விக்கிரமாதித்தன் குலோத்துங்கனோடு போரிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தை விட்டு விரட்டிவிட்ட பின்னர் இவன் திருவாரூரில் தன் தலைநகரை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

குலோத்துங்கனுடைய மனைவிமார்கள் மதுராந்தகி, தியாகவல்லி, ஏழிசைவல்லபி, சோழக்குலவல்லியார் ஆகியோராவர். மிக அற்புதமான பெயர்கள். இவனுடைய பிள்ளைகள் ராஜராஜ மும்முடிச் சோழன், ராஜராஜ சோடகங்கன், விக்கிரம சோழன், மேலும் நான்கு பேர்.

ராஜகேசரிவர்மன் அபய குலோத்துங்க சோழன் என்பது இவனது முழுப் பெயர். சோழ அரசர்களில் மிகவும் பிரபலமான அரசன் இந்த குலோத்துங்கன். குலத்தை முன்னிலைப் படுத்தியவன் எனும் பொருளில் இந்த குலோத்துங்கன் எனும் பெயர் அமைந்திருக்கிறது. இந்த குலோத்துங்க மன்னன் பற்றிய விவரங்கள் வரலாற்றில் சற்று குழப்பமாகவே கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் விவரங்களின்படி இந்த குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்தபோது சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதிராஜேந்திரன் வரலாற்றை எழுதும்போதுகூட அவன் மரணத்துக்குப் பின் நடந்த சில குழப்பங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதிராஜேந்திரன் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கொல்லப்பட்டிருக்கிறான். அதையடுத்து இந்த குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். இடையில் நடந்தவை என்ன? இந்த குலோத்துங்கன் யார்? எங்கிருந்து வந்தான் போன்ற கேள்விகள் எழத்தானே செய்கிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுக்களில் இவனை 'பரிதிகுலம்' அதாவது சூரிய வம்சம் என்கிறது. தமிழிலக்கியங்களிலும் இவனைப் பற்றி குறிப்பிடுகையில் அனபாயன் என்றும் முதலாம் குலோத்துங்கன் என்றும் கூறுகிறார்கள்.

சில கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின்படி இந்த குலோத்துங்கனுக்கு பட்டம் சூட்டப்பட்டது தில்லை சிதம்பரத்தில் என்பது தெரிகிறது. எது எப்படியோ விஜயாலய வம்சத்து அதிராஜேந்திரனது மரணத்துக்குப் பிறகு இந்த குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறான். வரலாற்றின் இந்தப் பகுதி குறித்து சரியான உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது இவனுடைய பூர்வோத்திரம் பற்றி பார்க்கலாம். யூகங்களும் ஹேஷ்யங்களும் இந்த கேள்விகளுக்கு விடை தராது.

குலோத்துங்கன் பதவிக்கு வந்த சூழ்நிலை குழப்பமான சூழ்நிலை. நாட்டில் கலவரம் நடந்து முடிந்திருந்தது. அவன் குழப்பத்தை அடக்கி தன் ராஜ்யாதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக சில யுத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. உள்நாட்டில் அதிராஜேந்திரனின் மரணமும், அதையடுத்து நிகழ்ந்த கிளர்ச்சிகளும், அதே நேரத்தில் இலங்கையில் பிரச்சனை ஏற்பட்டு அதை அடக்க நேர்ந்த விதமும் அவனது முதல் சில ஆண்டுகள் போர்க்களமாகவே இருந்திருக்கிறது.

சோழர்கள் ராஜராஜ சோழன் காலம் முதல் கீழைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டு ராஜராஜனின் மகள் குந்தவையை விமலாதித்தனுக்கும், பின்னர் விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு ராஜேந்திர சோழன் தன் மகளான அம்மங்காதேவியை மணமுடித்தும் உறவினை பலப் படுத்திக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கியர்களுடன் சோழர்கள் போரில் ஈடுபட்டனர். வேங்கியின் தாயதிப் போட்டியில் தம்பிக்கு சோழர்களும், அண்ணனுக்கு சாளுக்கியர்களும் உதவி செய்து போரைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மேலைச் சாளுக்கியர்களுடன் சுமுக உறவு கொள்வதற்காக வீரராஜேந்திரன் தன் மகளை சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களுடன் சோழர்களுக்கு நல்ல உறவு அமைந்தது. அதிராஜேந்திரன் இறந்தான் என்றதும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுத்து வந்து காஞ்சியில் கலகத்தை அடக்கிவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து தங்கினான். அப்போது அங்கு வந்து சோழனாக முடிசூட்டிக் கொண்டிருந்த குலோத்துங்கனைப் போரிட்டு விரட்டிவிட அவன் தன் தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொண்டான். அப்போதும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கும் கீழைச் சாளுக்கிய வேங்கி இளவரசன் குலோத்துங்கனுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருந்தது.

சாளுக்கிய (4ஆம்) விக்கிரமாதித்தனுடன் போர்.

மேலைச் சாளுக்கியர்களும் சோழ மன்னர்களும் ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திலிருந்து போரிட்டுக் கொண்டு இருந்திருக்கின்றனர். சாளுக்கிய மன்னர்கள் தைலபன், சத்தியாஸ்ரயன், ஜெயசிம்மா, சோமேஸ்வரா என்று அடுத்தடுத்து எல்லா சாளுக்கியர்களும் சோழர்களிடம் போரில் தோற்றுப் போயிருக்கின்றனர். வீரராஜேந்திர சோழன் காலத்தில் இந்தச் சாளுக்கியர்கள் பலமுறை தோற்று ஓடியிருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான போர்களில் தோற்றதுமில்லாமல் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து விரைந்து ஓடவும், சோழர்கள் விரட்டிக் கொண்டு ஓடவுமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் சாளுக்கிய தலைநகரைப் பிடித்து கொள்வதும், அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதும் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது.

மேலைச் சாளுக்கியர்களான முதலாம் சோமேஸ்வரன் அவனுடைய பிள்ளைகள் ஆறாம் விக்கிரமாதித்தன் இரண்டாம் சோமேஸ்வரன் ஆகியோர் சாளுக்கியப் படைகளுக்குத் தலைமை தாங்கி குலோத்துங்கனுடன் போரிட்டனர். அந்தப் போரில் வென்ற குலோத்துங்கன் "விருதுராஜ பயங்கர" எனும் பட்டத்தைப் பெற்றான். இதன் பொருள் விருதுராஜன் எனப்படும் விக்கிரமாதித்தனை போரில் அச்சம்கொள்ளச் செய்தவன் என்பது. குலோத்துங்கன் காலத்தில் எல்லா போர்களிலுமே சோழர்கள் சாளுக்கியர்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு முறை 1118இல் குலோத்துங்கன் உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வேங்கியை விக்கிரமாதித்தனிடம் தோற்றிருக்கிறான். உடல்நலம் சரியில்லாத குலோத்துங்கன் தன்னுடைய அபிமான மகனான விக்கிரம சோழனை அழைத்து சோழ சாம்ராஜ்யத்து மன்னனாக முடிசூட்டினான். தன்னுடைய முடிசூட்டு விழாவுக்காக விக்கிரம சோழன் தாய்நாடு திரும்பிய நேரத்தில் சாளுக்கியர்கள் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். இப்படி இவர்கள் வேங்கியைத் தங்கள் வசம் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தனர். தன்னுடைய நிலைமையை வலுப்படுத்திக் கொண்ட விக்கிரம சோழன் 1125-26இல் அப்போது வயது முதிர்ந்திருந்த விக்கிரமாதித்தனைத் தோற்கடித்துவிட்டு மீண்டும் வேங்கியைப் பிடித்துக் கொண்டான்.

ஆக, குலோத்துங்கன் சோழநாட்டையும் வேங்கியையும் ஒருங்கிணைக்க செய்த முயற்சிகளுக்கு சாளுக்கியன் விக்கிரமாதித்தன் முட்டுக்கட்டையாக இருந்தான். குலோத்துங்கன் ராஜேந்திரன் வம்சத்தாரின் பெண்வழி வாரிசுகள் என்பதாலும், சோழநாட்டை இவர் அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஆளத் துவங்கியதாலும் இவ்விரு நாடுகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் குலோத்துங்கன். 1075இல் இதனை எதிர்த்து விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான்.

சாளுக்கியப் படைகள் சோழ நாட்டினுள் புகுந்து அதன் படைகளை கோலாரில் எதிர்கொண்டது. அங்கு சாளுக்கியர்களை எதிர்த்துப் போர் புரிந்து சோழப் படைகள் அவர்களை துங்கபத்திரைக் கரைவரை ஓடஓட விரட்டியடித்து வெற்றி பெற்றது.

ஈழத்தில் யுத்தம்.

குலோத்துங்கன் விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் விஜயபாகு என்பவன் இலங்கை முழுவதுக்கும் தன்னை அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். 1070இல் இலங்கையில் இருந்த சோழர் படைகளை இவன் ரோஹண எனுமிடத்தில் தாக்கி வெற்றி பெற்றான். இந்த வெற்றியை யடுத்து தைரியம் கொண்டு விஜயபாகு அனுராதபுரத்துக்கு அருகிலிருந்த பகுதிகளையும் பறித்துக் கொண்டான். குலோத்துங்கன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பு அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த விஜயபாகுவை ஒரு கடுமையான போரில் தோற்கடித்தான்.

இந்த இலங்கைப் போரின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். சோழர்களின் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கையின் சிங்களப் படையொன்று ரகசியமாக சாளுக்கிய நாட்டுக்குச் சென்றது. அதை வழிமறித்த சோழப்படையினர் அவர்களைப் பிடித்து மொட்டையடித்து பெண்களுக்கான உடைகளை அணிவித்து அவமானப்படுத்தி ஊருக்குத் திரும்ப அனுப்பினர். சோழர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அந்த சிங்கள ராணுவம் தமிழ் வணிகர்களின் கப்பலை வழிமறித்து கொள்ளையடித்ததற்கு பதிலாக இப்படிச் செய்தனுப்பினர். சிங்களர்கள் தமிழ்ப் பிரதேசங்களிலும் புகுந்து கொள்ளையடித்து சோழர்களுக்குச் சவால் விடுத்தனர்.

பாண்டியர்களுடனான யுத்தம்.

சாளுக்கிய விக்கிரமாதித்தனை போரில் தோற்கடித்த பின் குலோத்துங்கன் பாண்டியர்களின் பக்கம் திரும்பினான். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் காலம் காலமாய் மோதல் இருந்து கொண்டிருந்தது. சோழ நாட்டில் அதிராஜேந்திரன் கொலையுண்ட பின்னர் குலோத்துங்கன் வேங்கியிலிருந்து இங்கு வந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டபோது சிறிது காலம் சோழநாடு குழப்பத்தில் இருந்தது. அந்த நேரம் பார்த்து பாண்டியர்கள் சோழர்களுக்கு எதிராகக் கலகம் செய்து தங்களது சுய உரிமையை மீட்டுக்கொள்ள போராடினர்.

இதனை குலோத்துங்கன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பாண்டிய நாட்டை இழப்பது தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்த குலோத்துங்கன் கலகம் செய்யும் பாண்டியர்களையும், அதனையடுத்த சேரநாட்டு (கேரள) பிரதேசங்கள் மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இது குறித்த செய்தியொன்று சொல்வதாவது: குலோத்துங்க மன்னன் தன்னுடைய வலுவான படைகளைக் கொண்டு சேரர்களையும் பாண்டியர்களையும் போரில் வென்று கொற்கை துறைமுகத்தையும் எரித்தான். இந்த வெற்றியைக் குறிக்க சஹாயகிரி எனுமிடத்தில் ஒரு வெற்றித்தூண் எழுப்பினான்.

வேங்கி நாடு.

இப்படி குலோத்துங்கன் இலங்கையிலும், பாண்டிய சேர நாடுகளிலும் போரிட்டுக் கொண்டிருக்கும்போது யட்சகன்னரதேவன் எனும் திரிபுரா ராஜன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான். இதை படையெடுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்லலாம். விஜயதேவன் இந்த படையெடுப்பை முறியடித்தான். இப்படி வேங்கி நாடு சோழர்களின் நேரடி ஆதிக்கத்தில் விஜயதேவனால் நடத்தப்பட்டது. அவன் இறந்த பின்னர் குலோத்துங்கனின் மகன் ராஜராஜ மும்முடிச் சோழனே 1076இல் வேங்கியின் சோழப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். ஆனால் அவன் ஓராண்டுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன் தம்பியான வீரசோழன் என்பான் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் 1084 வரை இருந்து வந்தான். இந்த வீரசோழனுக்குப் பிறகு அவனுடைய இன்னொரு தம்பி ராஜராஜ சோடகங்கா என்பவன் ஐந்தாண்டுகள் பதவி வகித்தான். அவனுக்குப் பின் விக்கிரம சோழனுக்கு இந்தப் பதவி கிடைத்தது.

வெளிநாட்டுத் தொடர்புகள்.

குலோத்துங்க சோழன் சீன நாட்டுக்கு ஒரு தூதரை 1077இல் அனுப்பி வைத்தான். சீனாவுடனான இந்த அரசியல் உறவு சோழர்களுக்கு ஆதாயம் அளித்தது. சீன உறவு ஏராளமான செல்வத்தை சோழர்களுக்குக் கிடைக்கச் செய்தது.

1063இல் குலோத்துங்கனின் இளமைப் பருவத்தில் இப்போதைய மலேயா தீபகர்ப்பத்தை ஸ்ரீவிஜய நாடு என்றிருந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சோழர் படைகள் ஸ்ரீவிஜயத்திலும் காம்போஜிலும் தங்க வைக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள் காம்போஜம் என்கிற இப்போதைய கம்போடியாவோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். பர்மிய மன்னர்களும் சோழர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தனர்.

குலோத்துங்கனின் சோழ சாம்ராஜ்யம்.

குலோத்துங்கன் காலத்தில் சோழசாம்ராஜ்யம் கடல்கடந்தும், உள்நாட்டில் வடக்கே வேங்கி, கலிங்கம் உட்பட வெகு தூரமும் தெற்கே சேர, பாண்டிய நாடுகளை உள்ளடக்கியும் பெரிதாக விளங்கியது. சில வரலாற்று ஏடுகளின்படி குலோத்துங்கன் தன் இறுதிக் காலத்தில் கங்கவாடி நாட்டை ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனனிடம் இழந்தான் எனத் தெரிகிறது. கால வெள்ளத்தில் வேங்கி நாட்டின் பல பகுதிகளையும் சிறுகச் சிறுக மேலைச் சாளுக்கியர்களிடம் இழந்தான். ஹொய்சாளர்கள் சோழர்களை வெற்றி கொண்டதால் தைரியமடைந்த விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது 1118இல் படையெடுத்தான். தனக்கு வயதாகி விட்ட காரணத்தால் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனிடம் பொறுப்பைக் கொடுத்தான். அப்படியிருந்தும் வேங்கி விக்கிரமாதித்தன் வசம் போய்விட்டது. அதன் ஆட்சியும் அவன் இறக்கும் வரை அதாவது 1126 வரை அவன் வசம்தான் இருந்தது. சோழர்களின் இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான். விக்கிரமாதித்தனுடைய இறப்புக்குப் பிறகு மீண்டும் வேங்கியை விக்கிரம சோழன் பிடித்துக் கொண்டான். 1124-25இல் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வேங்கியை மீட்டபின் அது மூன்றாம் குலோத்துங்கன் காலமாகிய 1176-1218 வரை சோழர் வசம் இருந்திருக்கிறது.

ஆக, குலோத்துங்கனின் சாம்ராஜ்யத்தின் எல்லை அவன் பதவியேற்ற காலத்தைவிட அவன் இறக்கும் சமயம் சற்று குறைந்துதான் போயிருந்தது.

குலோத்துங்கனைப் பற்றி....

மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி எனும் பெண்ணைத்தான் குலோத்துங்கன் திருமணம் செய்து கொண்டான். இந்த தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள், அவர்களில் விக்கிரம சோழன் என்பாந்தான் குலோத்துங்கனுக்குப் பிறகு அரசுரிமை பெற்றான். அவன் குலோத்துங்கனின் மூத்த மகன் அல்ல, நான்காவது மகன் என்பது கவனிக்கத் தக்கது. மதுராந்தகி 1110இல் இறந்து போனாள். பின்னர் தியாகவல்லி என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறான். கலிங்கத்துப்பரணி எனும் காப்பியம் இந்த தியாகவல்லியை ஏழிசைவல்லபி என குறிப்பிடுகிறது. அவளை "ஏழுலகுடையாள்" என்றும் சொல்கிறார்கள். இந்த தியாகவல்லி மன்னருக்கு இணையாக அதிகாரம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இவர்களைத் தவிர சோழகுலவல்லி என ஒரு ராணியும் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கை மன்னனாகிய விக்கிரமபாகுவின் மகள் ஒருத்தியையும் குலோத்துங்கன் 1088இல் திருமணம் செய்து கொண்டார். இவைகள் எல்லாம் இரு நாட்டுக்குமிடையே ஒற்றுமையை நிலவச் செய்வதற்காகச் செய்து கொண்ட திருமணங்களாக இருத்தல் வேண்டும். இந்தத் திருமணத்தின் மூலம் சிங்கள அரசன் பாண்டியர்களுடன் சேர்ந்து கொண்டு சோழர்களை எதிர்ப்பது நின்று போனது. இலங்கை சிங்கள அரசனுக்கும் அச்சமின்றி அதிக அதிகாரத்தோடு ஆட்சி புரியவும் முடிந்தது.

மத்திய இந்தியாவில் ஆண்ட மன்னர்களோடு குலோத்துங்கன் நல்ல உறவு வைத்திருந்தான். அவர்கள் அங்கு சூரியபகவானுக்கு எழுப்பியிருந்த கலைநயம் மிக்கப் பல கோயில்களைக் கண்ட குலோத்துங்கன் அதுபோல சோழ நாட்டிலும் பல ஆலயங்களை எழுப்பினான். சூரியனுக்கென்று தமிழகத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டவை. 1113இல் மேலக்கடம்பூரில் தன்னுடைய பட்டமேற்ற 43ஆம் ஆண்டில் அரிய பல சிற்ப வேலைகள் அமைந்த கோயிலை அமைத்தான். இந்தக் கோயிலின் மூலத்தானம் ஒரு தேரைப் போல அமைப்பில் கட்டப்பட்டது. இவை தவிர சோழ நாட்டில் பற்பல ஆலயங்களை எழுப்பி தன் பெயர் நிலைக்கும்படி செய்துவைத்தான் முதலாம் குலோத்துங்கன். விஜயாலயன் சோழ வம்சத்தில் தந்தை வழியில் அல்லாமல் பெண் வழியில் வந்த முதலாம் அரசன் குலோத்துங்கன். அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பிறகு பதவியேற்ற குலோத்துங்கன் 1121 வரை சோழநாட்டை ஆண்டான். இவனைத் தொடர்ந்து இவனது நான்காவது மகன் விக்கிரம சோழன் பதவிக்கு வந்தான்

தில்லைக் கோயில்இந்தக் கோயிலின் கட்டமைப்பை வைத்துச் சரித்திர ஆய்வாளர்கள் இது பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். 


பொதுவாகவேச் சோழமன்னர்கள் அனைவருமே சிவபக்தியில் ஊறித் திளைத்தவர்கள் மட்டுமின்றித் தில்லைக் கோயிலில் பெரும் ஈடுபாடும் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். சோழ அரசருக்கு முடி சூட்டும் உரிமையும் தில்லை வாழ் அந்தணர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தில்லைப் பதியில் மறைந்திருந்த திருமறைகளை மன்னன் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் தமிழ் நாடெங்கும் ஓதுமாறு பணித்தான்.

இவனைத் தவிர, வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் என முறையே சோழ அரசர்கள் பலரும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கின்ரனர். முதலாம் பிரகாரத்தை ஏற்படுத்தியவன் குலோத்துங்க சோழன் என்பதால் அவன் பெயரால் அது "குலோத்துங்க சோழன் திருமாளிகை" எனவும், பின்னர் இரண்டாம் பிரகாரம் அவன் மகன் ஆன விக்கிரம சோழன் பெயரால், "விக்கிரம சோழன் திருமாளிகை" எனவும் அழைக்கப் பட்டு வந்தது. விக்கிர சோழன் இது தவிர, மேற்குக் கோபுர வாசல், கோயிலுக்கு எனத் தேர் எனஏற்படுத்தினான். ஒரு தெருவே அவன் பெயரில் விளங்கியது. அவனின் தளபதியான நரலோக வீரன் நூற்றுக் கால் மண்டபம், சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுகள் ஒரு பிரகாரம், மண்டபம் ஒன்றும் மற்றும் சிவகாமி அம்மையின் வெளி மதில் சுவர் போன்றவற்றை எழுப்பினான்.

பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன்சபாபதிக்கு முக மண்டபம், கோபுரம், சிவகாமி அம்மையின் கோயிலின் மதில் சுவரின் எஞ்சிய பாகம் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் முதன் முதலாக நடராஜருக்கு அன்னப் பாவாடை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சோழர்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பிற்காலப் பாண்டியர்களும் சிதம்பரம் கோயிலின் பல கட்டுமானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது தவிர, சோழ மன்னன் முதலாம் பராந்தகன் இந்தக் கோயிலின் கூரைக்குப் பொன் வேய்ந்ததாகவும் கேள்விப் படுகின்றோம்.

நூற்றுக் கால் மண்டபம் சோழத் தளபதியான நரலோகவீரனால் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டதாயும் சொல்கின்றனர்.

விக்கிரம சோழன். கி.பி.1118 - 1135


15. விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

விக்கிரம சோழன். கி.பி. 1118 - 1135 

முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே அரசு அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியவன் அவனுடைய நான்காம் குமாரனாகிய விக்கிரம சோழன். இவனுக்குப் "பரகேசரி" எனும் பட்டம் உண்டு. குலோத்துங்கன் முதலில் விக்கிரமாதித்தன் வந்து போரிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தைப் பிடித்துக் கொண்டபோது திருவாரூர் போய் தங்கியிருந்து, பின்னர் விக்கிரமாதித்தன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய பின் மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம் போய்விடுகிறான். அதன் பின் சோழர்களின் தலைநகரமாக இந்த கங்கைகொண்ட சோழபுரமே இருந்து வந்தது.

விக்கிரம சோழனுக்கு இரு மனைவியர்கள் முக்கோகிலனடிகள், தியாகபாதா என்பவர்கள். இவனுக்குப் பின் இவன் மகனான இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். விக்கிரம சோழன் 1135இல் காலமானான். கோப்பரகேசரிவர்மன் விக்கிரம சோழன் எனும் பெயரோடு விளங்கிய இந்த மன்னன் 12ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் முதலாமவனும் சிறந்தவனுமாக இருந்தான்.

விக்கிரம சோழன் முன்பே குறிப்பிட்டபடி குலோத்துங்கனின் நான்காவது மகன். வீரசோழன் என்பவன் மூன்றாவது மகன். விக்கிரமன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பாகவே வேங்கி நாட்டை ஆளும் பொறுப்பு 1089இல் கொடுக்கப்பட்டு அங்கு சென்றுவிட்டான். 1118இல் குலோத்துங்கன் தனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பதால் வேங்கியிலிருந்த விக்கிரமனை அழைத்து சோழ நாட்டில் பதவியில் அமர்ந்தினான். ராஜகேசரி என்றும் பரகேசரி என்றும் இவனுக்கு விருதுகள். 1118 முதல் 1122 வரை இவன் தன் தந்தை குலோத்துங்கணுடன் இணைந்து ஆண்டுவந்தான். விக்கிரமன் வேங்கியைவிட்டு சோழ தேசத்துக்குத் தன் தந்தைக்குத் துணையாக வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான்.

விக்கிரமன் ஆட்சிக்கு வருவதற்கு 12 வருஷங்கள் முன்பாகவே சோழ சக்கரவர்த்தி குலோத்துங்கன் சார்பில் கலிங்கத்தின் மீது 1110இல் படையெடுத்தான். இந்த படையெடுப்பு பற்றிய இலக்கியமொன்று இருக்கிறது விக்கிரம சோழன் உலா என்று.

மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் 1118இல் கிழக்கு சாளுக்கிய நாடான வேங்கியைப் பிடித்துக் கொண்டான் என்பதைப் பார்த்தோம். 1126இல் விக்கிரமாதித்தன் இறந்தவுடன் விக்கிரம சோழன் வேங்கியை மீண்டும் பிடித்துக் கொண்டான். இந்தப் போர் குறித்த அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலம் சோழர்கள் ஆட்சியை நடத்தி வந்ததால் வேங்கி நாட்டவர் சோழர்களை சாளுக்கியர்களைக் காட்டிலும் அதிகம் விரும்பியிருக்கிறார்கள். அது போலவே அரச குடும்பத்தார் மீதும் மக்கள் அன்பு வைத்திருந்தனர். வேங்கி மக்களின் விருப்பத்துக்கிணங்க விக்கிரம சோழன் தன் குமாரன் இரண்டாம் குலோத்துங்கனை வேங்கி நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.

வேங்கியை முழுவதுமாக மீண்டும் தன்வசப் படுத்திக் கொண்ட பிறகு சோழர்கள் கலிங்கத்தின் மீதும் படையெடுத்துச் சென்றனர். சோழர்களிடமிருந்து ஹொய்சாளர்கள் கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களை மீட்க விக்கிரமன் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. விக்கிரமன் கலம் அவன் தந்தையின் காலம்போல அதிகமான போர்களைக் கொண்டதல்ல.

விக்கிரமன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான். பல சிவாலயங்களை இவன் பல ஊர்களிலும் கட்டி வைத்தது இன்றும் அவன் பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன. சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அந்த சிதம்பரத்துக்கு நிறைய கைங்கர்யங்களைச் செய்தான் விக்கிரம சோழன். 1128இல் சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும் விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான். ஆலயத்தின் முக்கிய விமானம் மற்றும் நடைபாதை கூரைகளுக்குப் பொன் வேய்ந்தான். இவன் காலத்தில் மக்கள் ஆலயங்களின் அபிவிருத்திக்கு அதிக நன்கொடைகளைக் கொடுத்தனர்.

விக்கிரம சோழனை "தியாகசமுத்திரன்" என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர். இவனுக்குப் பிறகு இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வந்தான்.

இரண்டாம் குலோத்துங்கன்.கி.பி. 1133 - 1150 


16. 2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150
சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும், பெரியபுராணம், (திருத்தொண்டர் புராணம்)என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கி யவர். அப்போது இவருடைய இயற்பெயர் ,அருண் மொழித்தேவர்

விக்கிரம சோழனின் மகனான இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு "ராஜகேசரி" எனும் விருது உண்டு. கங்கைகொண்ட சோழபுரம் இவன் தலைநகரம். இவனது ராணிமார்கள் தியாகவல்லி, முக்கோகிலம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலம் சோழ நாட்டின் பொற்காலம் என்று தெரிகிறது. இவன் காலத்தில்தான் மக்கள் சுகபோகத்தில் இருந்து கொண்டு வீண் பொழுது போக்கிக்கொண்டு ஜீவகசிந்தாமணியைப் புலவர்களைக் கொண்டு படிக்க வைத்துப் பொற்காசுகளைக் கொடுத்து வாழ்க்கையை அனுபவித்தனர். இதனைக் கண்டு வருந்திய மன்னன் மக்களை நல்வழிப்படுத்த நல்லதொரு நூலை இயற்றித்தரவேண்டுமென்று தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானை வேண்ட, அவரும் பெரியபுராணம் செய்தார்.

இவனுடைய தந்தை இருந்த காலத்திலேயே இந்த இரண்டாம் குலோத்துங்கன் இளவரசாகப் பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சியில் பங்குகொண்டான். 1135இல் விக்கிரமன் காலமானதும் இவன் முழுமையான மன்னனாக ஆனான். இவனுடைய ஆட்சிக் காலம் பொற்காலம் எனலாம். நாட்டில் அங்கும் அமைதி நிலவியது. இவனும் நல்லாட்சி வழங்கினான். கடவுள் பக்தி நிரம்பியவன் ஆதலாம் எங்கும், எவரிடமும் அன்போடு நடந்து கொண்டான். மக்கள் மதித்த நல்லதொரு ஆட்சியாளனாகத் திகழ்ந்தான் இரண்டாம் குலோத்துங்கன்.

இவன் காலத்தில் போர்கள் எதுவும் இல்லை. ஆனால் வேங்கியைக் காக்க இவன் சில போர்களை நடத்த வேண்டியிருந்தது. பெரிய புராணம் எனும் சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய இலக்கியம் இந்த பெருமகனாரின் புகழுக்கு ஒரு சாட்சி. இந்த குலோத்துங்கனுக்கு சிதம்பரம் என்றால் உயிர். இந்த சோழ மன்னர்கள் சிதம்பரத்திலும் ஒரு முறை முடிசூட்டிக் கொள்வது வழக்கம். அதுபோலவே இவனும் இங்கு முடிசூட்டிக் கொண்டான்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது அளவிலா பக்தி கொண்டவன். இவன் காலத்தில் சிதம்பரம் ஆலயம் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. விக்கிரம சோழன் தொடங்கிய திருப்பணி இவன் காலத்தில் முடிந்து குடமுழுக்கு நடந்திருக்கலாம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சைவ வைணவ பூசல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலை இவன் காலத்தில் அகற்றப்பட்டது என்றொரு செய்தியும் இருக்கிறது. சிவாலயத்தில் எதற்காக பெருமாள் சிலை என்பது இவன் கருத்தாக இருந்திருக்கலாம்.*

(*இது குறித்து ஒரு புராண செய்தி உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அவர் பள்ளிகொண்டிருந்த ஆதிசேஷன் போய் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்ல பெருமாள் அவரை அனுமதிக்கிறார். உடனே ஆதிசேஷன் பதஞ்சலி முனிவர் வடிவத்துடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று ஐயனின் ஆடலைக் காண்கிறார். அங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மி விஷ்ணுவிடம் ஆதிசேஷனும் போய்விட்டார் நாமும் போய் பார்த்தால் என்ன என்று சிதம்பரம் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நடராசரின் (சிவனின்) ஆட்டத்தைப் பார்த்தார்களாம். ஒருக்கால் இந்த நிகழ்ச்சியைக் காட்டும் விதத்தில் அங்கு ஒரு பெருமால் சந்நிதி இருந்ததோ என்னவோ?)

எது எப்படியோ? இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவன் காலத்தில் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பிய இராமானுஜரைப் பிடிக்கவில்லை. இராமானுஜரின் பல சீடர்களை இவன் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. ஒரு வைணவரைக் குருடாக்கிவிட்டதாகவும் செய்தி இருக்கிறது. இராமானுஜருக்குச் செய்ய வேண்டிய இந்த கொடுமையை அவருக்கு நேராமல் தடுக்க நினைத்த கூரத்தாழ்வான் என்பவருக்கு நடந்துவிட்டது இது.

ராஜாவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்காமல் சிதம்பரத்திலேயே அதிகம் வாழ்ந்தான் இந்த இரண்டாம் குலோத்துங்கன். இவன் ராணி தியாகவில்லி. இன்னொரு மனைவி மலயமான் வம்சத்து ராணி. இந்த குலோத்துங்கனைத்தான் "அனபாய சோழன்" என்று அழைத்தனர். இந்தப் பெயர்தான் பல கல்வெட்டுகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் ராஜராஜன் என்பவன் 1150இல் ஆட்சிக்கு வந்தான்

இரண்டாம் ராஜராஜன். கி.பி.1146 - 1173 

Picture
17. 2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146- 1163

இரண்டாம் ராஜராஜன். கி.பி. 1146 - 1173 

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் என்பான். இவனது தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம்தான். இவனுடைய ராணிகள் அவனிமுழுதுடையாள், புவனமுழுதுடையாள், உலகுடை முக்கோகிலம். இவன் இறந்த ஆண்டு 1173.

இரண்டாம் ராஜராஜன் தன்னுடைய தந்தையார் இரண்டாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்தான். அப்படி வந்த ஆண்டு 1150. ஆனால் 1146லேயே இவனை இளவரசாக ஆக்கி ஆட்சி பொறுப்புகளை இரண்டாம் குலோத்துங்கன் வழங்கியிருந்தான். ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் ஓஹோவென்று ஆண்ட அகண்டு விரிந்த சாம்ராஜ்யம் குறையத் தொடங்கியது இவன் காலத்தில்தான். இவன் பதவியேற்ற நேரத்தில் இருந்த சோழ நாட்டுப் பகுதிகள் வேங்கி உட்பட இவன் காலத்தில் இவன் ஆட்சிக்குட்பட்டுதான் இருந்தது.

ஆனால் இவன் காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சி சாம்ராஜ்யம் முழுவதும் இவனுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல ஒரு கட்டுப்பாடான மத்திய ஆட்சியின் கீழ் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் சோழப் பேரரசுக்கின் கீழ்தான் வேங்கி, பாண்டிய, சேர நாடுகள் இருந்து வந்தன. இலங்கை மீதும் இவன் படையெடுத்த செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. இவனும் சரி இவனுடைய மகனான மூன்றாம் குலோத்துங்கனும் சரி "திரிபுவன சக்கரவர்த்தி" எனும் விருதினைப் பெற்றிருந்ததிலிருந்து இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பேரரசனாகத்தான் இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

பாண்டிய நாட்டு நிர்வாகம் சோழர் கையில்தான் இருந்ததென்றாலும், அங்கே பாண்டிய நாட்டின் உரிமை யாருக்கு என்பதில் அங்குள்ள பாண்டியர்களுக்குள் போட்டி இருந்து வந்தது. அதன் பலனாக சோழர்களின் பிடி பாண்டிய நாட்டின் மீது இவன் காலத்தில் சற்று பலவீனமடைந்து போயிற்று. விஜயாலயன் பரம்பரையில் முதலாம் ஆதித்தன் காலத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள் அதுமுதல் வீரராஜேந்திரன் காலம் வரையில் சோழர்களுக்கு அடிமைப்பட்ட நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும் அவர்கள் தங்களை சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்லா காலங்களிலும் முயன்று வந்திருக்கிறார்கள். அதற்காக ரகசியமான நடவடிக்கைகளிலும், சதியிலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாண்டியர்களின் இந்த விடுதலை உணர்வு மாறவர்மன் எனும் மாறவரம்பன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீர பாண்டியன், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் காலத்தில் அதிகமாகிவிட்டது. பாண்டியர்கள் சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை விரும்பவில்லை. தங்களைச் சுயேச்சையான மன்னர்களாக அறிவித்துக் கொள்ள காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான முயற்சிகளில் 13ஆம் நூற்றாண்டு முழுவதும் இவர்கள் பாடுபட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிட முடியாது.

2ஆம் ராஜராஜன் 1163இல் தன்னுடைய மகனான இரண்டாம் ராஜாதிராஜனை இளவரசனாக முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தான். அதன் பிறகு பத்து ஆண்டுகள் 2ஆம் ராஜராஜன் வாழ்ந்தான். 2ஆம் ராஜராஜன் மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டான், ஆகவே அவன் மகனும் மிக இளம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆகவே பல்லவராயரின் ஆதரவையும் பாதுகாப்பையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். பல்லவராயர் ஒரு வயதும், இரண்டு வயதும் ஆகியிருந்த இளம் சோழ ராஜகுமாரர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்களில் 3ஆம் குலோத்துங்கன் தான் சோழ மன்னர்களில் கடைசி மன்னனாகக் கருதப்படுகிறான். இவன் 2ஆம் ராஜராஜனின் மகன்.

2ஆம் ராஜராஜ மன்னனின் காலம் அமைதியான காலம். இந்த அமைதியான காலத்தில்தான் இவன் தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலைக் கட்டினான். இந்த தாராசுரம் கோயில் சோழர்களின் மற்ற இரு கோயில்களான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இவற்றுக்கு இணையாகப் பெருமை மிக்கதாக விளங்குகிறது என்பது தெரியும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கருங்கல் வேலைகள் மிகவும் சிறப்பானவை. இவனது மகன் 3ஆம் குலோத்துங்கன் கட்டிய திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அதற்கு இணையான அற்புத கலைப் படைப்புகளைக் கொண்ட கோயில்.
இந்த ஆலயத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணக் கதைகளின் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

2ஆம் ராஜராஜன் தஞ்சாவூர், சிதம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆகிய கோயில்களுக்கு ஏராளமான நிவந்தங்களை வழங்கியிருக்கிறான். மதுரை ஆலயத்துக்கும் இவன் இவன் ஏராளமான செல்வங்களைத் தந்தான். சேர நாட்டுக் கோயில்களுக்கும் இவன் அடிக்கடி சென்று வந்ததும், அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிதியளித்ததும் கூட வரலாற்றில் காணப்படுகிறது. மேலைக் கடற்கரையிலிருந்து கீழைக் கடல் வரையிலுமுள்ள பிரதேசங்களில் சோழர்களின் ஆதிக்கம் இவன் காலத்தில் உறுதியாக இருந்திருக்கிறது.

இவன் இறந்த பிறகு 2ஆம் ராஜாதிராஜன் எனும் இவனது மகன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். 

இரண்டாம் ராஜாதிராஜ சோழன். கி.பி. 1163 - 1178 


18. 2ம் ராஜேந்திர சோழன். 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

இரண்டாம் ராஜாதிராஜ சோழன். கி.பி. 1163 - 1178

இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு "ராஜகேசரி" எனும் பட்டத்துடன் அரசப் பதவிக்கு வந்தவன் இந்த இரண்டாம் ராஜாதிராஜன். இவனுடைய தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம் தான். இவனும் விக்கிரம சோழனுடைய மகன் தான். இவன் இரண்டாம் ராஜராஜனுடைய மகன் அல்ல, அவனுடைய சகோதரியின் மகன். ராஜராஜன் II இவனைத் தன் வாரிசாக நியமித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அது ராஜராஜன் IIக்கு மகன் கிடையாது.

இவன் பதவியேற்றுக் கொண்ட காலத்தில் பாண்டியர் தேசத்தில் வாரிசுரிமைப் போர் தொடங்கியது. இலங்கையிலும் கலகம் ஏற்பட்டதால் சோழர்களுக்கு ஒரு சோதனையான காலமாக இருந்தது. இதன் காரணமாக பாண்டியர்களின் கை ஓங்கி சோழர்கள் வலிமை இழக்கத் தொடங்கினர்.

முதலாம் குலோத்துங்கனின் பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு, பாண்டிய நாட்டை பாண்டியர்களே ஆளும்படியாக சோழர்கள் அனுமதித்திருந்தார்கள். சோழர்கள் மேம்போக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சில பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்கு அணுக்கமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக பராந்தக பாண்டியன் சோழர்களோடு சேர்ந்து கொண்டு கலிங்கத்தில் போர் புரிந்திருக்கிறான். முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு பாண்டியர்கள் சோழர் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுயமாக நாட்டை ஆளமுற்பட்டனர். குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு சோழர்கள் பற்றிய கல்வெட்டு எதுவும் பாண்டிய நாட்டில் இல்லை.

கி.பி.1166இல் மதுரை பாண்டியர்களான பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் வாரிசு உரிமைப் போர் உருவானது. குலசேகரன் மதுரையைத் தாக்கினான். உடனே பாண்டியன் இலங்கை அரசன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கையின் உதவி பாண்டியருக்குக் கிடைக்குமுன்பாகவே குலசேகரன் மதுரையைத் தாக்கி பராக்கிரம பாண்டியனையும் கொன்று, அவன் மனைவி குழந்தைகளில் சிலரையும் கொன்றுவிட்டான். இதையறிந்த இலங்கை அரசன் தன்னுடைய படைகளுக்கு மதுரையைப் பிடித்துக்கொண்டு பராக்கிரம பாண்டியனையும் அவன் குடும்பத்தாரையும் கொன்ற குலசேகரனைத் தோற்கடித்து இறந்து போன பராக்கிரம பாண்டியனுடைய ஒரு மகனை அரச பீடத்தில் அமர்த்த வேண்டுமென்று உத்தரவிட்டான்.

இலங்கை அரசனுடைய எதிர்ப்பை குலசேகரன் தீரத்துடன் எதிர் கொண்டான். பாண்டியனின் வீரமிகுந்த போராட்டத்தை சமாளிக்க பராக்கிரமபாகு இலங்கையிலிருந்து மேலும் படைகளை வரவழைத்தான். இலங்கையின் தாக்குதலை தாங்கமுடியாமல் குலசேகரன் சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜனுக்கு படைகளை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தான். அவன் கோரிக்கையையேற்று சோழ மன்னனும் பெரும் படையொன்றை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். இறுதியில் குலசேகரன் பலத்த எதிர்ப்புக்கிடையில் தோல்வியைச் சந்தித்தான்.

இலங்கைப் படைகள் பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் என்பவனை அரச பதவியில் அமர்த்தினர். இருந்த போதிலும் இலங்கைப் படைகளுக்கும் சோழர் படைகளுக்கும் போர் தொடர்ந்து நடந்தது. இறுதியில் சோழர் படை வெற்றி பெற்று இலங்கை சிங்களப் படைகளை துரத்தியடித்துவிட்டது. மிகக் கடுமையாக நடந்த இந்த சிங்கள சோழர் போரில் சோழர் படைத் தளபதி அண்ணன் பல்லவராயன் என்பவன் இரண்டு சிங்கள படைத் தளபதிகளின் தலையை வெட்டி வீழ்த்தினான். அந்த சிங்களப் படைத் தளபதிகளின் பெயர்கள் லங்காபுரி தண்டநாயகன், ஜெகதிவச தண்டநாயகன் என்பது. இந்தப் போரின் இறுதியில் சோழர்கள் குலசேகரனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி வைத்தனர். அந்த சமயத்தில் சிங்கள தளபதிகள் இருவரின் தலைகளும் கோட்டையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மதுரையில் சோழர் படைகளிடம் தோற்ற சிங்களப் படைகளின் வெறி அடங்கவில்லை. இலங்கை சிங்கள அரசன் பராக்கிரமபாகு சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோழர்கள் இலங்கையில் இந்த பராக்கிரமபாகுவுக்கு எதிரியான ஸ்ரீவல்லபன் என்பவனை இலங்கை அரசுக்கு உரிமை கோரி போராடும்படி தூண்டினார்கள். அந்த ஸ்ரீவல்லபன் சோழர்களின் படை உதவியுடன் ஒரு மிகப் பெரிய கப்பற்படையோடு இலங்கை சென்றான். அங்கு சிங்களர்களின் பல இடங்களை ஸ்ரீவல்லபன் தலைமையிலான சோழர்படை தூள் தூளாக்கியது. பாண்டியர்களின் பிரச்சனையில் தலையிட்டதன் பலனாக தன் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வருந்திய இலங்கை அரசன் பராக்கிரமபாகு பாண்டிய நாட்டுக்கு குலசேகரனை அரசனாக ஒப்புக் கொண்டான். அது மட்டுமல்லாமல் சோழர்களுக்கு எதிராக குலசேகரனோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.

தாங்கள் பார்த்து பாண்டிய நாட்டுக்கு அரசனாக குலசேகரனை உட்காரவைத்த நன்றியை மறந்து அந்த குலசேகரன் பராக்கிரமபாகுவுடன் தங்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டு சோழர்களுக்கு ஆத்திரம். இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்கிற வேகத்துடன் பாண்டியன் குலசேகரன் மீது படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து விட்டு முன்பு இலங்கை படையினரால் முடிசூட்டப்பட்ட வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்தார்கள். நன்றி மறந்த குலசேகரன் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான்.

சோழ நாட்டில் வலுவான தலைமை முன்பு போல இல்லாமல் இருந்ததால் அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் சோழ நாட்டை பலவீனப்படுத்தினர். சிற்றரசர்கள் சோழப் பேரரசனுக்கு நெருக்கடி கொடுத்த வண்ணமிருந்தனர். தங்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சோழ மன்னன் நிர்வாகத்தை நடத்த திணரவேண்டியிருந்தது. இப்படி இந்த சிற்றரசர்களின் துரோகத்தின் பயனாக சோழப் பேரரசு தனது கம்பீரத்தை இழந்து கொண்டிருந்தது. நிர்வாகம் சீர்கேடடையத் தொடங்கியது. சோழப் பேரரசர் மீது நெருக்கடியைக் கொடுத்து சிற்றரசர்கள் தங்கள் கோரிக்கைகளை நிலைநாட்டத் தொடங்கி மொத்த சோழ சாம்ராஜ்யத்தையும் பலவீனப்படுத்தி விட்டனர்.

இந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன் தன் காலத்திலேயே தனது மகனான மூன்றாம் குலோத்துங்கனை ராஜாங்க காரியங்களைக் கவனிக்க வைத்தான். தந்தை காலத்திலேயே ஆட்சியைப் பற்றி இந்த மூன்றாம் குலோத்துங்கன் கற்றுக் கொள்ள முடிந்தது. மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வில் இருந்த மன்னன் ராஜாதிராஜன் தோட்டக்கலையில் ஆர்வமுடையவனாக இருந்தான். தனது அரண்மனையில் அழகிய பூந்தோட்டங்களை அமைத்து அழகு பார்த்தான். 1182இல் அவன் காலமான பிறகு மூன்றாம் குலோத்துங்கன் அரச பதவியைத் தனித்து வகிக்கத் தொடங்கினான்.

மூன்றாம் குலோத்துங்கள். கி.பி.1178-1218


மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1178-1218
இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு கி.பி 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே கி.பி 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது.

குழப்பம்
இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம் பிள்ளைகளை பல்லவராயர் பாதுகாத்துவந்தார். அந்த பச்சிளம் பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமார குலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப் போல இவனும் சோழப் பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். குமார குலோத்துங்கனின் வம்சாவழியை 'குலோத்துங்கன் கோவை' பின்வருமாறு தெரிவிக்கிறது.

சங்கம ராஜா -- நல்லமன் & குமார குலோத்துங்கன் & சங்கரச் சோழன்

'சங்கரச் சோழன் உலா', சங்கரச் சோழனுடைய அண்ணனைக் குமாரம கீதரன் என்ற சற்று மாறுபட்ட பெயரில் சொல்லுகிறது. ஆனால் கோவையோ, உலாவோ மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொல்லாததால், இந்த அரசன் தா இலக்கியங்களில் சொல்லப்பட்ட குமார குலோத்துங்கனா? என்ற ஐயம் ஏற்படுகிறது. சங்கமராஜா சோழவம்சத்திற்கு என்ன உறவு? என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள எந்தவிதமான ஆதாரங்களும் இப்போது கிடைக்கவில்லை.

முதலாம் பாண்டியப் போர்.
ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன்.

எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.

இரண்டாம் பாண்டிய போர்.
போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான்.

ஈழப் போர்.
சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான்.

கொங்கு நாட்டுப் போர்.
ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.

வடநாட்டுப் போர்.
காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.

மூன்றாம் பாண்டியப் போர்.
விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.

குலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.

இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான்.

குலோத்துங்கனின் சிறப்பு பணிகள்
மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன.
  1. திருபுவனம் கோவில்
  2. மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன
  3. திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான். ( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்)
  4. சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம்
  5. நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள்
  6. மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது
  7. பவனந்தியின் நன்னூல்
  8. களிப்பொருபது பலர் எழுதிய இந்நூல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் தொகுக்கப்பட்டது. 

மூன்றாம் இராசராச சோழன் கி.பி. 1216-1256


மூன்றாம் இராசராச சோழன். கி.பி. 1216-1256
கி.பி 1216ல்  சூன் 27க்கும் சூலை 10க்கும் இடையே மூன்றாம் இராசராசன் பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். சுந்தர பாண்டியன், சோழ நாட்டைப் படையெடுத்தது, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஆட்சி.
மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் கொய்சாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று.

சுந்தர பாண்டியனின் படை எழுச்சி
மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராச ராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன்.

மூன்றாம் ராச ராசச் சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராச ராசச் சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச் சமயத்தில் படை எடுத்து வந்து சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராச ராசச் சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராசச் சோழன்.

கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை
சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராச ராசச் சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.

கோப்பெருஞ்சிங்கன்
போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப் பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான்.

ராச ராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக் கரை வரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர்.

வீர நரசிம்மன்.
பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களைப் பழையாறை நகரம் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள் மீது போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் திரும்பக் கூடும் என்று சிந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான்.

மூன்றாம் ராசேந்திர சோழன்.
தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராச ராசச் சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக் காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான் 

மூன்றாம் ராசேந்திரச் சோழன். கி.பி. 1246 - 1279



மூன்றாம் இராசேந்திர சோழன். கி.பி. 1246-1279
மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக, கி.பி 1246ல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவன் மூன்றாம் இராஜராஜ சோழனை விடவும் திறமைசாலி. இராஜராஜனின் திறமையின்மையாலும் வடிகட்டிய முட்டாள்த்தனத்தாலும் சோழப்பேரரசு இழந்துவிட்ட பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது அவனது பட்டத்து உரிமை ஏற்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு இராஜராஜன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது.

மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இவன் திருக்கொள்ளம் பூதூர் ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை, ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோவிலுக்கு பணிவிடை செய்ததான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  திருவெண்ணை நல்லூருக்கு பெருந்தொண்டு செய்ததாக கூறப்படுகிறது.இவன் இறக்கும் வரையில் ஓர்சிவபக்தனாகவே காணப்பட்டான்.

மூன்றாம் இராஜேந்திரனின் வெற்றி
இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி.பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி.பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம்.

சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.

இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம்.

எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்
"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.

முதலாம் பாண்டிய போர்
தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.

போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்
வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.

தெலுங்கு சோழர்களுடன் நட்பு
மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.

போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை
குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்
பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

 பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

50 comments:

  1. கள்ளர்

    கள்ளர் பண்டைய தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிரர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். கிபி 250 முதல் கிபி 570 வரை, பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட களப்பிரர்களால் பண்டைய தமிழகம் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள களப்பிர நாடு ஸ்ரீகள்வர் நாடு என்று அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் அவர்களை "வம்ப கருநாடர்" அல்லது திமிர்பிடித்த கர்நாடக மக்கள் என்று வர்ணித்தன. களப்பிரர் என்ற கள்வர், சேதி ராஜ்யத்தின் நாகர்களான வட இந்திய கல்வார் மக்களிடமிருந்து வந்தவராக இருக்கலாம். கல்வார், காலர் மற்றும் கலியபாலா போன்ற கல்வார் சாதி குடும்பப்பெயர்கள் களப்பிரர்களின் கள்வர், கள்ளர் மற்றும் கலியர் பட்டங்களை ஒத்திருக்கிறது.

    காரவேளா

    கலிங்க மன்னர் காரவேளாவின் கீழ் சேதி ராஜ்யத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்த கல்வார் அங்கு மற்றொரு சேதி ராஜ்யத்தை நிறுவினர். ஹத்திகும்பா கல்வெட்டுகளின்படி கிமு 172 இல் சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளின் கூட்டுப் படைகளை காரவேளா தோற்கடித்தார். காரவேளா வேளாளர் என்ற தனது அடியாட்களுடன் வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டை கார்நாடு என்று அழைத்தார். வேளாளர்கள் காராளர், கார்காத்த வேளாளர் அல்லது கலிங்க வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்கள் ஆரம்பகால களப்பிரர்கள், கள்ளர்கள் பிற்கால களப்பிரர்கள் ஆவர்.

    தஞ்சாவூர் கள்ளர்

    கி.பி 570 இல் களப்பிரர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் தஞ்சாவூரில் குடியேறினர். கிபி 600 முதல் கிபி 800 வரை களப்பிரர் மற்றும் முத்தரையர் தஞ்சாவூரை ஆண்டனர். சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து, அவர்களைத் தங்கள் படையில் வீரர்களாக்கினர். களப்பிரர்கள் இந்துக்களை துன்புறுத்திய புத்த நாகர்கள் என்று நம்பப்படுகிறது. பிராகிருதம் அவர்களின் மொழியாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் தொன்மையான கன்னடத்தையும் பேசியிருக்கலாம்.

    சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட தமிழ் வில்லவர் குலங்களின் பழங்கால பகைவர்கள் கள்வர்கள்.

    __________________________________________

    ReplyDelete
  2. 1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாணர் ஆட்சியாளர்களின் பட்டப்பெயர் ஆகும் . இந்தியா முழுவதும் பாண ராஜ்ஜியங்கள் இருந்தன. இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் என்று அழைக்கப்படும் பல இடங்கள் பாணர்களின் தலைநகரங்களாக மற்றும் பாணஅரசர்கள் பாணாசுரன் என்றும் அழைக்கப்பட்டனர். பாண மற்றும் வில்லவர் மன்னர்கள் இடைக்காலம் வரை இந்தியா முழுவதையும் ஆண்டனர்.

    கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகா மற்றும் ஆந்திராவும் பாணர்கள் மற்றும் பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.

    வில்லவர் துணைக்குழுக்கள்

    1. வில்லவர்

    2. மலையர்

    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்.

    4. மீனவர்

    பழங்காலத்தில் இந்த அனைத்து துணைக்குழுக்களிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். உப குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா.

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் வில் அம்புக் கொடியை ஏந்தியிருந்தார். வேழநாடு-வேணாடு வில்லவர்களின் அடையாளமாக யானை சின்னம் இருந்தது.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை முத்திரையுடன் கூடிய கொடியை ஏந்தினார்.

    3. வானவர் உபகுலத்தைச் சேர்ந்த பாண்டியன் வில்-அம்பு அல்லது புலி அல்லது மரக் கொடியை ஏந்தினார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் இரட்டை மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தி தன்னை மீனவன் என்று அழைத்தார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் என்ற நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நாகர்கள் தெற்கில் மீனவர்களாக மாறினர். அவர்கள் திராவிட வில்லவர்-மீனவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், சான்றார், சாணார், சானார், சார்ன்னவர், சார்ந்தவர், சான்றகர், சாந்தகன், சாந்தார், பணிக்கர், திருப்பாப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கானா, மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல க்ஷத்திரியர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமக்காரர் போன்றவை.

    பண்டைய பாண்டிய வம்சம் மூன்று பேரரசுகளாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்

    2. சோழ வம்சம்

    3. பாண்டிய வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேர மன்னர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் வில்லவர் வீரர்கள் ஆதரவு அளித்தனர்.

    முக்கியத்துவத்தின் வரிசை

    1. சேர பேரரசு

    வில்லவர் மலையர் வானவர் இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    ReplyDelete
  3. 2. வில்லவர் மற்றும் பாணர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர்கள் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள்.

    ஒரு வருடம் பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விராட மன்னன் ஒரு மத்ஸ்ய - மீனா அரசனாவான்.

    அசுர அந்தஸ்து இருந்தபோதிலும், பாண இளவரசர்கள் ஆரிய-நாக இளவரசிகளின் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    ஏனென்றால், இந்தியா முழுவதும் வில்லவர்-பாண மன்னர்கள் இருந்தனர், ஆரிய-நாக மன்னர்கள் உத்தரப்பிரதேசத்தை மட்டுமே ஆண்டனர்.

    அஸ்ஸாம் பாண இராச்சியம்

    சோனிட்பூரை தலைநகராக கொண்ட அசுர சாம்ராஜ்யம் என்று அழைக்கப்படும் பாண ராஜ்யம் பண்டைய காலத்தில் அஸ்ஸாமை ஆண்டது. இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் ராஜ்ஜியங்கள் இடைக்காலத்தின் இறுதி வரை இருந்தன.

    மகாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னன் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டம் பெற்ற எண்ணற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். வில்லவர்கள் தங்கள் முன்னோர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம்

    ஓணம் பண்டிகை கடந்த 3800 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மன்னன் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதைக் கொண்டாடுகிறது. கருணையுள்ள அசுர திராவிட மன்னன் மகாபலி சிந்து சமவெளி மற்றும் இந்தியா முழுவதும் ஆட்சி செய்தான் ஆனால் ஆரிய அரசன் இந்திரனின் சகோதரன் உபேந்திரனால் கொல்லப்பட்டான். மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரண்டு இடங்களும் மகாபலியின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

    மாவேலி

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிரிகளான பாணர்களும் மாவேலி வாணாதிராயர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    தானவர் தைத்யர்

    பண்டைய தானவர்கள் மற்றும் தைத்தியர்கள் சிந்து சமவெளியின் பாண துணைக்குழுவாக இருக்கலாம். தைத்திய மன்னன் மகாபலி என்று அழைக்கப்பட்டான். இந்தியாவில் முதல் அணைகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண மன்னர்களால் கட்டப்பட்டதன.

    ஹிரண்யகர்ப விழா

    வில்லவர் மன்னர்கள் மற்றும் பாண மன்னர்கள் இருவரும் ஹிரண்யகர்ப்ப விழாவை நடத்தினர். ஹிரண்யகர்ப்ப விழாவில், பாண்டிய மன்னன் ஒரு தங்கக் கருவறையில் கிடந்தான், இது ஹிரண்ய மன்னனின் பொன் வயிற்றில் இருந்து அவன் வெளிப்பட்டதை உருவகப்படுத்தியது. ஹிரண்யன் மகாபலியின் மூதாதையர்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    பழங்கால தமிழ் இலக்கியமான கலித்தொகை வில்லவர் மீனவரின் கூட்டுப் படைகள் நாகர்களுக்கு எதிராக நடத்திய பெரும் போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை நாகர்கள் ஆக்கிரமித்தனர்.

    நாகர் தெற்கு நோக்கி இடம்பெயர்தல்

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முக்குவர், சிங்களவர்)
    3. குருகுலத்தோர் (கரையர்)
    4. பர்வத ராஜகுலம் (அகமுடையார், செம்படவர், பரதவர்) 5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகளாவர். நாகர்கள் டெல்லி சுல்தானகம், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் இணைந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    ReplyDelete
  4. 3. வில்லவர் மற்றும் பாணர்

    வில்லவருக்கு எதிரான கர்நாடக பாண குலங்களின் பகை

    பொதுவான பூர்வீகம் இருந்தபோதிலும், கர்நாடகாவின் பாணர்கள் மற்றும் வில்லவர் எதிரிகளாவர். கிபி 1120 இல் துளு இளவரசர் பாணப்பெருமாள் தலைமையில் துளுநாட்டின் ஆலுபா பாண்டிய இராச்சியத்திலிருந்து பாண படையெடுப்பாளர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து நேபாள நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார்.

    பலிஜா நாயக்கர்கள் கி.பி.1377ல் தமிழகத்தை ஆக்கிரமித்தனர். வில்லவர் குலங்களின் சோழ பாண்டிய அரசுகள் விஜயநகரப் பேரரசின் பலிஜா நாயக்கர்களால் (பனாஜிகாஸ் என்ற மகாபலியின் பானா வம்சாவளியினர்) ஆக்கிரமிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. கி.பி.1377ல் விஜயநகர தாக்குதலுக்குப் பிறகு தெலுங்கு வாணாதிராயர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாக குலங்களின் தலைவர்களாக ஆனார்கள். வாணாதிராயர்களின் ஆதிக்கம் வில்லவர் குலங்களை அழித்தொழிக்க வழிவகுத்தது.

    கர்நாடகா பாண்டிய ராஜ்ஜியங்கள்

    கர்நாடகாவில் பல பனப்பாண்டியன் அரசுகள் இருந்தன

    1. ஆலுபா பாண்டிய அரசு
    2. உச்சாங்கி பாண்டிய இராச்சியம்
    3. சான்றாரா பாண்டிய ராஜ்யம்
    4. நூறும்பாடா பாண்டிய அரசு.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.

    ஆந்திரப்பிரதேசம்

    ஆந்திராவின் பாண ராஜ்ஜியங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர சாம்ராஜ்யம்.

    பாணர்களின் கொடிகள்

    ஆரம்பகால
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்கால
    1. காளை சின்னம்
    2. குரங்கு கொடி (வானர த்வஜா)
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு சின்னம்
    6. சிங்க சின்னம்

    திருவிதாங்கூர் மன்னர்கள் கர்நாடகாவின் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த பாணர்கள் என்பதால் அவர்களின் கொடியில் சங்கு சின்னம் இருந்தது. சேதுபதிகள் கலிங்கத்தைச் சேர்ந்த வாணாதிராயர்களாக இருந்ததால் அனுமக்கொடி அல்லது அனுமன் கொடி (வானர த்வஜா) வைத்திருந்தனர்.

    பாணா மற்றும் மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டார்கள். மீனவர்கள் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    வட இந்திய பாண குலங்கள்.

    வட இந்திய பாணர்கள் பாணா, பாணியா, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்களை கொண்டிருந்தனர். வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைந்திருந்தனர். சில பாணர்கள் ராஜபுத்திரர் மற்றும் ஆரிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    திர்கார், திர்கலா, திர்பண்டா, அக்னி, வன்னி ஆகியவை ஆரியர்களுக்கு வில் மற்றும் அம்புகளை உருவாக்குபவர்களாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் வட இந்திய பாணர்களின் சில பட்டங்கள்.

    ReplyDelete
  5. 4. வில்லவர் மற்றும் பாணர்

    பல்லவ பாணர்.

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளம்) ஆந்திராவிற்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். பல்லவ மன்னர்கள் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வம்சாவளியினர் ஆனால் பாரசீக பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்தனர். பல்லவ மன்னர்களுடன், காடு வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் படை, பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.

    பாஞ்சால நாட்டைச் சேர்ந்த இந்த பிராகிருத மொழி பேசும் பாண குலத்தினர் அக்னி, வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்களை பெற்றிருந்தனர். கிபி 275 இல் பல்லவர் தமிழகத்தை ஆக்கிரமித்தார். பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை முத்திரை இருந்தது. பல்லவர்களின் தலைநகரான மகாபலிபுரம், பாண வம்சத்தின் மூதாதையரான மன்னன் மகாபலியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

    மீனா

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கினர். மீனா குலங்கள் ராஜஸ்தானை கி.பி 1030 வரை நவீன ஜெய்ப்பூரின் ஆமரில் இருந்து ஆட்சி செய்தனர். ஆலன் சிங் மீனா சாந்தா கடைசி பெரிய மீனா அரசர். சாந்தா, நாடார்வால், நாடாலா, பில்-மீனா போன்ற மீனா பட்டங்கள் சான்றார், நாடாழ்வார், வில்லவர்-மீனவர் போன்ற வில்லவர் பட்டங்களை ஒத்திருந்தன.

    சத்தீஸ்கரின் பாண வம்சம்

    நந்திவர்ம பல்லவரின் படையெடுப்பிற்குப் பிறகு பாலியைத் தலைநகராகக் கொண்டு கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவிலிருந்த தெற்கு கோசல இராச்சியத்தில் பல்லவர்களால் ஒரு பாண வம்சம் நிறுவப்பட்டது. விக்ரமாதித்யன் முதலாம் ஜெயமேரு கடைசி அரசன்.

    திக்கம்கர் பாண்டிய வம்சம்

    பாண்டிய பட்டம் பெற்ற பாண குலத்தினர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குண்டேஷ்வரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

    பலிஜா வர்த்தகர்-வீரர்கள்இடைக்காலத்தில் பாணர்கள் வெற்றிகரமான வணிக சமூகமாக தங்களை மாற்றிக் கொண்டார். பாண பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராமம் போன்ற பல்வேறு வர்த்தக சங்கங்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-வீரர்கள் கிஷ்கிந்தா மற்றும் ஐஹோளேயில் தலைநகரங்களைக் கொண்டிருந்த பலிஜா நாயக்கர்கள் ஆவார்கள்.

    பலிஜா வர்த்தகக் குழுக்கள் ஐரோப்பாவின் ஜெர்மன் ஹான்சியாடிக் லீக் வர்த்தகக் குழுவை ஒத்திருந்தன. பலிஜாக்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பாண இராச்சியத்தை (வடுக நாடு) சேர்ந்தவர்கள், அவர்களின் பண்டைய தலைநகர் ஆனேகுண்டி அல்லது கிஷ்கிந்தா ஆகும். வானரர் என்பது வானரக் கொடியை ஏந்திய கிஷ்கிந்தாவின் பலிஜா மன்னர்களின் பட்டப்பெயர். விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிமீ தொலைவில் உள்ள ஹம்பியில் இருந்தது.

    பலிஜா நாயக்கர்கள் தெலுங்கு வாணாதிராயர் உதவியுடன் வில்லவர்கள் ஆண்ட சோழ மற்றும் பாண்டிய ராஜ்யங்களை அழித்தார்கள்.

    முடிவுரை

    எனவே பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கவில்லை. மகாபாரதத்தில் கூறப்படும் பாண்டியர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவர்களை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். சில பாணர்கள் பாண்டியா பட்டத்தைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தைப் பயன்படுத்தவில்லை. பாணர்களின் கலவையுடன் பல்வேறு ராஜ்ஜியங்கள் தோன்றின. சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்பிற்குப் பிறகு வட இந்திய பாண ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________


    வில்லவர், மலையர் மற்றும் வானவர் குலங்களின் வில்-அம்பு, மலை மற்றும் மரம் அடையாளங்களுடன் கூடிய சங்க கால நாணயம்.

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    ReplyDelete
  6. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். நாடாழ்வார் குலங்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் உபகுலங்களில் வில்லவர், மலையர், வானவர் குலங்கள் மற்றும் அவர்களது கடல்வழி உறவினர்களான மீனவர்கள் அடங்குவர். அனைத்து வில்லவர் உபகுலங்களின் இணைப்பு நாடாழ்வார் அல்லது சான்றார் பிரபுத்துவம் உருவாக வழிவகுத்தது.

    சோழர்கள் வில்லவர்களின் வானவர் உபகுலத்தையும், பாண்டியர் வில்லவர்-மீனவர் உபகுலத்தையும், சேரர்கள் வில்லவர் உபகுலத்தையும் சேர்ந்தவர்கள்.

    பண்டைய திராவிட மீனவர் குலங்கள், பிற்காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த பரதவர், முக்குவர் மற்றும் கரையர் போன்ற நாக மீனவ குலங்களிலிருந்து இனரீதியாக வேறுபட்டவர்கள்.

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இருவரும் சிந்து சமவெளியின் அசுர திராவிட மன்னன் மகாபலியை தங்கள் மூதாதையராகக் கருதி ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர்.

    வட இந்திய பாணா, பில் மற்றும் மீனா ராஜ்ஜியங்கள்

    1. மத்தியப் பிரதேசத்தின் திக்கம்கரின் குண்டேஷ்வர் பாண்டியர்கள்
    2. அஸ்ஸாமின் சோனித்பூரின் அசுர ராஜ்யம்
    3. மீனா வம்சம் ஆமெர், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    4. பாணா ராஜ்யம் பாலி, சத்தீஸ்கர்
    5. குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பாணியா-வாணியா வணிகர்கள்
    6. வன்னியர்-வட பலிஜா-திகளர், பாஞ்சால நாடு மற்றும் தமிழகத்தின் பாண குலங்கள்
    7. மத்ஸ்ய (மீனா) இராச்சியம் ஒட்டாடி (கி.பி. 1200 முதல் கி.பி 1470 வரை) ஒடிசா
    8. குஜராத் மற்றும் கொங்கண் கடற்கரையின் கோலி-பில் வம்சங்கள்
    1. குஜராத்தின் பாரியா இராச்சியம் (கி.பி. 1524 முதல் 1948 வரை).
    2. குஜராத்தின் காந்த் கோலி வம்சம்
    3. குஜராத்தின் தாகூர் கோலி குலங்கள்

    4. மேற்கு குஜராத்தின் மக்வானா கோலி சமஸ்தானங்கள்
    1. கடோசன் சமஸ்தானம்
    2. காபட் சமஸ்தானம்
    3. புனாத்ரா சமஸ்தானம்

    5. குஜராத்தின் ஜவ்ஹர் இராச்சியம் (கி.பி. 1343 முதல் 1947 வரை).
    6. மகாராஷ்டிராவின் கொலாபா இராச்சியம் (கி.பி. 1713 முதல் கி.பி. 1840 வரை)

    9. ராஜஸ்தானின் பில்-மீனா குலங்கள்

    கர்நாடகாவின் பாண ராஜ்ஜியங்கள்

    1. கடம்ப ராஜ்யம் கிளைகள்
    1. சான்றாரா பாண்டிய வம்சம் (கி.பி. 682 முதல் கி.பி. 1763)
    2. நூறும்பாடா பாண்டியன் வம்சம் (கி.பி. 900 முதல் கி.பி. 1238 வரை)

    2. கோகர்ணா பாண்டிய ராஜ்யம்
    3. பலிஜா ஐந்நூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளே
    4. உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்
    5. துளுநாடு ஆலுபா பாண்டிய ராஜ்யம்

    கேரளாவின் துளு-நேபாளி ஆலுபா வம்சத்தின் கிளைகள், இதில் மன்னர்கள் துளு ஆலுபா-கோலத்திரி வம்ச இளவரசிகளை தாய்களாகவும், நம்பூதிரி பிராமணர்களை (அஹிச்சத்திரம்-நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்) தந்தைகளாகவும் கொண்டிருந்தனர்.

    1. கண்ணூர் கோலத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1785)
    2. கோழிக்கோடு சாமுத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1806)
    3. கொச்சி வம்சம் (கி.பி. 1335 முதல் கி.பி. 1947 வரை)
    4. வேணாடு ஆற்றிங்கல் ராணி வம்சம் (கி.பி 1333 முதல் கிபி 1704 வரை)
    5. திருவிதாங்கூர் வம்சம் (கி.பி. 1704 முதல் கி.பி. 1947 வரை)
    6. பலிஜா நாயக்கர் பேரரசு ஆனேகுண்டி-கிஷ்கிந்தா-விஜயநகரம்
    கிளைகள்
    1. மதுரை நாயக்கர்கள் (கிபி 1529 முதல் கிபி 1736 வரை)
    2. தஞ்சாவூர் நாயக்கர்கள்(கி.பி. 1532 முதல் கி.பி. 1673 வரை)
    7. பலிஜா நாயக்கர்களின் கேலடி நாயக்க ராஜ்யம்

    ReplyDelete
  7. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    ஆந்திரப் பிரதேசத்தின் பாண இராச்சியங்கள்

    1. கோலார் மற்றும் குடிமல்லம் பாணா இராச்சியம்
    2 . மசூலிப்பட்டினத்தின் ப்ருஹத் பாலா அல்லது பிருஹத்-பாணா வம்சம்

    தமிழ்நாட்டின் பாணர்கள்

    1. திருவல்லம் பெரும்பாணப்பாடி பாணர்கள்
    2. மகதை நாடு, அறகளூர் பாணர்கள்
    3. மகாபலி வாணாதிராயர் குலங்கள்

    தமிழ்நாட்டின் வில்லவர்-நாடாழ்வார் ராஜ்ஜியங்கள்

    1. வானவர்-நாடாழ்வார் ஆண்ட சோழ வம்சம்
    2. வில்லவர்-மீனவர்- நாடாழ்வார் என்ற பாண்டியன் வம்சம்
    3. கி.பி 520 வரை ஆண்ட கருவூரில் வில்லவர்களின் சேர வம்சம்
    4. தென்காசி பாண்டிய வம்சம் (கி.பி. 1422 முதல் 1618 வரை)

    கேரளாவின் வில்லவர்-நாடாழ்வார் வம்சங்கள்

    1. கொடுங்களூரில் மாகோதை நாடாழ்வார் ஆட்சி செய்த வில்லவர்களின் சேர வம்சம் (கி.பி. 520 முதல் கி.பி. 1102 வரை)

    2. வில்லவர்களால் ஆளப்பட்ட கொல்லத்தின் சேர-ஆய் வம்சம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333 வரை)

    3. வில்லவர்களால் ஆளப்பட்ட சேந்தமங்கலத்தின் வில்லார்வெட்டம் ராஜ்யம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1450 வரை)

    4. கோட்டையடி, திருவிதாங்கோடு மற்றும் சேரன்மாதேவியில் சேர குறுநாடுகள், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியன் குறுநாடுகள், களக்காடு சோழ குறுநாடு (கி.பி. 1333 முதல் கி.பி. 1610 வரை)

    5. பந்தளம் பாண்டிய இராச்சியம் (கி.பி. 1623 முதல் 1729 வரை) (பந்தளம் பாண்டியன் வம்சம் பாண்டியர்களாக வேடமிட்ட பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்களின் போலி பாண்டிய வம்சத்தால் மாற்றப்பட்டது.).

    6. பூஞ்சார் பாண்டியன் ராஜ்யம் (பூஞ்சார் பாண்டியன் வம்சம், சார்க்கரா கோவிலகத்தைச் சேர்ந்த துளுவப் பிராமணர்களின் போலி பாண்டியன் வம்சத்தால் மாற்றப்பட்டது, அவர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர்)

    முடிவுரை:

    இந்திய துணைக் கண்டம் முழுவதும் திராவிட பாண-பில்-மீனா அரசுகள் மற்றும் வில்லவர்-மீனவர் அரசுகள் ஆட்சி செய்தன. சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்-நாடாழ்வார் அரசுகள் அசுர திராவிட பாண அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

    வில்லவ நாடார் குலங்களின் எதிரிகளாகவும் பாணர்கள் இருந்தனர். துளு பாண ஆலுபா வம்சத்தினர் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்து கி.பி 1120 இல் வடக்கு கேரளாவை ஆக்கிரமித்தனர். கி.பி 1311 இல் துருக்கிய படையெடுப்பிற்குப் பிறகு பாண்டிய வம்சத்தின் வில்லவர்கள் பலவீனமான நிலையில் இருந்தபோது கி.பி 1377 இல் ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண பலிஜா விஜயநகர நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.

    துளு பாண ஆலுபா வம்சம் மற்றும் தெலுங்கு பாண பலிஜா நாயக்கர் வம்சம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு முடிவு கட்டியது.

    ReplyDelete
  8. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், அண்ணாவி, திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், சேதி ராயர், சேர்வைக்காரர், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், குலசேகர தேவர், வில்லவர், வில்லார். வில்லவராயர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழன், சோழ தேவர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டியன் = பாண்டியா
    பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    ReplyDelete
  9. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்


    ________________________________

    ReplyDelete
  10. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.


    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.


    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.


    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.


    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.


    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.


    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.


    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.


    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.


    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.


    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    ReplyDelete

  11. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    ReplyDelete
  12. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    ReplyDelete
  13. சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-ஆனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    ReplyDelete
  14. திக்கம்கர் பாண்டியர்கள்

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாண்டியர்கள்

    பாணர்கள் வில்லவர் குலத்தின் வடக்கு உறவினர்களாவர். பாண்டியப் பட்டத்தைப் பயன்படுத்திய வில்லவர்-நாடாழ்வார் குலங்களைப் போலவே பாண குலத்தாரும் பாண்டியப் பட்டத்தைப் பயன்படுத்தினர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திக்கம்கர் மாவட்டத்தில் உள்ள பாண்பூரை ஆண்ட பண்டைய பாண வம்ச மன்னர்களிடமிருந்து வந்தவர்கள்.

    பாண்பூர் தலைநகரங்களின் பாண மன்னர்கள்ஏராளமான பாண மன்னர்கள் வட இந்தியாவை பாண்பூர் என்று பெயரிடப்பட்ட அவர்களின் தலைநகரங்களில் இருந்து ஆட்சி செய்தனர். ஒவ்வொரு வட இந்திய மாநிலத்திலும் பாண்பூர் என்று பேருள்ள இரண்டு அல்லது மூன்று இடங்கள் உள்ளன. இந்த பாண ஆட்சியாளர்களில் பலர் பாண்டிய பட்டங்களைப் பயன்படுத்தினர். பாணர்கள் மற்றும் வில்லவர்கள் திராவிட க்ஷத்திரியர்கள் ஆவர் மற்றும் அவர்கள் இந்தியாவின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள்

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள் வில்லவர்-மீனவர் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட நாடாழ்வார் குலங்களின் வட உறவினர்கள் ஆவர். இந்த குலங்கள் அனைத்தும் அசுர திராவிட குலங்களாகும்.

    பாண்பூரின் அரசன் பாணாசுரன்

    கிமு ஆறாம் நூற்றாண்டில் இதிகாசங்களின் சகாப்தத்தில் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட அசுரர்களின் அதாவது திராவிடர்களின் அரசரான பாணாசுரனின் தலைநகராக பாண்பூர் இருந்தது.

    மகாபாரதத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் சிவபெருமானின் சிறந்த பக்தன் ஆயிருந்தார். பாணாசுரனின் மகளான உஷா தேவியும் மகாதேவனின் சிவலிங்கத்தின் மீது பக்தி கொண்டவள். உஷா தேவி கிருஷ்ணரின் பேரனும் பிரத்யும்னனின் மகனுமான அனிருத்தாவை மணந்தார்.

    பாண வம்சாவளியினர் தங்கள் தலைநகரான பாண்பூரிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்தனர் மற்றும் அருகிலுள்ள குண்டேஷ்வரில் வசித்து வந்தனர்.

    அசுர-திராவிட பாண வம்சம்

    ஆரிய வரலாற்றாசிரியர்கள் பாணர்கள் போன்ற திராவிட ஆட்சியாளர்களை பாணாசுரன் என்று அழைத்தனர். பாண குலங்கள் வட இந்தியாவில் சூரிய வம்சம் மற்றும் தீ வம்சம் ஆகியவற்றை நிறுவினர். பாண வம்சத்தினர் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டனர், அதே சமயம் ஆரிய மற்றும் நாக-யாதவ அரசுகள் வடமேற்கு இந்தியாவில் மட்டுமே ஆட்சி செய்தன.

    வடமேற்கு இந்தியாவில் மட்டுமே ஆரிய மற்றும் நாக-யாதவ ராஜ்ஜியங்கள் இருந்தபோது, ​​பாண வம்சங்கள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டன.

    வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    தமிழகம் பாண குலத்தவருடன் இன ரீதியாக தொடர்புடைய வில்லவர்-மீனவர் வம்சங்களால் ஆளப்பட்டது. ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை வில்லவர் மீனவர் குலங்கள் ஆண்டதாக கலித்தொகை கூறுகிறது. நாகர்களுக்கு எதிராக வில்லவர் மற்றும் மீனவர்கள் நடத்திய பண்டைய போரில் போரில் தோற்று நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆட்சியாளர்களானார்கள் என்று கலித்தொகை கூறுகிறது.

    திராவிட பாணா மற்றும் மீனா குலங்கள் வடமேற்கு இந்தியாவில் உள்ள இந்தோ-ஆரிய பிரதேசங்களை கூட ஆட்சி செய்தன.

    மின்ஹாஸ்

    மின்ஹாஸ் ஒரு சூர்யவன்ஷி ராஜ்புத்திர குலமாகும், இது ராஜஸ்தானின் மீனா சமூகத்திலிருந்து வேர்களைக் கொண்டுள்ளது. மீனா குலங்கள் மற்றும் பில்-மீனா குலங்கள் தமிழ்நாட்டின் வில்லவர்-மீனவர் குலங்களின் வடக்கு சகாக்கள் ஆவர். எனவே மீனா குலங்கள் வில்லவர்-நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியர்கள்

    கர்நாடகாவில் ஆலுபா பாண்டியன் வம்சம், கோகர்ண பாண்டியன் வம்சம், சான்றாரா பாண்டியன் வம்சம், நூறும்பாடா பாண்டியன் வம்சம், உச்சாங்கி பாண்டியன் வம்சம் போன்ற பல்வேறு பாணப்பாண்டியன் அரசுகள் சந்திர வம்சங்களாக கருதப்பட்டன. மதுரையின் வில்லவர்-மீனவர் வம்சம் அதாவது நாடாழ்வார்களால் ஆளப்பட்ட பாண்டிய வம்சமும் சந்திர வம்சமாக கருதப்பட்டது.

    குந்தபுராவின் குந்தேஷ்வரா

    குண்டேஸ்வரரின் பாணப்பாண்டியர்களைப் போலவே துளுநாட்டின் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த பாணப்பாண்டியர்களும் சிவபெருமானை குந்தேஷ்வரராக வழிபட்டனர். உடுப்பி அருகே கர்நாடகாவில் உள்ள குந்தபுரா ஆலுபா பாண்டிய வம்சத்தின் பண்டைய தலைநகராக இருந்தது. ஆலுபா வம்ச மன்னன் குந்தவர்மாவால் கட்டப்பட்ட ஸ்ரீ குந்தேஸ்வர சுவாமி சிவன் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள குந்தபுராவில் அமைந்துள்ளது.

    ReplyDelete
  15. திக்கம்கர் பாண்டியர்கள்

    குண்டேஷ்வர்

    குண்டேஷ்வர் என்பது மத்தியப் பிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். குண்டதேவ் மகாதேவ் கோயில் குண்டேஷ்வரில் இருந்தது. பாணப்பாண்டியர்கள் சிவபெருமானை குண்டேஸ்வரர் அல்லது குந்தேஸ்வரர் என்று அழைத்தனர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள்

    குண்டேஷ்வரின் பாண்டியர்கள் பாண்பூரின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். குண்டேஷ்வர பாண்டியர்கள் பாக்வார் சூர்யவன்ஷி க்ஷத்திரியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    பாக்வார் சூர்யவன்ஷி, ஒரு வீர க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த அவர்கள் பாக்வா அதாவது புலிச் சவாரி செய்பவர்கள் என்று அழைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் கி.பி. 1144 வரை பாண்பூரிலிருந்து ஜாம்தார் ஆற்றின் அடர்ந்த காடு வரையிலான எல்லைகளைக் கொண்ட பாக்ரோஹா எனப்படும் மத்திய தேசத்தை ஆட்சி செய்தனர். குண்டேஷ்வரில் உள்ள நந்தி மகாதேவ் சிலைக்கு கீழே காணப்படும் ஒரு பொறிக்கப்பட்ட அடிக்குறிப்பு குண்டேஷ்வர் பாண்டியர்களின் தோற்றத்தை விவரிக்கிறது.

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாணப்பாண்டியர்கள்

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாண்டியர்கள் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியை பழங்காலத்திலிருந்தே ஆண்டனர்.

    பாண்பூரின் பாண்டியர்கள் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட அசுர-திராவிட மன்னன் பாணாசுரனின் வம்சாவளியினர் ஆவர். ஆனால் கி.பி.1144 க்குப் பிறகான காலங்களில் கஹர்வார் ராஜபுத்திரர்கள் புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்தனர். குண்டேஸ்வரின் பாண்டியர்கள் ராஜபுத்திரர்களின் கீழ் ஒரு சிறு குலத்தின் நிலைக்குத் தள்ளப்பட்டனர் மற்றும் பாணப்பாண்டியர்கள் என்ற அடையாளத்தை இழந்தனர்.

    குண்டேஷ்வரின் ராஜ்புத்திர ஆட்சி

    கஹர்வார் ராஜ்புத்திர அரசர் ராஜா கோவிந்த சந்திரா (கி.பி. 1114 முதல் கி.பி. 1154 வரை) தனது தலைநகரை கன்னோஜிலிருந்து வாரணாசிக்கு மாற்றினார், மேலும் அவர் கி.பி 1114 இல் திக்கம்கரின் குண்டேஷ்வர் இராச்சியத்தை தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்தார்.

    பாக்வார் க்ஷத்ரியர்கள் என்றழைக்கப்படும் குந்தேஷ்வரின் பாண்டியர்கள் ஒரு ராஜபுத்திர குலமாக ஒருங்கிணைக்கப்பட்டனர், இதனால் குண்டேஷ்வர் இராச்சியத்தின் பாண்டியர்கள் தங்கள் நாட்டையும் பண்டைய பாண க்ஷத்திரிய குலத்தின் அந்தஸ்தையும் இழந்தனர்.

    ஓர்ச்சா இராச்சியம்

    1531 இல் திக்கம்கர் பகுதி உட்பட ஓர்ச்சா ராஜ்ஜியம் புந்தேலா ராஜபுத்திரர்களால் புந்தேல்கண்ட் பகுதியில் நிறுவப்பட்டது. பேத்வா ஆற்றின் கரையில் உள்ள ஓர்ச்சா புதிய தலைநகராக மாறியது. புந்தேலா ராஜபுத்திரர்கள் ஆப்கான் படையெடுப்பாளர் இஸ்லாம் ஷா சூரி (கி.பி. 1545 முதல் கி.பி. 1553) மற்றும் முகலாய பேரரசர் அக்பர் (கி.பி. 1556 முதல் 1605 வரை) ஆகியோருக்கு எதிராகப் போரிட்டனர். கிபி 1570 இல் ஓர்ச்சா நாடு முகலாயப் பேரரசின் கீழ் ஒரு அடிமை மாநிலமாக மாறியது.

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரின் ஆட்சியின் போது வீர் சிங் தேவின் கீழ் புந்தேலா ராஜ்புத்திரர்கள் கிபி 1605 க்கும் கிபி 1627 க்கும் இடையில் ஓர்ச்சா ராஜ்ஜியத்தை ஆண்டனர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள் புந்தேலா ராஜ்புத்திரர்களின் கீழ்

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அடிமையாக, புந்தேலா ராஜ்புத்திர மன்னர் வீர் சிங் தேவ் ஓர்ச்சா ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.

    புந்தேலா மன்னன் வீர் சிங் தேவின் கீழ், குண்டேஷ்வர் மகாதேவின் பாண்டா அல்லது பாண்டியா என்ற பட்டம் பாண்பூரின் பண்டைய பாண வம்சத்திலிருந்து வந்த ராஜபுத்திரர்களின் பாக்வார் குலத்திற்கு வழங்கப்பட்டது. பாக்வார் ராஜபுத்திரர்களின் பாண்டிய பட்டத்தை குறிப்பிடும் "ராஜக்யா" என்ற செப்பு தகடு மன்னர் வீர் சிங் தேவால் வெளியிடப்பட்டது.

    ஓர்ச்சா இராச்சியத்தின் மற்ற பாண குலங்கள்

    புந்தேலா ராஜபுத்திரர்களால் ஆளப்பட்ட ஓர்ச்சா ராஜ்யத்தின் பாண குலங்கள் ராஜபுத்திரர்களின் குலங்களாக மாறின. பாணாட் மற்றும் பாண்டாவத் ராஜ்புத்திர குலங்கள் பாண குலங்களிலிருந்து வேர்களைக் கொண்டிருந்தன. பாணாட் மற்றும் பாண்டாவத் குலங்கள் பீகார் மற்றும் ஜார்கண்டில் காணப்படுகின்றன. பாணாட் மற்றும் பாண்டாவத் குலங்கள் புந்தேல்கண்டில் உள்ள ஓர்ச்சாவிலிருந்தும் மற்றும் ஜான்சியிலிருந்தும் தோன்றியதாகக் கூறுகின்றனர்.

    புந்தேலா ராஜபுத்திரர்கள்

    1551 கிபி முதல் 1950 கிபி வரை புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த புந்தேலா ராஜபுத்திர இராச்சியத்தின் கீழ் பாக்வார் க்ஷத்திரியர் அல்லது குந்தேஷ்வர பாண்டியர்கள் ஒரு ராஜபுத்திர குலமாக இருந்தனர்.

    ReplyDelete
  16. குமரிக்கண்டம்

    பாண்டிய இராச்சியத்தின் புனரமைப்பு (கிமு 5500)
    ________________________________________

    இரண்டாவது தமிழ் சங்கம்
    இடைச்சங்கம் (கிமு 5550 முதல் கிமு 1850 வரை)

    பாண்டிய மாநாடு அதன் புதிய தலைநகரான கபாடபுரத்தில், பாண்டிய மன்னர் வெண் தேர் செழியனால் மீண்டும் நிறுவப்பட்டது. இடைச்சங்கம் என்று அழைக்கப்படும் தமிழ் சங்கத்தின் இரண்டாவது அமர்வு கபாடபுரத்தில் கூட்டப்பட்டது.

    செம்புக்காலம்(கிமு 4500)

    இரண்டாவது தமிழ் சங்கம் மீன் கூடல் காலம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய பஃறுளி ஆற்றின் வடக்கே சுமார் 700 காதம் (1120 கி.மீ) மற்றும் குமரி நதி கழிமுகத்திற்கு தெற்கே குவாடம் அமைந்திருந்தது.

    பாண்டிய மாநாட்டின் இடைச்சங்க காலம் கிமு 5550 முதல் கிமு 1,850 வரை சுமார் 3700 ஆண்டுகள் நீடித்தது. முதல் மன்னர் வெண் தேர் செழியன், கடைசி பாண்டிய மன்னர் முடத்திருமாறன் ஆவார். அந்த காலகட்டத்தில் 59 பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்ததாக இறையனார் அகப்பொருள் கூறுகிறது.

    இரண்டாவது பிரளயம் (கிமு 1850)

    கிமு 1850 இல் இரண்டாம் தமிழ் சங்கத்தின் முடிவில் பாண்டிய தலைநகரம் கபாடபுரம் மற்றொரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இந்த பிரளயம் குவாடம் மற்றும் குமரிக்காண்டத்தின் மீதமுள்ள பகுதியை என்றென்றுமாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த பிரளயம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு ஒத்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிகிமு 1900 முதல் கிமு 1700 வரைபுள்ள காலகட்டத்திலாகும்.

    பாண்டிய இராச்சியத்தின் இடமாற்றம் (கிமு 1850)
    _________________________________________

    மூன்றாம் தமிழ் சங்கம்(கிமு 1850 முதல் கி.பி 1 வரை)

    கிமு 1850 இல் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய மாநாட்டின் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்றாவது தமிழ் சங்கம் கூட்டப்பட்டது. 49 பாண்டிய மன்னர்களும், 449 பங்கேற்ற கவிஞர்களும் கொண்ட மூன்றாவது தமிழ் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது.

    கொற்கை மற்றும் தென்காசி இரண்டாம் தலைநகரங்களாக இருந்தன. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த, கொற்கை பாண்டியர்களின் பண்டைய தலைநகரம் ஆயிருந்தது. மலைய மலைகளுக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய பாண்டிய தலைநகரம் தென்காசி. இலங்கை மிகவும் பழங்காலத்திலிருந்தே பாண்டியர்களால் ஆளப்பட்டது. ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர் தாம்பபாணி, தாமிரபரணி நதியின்பெயரிலிருந்து வந்தது.


    மூன்றாவது தமிழ் சங்கம் முடத்திருமாறன் மன்னரின் ஆட்சியில் தொடங்கி, உக்கிரப்பெருவழுதி(கிமு 42 முதல் கி.பி 1 வரை) மன்னனின் ஆட்சியுடன் முடிந்தது என்று சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

    இரும்பு யுகம் (கிமு 1300)

    கி.மு 1850 ல் பிரளயத்திற்குப் பிறகு தலைநகரம்கபாடபுரம் நவீன மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. கபாடபுரம் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை வட இந்திய காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது மீண்டும் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.

    ராமாயணத்தில் கபாடபுரம்

    இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையில் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள். ராமாயணம் கபாடபுரத்தை கவாடம் என்று குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  17. குமரிக்கண்டம்
    _________________________________________

    குமரிக்கண்டத்தின் இருப்பிடம்

    பாரம்பரியமாக கன்னியாகுமரிக்கு தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது என்றும் அது ஒரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது என்றும் கருதப்பட்டது. அந்த நிலப்பரப்பு நிச்சயமாக ஸ்ரீலங்காவையும் சேர்த்திருக்கும்.

    ஸ்ரீலங்காவில்
    கொமரி

    கொமரி என்பது இலங்கையின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இடமாகும். இது கொமரி காயலை ஒட்டிய ஒரு மெல்லிய நிலப்பரப்பு ஆகும். கடலுக்குள் கொமரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், கொமரி முகடுகள் என்று அழைக்கப்படும் மூழ்கிய மணல் முகடுகள் உள்ளன. கொமரியா என்று அழைக்கப்படும் ஒரு இடம் இன்னும் உள்நாட்டில் உள்ளது.

    ஸ்ரீலங்காவில்
    மதுரா

    உள்நாட்டில் கொமரிக்கு மேற்கே சுமார் 140 கி.மீ தொலைவில், மதுரா ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் மதுரா என்ற இடம் உள்ளது. மதுரு ஓயா என்ற நதி அங்கிருந்து கொமரிக்கு வடக்கே வடக்கு மத்திய மாகாணத்திற்குள் பாய்கிறது.

    ஸ்ரீலங்காவில்
    மஹாவெலி கங்கா

    மஹாபலியின் பெயரிடப்பட்ட மகாவெலி கங்கை என்ற நதி மதுரு ஓயாவின் வடக்கே பாய்கிறது. மகாபலி தமிழ் வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோரின் முன்னோடியாக கருதப்படுகிறார். வில்லவர்கள்வழிவந்த பண்டைய பாண்டியர்களின் ஆட்சியின் போது இந்த நதிக்கு பெயரிடப்பட்டிருக்கலாம்.

    இந்தோனேசியா

    ஜாவா தீவின் வடக்கில் மதுரா என்ற தீவு உள்ளது. ஜாவா தீவில் சுரபயாவுக்கு அருகில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா தீவுவாசிகள் நீண்ட வாள்களை எடுத்துச் செல்கிறார்கள். வாள்களின் முனை முன்னோக்கி வளைந்திருக்கும். மதுரா தீவுக்கு பாண்டியர்களுடன் தொடர்பு இருக்கலாம்.

    லெமூரியா

    லெமூர் புதைபடிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது அரேபியாவிலோ காணப்படவில்லை.1864 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர், லெமுரியா என்ற மீப்பெருங்கண்டம் கடந்த காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதினார். லெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நிலப்பரப்பு மடகாஸ்கரையும் இந்தியாவையும் இணைத்ததாகவும் நம்பப்பட்டது. கி.பி 1912 இல் கண்டப்பெயர்ச்சி கோட்பாடு தோன்றிய பின்னர் லெமூரியா கோட்பாடு பெரும்பாலும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    குமரி வரம்பு

    1964 ஆம் ஆண்டில் கேப் கொமொரினுக்கு தெற்கே கடற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கடல் கோடு கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமாரிக்கு அருகாமையில் இருப்பதால் இதற்கு கொமொரின் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.

    இலங்கைக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 200 கி.மீ தொலைவில் இந்த கடற்கோடு அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் வடக்கு-தெற்கில் 500 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்கில் 150 கி.மீ அகலமும் கொண்டவை..

    கொமோரின் ரிட்ஜ் NNW இலிருந்து SSE திசையை நோக்கி அட்சரேகைகள் 1.5 ° N மற்றும் 6.5 ° N க்கு இடையில் நீண்டுள்ளது. கடல் தளத்திலிருந்து கடலின் சராசரி ஆழம் 2 முதல் 4.2 கி.மீ ஆகும், கொமரின் ரிட்ஜில் கடலின் குறைந்தபட்ச ஆழம் 1 கி.மீ ஆகும்.

    வடக்கு எல்லையில், கொமொரின் ரிட்ஜ் கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கண்டத் திட்டுடன் இணைகிறது. கொமரின் ரிட்ஜ் குமரிகண்டத்தின் எச்சமாக இருக்கக்கூடும். ஆனால் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் ஒரு நிலத்தை மூழ்கடிக்கும் பேரழிவு என்ன என்பது தெரியவில்லை.

    புவி வெப்பமடைதல் காரணம் துருவ பனிக்கட்டி உருகுவதால், கடல் மட்டம் உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய புவித்தட்டு யூரேசிய புவித்தட்டுடன் மோதியபோது, ​​அதன் தெற்கு விளிம்புகீழ்நோக்கி சாய்ந்து குமரிக்கண்டம் மூழ்கியதா?
    அல்லது ஒரு பண்டைய விண்கல் பொழிவு காரணமாக, நிலம் வெடித்து சிதறியிருக்கலாம்.

    கொமோரோஸ் அல்லது கொமோரி என்று அழைக்கப்படும் ஒரு தீவுகளின் கூட்டம் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ளது.

    முடிவுரை

    குமரிகண்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    என்றாலும்

    இது திராவிட மக்களின் தென்னிந்திய அட்லாண்டிஸ் ஆகும்.

    ReplyDelete
  18. நாகரும் களப்பிரரும்

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாடு கி.மு 323 இல் கிரேக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் மன்னர்கள் நாக பரதவருடன் பல நூறு ஆண்டுகள் போர் புரிந்து அவர்களை அடக்கி வைத்திருந்தனர்.

    கிமு 301 இல் சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி கடலோரப் பகுதிகளில் குடியேறிய பரதவரை தோற்கடித்தார்.

    கியி 210 ல் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் இறுதிப் போரில் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். சிங்களவர்களே நாகர்களாக இருந்ததால், வடக்கு நாக குடியேறியவர்களில் பெரும்பாலானவர்களின் புகலிடமாக இலங்கை இருந்தது. கிமு 301 இல் நடந்த சோழ-பரதவர் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாண்டிய மன்னர்களால் பரதவர்களின் முழுமையாக அடக்க முடிந்தது.

    மறவர், முக்குவர், கரையர், வெள்ளாளர் மற்றும் பரதவர் உட்பட பெரும்பாலான நாக குலத்தினர் இலங்கையிலும் இருந்தனர்.

    ReplyDelete
  19. நாகரும் களப்பிரரும்


    வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

    சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

    வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
    கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
    வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.


    களப்பிரர்

    வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

    வேளிர் வேளாளர்
    காரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
    கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

    புல்லி
    காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
    அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.


    முடிராஜா
    ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

    பல்லவர்

    வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

    முத்தரையர்

    மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
    முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

    ReplyDelete
  20. நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கிபி 575 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் களப்பிரர்கள் அனைத்து சேர மற்றும் சோழ நாடுகளை கி.பி 467 முதல் கிபி 506 வரை 39 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். களப்பிரர் கிபி 467 முதல் கிபி 570 வரை 103 ஆண்டுகள் பாண்டிய நாட்டை ஆண்டார்கள். சோழ நாடு கிபி 467 முதல் கிபி 506 வரையிலும், பின்னர் சிற்றரசர்களாக கிபி 630 முதல் கிபி 660 வரையிலும், கிபி 731 முதல் கிபி 775 வரையிலும் இடையிடையே களப்பிரர்களால் ஆளப்பட்டது. ஆனால் கி.பி 250 முதல் சேர, சோழ நாடுகளுக்குள் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் ஊடுருவியதால் பழங்கால தமிழ் கலாச்சாரம் மற்றும் மதம் பாதித்தது இருண்ட யுகத்திற்கு வழிவகுத்தது.

    களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.


    களப்பிரர் தோல்வி

    கி.பி 570 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 775 வரை சிற்றரசர்களாக ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.


    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


    ___________________________________________

    ReplyDelete
  21. நாகரும் களப்பிரரும்

    கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சிலப்பதிகாரத்தின் படி கொங்கு படையெடுப்பாளர்கள் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர், ஆனால் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    கேரள வெள்ளாளர்
    கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

    சாளுக்கிய சோழ வம்சம்

    1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
    இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

    சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
    இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
    தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.


    கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
    சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

    ReplyDelete
  22. நாகரும் களப்பிரரும்

    அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

    மயூரா வர்மா (கி.பி. 345)

    மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

    துளுநாட்டில் நேபாள நாகர்

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
    பாண்டா+பந்தரு=பண்ட்

    நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.


    மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
    கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

    பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.


    துளுநாடு ஆலுபா வம்சம்
    ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
    மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
    சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
    துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
    அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
    பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

    பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பண்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பண்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

    ReplyDelete
  23. நாகரும் களப்பிரரும்

    துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

    கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவில் குடியேறினார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

    'பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஆனால் பாணப்பெருமாள் படைமலை நாயரை கோரப்புழா ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
    இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
    படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.

    பாணப்பெருமாளின் அரேபிய பயணம்

    பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள், முஸ்தா முதுகாடடு, நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் ஊழியர்களான மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர்.
    அவரது சகோதரியின் மகன் மகாபலி பாணப்பெருமாள் ஆட்சி செய்த தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். பாணப்யெருமாள் மகாபலியை இஸ்லாம் மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    அரேபியர்களின் செல்வாக்கு

    துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார் என்று கேரளோல்பதி கூறுகிறது. பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய புத்த கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவால் (தோவேமி கலாமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பி.) அறிவுறுத்தப்பட்டதாக மற்றொரு பதிவு கூறுகிறது. தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.

    இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மஹல்திவீப்பில் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்.
    பல நாயர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.

    ReplyDelete
  24. நாகரும் களப்பிரரும்

    பாணப்பெருமாளின் அரேபியாவிற்குள்ள பயணம்

    பாணப்பெருமாளும், மருமகன் கோகினூரும் மற்றும் சாலியத்தில் வசித்த படைமலை நாயரின் மருமகன்களான முஸ்தா முதுகாடு, நீலின்ஷாதா, ஷரிபாட் மற்றும் மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோருடன் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். கேரளாவுக்கு திரும்பும் பயணத்தில் அவர் ஏமன் நாட்டில் சஹார் முகல்லாவில் வைத்து இறந்தார்.

    கோலத்திரி

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு குடியேற்றங்களின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்புதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரிகள் மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாடு அல்லது நம்பியாதிரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

    நம்பூதிரிகளின் சம்பந்தம் உரிமைகள்

    துளு மன்னர்கள் நம்புதிரிகளுக்கு மட்டும் கீழ்படிந்த நாயர் இராணுவத்தை நம்பியதால், நம்பூதிரிகள் ஆட்சி செய்யும் அரசனின் சகோதரிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கும் வழக்கம் தொடங்கியது. மன்னரின் சகோதரிகளுக்கு பிறந்த மகன்கள் மட்டுமே அடுத்த அரசராக ஆவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலபாரின் பிரிவு
    பாணப்பெருமாள் தனது கட்டுப்பாட்டில் இருந்த மலபார் ராஜ்யத்தை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்) பிரித்து தனது மகன் மற்றும் மருமகன்களுக்கு கொடுத்தார்.


    1. கண்ணூரின் கோலத்திரி
    2. கோழிக்கோட்டின் சாமுத்திரி
    3. அறைக்கல்லின் அலிராஜாக்கள்
    4. வன்னேரியின் பெரும்படப்பு மன்னர்கள்

    இந்த நான்கு நாடுகளையும் அரேபியர்கள் பாதுகாத்து வந்தனர். கி.பி 1120 இல் நாயர்கள் மற்றும் நம்புதிரிகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பின்னால் அரேபியர்கள் இருந்தனர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு கடல் தளம் மற்றும் ஒரு குடியேற்றத்தையும் சீனாவிலிருந்து அரேபியாவிற்கு செல்லும் தங்கள் கப்பல்களுக்கான துறைமுகத்தையும் நிறுவ விரும்பினர்.
    இதன் மூலம் துளு- நேபாள படையெடுப்பாளர்களான துளு மன்னர்கள் மற்றும் நாயர்கள் நம்பூதிரிகள் என்னும் அஹிச்சத்திரம்-நேபாள வம்சாவளியினர் வட கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர். நம்பூதிரிகள், அரசர்களின் சகோதரிகள் உட்பட க்ஷத்திரியப் பெண்களுடன் திருமணம் இல்லாது சம்பந்தம் வைத்திருந்ததால், அந்த வம்சங்களை தங்கள் சொந்த நம்பபூதிரி வம்சங்களாக மாற்ற முடிந்தது. நாயர் இராணுவம் நம்புதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு அஹிச்சத்திரத்தில் பொதுவான தோற்றமௌ இருந்தது. இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் வட கேரளா ஒரு நேபாளத்தில் பூர்வீகமுள்ள விநோத ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் மற்றும் ஒரு தாய்வழியுரிமையை கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தால் ஆளப்பட்டது. .

    ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் 1156 ல் மீண்டும் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.

    துளு சாமந்தர்

    கோலத்திரி வம்சம் சாமந்தா என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தது. இந்த சாமந்தர்கள் மற்றும் பிற பண்ட் குலங்கள் (பாண குலங்கள்) சாமந்த க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன (அம்பலவாசி நம்பியார் போன்ற நாயர்கள் வேறு). நாயர்கள் தங்கள் நாகத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர்.

    சேர-ஆய் இராச்சியம் (கிபி 1102 முதல் கிபி 1335 வரை)
    கி.பி 1102 இல் சேர வம்சத்தின் தாக்குதலால் அச்சுறுத்தப்பட்ட சேர வம்சம் அதன் தலைநகரை கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றியது.
    இந்த காலகட்டத்தில் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு வில்லவர் குலங்களின் முதல் பெரிய இடம்பெயர்வு ஏற்பட்டது. சேர வம்சம் கொல்லத்தில் உள்ள ஆய் வம்சத்துடன் இணைந்து சேராய் வம்சம் என்ற புதிய வம்சத்தை உருவாக்கியது.
    கி.பி 1156 இல் பாணப்பெருமாள் வெளியேறிய பிறகு, கொல்லத்திலிருந்து ஆட்சி செய்த தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளா முழுவதும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. சேர-ஆய் மன்னர்கள் தந்தைவழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
    சேராய் மன்னர்களின் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி (திருப்பாப்பு நாடார்கள் இந்த பட்டத்தை இன்றுவரை கொண்டுள்ளனர்)


    _________________________________________

    ReplyDelete
    Replies
    1. நாகரும் களப்பிரரும்

      டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
      மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

      கள்ளர்

      கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

      முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள "கட்டாய மதமாற்றத்தை" விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
      மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

      1) விருத்தசேதனம்
      2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
      3) சகோதரி தாலி கட்டுதல்

      விருத்தசேதனம்

      1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

      விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
      (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

      சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
      சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. '' இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      Delete
  25. நாகரும் களப்பிரரும்

    கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
    பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")


    தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
    ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")

    துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.


    பலகணவருடைமை

    பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

    இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

    எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு இரண்டு முதல் பத்து கணவர்கள் வரை இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நாகரும் களப்பிரரும்

      வில்லார்வட்டம் ராஜ்யம் (கி.பி 1102 முதல் கிபி 1450 வரை)

      சேர வம்சத்தின் ஒரு கிளையான உதய ஸ்வரூபம் சேந்தமங்கலத்திலிருந்து ஆட்சி செய்தது. கொல்லத்திற்கு குடிபெயர விரும்பாத வில்லவரும் பணிக்கர்களும் வில்லார்வட்டம் ராஜ்யத்தை உருவாக்கியிருக்கலாம். வில்லார்வட்டம் பிரதேசங்கள் சேந்தமங்கலத்திலிருந்து வைக்கத்திற்கு அருகிலுள்ள உதயனாபுரம் வரை இருந்தன, பரவூர் மற்றும் வைப்பீன் உட்பட வேம்பநாடு காயலுக்கு கிழக்கே உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த நாட்டில் அடங்கியிருந்தன.

      பாண்டியன் பேரரசு

      13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாடு சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழ் வந்தனர். துளுநாடும் பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

      மகதைமண்டல பாணர்

      கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை 'பொன்பரப்பினான்' என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
      மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.


      மாலிக் காஃபூரின் படையெடுப்பு

      கி.பி 1310 மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பிறகு மூன்று தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. 1335 வாக்கில், மதுரை சுல்தானகம் உருவாக்கப்பட்டபோது, ​முழு ​கேரளமும் துளு சாமந்த க்ஷத்ரியர்கள் மற்றும் அஹிச்சத்திரத்தில் தோற்றம் கொண்டவர்களான துளுவ பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் கீழ் வந்தது. நாயரா, மேனவா, குருபா மற்றும் சாமந்தா போன்ற துளு பண்ட் குலங்கள் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

      Delete
  26. நாகரும் களப்பிரரும்


    விஜயநகர படையெடுப்பு.

    1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

    பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
    பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
    பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
    வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

    சேதிராயர்
    கள்ளர் மற்றும் அகமுடையார் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் உள்ள சேதி நாட்டிலிருந்து குடியேறியவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சேர்வை மற்றும் சேதிராயர் பட்டங்கள் உள்ளன. அகம்படியார் முன்பு ஆந்திராவில் பூங்கனூர் ஜமீனுக்கு சேவை செய்து வந்தனர். கள்ளர் மறவர் அகம்படியார் அனைவரும் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டனர். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான காவல் நிலையங்கள் இருப்பதால், கள்ளர்-மறவர் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன.

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வீடுகள்

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி 12 அடி சுவர் கட்டி ஒவ்வொரு வீட்டையும் பலப்படுத்தினர். அவர்களின் வீட்டின் முன்பக்க கதவு சுமார் 8 அடி உயரமுள்ள தடிமனான பலகையால் ஆனது, அதைத் பத்து பேர் கூடி தள்ளி திறக்க முடியும். நாட்டுகோட்டை செட்டியார் வீடுகள் 10 முதல் 15 செட்டியார் குடும்பங்கள் தங்கும் பெரிய இடவசதியைக் கொண்டுள்ளன. சிலர் ஒவ்வொரு இரவும் உறங்காது தங்கள் வீட்டை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இரவில் வீட்டைத் திறக்கக் கூடாது என்பதற்காக வீட்டுக்குள் கிணறு கூட தோண்டப்பட்டது. கள்ளர்கள் மற்றும் மறவர்களின் தொடர்ச்சியான திருட்டு அச்சுறுத்தல்கள் இருந்ததால்தான் செல்வந்தர்களாய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தம்முடைய வீடுகளை சுற்றி கோட்டை கட்டி பலப்படுத்த வழிவகுத்தது.


    முடிவுரை

    நாக களப்பிரர் குலங்களான கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் டெல்லியின் துருக்கிய சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகத்துடன் (கி.பி. 1335 முதல் கி.பி 1378 வரை) கூட்டுச் சேர்ந்தனர். பல நாக குலங்கள் குறிப்பாக கள்ளர் மற்றும் வெள்ளாளர்கள் இஸ்லாத்தைத் தழுவினர் ஆனால் கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    சில கள்ளர் குலங்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்தனர். வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துருக்கியர்கள் மற்றும் நாயக்கர்களுடனான நாக குலங்களின் கூட்டணி அவர்களுக்கு பெரிதும் பயனளித்து அவர்களை நிலப்பிரபுத்துவ சாதிகளாக மாற்றியது.

    ReplyDelete
  27. உலகுடையப்பெருமாள் மற்றும் சரியகுலப்பெருமாள்

    பதினாறாம் நூற்றாண்டில் கடந்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் உலகுடையப்பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோர் தெற்கு திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆட்சி செய்தனர்.
    அவர்கள் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகரப்பாண்டியனின் (கி.பி. 1480 முதல் 1507 வரை) மருமகன்கள்.

    உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியருடன் கூட்டுச் சேர்ந்து குஞ்சு குட்டிக்கு எதிரான கடற்படைப் போரில் சேர்ந்தார், இதில் குஞ்சு குட்டி போர்த்துகீசிய கேப்டனால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். மதுரையை ஆண்ட சந்திரசேகர பாண்டியனின் கூட்டாளியாக குஞ்சு குட்டி இருந்தான். வில்லுப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குஞ்சு குட்டி, போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போரிட்ட கோழிக்கோட்டின் சாமுத்திரி மன்னரின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரைக்காயர் ஆவார்.

    மதுரைப் பாண்டியன் உலகுடையப்பெருமாளைத் தன் படையுடன் தாக்கினான். உலகுடையப்பெருமாள் போரில் வென்று பாண்டிய அரியணை ஏறினார். அந்த காலத்தில் உலகுடையப்பெருமாள் ஒரு நீதியான ஆட்சியாளராகப் போற்றப்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்த சந்திரசேகரப்பாண்டியன் பெரும் படையுடன் திரும்பி வந்தார். தொடர்ந்து நடந்த போரில் உலகுடையப்பெருமாள் தோற்றார். உலகுடையப்பெருமாள் தன் சகோதரர்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    உலகுடையப்பெருமாளின் சகோதரர் அரியணை ஏறினார் ஆனால் பட்டாணி ராகுத்தன் என்ற உள்ளூர் முஸ்லீம் தளபதியின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
    சரியகுலப்பெருமாளின் மறைவுக்குப் பிறகு அவருக்கு குரும்பூரில் கோயில் கட்டப்பட்டது.
    சரியகுலப்பெருமாளின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாடல் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
    சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் வில்லுப்பாட்டாகவும் கோயில்களில் பாடப்பட்டது.
    நாடார்கள் தங்கள் முன்னோர்களான உலகுடைய பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோருக்கு கோவில் கட்டியுள்ளனர்.

    உலகுடைய பெருமாள் கதை எனப்படும் வில்லுப்பாட்டு கி.பி.1500 முதல் கி.பி.1515க்கு இடைப்பட்ட காலத்தில் உலகுடைய பெருமாள் மதுரையின் மீது படையெடுத்து ஆக்கிரமித்ததை விவரிக்கிறது. உலகுடைய பெருமாள் மதுரையை நாயக்கர் நுகத்தடியிலிருந்து விடுவிக்க முயன்றார். அப்போது சந்திரசேகர பாண்டியன் விஜயநகர நாயக்கர்களின் அடிமையாக மதுரையை ஆண்டு வந்தார். 'சரிய குலப் பெருமாள் கதை' அரேபிய மோரை மற்றும் பட்டாணி ராகுதர்களுக்கு எதிராக உலகுடைய பெருமாள் பாண்டியனின் தம்பியாக இருந்த சரியகுல (க்ஷத்திரிய குல) பெருமாளின் சாகசங்களை விவரிக்கிறது. நாடார்கள் ஆண்ட பரந்த நிலப்பரப்புகளையும் விவரிக்கிறது. உலகுடைய பெருமாள் மற்றும் அவரது சகோதரன் சரியகுலப் பெருமாள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக நாடார் சமூகத்தினரால் வழிபடப்பட்டு வருகிறார்.இருவரும் தென்னாட்டு நாடார்களால் முன்னோர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    _________________________________________


    உலகுடைய பெருமாள் கதை

    https://tamil.wiki/wiki/Ulagudaya_Perumal_Kathai

    https://tamil.wiki/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

    ____________________________________________

    ReplyDelete
  28. 1. கடைசி சோழர்கள்

    சோழர்கள் வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் என்று அழைக்கப்படும் தமிழ் திராவிடப் பிரபுத்துவத்தின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். நாடார்களும் பிற வில்லவர் குலங்களும் சோழர்களுடன் தொடர்புடையவர்கள்.

    வானவர்கள் காட்டில் வசிப்பவர்கள் மற்றும் பண்டைய சோழர்கள் மரத்தை தங்கள் சின்னமாக பயன்படுத்தினர், பிற்கால சோழர்கள் புலியை சின்னமாக பயன்படுத்தினர். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டின் சின்னங்கள்

    கடைசி உறையூர் சோழ மன்னன் வீர சேகர சோழன் கிபி 1529 இல் நாகம நாயக்கரால் கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் வெங்கல தேவன் இலங்கைக்கு தப்பிச் சென்றான்.


    வெங்கல தேவன்

    வெங்கல தேவன் இலங்கையில் ஒரு இராச்சியத்தை நிறுவினார், ஆனால் அவர் தனது சொந்த போர்த்துகீசியர்களின் நாணயங்களை வெளியிட்டபோது அவரை எதிர்த்தார். வெங்கலராயன் இந்தியாவுக்குத் திரும்பி வந்து கன்னியாகுமரிக்கு அருகில் கி.பி.1550 வாக்கில் வெங்கலராயன் கோட்டை என்ற கோட்டையைக் கட்டினார். வேணாட்டின் தாய்வழி துளு-சேராய் மன்னர் வெங்கலராயனின் மகள்களில் ஒருவரை மணக்க விரும்பினார். வெங்கல ராயன் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. வெங்கலராயன் வெங்கலராயன் கோட்டையை கைவிட்டு குரும்பூரில் குடியேறினார், அங்கு நளன் என்ற குட்டி ஆட்சியாளரின் கோரிக்கையை எதிர்கொண்டார். தன் மகளை தாழ்த்தப்பட்ட ஆட்சியாளர்களுக்கு மணமுடிக்க விரும்பாத கடைசி சோழ மன்னர் தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன்கள் மூலம் வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார் சாதியின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.

    கடைசி சோழ மன்னன் வெங்கல ராயனின் புராணக்கதை கடந்த 450 ஆண்டுகளாக நாடார்களையும் கடைசி சோழர்களையும் இணைத்து வில்லுப்பாட்டு கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது.


    தெற்கு நோக்கி வில்லவர்களின் இடம்பெயர்வு

    கிபி 1311 இல் துருக்கிய படையெடுப்பைத் தொடர்ந்து சோழர்கள் உட்பட அனைத்து வில்லவர்களும் அறுதி தெற்கே குடிபெயர்ந்தனர்.

    வில்லவர்-நாடாழ்வார் சாம்ராஜ்யங்களுக்கு விரோதமாக இருந்த நாயர்கள், கள்ளர், மறவர், அகம்படியர் மற்றும் வெள்ளாளர் போன்ற பல்வேறு நாக குலத்தினர் அரபு, துருக்கிய மற்றும் விஜயநகர நாயக்கர்களுடன் கைகோர்த்தனர்.


    சூரிய வம்சம்

    சோழர்களின் சூரிய வம்சம் இயக்கர் (யக்ஷா, இக்ஷா) என்று அழைக்கப்படும் வட திராவிட குலங்களுடன்ஃ பாண்டிய வம்சத்தின் கலவையால் உருவாக்கப்பட்டது, எனவே இக்குவாகு அல்லது இயக்கவாகு என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மன்னர்கள் நாம் வட இந்திய சூரிய வம்ச இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர் பட்டத்தை பாஹு மற்றும் வில்லவர்-பானா பட்டம் பாலி ஆகியவற்றைப் பயன்படுத்தினர். பாகு + பலி = பாகுபலி. வட இந்திய சூரியவம்சம் ஒரு பாண்டிய மன்னன் நிறுவப்பட்டது, இந்தோ-ஆரிய வருகையின் போது ஆரியர்கள் கிமு 1800 இல் ஷ்ரத்தாதேவ மனு என்று அழைத்தனர்.

    சோழர்கள் திராவிட க்ஷத்திரியர்கள், அவர்கள் கள்ளர், மறவர், அகம்படியர் அல்லது வெள்ளாளர் போன்ற வட இந்திய நாக குடியேறியவர்களுடன் இனரீதியாக தொடர்பில்லாதவர்கள். நாகர்கள் திராவிடர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.


    தெலுங்கு சோழர்

    தெலுங்கு சோழர்கள் சோடா வம்சம் என்றும் அழைக்கப்பட்டனர்.

    தெலுங்கு சோழர்கள் பாண-வாணர் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பலிஜாக்களுடன் தொடர்புடையவர்கள். திராவிட வில்லவர் மற்றும் அவர்களது வடநாட்டு உறவினர்களான பாணர்கள் ஆகியோர் இந்தியா முழுவதையும் ஆண்டனர். வில்லவர் மற்றும் பாணர் இருவரும் அசுர மன்னன் மகாபலியின் வம்சத்தில் வந்தவர்கள்.


    சாளுக்கிய சோழ வம்சம்

    கி.பி 1060க்குப் பிறகு சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சத்தால் மாற்றப்பட்டது. சாளுக்கியர்கள் ஒரு ராஜபுத்திர குலமாகக் கருதப்பட்டனர், அவர்கள் திராவிட பாண குலங்களிலிருந்து அதாவது வட கர்நாடகா, கோவா மற்றும் மஹாராஷ்டிராவின் நாடாவாரா சாளுவா என்று அழைக்கப்பட்டனர். சாளுவ நாயக்கர்கள் விஜயநகரத்தின் வம்சத்தையும் உருவாக்கினர். கம்மா அல்லது நாயுடு போன்ற விவசாய தெலுங்கு சாதிகள் சோழர்கள் அல்லது சாளுக்கியர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    நட்டாத்தி நாடார்

    நட்டாத்தி நாடார்கள் தங்களை சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர்.

    ReplyDelete
  29. 2. கடைசி சோழர்கள்

    களக்காட்டில் கடைசி சோழர் கோட்டை

    கிபி 1311 முதல் கிபி 1610 வரை வில்லவர் அதிகாரம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோட்டையடி, களக்காடு, கல்கிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் திருவிதாங்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. களக்காடு என்ற இடத்தில் சோழர்கள் கோட்டை கட்டினார்கள். களக்காட்டின் பழைய பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு சோழ வம்சத்தைச் சேர்ந்த சோழகுலவல்லி என்ற இளவரசியை மணந்து கொள்ள விரும்பிய வேணாட்டின் துளு-சேரை மன்னன் பூதலா வீர மார்த்தாண்ட வர்மாவின் கோரிக்கையை களக்காடு சோழர்கள் ஒப்புக்கொண்டனர். மன்னர் தனது தலைநகரை களக்காடுக்கு மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்.


    களக்காடு சோழ-சேராய் ராஜ்யம்

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் வம்சத்தின் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கிபி 1516 முதல் கிபி 1535 வரை) சோழ இளவரசியை மணந்த பிறகு தன்னை புலிமார்த்தாண்டன் அதாவது சோழன் என்று அழைத்துக்கொண்டார். மற்ற பட்டங்கள்.
    வென்று மண் கொண்ட பூதல வீரன்

    தலைநகரம்: களக்காடு

    பூதல வீர ஸ்ரீ வீர உதய மார்த்தாண்ட வர்மா சோழ இளவரசி சோழகுலவல்லியை களக்காட்டில் வைத்து மணந்தார். களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. அவர் ஜேதுங்கநாடு அதாவது கொல்லம் நாட்டின் ஆட்சியாளராகவும் இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையில் வாழ்ந்த நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பூதல வீர மார்த்தாண்டம் வர்மா அரசாணை வெளியிட்டார்.

    பூதல வீரன் கிறித்தவப் பரவர்களுக்கு வரிச் சலுகை அளித்தார்.
    நாகர்கோவிலில் உள்ள ஜெயின் கோவிலுக்கு பூதல வீரன் மானியம் வழங்கினார்.
    கி.பி 1535 இல் நடந்த தாம்ரபரணி போரில் விஜயநகர தளபதி சலாகராஜா சின்ன திருமலையதேவாவால் பூதலா வீரா தோற்கடிக்கப்பட்டார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் ஒரு அடிமை நிலைக்கு வேணாடு தள்ளப்பட்டது. துளு-சேராய் மன்னன் பூதல வீர மார்த்தாண்ட வர்மா பகுதி சேர வம்சாவளியைக் கொண்டிருந்தார். கி.பி 1610 இல் களக்காடு உட்பட அனைத்து வில்லவர் கோட்டைகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

    களக்காடு வில்லவர் சோழர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    வேணாட்டில் வில்லவர் கோட்டை ஆட்சியின் முடிவு

    துளு சாமந்தர்கள், நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் துளு-நேபாள வம்சங்கள் கி.பி 1610 க்குப் பிறகு போர்த்துகீசியர்களின் ஆதரவுடன் மிகவும் சக்திவாய்ந்ததாக எழுந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வில்லவர் பகுதிகள் நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. வேணாட்டில் வில்லவர் இறையாண்மை முடிவுக்கு வந்தது. சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அனைத்து வில்லவர் குலங்களும் நாடார் சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டன.


    கேரளாவில் துளு-நேபாள ஆட்சி

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கேரளா மற்றும் வேணாடு ஆகியவை நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற நேபாள குலங்களால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்பட்டன. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரான அஹிச்சத்ராவிலிருந்து அதாவது பண்டைய நேபாளத்திலிருந்து குடியேறியவர்கள். ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் கேரளாவில் 445 ஆண்டுகளாக நேபாள ஆரிய நாகா குலங்களை பாதுகாத்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் பாதுகாப்பில் இருந்த கேரளாவின் தாய்வழி துளு சாமந்த மன்னர்களின் ஆட்சியில் வில்லவர் குலங்கள் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டனர்.


    __________________________________


    பழங்காலத் தமிழ் நாணயம்.
    வானவர் சோழர்களின் மர முத்திரைகள், மீனவரின் மீன் முத்திரைகள், வில்லவர் சேரர்களின் வில் மற்றும் அம்பு முத்திரைகள், மலையரின் மலை முத்திரைகள் மற்றும் வேணாட்டின் யானை அடையாளங்கள். இவை அனைத்தும் பண்டைய தமிழகத்தை ஆண்ட வில்லவர் துணைக்குழுக்களின் அடையாளங்களாகும்.


    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    ReplyDelete
  30. வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  31. வில்லார்வெட்டம் இராச்சியம்.

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  32. வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா--வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.


    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.


    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  33. வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வெட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வெட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    ReplyDelete
  34. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete
  35. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  36. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  37. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் கொச்சிக்கு வந்தபோது, ​​பழைய சேர வம்சத்தைச் சேர்ந்த சில உள்ளூர் ஆட்சியாளர்கள் கொச்சி மற்றும் கொடுங்களூரில் இருந்தனர்.
    வில்லவர்-சேர சாம்ராஜ்யம் கி.பி 1102 இல் துளு-நேபாள படையெடுப்பாளர்களுக்கு பயந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது, அதாவது துளு சாமந்த சத்திரிய, நம்பூதிரிகள் முதலியவர்கள். வில்லவர்களில் பெரும்பாலோர் கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் சில வில்லவர் கொடுங்களூரிலும் கொச்சியிலும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். வில்லார்வெட்டம் மன்னர்கள் சேந்தமங்கலத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.

    நாடாவர்

    கொடுங்களூரில் நாடாவர் என்ற பிரபுத்துவப் பெண்மணி ஒரு இந்துக் கோயிலையும் பள்ளியையும் வைத்திருந்தாள். கொடுங்களூர் கண்ணகி கோயில் சேர வம்சத்தின் குடும்பக் கோயிலாகும். நாடாவர் பெண்மணி தன் மூதாதையர் சொத்துக்களில் எஞ்சியவையை உடைமையாக வைத்திருந்தார்.

    போர்த்துகீசியர் வருகை

    போர்த்துகீசிய ஆய்வாளர் பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால் வாஸ்கோடகாமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பத்து கப்பல்கள், 1500 பேர் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளின் சிறந்த சேகரிப்புடன் கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் 1500 ஆம் ஆண்டு டிசம்பரில் கொச்சிக்கு வந்தார். மிகக் குறுகிய காலத்தில், போர்த்துகீசியர்கள் மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

    போர்த்துகீசியர்கள் முதன்முதலில் வந்தபோது, ​​நகரம் சிறியதாகவும், அடக்கமாகவும் இருந்தது. வீடுகள் மண் சுவர்களாலும் கூரைகள் இலைகளாலும் கட்டப்பட்டிருந்தன. துளு-நேபாள நம்பியாத்ரி மன்னன் கூட புல்லால் ஆன பாயில் அமர்ந்திருந்தான். அரசன் இடுப்பில் சிறிய துணியை அணிந்திருந்தான், அவனது நாயர் படைவீரர்கள் கோவணங்களை மட்டுமே அணிந்திருந்தார்கள். போர்த்துகீசியர்கள் கொச்சியில் குடியேறினர், கோட்டைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினார்கள், பூர்வீகப் பெண்களை மணந்தனர் மற்றும் அவர்கள் மெஸ்டிகோஸ் என்று அழைக்கப்படும் கலப்பு இனத்தை உருவாக்கினர்.

    போர்ச்சுகீசியப் பிரபுத்துவத்தின் பிலிப் பெரெஸ்ட்ரெலோவுக்கும் கொடுங்களூரைச் சேர்ந்த பெண்மணியான டோனா பீட்ரிஸ் நாடாவருக்கும் அந்தக் காலத்தில் காதல் இருந்தது.

    கொச்சி துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வில்லிங்டன் என்ற அகழ்வாராய்ச்சி கப்பலைக் கொண்டு கொச்சியின் முகத்துவாரத்தை தோண்டி எடுக்க முயன்றனர்.

    போர்த்துகீசிய சகாப்தத்தின் பல கல்லறைக் கற்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. ஒரு கல்லறைக் கல் சேதமடையாமல் இருந்தது: ஒரு பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் ஒரு கம்பீரமான கிரானைட் தூண், போர்த்துகீசிய பிரபுத்துவம் பயன்படுத்திய சிக்கலான கோட்-ஆஃப்-ஆர்ம்ஸ் சின்னம் அதன் மேல் செதுக்கப்பட்டிரந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அலங்கார கல்வெட்டுகளுடன் இது இருந்தது. இருப்பினும், இந்த நினைவுச்சின்னம் கொச்சிக்கு வடக்கே உள்ள பண்டைய நகரமான கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்ததாக கருதப்பட்டது.

    நாடாவர் பெண்மணியால் நிறுவப்பட்ட கல்லறை

    ராஃபேல் மோரேரா - லிஸ்பனின் புதிய பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஸ்கிரிப்டைப் படித்து பெயர்களைப் புரிந்துகொண்டார். அப்படியே எஞ்சியிருக்கும் ஒரே தூணிலிருந்து தமிழாக்கம் பின்வருமாறு கூறுகிறது:

    “பெலிப் பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிதா, ஃபிடல்கோ [பிரபு] எங்கள் ஆண்டவரின் இல்லத்தின் ஃபிடல்கோ, டோனா பீட்ரிஸ் நாடாவரின் மசூதியின் [பள்ளி அல்லது வழிபாட்டுத் தலத்தின்] உறுதியான [உயர்ந்த] அவற்றில். மெஸ்ட்ரே எஸ்கோலா [பள்ளி ஆசிரியர்] மற்றும் அவரது விகாரி…”

    இந்த கல்வெட்டு கிறிஸ்டோபர் கொலம்பஸின் மருமகனுக்கும் சேர பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் மற்றும் திருமணத்தை விவரிக்கிறது.

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ மற்றும் டோனா பீட்ரிஸ், என்ற மலையாள ‘நாட்டாவர்’ பெண்மணி தம் கணவரான அரச இரத்தம் கொண்ட போர்த்துகீசிய ஃபிடல்கோவிற்காக எழுப்பிய கல்வெட்டில் இந்த அரிய மற்றும் அசாதாரண குறிப்பில் அவர் வரலாறு குறிப்பிடப்படுகிறது.

    ReplyDelete
  38. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்


    பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

    பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

    பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

    மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

    பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது - கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா - உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

    ReplyDelete
  39. வள்ளிக்கடை பணிக்கர்
    (வாய்வழி வரலாறு)

    வள்ளிக்கடை பணிக்கர்களின் குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் க்ஷத்திரிய சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பின்னர் கிறிஸ்தவத்தைத் தழுவினர். அதன் உறுப்பினர்கள் ஜோதிடம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் தற்காப்புக் கலைகளில் நிபுணர்களாக இருந்தனர். அவர்கள் ஆவோலியில் (தற்போது எர்ணாகுளம் மாவட்டத்தில்) குடியேறுவதற்கு முன்பே, தற்காப்புக் கலைகளில் அவர்கள் செய்த வீரதீரங்களால் பிரபலமானார்கள். அவர்கள் நிலப்பிரபுக்கள் அல்ல, பழூர் வடக்கன் மனையின் குத்தகைதாரர்கள். இருப்பினும், அவர்களின் திறமைகள் காரணமாக, அவர்கள் பல உள்ளூர் தலைவர்களை விட நன்கு அறியப்பட்டவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர்.

    அவர்கள் பல இந்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர் மற்றும் உயர் சாதி இந்துக்கள் போல் உடையணிந்தனர். உண்மையில், பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியரின் வருகை வரை மலபார் கடற்கரையில் உள்ள கிறிஸ்தவர்கள் பல இந்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர். (இவர் தமிழ்நாட்டின் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், அவர்களில் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள். சமூகத்தில் திருமணக் கலையின் போதகர் பண்டைய தமிழகத்தில் பணிக்கன் என்ற பட்டத்தை கொண்டிருந்தார்).

    போர்த்துகீசிய மிஷனரிகள் மற்றும் ரோமின் செல்வாக்கின் கீழ் தேவாலயம் இந்து பழக்கவழக்கங்களைக் கைவிடத் தொடங்கியபோது பணிக்கர்களுக்கு தேவாலயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. பணிக்கர்களும் இதைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். அவர்கள் முழுவதும் கிறிஸ்தவர்களும் அல்ல, இந்து சாதியை சேர்ந்தவர்களும் அல்ல என்பதால் இது பின்னர் அடையாள நெருக்கடியாக வளர்ந்தது. எனவே, "சாதி இல்லாததால்" திருமணம் செய்ய வேண்டாம் என்று குடும்ப ஆண்கள் முடிவு செய்தனர்.
    சம அந்தஸ்துள்ள மணப்பெண்களைப் பெறுவதில் அல்லது தேவாலயம் அல்லது கோவிலில் திருமணத்தை நடத்துவதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கண்ணியத்திற்குக் கீழே திருமணத்தைக் கண்டிருப்பார்கள். ஆனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த சிறுமிகளில் ஒருவரின் வாரிசுகள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கினன்றன..

    1498 முதல் 1750 வரை போர்த்துகீசிய மற்றும் டச்சு உள்நாட்டுப் படைகளின் நாடார்-பணிக்கர் தளபதிகள் வள்ளிக்கடை பணிக்கர். வள்ளிகடை பணிக்கர்களின் குல தெய்வம் வள்ளிக்கடை பகவதி அதாவது தமிழ் கடவுள் வள்ளி. கிறிஸ்துவர் ,மெஸ்டிசோ மற்றும் நாயர் படைகளுக்கு சுமார் 12 வள்ளிக்கடை பணிக்கர் வம்ச தளபதிகள் தலைமை தாங்கினர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் போர்த்துகீசியர்கள் வள்ளிக்கடை பணிக்கர்களுக்காக ஒரு கோட்டையை கட்டினார்கள். மூவாற்றுப்புழா அருகே உள்ள ஆரக்குழா தேவாலயத்தை கி.பி.1760ல் வள்ளிகடை பணிக்கர்கள் கட்டினார்கள்.

    கி.பி 1750 இல் திருவிதாங்கூர் மன்னர்மார்த்தாண்டவர்மாவுக்கு எதிரான போரில் டச்சுப் படைகளுக்கு தலைமை தாங்கினார் கடைசி வள்ளிகடை பணிக்கர். ஆங்கிலேயர்கள் மார்த்தாண்டவர்மாவை ஆதரித்தனர் அதனால் வள்ளிக்கடை பணிக்கர் தோற்கடிக்கப்பட்டார். போர் நிறுத்தத்திற்காக வள்ளிகடை பணிக்கர் மார்த்தாண்ட வர்மாவை சந்திக்க ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டார். மார்த்தாண்ட வர்மா, வள்ளிக்கடைப் பணிக்கரைக் கண்டதும் ஏளனம் செய்ய முயன்றார். மார்த்தாண்டவர்மா வள்ளிகடை பணிக்கரை அடையாளம் தெரியாதது போல் நடித்தார். அது யார்? என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லையே என்றார்.
    .
    அதற்கு வள்ளிக்கடை பணிக்கர், "நாயரு மூத்த பணிக்கன்" என்று மறுபடி கொடுத்தார். அதாவது நாயருக்கு முந்திய பணிக்கர் என்று பொருள்.
    அந்தச் சகாப்தத்தில் மார்த்தாண்டவர்மா அரசகுலத்தவர் அல்ல வெறும் நாயர் அல்லது துளு பன்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வதந்தி பரவியிருந்தது. வள்ளிக்கடை பணிக்கரின் பதில் மார்த்தாண்ட வர்மாவை மௌனமாக்கியது.

    எர்ணாகுளம், மூவாற்றுப்புழா மற்றும் கோதமங்கலம் ஆகிய இடங்களில் வள்ளிக்கடை பணிக்கர்களின் சந்ததியினர் வாழ்கின்றனர், அவர்கள் சிரிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    ___________________________________________


    https://expert-eyes.org/palli/panicker.html

    ReplyDelete
  40. 1. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 லிருந்து கி.பி. 1632 வரை), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  41. 2. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர்.

    ஆனால் பூஞ்ஞார் மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1618 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம். பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1618 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பந்தளம் மற்றும் பூஞ்ஞார் பாண்டியன் குடும்பங்கள் தென்காசி பாண்டியர்களிடமிருந்து வந்திருக்கலாம். பந்தளம் பாண்டியன் வம்சம் கேரளாவுக்குத் தப்பிச் சென்ற கடைசி தென்காசி பாண்டிய மன்னன் கொல்லம்கொண்டானிடமிருந்து வந்தது. கிபி 1613 முதல் கிபி 1618 வரை ஆட்சி செய்த கடைசி மன்னரான வரகுணராம பாண்டியருடன் தென்காசி பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    பணிக்கர்கள்

    வில்லவர் ராஜ்ஜியங்களின் போர்க்குணமிக்க பிரபுக்களாக இருந்த பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாவர், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளம் ஆட்சி செய்யப்பட்டது.

    இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது.

    அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர். அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியன் குறுநாடுகள்

    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    ReplyDelete
  42. 3. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் கி.பி.1623 முதல் கி.பி.1630 க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி மாயாதேவி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.

    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவிற்கு தப்பியோடியதினால் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது ரோமப் பேரரசர் ஆணைப்படி புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார். அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    அர்த்துங்கல் பள்ளியில் ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர்.

    அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர். 1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம். கி.பி.1647க்குப் பிறகு, சுவாமி அய்யப்பன் அடிக்கடி அர்த்துங்கல் தேவாலயத்திற்குச் சென்று, அங்கு உள்ள புனித செபாஸ்டியன் சிலைக்கு முன்பாக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. 4. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

      மத நல்லிணக்கம்

      அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது.

      மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

      பந்தளம் தமிழ் பாண்டியன் வம்சத்தின் முடிவு

      கிபி 1729 முதல் கிபி 1759 வரை ஆண்ட மார்த்தாண்டம் வர்மாவின் ஆட்சியின் போது பந்தளம் தமிழ் வில்லவர்-நாடாழ்வார் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்திருக்கலாம். தலச்சேரியின் பிரிட்டிஷ் தொழிற்சாலை மேலாளர் ராபர்ட் ஆடம்ஸ், 1704 ஆம் ஆண்டு வேணாட்டின் ஆட்சியாளர்களாக பேப்பூர் தட்டாரி வம்சம் அல்லது திருவிதாங்கூர் வம்சம் என்று அழைக்கப்படும் துளு-நேபாளி வம்சத்தை நிறுவினார்.

      அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசத்தை மதுரை பாண்டியர்கள் போல் வேடமிட்ட பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பம் கைப்பற்றியது. பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் "ராஜா" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர், மேலும் அவர்கள் வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் "பனந்தாரகன்" பட்டத்தையும் பயன்படுத்தினர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் உபநயன விழாவை நடத்தி மற்ற பிராமணர்களைப் போலவே புனித நூலை அணிந்தனர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் தமிழ் பேசவில்லை ஆனால் சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றவர்கள். பாண்டியர்கள் பிராமணர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் கூறி வருகின்றனர்.

      பூஞ்ஞார் பாண்டிய வம்சம்

      18 ஆம் நூற்றாண்டில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்துள்ள சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றிகளின் சாமந்தா குடும்பம் தமிழ் பூஞ்ஞார் பாண்டியன் வம்சத்தை மாற்றியது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்ஞாரை ஆண்டனர்.

      பூஞ்ஞார் பாண்டியன் வம்சம் என்பது ஒரு பாண்டிய இளவரசி மற்றும் கொச்சியின் பிராமண நம்பியாதிரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தாய்வழி வம்சமாகும். ஆனால் சில தலைமுறைகளுக்குப் பிறகு இந்த பாண்டியன்-நம்பியாதிரி வம்சம் முடிவுக்கு வந்தது.

      பின்னர் வஞ்சிப்புழா மடத்தின் தலைவர் என்று அழைக்கப்பட்ட பிராமண ஆட்சியாளர் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்துடன் பூஞ்ஞாரின் ஆட்சியாளரானார், ஆனால் அவர் சர்வாதிகாரியாக இருந்ததால் அவர் மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

      பின்னர் நெய்தல்லூர் பண்டாரத்தில் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிராமண சகோதரர்கள் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்துடன் பூஞ்ஞார் ராஜ்யத்தை ஆண்டனர்.

      திருச்சூர் அருகே வெங்கிடங்குவில் உள்ள சார்க்கரா கோவிலகம் என்று அழைக்கப்படும் மற்றொரு துளு பிராமண போற்றி குடும்பம் 18 ஆம் நூற்றாண்டில் பூஞ்ஞாரின் ஆட்சியாளர்களாக அவர்களுக்குப் பின் வந்தது. இந்த துளு பிராமண தாய்வழி வம்சமும் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டது. பூஞ்ஞாரைக் கைப்பற்றிய இந்தத் துளு பிராமண போற்றி வம்சத்தினர் இன்றும் தம்மை தமிழ் வில்லவர்-நாடாழ்வார்களின் பாண்டியன் பரம்பரையாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

      பிராமண பந்தளம் மற்றும் பூஞ்ஞார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன, இளவரசிகள் நம்பூதிரிகளுடன் சம்பந்தம் பெற்றனர், இதனால் பிறந்த மகன்கள் அடுத்த மன்னரானார்கள்.

      துளு பிராமணர்கள் மற்றும் நம்பூதிரிகளின் தாய்வழி வம்சங்கள் பாண்டியர்களாக வேடமிட்டதன் மூலம் தமிழ் பாண்டியர்களுக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

      அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

      பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

      பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

      Delete
  43. 5. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்


    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் எருமேலி பள்ளியில் சந்தனக்கூடம் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை யாத்திரையின் தொடக்கத்தில் எருமேலியில் வாவர் தலைமையில் கூடியிருந்த ஐயப்பனின் படையை நினைவுகூரும் வகையில் "பேட்ட துள்ளல்" என்ற சடங்கு நடனம் ஆடப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1618 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடுத்தா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர்.

    இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை பந்தளம் நம்பூதிரிப் பாண்டியர்கள் துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை. ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. 7. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

      துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

      தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

      துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். கி.பி 1120 இல் துளுவ பிராமண நம்பூதிரிகள் வடக்கு கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர்.

      கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

      கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். நாயர் படைகள் நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தன, அவர்கள் இருவரும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர்.

      நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்களாவர். அவர்கள் நேபாளி சொற்களை மலையாளம்-தமிழுடன் கலந்து துளு எழுத்துக்களால் எழுதினார்கள், இதன் விளைவாக நவீன மலையாளம் உருவானது.

      கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காஃபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர்.

      மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

      1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.


      பிற்கால சேரர் கால பிராமணர்கள்

      பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

      1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

      பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1311 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

      இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்கள் அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

      தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

      சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

      Delete
  44. 8. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.


    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார்.

    ஆனால், சபரிமலை கோவிலுக்குள்ள திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    _______________________________________________


    1953ல் பூஞ்ஞார் பாண்டியர்கள் குறித்து திரு. சி.எஸ்.பரமேஸ்வரன் பிள்ளை கேரள அரசுக்கு அளித்த அறிக்கை

    பரமேஸ்வரன் பிள்ளையின் கூற்றுப்படி, பூஞ்ஞார் தலைவர்களின் தற்போதைய தலைமுறையினருக்கும் உண்மையில் பல முந்தைய தலைமுறையினருக்கும், பாண்டிய வம்சத்துடன் எந்த உறவும் இல்லை.

    ______________________________________________

    ReplyDelete
  45. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா ஆலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  46. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இந்த ஆலன் சிங் சாந்தா மீனா, கி.பி 1090 இல் பிற்காலத்தைச் சேர்ந்த வேறு அரசராக இருக்கலாம், ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete